8TH- STD -இயல்-5

1.     மனிதர்களின் உள்ளத்தைக் கொள்கை கொள்ளும் ஆற்றல் உடையது - இசை

2.     "பண்ணின்தமிழ் இசைப்பாடலின் பழவெய்முழவு அதிரக் கண்ணின்ஒளி கனகச்சுனை வயிரம்அவை சொரிய" என்ற பாடலின் ஆசிரியர் - சுந்தரர்

3.     பண் என்ற சொல்லின் பொருள் - இசை

4.     திருக்கேதாரம் என்னும் பாடலில் பொன்வண்ண நீர்நிலைகள் நீர்த்திவலைகளை வாரி இறைக்கும்- வைரம்

5.     திருக்கேதாரம் என்னும் பாடலில் மதயானைகள் எதை வாரி வீசும்- மணிகள்

6.     தேவாரம் பாடிய மூவருள் ஒருவர் - சுந்தரர்

7.     நம்பியாரூரார் என அழைக்கப்படுபவர்சுந்தரர்

8.     சுந்தரரின் சிறப்பு பெயர் - தம்பிரான் தோழன்

9.     சுந்தரர் அருளிய தேவராப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளில் - 7 திருமுறையில் வைக்கப்பட்டது

10.   திருத்தொண்டத்தொகையை இயற்றியவர் - சுந்தரர்

11.   திருத்தொண்டத்தொகையை முதல் நூலாகக் கொண்டு சேக்கிழார் இயற்றிய நூல்- பெரியபுராணம்

12.   தேவாரம் என்பது யார் பாடிய பாடல்களின் தொகுப்பு - திருநாவுக்கரசர்,திருஞானசம்பந்தர், சுந்தரர்

13.   தேவாரத்தை தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி

14.   தே + ஆரம் என்பது - இறைவனுக்கு சூடப்படும் மாலை

15.   தே + வாரம்- இனிய ஓசை பொருந்திய பாடல்கள்

16.   பதிகம் என்பது எத்தனை பாடல்களைக் குறிக்கும்-10

17.   திருக்கேதாரம் என்ற பாடலில், காட்டிலிருந்து வந்த - வேழங்கள் கரும்பைத் தின்றன

18.   கனகச்சுனைஎன்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- கனகம் + சுனை

19.   முழவு+ அதிர என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- முழவதிர

20.   ஆற்றுதல் என்பது ஒன்று அலந்தவர்க்கு உதவுதல்  போற்றுதல் என்பது புணர்ந்தாரைப் பீரியாமைஎன்ற கலித்தொகை பாடலை இயற்றியவர்- நல்லந்துவனார்

21.   இல்வாழ்வு என்பது அலந்தவர் க்கு உதவி செய்தலாகும்

22.   பாதுகாப்பு என்பது - அன்புடையோர் பிரியாது வாழ்தல் ஆகும்.

23.   மறைபொருளைப் பிறர் அறியாமல் காத்தல்- நிறை

24.   குற்றம் செய்தவருக்கு தண்டனை வழங்குதல் - நீதிமுறை

25.   கலித்தொகை எவ்வகைப் பாவால் பாடப்பட்ட நூல் - கலிப்பா

26.   கலித்தொகை எத்தனை பாடல்களை கொண்டது - 150

27.   கலித்தொகை எத்தனை பிரிவுகளைக் கொண்டது - ஐந்து

28.   கலித்தொகையை தொகுத்தவர் - நல்லந்துவனார்

29.   கலித்தொகையில் நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவர் - நல்லந்துவனார்

30.   பசியால் வாடும்- அலந்தவர்க்கு உணவளித்தல் நமது கடமை

31.   நம்மை - இகழ்வாரை பொறுத்துக் கொள்ள வேண்டும்?

