8TH- STD -இயல்-2

1.     "ஓடை ஆட உள்ளம் தூண்டுதே கல்லில் உருண்டு தவழ்ந்து நெளிந்து பாயும்எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் - வாணிதாசன்

2.      செஞ்சொல் மாதர் வள்ளைப் பாட்டின் சீருக்கு ஏற்ப முழவை மீட்டும்" என்ற பாடலின் ஆசிரியர்வாணிதாசன்

3.     தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த் என புகழப்படுபவர் - வாணிதாசன்

4.     வாணிதாசனின் இயற்பெயர் - அரங்கசாமி என்ற எத்திராசலு

5.     வாணிதாசன் யாருடைய மாணவர் - பாரதிதாசன்

6.     வாணிதாசனின் சிறப்பு பெயர் - கவிஞரேறு , பாவலர் மணி

7.     வாணிதாசனுக்கு, செவாலியர் விருது வழங்கிய அரசு - பிரெஞ்சு

8.     தமிழச்சி, கொடிமுல்லை , தொடுவானம்  என்ற நூலின் ஆசிரியர்வாணிதாசன்

9.     எழிலோவியம்என்ற நூலின் ஆசிரியர் - வாணிதாசன்

10.   வாணிதாசன் எழுதிய நூல் - குழந்தை இலக்கியம்

11.   ஓடை என்னும் பாடல் வாணிதாசனின் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது- தொடுவானம்

12.   பள்ளிக்குச் சென்று கல்வி - பயிலுதல் சிறப்பு

13.   செஞ்சொல் மாதரின் வள்ளைப்பாட்டிற்கேற்ப முழவை மீட்டுவது- ஓடை

14.   நன்செய் என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - நன்மை + செய்

15.   நீளுழைப்பு என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - நீள் + உழைப்பு

16.   சீருக்கு + ஏற்ப என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- சீருக்கேற்ப

17.   ஓடை + ஆட என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்ஓடையாட

18.   கோணக்காத்துப் பாடலில், எந்த ஊரில் உள்ள தென்னம்பிள்ளைகள் எல்லாம் அழிந்தன- வாங்கல்

19.   கோணக்காத்துப் பாடலில், அழிவில்லாத எந்த ஊரில் பருத்திச் செடிகள் எல்லாம் சிதைவடைந்தன- காங்கேயம்

20.   கோணக்காத்துப் பாடலில், எந்த நாட்டில் உள்ள மரங்கள் அனைத்தும் சின்னபின்னமாக வந்து விழுந்தன- தொண்டைமான்

21.   கோணக்காத்துப் பாடலில், எந்த ஊரில் உள்ள ஏராளமான ஆடு, மாடுகள் இறந்தன - தெத்துக்காடு, காளப்பநாயக்கன்பட்டி

22.   கோணக்காத்துப்பாடலில் புலவர் எந்தக் கடவுளை காக்குமாறு வேண்டுகிறார்- முருகன்

23.   உருமங்கட் டியமுகிலால் - கோணக்காத்து" என்ற பாடலின் ஆசிரியர் - வெங்கம்பூர் சாமிநாதன்

24.   காங்கேய நாடு கொங்கு மண்டலத்தின் நாடுகளில் ஒன்று - 24

25.   நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில், மக்கள் பட்ட துயரங்களை, அக்காலத்தில் வாழ்ந்த புலவர்கள் பாடல்களாகப் பாடினர்- கும்மிப்பாடல்

26.   பேச்சுத் தமிழில் அமைந்த கும்மிப்பாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன- பஞ்சக்கும்மிகள்

27.   பஞ்சக்கும்மிகள் என்ற நூலைத் தொகுத்தவர் - புலவர் செ.இராசு

28.   காத்து நொண்டிச் சிந்து என்ற பாடலை இயற்றியவர் - வெங்கம்பூர் சாமிநாதன்

29.   வானில் கரு- முகில் தோன்றினால் மழை பொழியும் என்பர்

30.   முறையான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் - காலனை ஓட்டிவிடும்

