8TH- STD -இயல்-1
1. “வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி வாழிய வாழியவே" பாடலை இயற்றியவர் - பாரதியார்
2. “எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி என்றென்றும் வாழியவே!” பாடலை இயற்றியவர் - பாரதியார்
3. நிரந்தரம் என்ற சொல்லின் பொருளைக் காண்க - காலம் முழுமையும்
4. வைப்பு என்ற சொல்லின் பொருளைக் காண்க – நிலப்பகுதி
5. பாரதியார் நடத்திய இதழ்கள் - இந்தியா, விஜயா
6. பாரதியார் இயற்றிய உரைநடை நூல்கள் - சந்திரிகையின் கதை , தராசு
7. வசனகவிதைகளையும், சீட்டுக்கவிகளையும் எழுதியவர் - பாரதியார்
8. "சிந்துக்குத் தந்தை" என்று பாரதியாரை புகழ்ந்தவர்- பாரதிதாசன்
9. "செந்தமிழ்த் தேனி" என்று பாரதியாரை புகழ்ந்தவர் - பாரதிதாசன்
10. “புதிய அறம் பாட வந்த அறிஞன்” என்று பாரதியாரை புகழ்ந்தவர் - பாரதிதாசன்
11. "மறம் பாட வந்த மறவன்" என்று பாரதியாரை புகழ்ந்தவர் - பாரதிதாசன்
12. “செந்தமிழே செங்கரும்பே செந்தமிழர் சீர்காக்கும்” என்ற கவிதையை இயற்றியவர்-து. அரங்கன்
13. மக்கள் வாழும் நிலப்பகுதியைக் குறிக்கும் சொல் - வைப்பு
14. 'என்றென்றும்' ன்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது - என்று + என்றும்
15. 'வானமளந்தது' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது- வானம் + அளந்தது
16. அறிந்து + அனைத்தும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- அறிந்ததனைத்தும்
17. வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - வானமறிந்த
18. வாழ்வுக்குரிய ஒழுங்குமறை - ஒழுக்கம்
19. மொழிக்குரிய ஒழுங்குமறை - மரபு
20. செய்யுளுக்கும் மரபுக்கும் உள்ள தொடர்பைப் பற்றிக் கூறும் நூல் - தொல்காப்பியம்
21. "நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் ஆதலின்" என்று கூறியவர்-தொல்காப்பியர்
22. உலகம் "நிலம், நீர், தீ, காற்று, வானம் " என்ற ஐந்துபூதங்களால் ஆனது என்று கூறியவர்- தொல்காப்பியர்
23. உயிர் எழுத்து நீண்டு ஒலிப்பது- உயிரளபெடை
24. தொல்காப்பியத்தின் ஆசிரியர்- தொல்காப்பியர்
25. தமிழின் மிகப்பழமையான இலக்கண நூல் - தொல்காப்பியம்
26. தொல்காப்பியத்தில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை - மூன்று
27. தொல்காப்பியத்தில் உள்ள இயல்களின் எண்ணிக்கை - 27
28. யானையின் இளமைப் பெயரைக் காண்க - கன்று
29. பறவைகள் - விசும்பில் பறந்து செல்கின்றன.