32.   மறைபொருளைக் காத்தல்- நிறை

33.   "பாடறிந்து" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பாடு + அறிந்து

34.   முறை + எனப்படுவது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்முறையெனப்படுவது

35.   உலகின் மிகப்பழமையான கைவினைக் கலைகளில் ஒன்று - மண்பாண்டக்கலை

36.   தமிழ்நாட்டில் முதுமக்களள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம்- ஆதிச்சநல்லூர்

37.   எந்த மாவட்டத்தில் உள்ள செம்பியன் கண்டியூரில் கலையழகு மிகுந்த மண்கலங்கள் கண்டுபிடிக்கப்பட்டது- நாகை

38.   மதுரைக்கு அருகில் ஏராளமான சுடுமண் பொருள்கள் கிடைத்துள்ள- கீழடி

39.   பானை செய்யும் சக்கரத்தின் பெயர்- திருவை

40.   பானை செய்வதற்கு களிமண்ணுடன் எதை கலக்க வேண்டும்- மெல்லிய மணல் , சாம்பல்

41.   பானை செய்தலைப் சொல்வது மரபு - பானை வனைதல்

42.   மண்பாண்டக் கலையின் இன்னொரு வளர்ச்சி நிலை எது- டெரகோட்டா, சுடுமண் சிற்பக்கலை

43.   மூங்கில்களின் வகைகள் - கல் மூங்கில், மலை மூங்கில் , கூட்டு மூங்கில்

44.   மூங்கில்களில் எந்த வகை மூங்கிலானது கைவினைப் பொருட்கள் செய்ய பயன்படுகிறது- கூட்டு மூங்கில்

45.   குழந்தைகளைப் படுக்கவைக்கப் பயன்படுவது- தடுக்குப்பாய்

46.   உட்கார்ந்து உணவு உண்ண உதவுவது- பந்திப்பாய்

47.   உட்காரவும். படுக்கவும் உதவுவது- திண்ணைப்பாய்

48.   திருமணத்துக்குப் பயன்படுவது- பட்டுப்பாய்

49.   இசுலாமியர் தொழுகைக்குப் பயன்படுத்துவது- தொழுகைப்பாய்

50.   'கூம்பொடு மீப்பாய் களையாது' என்று பாய்மரக் கப்பல்களில் கூறும் நூல் - புறநானூறு

51.   தமிழ்நாட்டின் மாநில மரம் - பனை மரம்

52.   பனைமட்டையின் நாரிலிருந்து தயாரிக்கப்படும் பொருள் - கட்டில்,கூடை,கயிறு

53.   பிரம்பு என்பது - ஒரு கொடிவகை தாவரம்

54.   பிரம்பின் தாவரவியல் பெயர் - கலாமஸ் ரொடாங்

55.   தற்போது பிரம்பு எந்தெந்த இடங்களில் இருந்து தருவிக்காணப்படுகிறது- அசாம்,அந்தமான், மலேசியா

56.   பழந்தமிழ் இலக்கியங்களை பாதுகாத்து வைத்தவை - பனையோலைகள்

57.   பானை - வனைதல் ஒரு சிறந்த கலையாகும்

58.   "மட்டுமல்ல" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- மட்டும் + அல்ல

59.   கயிறு + கட்டில் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்கயிற்றுக்கட்டில்

60.   ஒரு சொல்லின் பொருளை அறியப் பயன்படுவது - அகராதி

61.   ஒரு பொருள் குறித்த அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளப்பயன்படுவது -கலைக்களஞ்சியம்

62.   நகை, அழுகை, வீரம் உள்ளிட்ட எத்தனை சுவைகளை வெளிப்படுத்தக்கூடிய கலையாக இசை பிறந்தது-9

63.   இசை எத்தனை வகைப்படும் - இரண்டு

64.   இசையின் வகைகள் - குரல்வழி இசை , கருவிவழி இசை

65.   இசைக்கருவிகளை இசைத்துப் பாடல் பாடுவோர் - பாணர்

66.   'நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப் பாணன் சூடான் பாடினி அணியாள்" என்ற பாடல்வரி இடம் பெற்ற நூல்புறநானூறு

67.   இசைக்கருவிகள் எத்தனை வகைப்படும்- நான்கு

68.   இசைக்கருவிகளின் வகைகள் - தோல் கருவி,காற்றுக்கருவி,கஞ்சக்கருவி, நரம்புக்கருவி

69.   விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் - தோல் கருவி

70.   தோல் கருவிக்கு எடுத்துக்காட்டு - முழவு, முரசு

71.   தந்திகளை உடைய இசைக்கருவி - நரம்புக்கருவி

72.   நரம்புக்கருவிகளுக்கு எடுத்துக்காட்டு- யாழ், வீணை

73.   காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுவை -  காற்றுக்கருவிகள்