31.   'விழுந்ததங்கே' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - விழுந்தது + அங்கே

32.   செத்திறந்த' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - செத்து + இறந்த

33.   பருத்தி + எல்லாம் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்பருத்தியெல்லாம்

34.   சுகுவாமிஷ் பழங்குடியினர் அமெரிக்காவில் எங்கு வாழ்ந்தனர்- பூஜேசவுண்ட்

35.   சுகுவாமிஷ் பழங்குடியினரின் தலைவர் - சியாட்டல்

36.   சியாட்டல் தன் பகுதியில் உள்ள இயற்கையை காக்க எந்நாட்டின் குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்- அமெரிக்கா

37.   சியாட்டல் நறுமணம் மிகுந்த மலர்கள் யாவும் எமது - சகோதரிகள்

38.   சியாட்டல் எதை தங்கள் சகோதரர்கள் என்று கூறுகிறார் - மான்கள், குதிரைகள் , கழுகுகள்

39.   சியாட்டல் யாரை எம் உடன் பிறந்தவர்கள் என்று கூறுகிறார்ஆறுகள்

40.   சுருவாமிஷ் பழங்குடியினர் எதை தாயாக கருதுகிறார்கள்- பூமி

41.   சுகுவாமிஷ் பழங்குடியினர் எதை தந்தையாக கருதுகிறார்கள்- வானம்

42.   நிலம் பொது என்ற கட்டுரை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது- தமிழகப் பழங்குடிகள்

43.   தமிழகப் பழங்குடிகள் என்ற நூலை இயற்றியவர் - பக்தவச்சல பாரதி

44.   செவ்விந்தியர்கள் நிலத்தை  - தாயாக மதிக்கின்றனர்

45.   'இன்னோசை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- இனிமை + ஓசை

46.   பால் + ஊறும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- பாலூறும்

47.   பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதியில் வாழ்ந்த பழங்குடியினர்- காடர்

48.   வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில், நீலப்பூவின் இதழ்களுக்கிடையே  வசித்து வந்தது - பச்சை வெட்டுக்கிளி

49.   வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் சருகுமானின் பெயர் - கூரன்

50.   வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் கூச்சப்படும் விலங்கு- சருகுமான்

51.   வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் சிறுத்தையின் பெயர் - பித்தக்கண்ணு

52.   வெட்டுக்கிளியும் சருகுமானும் என்ற பாடத்தில் கூரன் எப்படி தப்பித்தது- புனுகுப்பூனையின் துர்நாற்றத்தால்

53.   காடர்கள் தங்கள் பேசும் மொழியை எவ்வாறு அழைக்கின்றனர்- ல் அலப்பு

54.   காடர்களின் கதைகளைத் தொகுத்துள்ளவர்கள் - மனிஷ் சாண்டி , மாதுரி ரமேஷ்

55.   காடர்களின் கதைகளை "யானையோடு பேசுதல்" என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்தவர் - .கீதா

56.   ஒன்றன் செயலைக் குறிக்கும் சொல் எனப்படும்- வினைச்சொல்

57.   பொருள் முற்றுப் பெற்ற வினைச்சொற்களை- முற்றுவினை

58.   வினைமுற்று எந்தெந்த பால்களில் வரும்- ஐந்து பால்களிலும் வரும்

59.   வினைமுற்று எந்தெந்த காலங்களில் வரும்- மூன்று காலங்களிலும் வரும்

60.   வினைமுற்று எந்தெந்த இடத்தில் வரும்- மூன்று இடத்திலும் வரும்

61.   வினைமுற்று எத்தனை வகைப்படும் - இரண்டு

62.   ஒரு செயல் நடை பெறுவதற்கு தேவையான செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகிய ஆறும் வெளிப்படுமாறு அமைவது - தெரிநிலை வினைமுற்று