30. இயற்கையைப் போற்றுதல் - தமிழர் மரபு
31. 'இருதிணை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - இரண்டு + திணை
32. 'ஐம்பால்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- ஐந்து + பால்
33. மனிதன் மொழியை நிலைபெறச் செய்ய எதை உருவாக்கினான்- எழுத்து
34. பொருள் ஓவிய வடிவமாக இருந்ததை எவ்வாறு அழைத்தனர் - ஓவிய எழுத்து
35. ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை எவ்வாறு அழைத்தனர் - ஒலி எழுத்து நிலை
36. கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துக்களின் அமைப்பு - ஸ எனும் வட எழுத்து காணப்படுகிறது, மெய்யைக் குறிக்கப் புள்ளி பயன்படுத்தவில்லை, எகர, ஒகரக் குறில் நெடில் வேறுபாடில்லை
37. இன்று உள்ள எழுத்துக்கள் எவற்றின் திரிபு - பொருள்களின் ஓவியமாக இருந்ததன் திரிபு
38. எந்த கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துக்கள் நிலையான வடிவத்தைப் பெற்றன - அச்சுக்கலை
39. தமிழ் எழுத்துக்களின் பழைய வரி வடிவங்களை எங்கு காணமுடிகிறது - கருங்கல் சுவர்கள், செப்பேடுகள்
40. கல்வெட்டுக்கள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன - கி.மு.3ம் நூற்றாண்டு
41. செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன- கி.பி.7ம் நூற்றாண்டு
42. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை எவ்வாறு பிரிக்கலாம்- வட்டெழுத்து, தமிழ் எழுத்து
43. மிகப்பழமையான தமிழ் எழுத்து முறை - வட்டெழுத்து
44. சேர மண்டலம் மற்றும் பாண்டிய மண்டலத்தில் 8 - 11 நூற்றாண்டு வரை கிடைத்த சாசனங்களில் வட்டெழுத்துகள் இடம்பெற்றுள்ளன
45. முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக்காலமான 11 ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன
46. கடைச் சங்க காலத்தில் தமிழகத்தில் எழுத்துகள் எவ்வாறு அழைக்கப்பட்டன- கண்ணெழுத்து
47. "கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பலபொதி” என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்- சிலப்பதிகாரம்
48. தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துகள் பயன்படுத்தப்பட்டன என்பதற்கு சான்றாக திகழும் கல்வெட்டு - அரச்சலூர் கல்வெட்டு
49. எழுத்துகளை அழகுபடுத்துவதற்காக அவற்றின் எந்த பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது- மேற்பகுதி
50. எகர ஒகர குறில் எழுத்துகள் குறிக்க எழுத்துகளின் மேல்புள்ளி வைக்கும் வழக்கம் யார் காலம் முதல் இருந்து வந்துள்ளது - தொல்காப்பியர்
51. அகரவரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் - நெடில்
52. எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இருபுள்ளிகள் இடப்பட்டால் அவை- ஒளகாரம்
53. மகர எழுத்துக்களை குறிக்க - ப எழுத்தின் உள்ளே புள்ளி இட்டனர்
54. தமிழ் எழுத்துகளில் மிகப்பெரிய சீர்திருத்தத்தைச் செய்தவர் - வீரமாமுனிவர்
55. ஓகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை களைந்தவர் - வீரமாமுனிவர்
56. ஏகார, ஓகார வரிசை உயிர்மெய் நெடில் எழுத்துகளைக் குறிக்க இரட்டைக்கொம்பு இரட்டைக் கொம்புடன் கால் சேர்த்து புதிய வரி வடிவத்தை அறிமுகம் செய்தவர் - வீரமாமுனிவர்
57. தமிழ் எழுத்து சீர்திருத்த பணியில் ஈடுபட்டவர் - பெரியார்
58. தமிழில் சொல் என்பதற்கு என்ன பொருள்- நெல்
59. சொன்றி, சோறு எவ்வார்த்தையில் இருந்து தோன்றின- சொல்
60. எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்பது யாருடைய கூற்று- தொல்காப்பியர்
61. மொழி என்பதற்கு - சொல் என்ற பொருளும் உண்டு
62. மொழி எத்தனை வகைப்படும் – மூன்று
63. "நெட்டெழுத்து ஏழே ஓரெழுத்து ஒரு மொழி” என்று கூறியவர்- தொல்காப்பியர்