74.   காற்றுக்கருவிகளுக்கு எடுத்துக்காட்டு - குழல், சங்கு

75.   ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை - கஞ்சக்கருவிகள்

76.   கஞ்சக்கருவிகளுக்கு எடுத்துக்காட்டு - சாலரா, சேகண்டி

77.   உடுக்கை, குடமுழா என்பவை எவ்வகை இசைக்கருவி- தோல் கருவி

78.   உடுக்கை என்பது இடை சுருங்கிய ஒரு - கைப்பறை

79.   உடுக்கையின் உடல் எதனால் ஆனது - பித்தளை

80.   உடுக்கையின் வாய்ப்பகுதி எதனால் பொருத்தப்பட்டது - ஆட்டுத்தோல்

81.   உடுக்கையின் எந்த வாயின்மீது அடிப்பர்- வலது

82.   பெரிய உடுக்கைக்கு -  தவண்டை

83.   சிறு உடுக்கைக்கு - குடுகுடுப்பை

84.   தில்லையில் நடனமாடும் நடராசன் ன் கைகளில் உடுக்கையைக் காணலாம்?

85.   "தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம் பயில்வார்என்ற வரியை இயற்றியவர் - திருஞானசம்பந்தர்

86.   குடமுழா எத்தனை முகங்களை உடைய முரசு வகை - 5

87.   குடமுழா ஒவ்வொரு வாயும் எதனால் மூடப்பட்டுள்ளது - தோல்

88.   பஞ்சமகாசப்தம் என அழைக்கப்படும் இசைக்கருவி - குடமுழா

89.   குடமுழா எந்த வகை இசைக்கருவி - தோல்கருவி

90.   காற்றுக்கருவி - குழல் ,கொம்பு ,சங்கு

91.   குழலை எவ்வாறு அழைப்பர்- வேய்ங்குழல் , புல்லாங்குழல்

92.   குழலில் எத்தனை துளைகள் இருக்கும் - 7

93.   கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் என பலவகையான குழல்கள் இருந்ததாக கூறும் நூல் - சிலப்பதிகாரம்

94.   மூங்கில் மட்டுமன்றி எந்தெந்த மரங்களால் குழல்கள் செய்யப்படுகின்றன- சந்தனம்,செங்காலி , கருங்காலி

95.   "குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்" என்ற வரியைக் கூறியவர் -திருவள்ளுவர்

96.   கொம்புகள் இக்காலத்தில் எதைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன- வெண்கலத்தால்

97.   வேடர் வேட்டையின் போது பயன்படுத்தும் இசைக்கருவி - கொம்பு

98.   கழனி மேடுகளில் காவல்புரிவோர் விலங்குகள் மற்றும் கள்வரை விரட்டவும் மற்ற காவலர்களை விழித்திருக்கச் செய்யவும் ஊதுவர் - கொம்பு

99.   இக்காலத்தில் திருவிழா ஊர்வலங்களின் போது இசைக்கப்படும் கொம்பு- எக்காளம், சிங்கநாதம், ஊதுகொம்பு, துத்தரி

100.  சங்கு - ஓர் இயற்கைக்கருவி ஆகும்

101.  வலமாக சுழிந்து இருக்கும் சங்கு - வலம்புரிச்சங்கு

102.  சங்கின் ஒலி - சங்கநாதம்

103.  சங்கை இலக்கியங்களில் எவ்வாறு கூறுவர்- பணிலம்

104.  "சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்" என்ற வரி இடம்பெற்ற நூல் - திருப்பாவை

105.  சாலரா, சேகண்டி எவ்வகைக் இசைக்கருவி ஆகும்- கஞ்சக்கருவி

106.  சாலரா எதனால் செய்யப்பட்டு இருக்கும் - பித்தளை

107.  சாலராவின் வேறு பெயர் - பாண்டில்

108.  வட்டவடிவமான மணி வகையைச் சேர்ந்தது - சேகண்டி

109.  சேகண்டியின் மற்றொரு பெயர் - சேமங்கலம்

110.  கோவில் வழிபாட்டின் போதும் இறுதி ஊர்வலத்தின் போதும் இசைக்கப்படும் கருவி- சேகண்டி

111.  பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி- திமிலை

112.  மணற்கடிகார வடிவத்தில் அமைந்த இசைக்கருவி- திமிலை

113.  திமிலை - பாண்டில் என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது

114.  "சங்கொடு தாரை காளம் தழங்கொலி முழங்குபேரி வெங்குரல் பம்பை கண்டை வியன்துடி நிமிலைதட்டி" என்ற வரி இடம்பெற்ற நூல்- பெரிய புராணம்

115.  விலங்குத் தோலினால் இழுத்துக் கட்டப்பட்ட கருவி- பறை

116.  பழங்காலத்தில் செய்திகளைத் தெரிவிக்க எதைப் பயன்படுத்தினர்- கோட்பறை

117.  பகைவர்களின் ஆநிரையைக் கவரச்செல்லும்போது ஆகோட்பறை முழங்குவர்?