63.   பொருள், இடம், காலம், சினை, குணம் (பண்பு). தொழில் இவற்றில் ஒன்றனை அடிப்படையாகக் கொண்டு காலத்தை வெளிப்படையாகக் காட்டாது செய்பவரை மட்டும் வெளிப்படையாகக் காட்டும் வினைமுற்று- குறிப்பு வினைமுற்று

64.   ஒரு செயலைச் செய்யுமாறு ஏவும் வினைமுற்று- ஏவல் வினைமுற்று

65.   வாழ்த்துதல், வைதல், விதித்தல், வேண்டல் ஆகிய பொருள்களில் வரும் வினைமுற்று- வியங்கோள் வினைமுற்று

66.   வியங்கோள் வினைமுற்று ஐக் காட்டும் - இரு திணைகள் , ஐந்து பால் ,மூன்று இடம்

67.   வியங்கோள் வினைமுற்றின் விகுதிகள் - , இய,இயர்,அல்

68.   எந்த பொருளில் வரும் வியங்கோள் வினைமுற்று, தன்மை இடத்தில் வராது- விதித்தல்

69.   தற்கால வழக்கில் இல்லாத வியங்கோள் வினைமுற்று விகுதிகள் - இயர், அல்

70.   மாடு வயலில் புல்லை மேய்ந்தது, இத்தொடரிலுள்ள வினைமுற்று- மேய்ந்தது

71.   இறந்தகால வினைமுற்று - படித்தான்

72.   ஏவல் வினைமுற்றுக்கு எடுத்துக்காட்டு தருக - ஓடு

73.   உலக இயற்கை வளப் பாதுகாப்பு நாள்- ஜீலை 28

74.   உலக ஈர நில நாள்- பிப்ரவரி 2

75.   உலக ஓசோன் நாள்- செப்டம்பர் 16

76.   உலக இயற்கை நாள்- அக்டோபர் 3

77.   உலக வனவிலங்கு நாள்- அக்டோபர் 6

78.   உலக இயற்கைச் சீரழிவுத் தடுப்பு தினம்- அக்டோபர் 5

79.   தொடர்கள் பொருள் அடிப்படையில்6 வகைப்படும்

80.   ஒரு செய்தியைத் தெளிவாகக் கூறும் தொடர் - செய்தித் தொடர்

81.   ஒருவரிடம் ஒன்றை வினவுவதாக அமையும் தொடர்- வினாத்தொடர்

82.   ஏவல், வேண்டுதல், வாழ்த்துதல், வைதல் ஆகிய பொருள்களில் வரும் தொடர்- விழைவுத் தொடர்

83.   உவகை, அழுகை, அலைம், அச்சம், வியப்பு முதலான உணர்ச்சிகளை உணர்த்தும் தொடர் - உணர்ச்சி தொடர்

84.   கரிகாலன் கல்லணையைக் கட்டினான்" இது எவ்வகைத் தொடர் - செய்தித் தொடர்

85.   சிலப்பதிகாரத்தை இயற்றியவர் யார் இது எவ்வகைத் தொடர் - வினாத்தொடர்

86.   உன் திருக்குறள் நூலைத் தருக இது எவ்வகைத் தொடர்- விழைவுத் தொடர்

87.   உழவுத் தொழில் வாழ்க' இது எவ்வகைத் தொடர்- விழைவுத் தொடர்

88.   கல்லாமை ஒழிக இது எவ்வகைத் தொடர்- விழைவுத் தொடர்

89.   பழந்தமிழ் இலக்கியங்கள் பல அழிந்துவிட்டனவோ இது எவ்வகைத் தொடர்- உணர்ச்சி தொடர்

90.   எக்காலத்திற்கும், எல்லா மக்களுக்கும் பொருந்தும் அறக்கருத்துகளைக் கொண்ட நூல்- திருக்குறள்

91.   திருக்குறளின் பெருமையை விளக்கும் நூல் - திருவள்ளுவமாலை

92.   சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி" என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி

93.   வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்து மேய்ந்தற்று என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - இல்பொருள் உவமை அணி