64. குற்றெழுத்து ஒன்று தனித்து நின்று சொல் ஆவது இல்லை என்பதைக் “குற்றெழுத்து ஐந்தும் மொழி நிறைவு இலவே" என்று கூறியவர் - தொல்காப்பியர்
65. ஓரெழுத்து ஒருமொழி எத்தனை உண்டு என்று நன்னூலார் கூறுகிறார் - 42
66. ஓரெழுத்து ஒரு மொழியில் இடம்பெற்றுள்ள குறில் எழுத்துகள் - நொ,து
67. ஓரெழுத்து ஒரு மொழியில் இடம்பெற்றுள்ள உயிர் எழுத்துக்களின் எண்ணிக்கை - 2
68. ஓரெழுத்து ஒரு மொழிகளில் இடம்பெற்றுள்ள உயிர் எழுத்துகள் - ஆ.ஈ,ஐ.ஓ ஊ, ஏ
69. ஏய் என்பதன் பொருள் - என்னோடு கூடு, சேர்
70. அம்பைக் குறிக்கும் ஓரெழுத்து ஒரு மொழி - ஏ
71. அம்பு விரைந்து செல்வது போலச் சென்று உரிய கடமை புரிபவன் - ஏவலன்
72. அம்புவிடும் கலை தமிழ்- ஏகலை
73. அம்பு விடுவதில் வல்லவனை எவ்வாறு அழைத்தனர் - ஏகலைவன்
74. முள்ளம் பன்றியின் பழம்பெயர்- எய்பன்றி
75. அம்பை எய்பவர் ஆணாக இருந்தால் அவரை எவ்வாறு அழைத்தனர்- எயினர்
76. அம்பை எய்பவர் பெண்ணாக இருந்தால் அவரை எவ்வாறு அழைத்தனர்- எயினியர்
77. செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படுபவர் - இரா. இளங்குமரனார்
78. இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் என்ற நூலின் ஆசிரியர் - இரா. இளங்குமரனார்
79. இளங்குமரனார் எந்த நூலைத் தொகுத்துள்ளார் – தேவநேயம்
80. இளங்குமரனார் திருச்சிக்கு அருகில் எந்த ஊரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார் - அல்லூர்
81. “தமிழின் தனிப்பெருஞ்சிறப்பு" என்ற நூலின் ஆசிரியர் - இரா. இளங்குமரனார்
82. எழுத்துகளின் பிறப்பினை எவ்வாறு பிரிக்கலாம்- இடப் பிறப்பு, முயற்சி பிறப்பு
83. உயிர் எழுத்துகள் பன்னிரண்டும் ஐ இடமாகக் கொண்டு பிறக்கிறது- கழுத்து
84. வல்லின மெய் எழுத்துகள் ஆறும் ஐ இடமாகக் கொண்டு பிறக்கிறது - மார்பு
85. மெல்லின மெய் எழுத்துகள் அறும் ஐ இடமாகக் கொண்டு பிறக்கிறது- மூக்கு
86. இடையின மெய் எழுத்துகள் ஆறும் ஐ இடமாகக் கொண்டு பிறக்கிறது- கழுத்து
87. ஆய்த எழுத்து இடமாகக் கொண்டு பிறக்கிறது- கழுத்து
88. உயிர் எழுத்துகளில் வாயை திறத்தால் தோன்றும் உயிர் எழுத்துக்கள் -
அ ஆ
89. வாயை திறத்தல் மற்றும் நாக்கின் அடி ஓரமானது மேல்வாய் பல்மை பொருந்துவதால் தோன்றும் உயிர் எழுத்துக்கள் –
இ, ஈ, எ ,ஏ, ஐ
90. வாய் திறக்கும் முயற்சியுடன் இதழ்களைக் குவிப்பதால் பிறக்கும் உயிர் எழுத்துக்கள்-
உ ஊ ஒ ஓ ஔ
91. நாவின் முதற்பகுதி அண்ணத்தின் அடிப்பகுதிய பொருந்துவதால் பிறக்கும் மெய்எழுத்துக்கள் - க், ங்
92. நாவின் இடை, நடு அண்ணத்தின் இடைப்பகுதி பொருந்துவதால் பிறக்கும் மெய்எழுத்துக்கள்- ச். ஞ்
93. நாவின் நுனி, அண்ணத்தின் நுனியைப் பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் - ட், ண்
94. மேல் வாய்ப்பல்லின் அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் - த், ந்
95. மேல் இதழும் கீழ் இதழும் பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் - ப்,ம்
96. நாக்கின் அடிப்பகுதி, மேல்வாயின் அடிப்பகுதியைப் பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் - ய்
97. மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் – ர்,ழ்
98. மேல்வாய் பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதால் பிறக்கும் மெய் எழுத்து- ல்
99. மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள்- ள்
100. மேல்வாய்ப் பல்லைக் கீழ் உதடு பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள் - வ்
101. மேல்வாயை நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் பிறக்கும் மெய் எழுத்துக்கள்- ற் ன்
102. இதழ்களை குவிப்பதால் பிறக்கும் உயிர் எழுத்துக்கள் - உ, ஊ
103. பொருத்துக.