118.  பறை இக்காலத்தில் என்னும் பெயரில் வழங்கப்படுகிறது- தப்பு

119.  பறையை முழக்கிக் கொண்டு ஆடும் ஆட்டம் - தப்பாட்டம்

120.  மத்தளம், முரசு, முழவு போன்ற இசைக்கருவிகள் எவ்வகை இசைக்கருவிகள் - தோல் கருவி

121.  எல்லா இசைக்கருவிக்கும் அடிப்படை எது - தளம்

122.  மத்து + தளம் மத்தளம் என்று கூறியவர் - அடியார்க்கு நல்லார்

123.  முதற்கருவி என்பது - மத்தளம்

124.   மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத முத்துடைத்தாமம் நிரை தாழ்ந்த பந்தர்க்கீழ்" - என்ற வரி இடம்பெற்றள்ள நூல் - நாச்சியார் திருமொழி

125.  தமிழர்கள் போர்த் துணையாகக் கொண்ட கருவிகளுள் முதன்மையானது - முரசு

126.  பழந்தமிழ் நாட்டில் புழக்கத்தில் இருந்த முரசு - படைமுரசு,கொடை முரசு,மணமுரசு

127.  தமிழ் மக்களிடம் முப்பத்தாறு வகையான முரசுகள் வழக்கத்தில் இருந்ததாகக் கூறும் நூல் - சிலப்பதிகாரம்

128.   மாக்கண் முரசம் " என்று கூறும் நூல் - மதுரைக்காஞ்சி

129.  ஒரே முகத்தையுடைய முரசு வகையைச் சேர்ந்தது எது- முழவு

130.  ஒரு பெரிய குடத்தின் வாயில் தோலை இழுத்துக் கட்டப்பட்ட கருவி - முழவு

131.  மண்ணமை முழவு பற்றிக் கூறும் நூல் - பொருநராற்றுப்படை

132.  காலத்தை அறிவிக்க பயன்பட்ட முழவு - நாழிகை முழவு,காலை முழவு

133.   கலைஉணக் கிழிந்த முழவுமருள் பெரும்பழம்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல்- புறநானூறு

134.  யாழ், வீணை போன்றவை எவ்வகை இசைக்கருவி - நரம்புக்கருவி

135.  மிகப்பழமையான யாழ்பேரியாழ் ,செங்கோட்டியாழ்

136.  பேரியாழ் எத்தனை நரம்புகளை கொண்டது - 21

137.  மீன் வடிவில் அமைந்த மகரயாழ் எத்தனை நரம்புகளை உடையது - 19

138.  சகோடயாழ் எத்தனை நரம்புகளை உடையது - 14

139.  யாழின் வடிவம் மாற்றமடைந்து பிற்காலத்தில் வீணை ஆக உருமாறியது

140.  யாழ் போன்ற அமைப்புடைய நரம்புக்கருவி - வீணை

141.  வீணையானது எத்தனை நரம்புகளை கொண்டது - 7

142.  பரிவாதினி என்னும் வீணை எப்பல்லவ மன்னன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது- மகேந்திரவர்மன்

143.  சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது- சொற்றொடர்

144.  இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபுகளோ, வினை, பண்பு முதலியவற்றின் உருபுகளோ மறைந்து வருவது - தொகைநிலைத் தொடர்

145.  தொகைநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் - 6

146.  இரு சொற்களுக்கு இடையில் வேற்றுமை உருபு மறைந்து வருவது -வேற்றுமைத்தொகை

147.  திருவாசகம் படித்தான் என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத்தொகை-இரண்டாம் வேற்றமைத்தொகை

148.  "தலை வணங்கு'' என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத்தொகை - மூன்றாம் வேற்றுமைத்தொகை