94.   கல்லாதவர் பயனில்லாத களர் நிலம் போன்றவர்  என்று கூறியவர்திருவள்ளுவர்

95.   கற்றவர்க்கும் கல்லாதவருக்கும் இடையே உள்ள வேறுபாடானது மக்களுக்கும் விலங்குகளுக்கும் இடையே உள்ள வேறுபாட்டிற்கு இணையானது என்றவர்- திருவள்ளுவர்

96.   வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி

97.   கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்துஎன்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - பிறிது மொழிதல் அணி

98.   பெருநாவலர், முதற்பாவலர் , நாயனார் என அழைக்கப்படுபவர் - திருவள்ளுவர்

99.   திருவள்ளுவர் ஆண்டுகளுக்கு முற்பட்டவர் என்பர்- இரண்டாயிரம்

100.  உலகின் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த நூல் - திருக்குறள்

101.  திருக்குறள் பகுப்புகளைக் கொண்டது-3

102.  அறத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது - நான்கு

103.  பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல் திருக்குறளின் எப்பாலில் இடம்பெற்றுள்ளது- அறத்துப்பால்

104.  பொருட்பால் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது மூன்று

105.  அரசியல், அமைச்சியல், ஒழிபியல்  திருக்களின் எப்பாலில் இடம்பெற்றுள்ளது- பொருட்பால்

106.  இன்பத்துப்பால் எத்தனை இயல்களைக் கொண்டுள்ளது - இரண்டு

107.  களவியல், கற்பியல்"  திருக்குறளின் எப்பாலில் இடம்பெற்றுள்ளது- இன்பத்துப்பால்

108.  புகழாலும் பழியாலும் அறியப்படுவது- நடுவு நிலைமை

109.  பயனில்லாத களர்நிலத்திற்கு ஒப்பானவர்கள்- கல்லாதவர்

110.  வல்லுருவம் என்னும் சொல்லை பிரித்து எழுதக் கிடைப்பது - வன்மை + உருவம்

111.  நெடுமை + தேர் என்பதனைச் சேர்தெழுதக் கிடைக்கும் சொல்-நெடுந்தேர்

112.  பொருத்துக.

           1.     தூண்டுதல்- ஆர்வம் கொள்ளுதல்

           2.     ஈரம்- இரக்கம்

           3.     முழவு- இசைக்கருவி

           4.     நாணம்- வெட்கம்

 

 

113.  பொருத்துக.

           1.     நன்செய்- நீர்வளம் நிறைந்த நிலம்

           2.     புன்செய்- குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்

           3.     வள்ளைப்பாட்டு- நெல்குத்தும் போது பாடப்படும் பாடல்

           4.     செஞ்சொல்- திருந்திய சொல்

114.  பொருத்துக.

           1.     முகில்- மேகம்

           2.     சம்பிரமுடன் - முறையாக

           3.     கெடிகலங்கி - மிகவருந்தி

           4.     சேகரம்- கூட்டம்

115.  பொருத்துக.

           1.     வின்னம்- சேதம்

           2.     வாகு- சரியாக

           3.     காலன்- எமன்

           4.     மெத்த - மிகவும்

116.  வினைமுற்றுக்குரிய வேர்சொல்

           1.     நடக்கிறான்- நட

           2.     போனான்- போ

           3.     சென்றனர்- செல்

           4.     உறங்கினாள்- உறங்கு

117.  பொருத்துக

           1.     பேசினாள்- பேசு

           2.     வருக - வா

           3.     கேட்டார்- கேள்

           4.     தருகின்றனர் - தா

118.  பொருத்துக.

           1.     பழங்குடியினர் - Tribes

           2.     சமவெளி- Plain

           3.     பள்ளத்தாக்கு - Valley

           4.     புதர்- Thicket

           5.     மலைமுகடு- Ridge

           6.     வெட்டுக்கிளி- Leopard

           7.     சிறுத்தை- Locust

           8.     மொட்டு- Bud

https://www.a2ztnpsc.in/