1. க்,ங் - நாவின் முதல் அண்ணத்தின் அடி
2. ச், ஞ் - நாவின் இடை, அண்ணத்தின் இடை
3. ட், ண் - நாவின் நுனி, அண்ணத்தின் நுனி
4. த், ந் - நாவின் நுனி, மேல் வாய்ப்பல்லின் அடி
104. விலங்குகளின் இளமைப்பெயர்களைக் கொண்டு பொருத்துக.
1. சிங்கம் - குருளை
2. புலி - பறல்
3. பசு - கன்று
4. கரடி - குட்டி
105. ஒலி மரபைக் கொண்டு பொருத்துக.
1. சிங்கம் - முழங்கும்
2. யானை - பிளிறும்
3. பசு - கதறும்
4. கரடி - கத்தும்
5. காகம் – கரையும்
6. புலி - உறுமும்
106. விலங்குகளின் ஒலி மரபுகளைக் கொண்டு பொருத்துக
1. ஆந்தை - அலறும்
2. காகம் - கரையும்
3. கோழி - கொக்கரிக்கும்
4. சேவல் - கூவும்
5. புறா- குனுகும்
107. விலங்குகளின் ஒலி மரபுகளைக் கொண்டு பொருத்துக
1. குயில் - கூவும்
2. மயில் - அகவும்
3. கிளி - பேசும்
4. கூகை - குழறும்
108. தொகை மரபைக் பொருத்துக
1. மக்கள் - கூட்டம்
2. ஆ - நிரை
3. பசு - ஆநிரை
4. ஆடு - மந்தை
109. வினை மரபைக் கொண்டு பொருத்துக
1. சோறு - உண்
2. முறுக்கு - தின்
3. சுவர் - எழுப்பு
4. தண்ணீர் - குடி
110. வினை மரபைக் கொண்டு பொருத்துக
1. பால் - பருகு
2. கூடை - முடை
3. பூ-
கொய்
4. இலை - பறி
5. பானை - வனை
111. பொருத்துக.
1. சூழ்கலி - சூழ்ந்துள்ள அறியாமை இருள்
2. வண்மொழி - வளமிக்க மொழி
3. இசை - புகழ்
4. தொல்லை - பழமை, துன்பம்
112. பொருத்துக.
1. விசும்பு - வானம்
2. மயக்கம் - கலவை
3. இருதிணை - உயர்திணை, அஃறிணை
4. வழாஅமை - தவறாமை
113. பொருத்துக.
1. மரபு- வழக்கம்
2. திரிதல் - மாறுபடுதல்
3. செய்யுள் - பாட்டு
4. தழா அல் - தழுவுதல் (பயன்படுதல்)
114. பொருத்துக
1. ஒலிப்பிறப்பியல்- Articulatory
Phonetics
2. மெய்யொலி - Consonant
3. மூக்கொலி - Nasal consonant
sound
4. கல்வெட்டு- Epigraph
115. பொருத்துக
1. உயிரொலி- Vowel
2. அகராதியியல் - Lexicography
3. ஒலியன்- Phoneme
4. சித்திர எழுத்து - Pictograph
0 Comments
THANK FOR VISIT