149.  சிதம்பரம் சென்றான் என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத்தொகை-நான்காம் வேற்றுமைத்தொகை

150.  "மலைவீழ் அருவி" என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத்தொகை  -ஐந்தாம் வேற்றுமைத்தொகை

151.  "கம்பர் பாடல்" என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத்தொகை - ஆறாம் வேற்றுமைத்தொகை

152.  "மலைக்குகை" என்பதில் இடம்பெற்றுள்ள வேற்றுமைத்தொகை - ஏழாம் வேற்றுமைத்தொகை

153.  ஒரு தொடரில் வேற்றுமை உருபும் அதன் பொருளை விளக்கும் சொல்லும் மறைந்து வருவது - உருபும் பயனும் உடன்தொக்க தொகை

154.  இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்கு எடுத்துக்காட்டு- பால் குடம்

155.  மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்கு எடுத்துக்காட்டு- பொற்சிலை

156.  நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகைக்கு எடுத்துக்காட்டு- மாட்டுக் கொட்டகை

157.  காலம் காட்டும் இடைநிலையும், பெயரெச்ச விகுதியும் மறைந்து வரும் பெயரெச்சம்-வினைத்தொகை

158.  "காலம் கரந்த பெயரெச்சம் வினைத்தொகை" என்று குறிப்பிடும் நூல் - நன்னூல்

159.  இலக்கணக்குறிப்பு தருக  ஆடுகொடி- வினைத்தொகை

160.  இலக்கணக்குறிப்பு தருக வளர்தமிழ்- வினைத்தொகை

161.  பண்புப் பெயருக்கும் அது தழுவி நிற்கும் பெயர்ச்சொல்லுக்கும் இடையே ஆன, ஆகிய என்னும் பண்புருபுகள் மறைந்து வருவது- பண்புத்தொகை

162.  இலக்கணக்குறிப்பு தருக வெண்ணிலவு - பண்புத்தொகை

163.  இலக்கணக்குறிப்பு தருக கருங்குவளை- பண்புத்தொகை

164.  சிறப்புப்பெயர் முன்னும் பொதுப்பெயர் பின்னும் நிற்க, இடையில் ஆகிய என்னும் பண்புருபு மறைந்து வருவது எனப்படும்- இருபெயரொட்டுப் பண்புத்தொகை

165.  இலக்கணக் குறிப்பு தருக பனைமரம் - இருபெயரொட்டுப் பண்புத்தொகை

166.  உவமைக்கும் உவமேயத்துக்கும் இடையில் போல, போன்ற, நிகர, அன்ன முதலிய உவம உருபுகளுள் ஒன்று மறைந்து வருவது - உவமைத்தொகை

167.  இலக்கணக் குறிப்பு தருகமலர்விழி" - உவமைத்தொகை

168.  சொற்களுக்கு இடையிலும், இறுதியிலும் 'உம்' என்னும் இடைச்சொல் மறைந்து நின்று பொருள் தருவதை - உம்மைத்தொகை

169.  இலக்கணக்குறிப்பு தருக "இரவுபகல்"- உம்மைத்தொகை

170.  ஒன்றுக்கு மேற்பட்ட சொற்களில் 'உம்' என்னும் உருபு வெளிப்பட வருவது - எண்ணும்மை

171.  இலக்கணக் குறிப்பு தருக "பசுவும் கன்றும்" - எண்ணும்மை

172.  பொற்றொடி என்பது பொருள் - பொன்னாலான வளையல்

173.  "தொடி" என்பதன் பொருள்- வளையல்

174.  "பொற்றொடி வந்தாள் " என்பது தொகை - அன்மொழித்தொகை

175.  வேற்றுமை, வினை, பண்பு, உவமை, உம்மை ஆகிய தொகைநிலைத் தொடர்களுள் அவை அல்லாத வேறு பிற சொற்களும் மறைந்து வருவது - அன்மொழித்தொகை

176.  உம்மைத்தொகைக்கு எடுத்துக்காட்டு தருக - தாய் தந்தை

177.  ஒரு தொடரில் இரு சொற்கள் வந்து இடையில் எவ்வுருபும் மறையாமல் நின்று பொருளை உணர்த்துவது - தொகாநிலைத் தொடர்

178.  தொகாநிலைத் தொடர் எத்தனை வகைப்படும் - 9

179.  எழுவாய்த் தொடருக்கு எடுத்துக்காட்டு தருக - மல்லிகை மலர்ந்தது

180.  இலக்கணக் குறிப்பு தருக "நண்பா படி" - விளித்தொடர்

181.  " சென்றனர் வீரர்" என்பது எவ்வகைத் தொடர் - வினைமுற்றுத்தொடர்

182.  பெயரெச்சத் தொடருக்கு எடுத்துக்காட்டு - வரைந்த ஓவியம்

183.  வினையெச்சத் தொடருக்கு எடுத்துக்காட்டு - தேடிப் பார்த்தான்

184.  வேற்றுமைத் தொகாநிலைத் தொடருக்கு எடுத்துக்காட்டு - கவிதையை எழுதினார்

185.  இடைச்சொல் தொடருக்கு எடுத்துக்காட்டு - மற்றுப்பிற

186.  உரிச்சொல் தொடருக்கு எடுத்துக்காட்டு - சாலவும் நன்று

187.  அடுக்குத்தொடருக்கு எடுத்துக்காட்டு - நன்று நன்று நன்று

188.  சொற்களுக்கு இடையே வேற்றுமை உருபு மறைந்து வருவது - வேற்றுமைத் தொகை

189.  செம்மரம் என்பது - பண்பு தொகை

190.  கண்ணா வா! என்பது - விளி தொடர்

191.  முல்லை நில மக்களாகிய ஆயர்கள் ஊதுவதில் வல்லவர் - குழல்

192.  முல்லை நில மக்களின் இசைத்திறத்தைப் பற்றி திருப்பதிகத்தில் கூறியவர் - திருஞானசம்பந்தர்

193.  தொடர்களில் சில சொற்கள் இணையாக இடம்பெற்று, பொருளுக்கு வலுவூட்டும் இதனை - இணைச்சொற்கள் என்கிறோம்

194.  இணைச்சொற்கள் எத்தனை வகைப்படும் - 3

195.  இணைச்சொற்களின் மூன்று வகை - நேரிணை,எதிரிணை , செறியிணை

196.  ஒரே பொருளைத் தருவது இணை - நேரிணை

197.  நேரிணை சொல்லுக்கு எடுத்துக்காட்டு - பேரும் புகழும்

198.  எதிரெதிர்ப் பொருளைத் தரும் இணைஎதிரிணை

199.  எதிரிணை சொல்லுக்கு எடுத்துக்காட்டு - இரவு பகல்

200.  பொருளின் செறிவைக் குறித்து வருவது- செறியிணை

201.  செறியிணை சொல்லுக்கு எடுத்துக்காட்டு - பச்சைப்பசேல்

202.  நேரிணை சொல்லுக்கு எடுத்துக்காட்டு - உற்றார் உறவினர்

203.  பொருத்துக.

           1.     பெயரெச்சத்தொடர்எழுதிய பாடல்

           2.     வினையெச்சத்தொடர்- பாடி முடித்தான்

           3.     வினைமுற்றுத்தொடர் - வென்றான் சோழன்

           4.     எழுவாய்த்தொடர்- கார்குழலி படித்தாள்

           5.     விளித்தொடர்- புலவரே வருக

204.  பொருத்துக.

           1.     கனகச்சுனை - பொன் வண்ண நீர்நிலை

           2.     மதவேழங்கள் - மதயானைகள்

           3.     முரலும்- முழங்கும்

           4.     பழவெய்- முதிர்ந்த மூங்கில்

205.  பொருத்துக.

           1.     அலந்தவர்- வறியவர்

           2.     செறா அமை- வெறுக்காமை

           3.     நோன்றல்- பொறுத்தல்

           4.     போற்றார்­- பகைவர்

206.  பொருத்துக.

           1.     கிளை - உறவினர்

           2.     பேதையார் - அறிவற்றவர்

           3.     மறா அமை - மறவாமை

           4.     பொறை - பொறுமை

207.  பொருத்துக

           1.     கைவிணைப் பொருள்கள் - Crafts

           2.     புல்லாங்குழல்- Flute

           3.     முரசு- Drum

           4.     கூடை முடைதல்- Basketry

208.  பொருத்துக.

           1.     பின்னுதல் - Knitting

           2.     கொம்பு - Horn

           3.     கைவினைஞர்- Artisan

           4.     சடங்கு- Rite

https://www.a2ztnpsc.in/