8TH- STD -இயல்-6
1. மன்பதை காக்கும் மாபெரும் சிறப்பு எதற்கு உண்டு- மாமழை
2. "பெருநீரால் வாரி சிறக்க இரு நிலத்து இட்ட வித்து எஞ்சாமை நாறுக நாறார" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - தகடூர் யாத்திரை
3. தகடூர் யாத்திரையில் எந்த நாட்டு மன்னனின் சிறப்பு பற்றி கூறப்படுகிறது- சேரர்
4. தகடூர் இன்று எவ்வாறு அழைக்கப்படுகிறது - தர்மபுரி
5. "தகடூர் யாத்திரை" என்ற நூலின் ஆசிரியர் - பெயர் தெரியவில்லை
6. "தகடூர் யாத்திரை” என்ற நூலின் சில பாடல்கள் என்னும் தொகுப்பு
எந்த நூலில் கிடைத்துள்ளது- புறத்திரட்டு
7. தோட்டத்தில் தம்பி ஊன்றிய - வித்துகள் எல்லாம் முளைத்தன.
8. என் நண்பன் செய்த தொழிலில் அவனுக்கு பெருகிற்று- வாரி
9. "அக்களத்து " என்ற சொல்லைப் பிரித்து ' எழுதக் கிடைப்பது- அ+ களத்து
10. கதிர் +ஈன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- கதிரீன
11. கொடிய பஞ்சத்தைக் காட்டும் அடையாளமாக நடக்கும் நிகழ்வு எது- மழைச்சோற்று நோன்பு
12. பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்ற நூலின் பதிப்பாசிரியர் - அ. கௌரன்
13. கனத்த மழை என்னும் சொல்லின் பொருள் - பெருமழை
14. 'வாசலெல்லாம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - வாசல் + எல்லாம்
15. 'பெற்றெடுத்தோம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - பெற்று + எடுத்தோம்
16. கால் + இறங்கி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - காலிறங்கி
17. வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு" என்று கூறும் நூல் - தொல்காப்பியம்
18. மூவேந்தர்கள் பற்றிய செய்திகளைக் கூறும் நூல் - வால்மீகி இராமாயணம், மகாபாரதம், அர்த்தசாஸ்த்திரம்
19. முடியுடைய மூவேந்தர்களில் பழமையானவர்கள் யார் - சேரர்கள்
20. தமிழகத்தைச் சேர, சோழ, பாண்டியர்களுக்கு உரியதாக கூறும் நூல்கள் - தொல்காப்பியம், சங்க இலக்கியங்கள்
21. “போந்தை வேம்பே ஆரென வரூஉம் மாபெருந் தானையர் மலைந்த பூவும் " எனச் சேரரை முன்வைக்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் - தொல்காப்பியம்
22. சேரர்களின் நாடு - குடநாடு
23. சேரர்களின் தலைநகரம் - வஞ்சி
24. வஞ்சி நகரை எவ்வாறு அழைப்பார் - கருவூர்
25. சேரநாட்டின் துறைமுகப்பட்டினம் - தொண்டி,முசிறி,காந்தளூர்
26. சேரர்களின் கொடி - வில்
27. சேரர்களுக்கு உரிய பூ - பனம் பூ
28. சேலம், கோவை மற்றும் கேரளப் பகுதிகள் இணைந்தது பண்டைய நாடு - சேரநாடு
29. சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் - கொங்குநாடு
30. கொங்கு மண்டலச் சதகம் என்ற நூலை இயற்றியவர் - கார்மேகக் கவிஞர்
31. கொங்கு மண்டல பகுதிகள் - நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், சேலம், கரூர் மாவட்டத்தில் சில பகுதிகள்
32. கொங்கு நாட்டுப் பகுதியை வளம் செழிக்கச் செய்ய பயன்படும் ஆறுககள் - பவானி,நொய்யல், அமராவதி
33. செங்குட்டுவன் கடற்போரில் பெற்ற வெற்றியால் எவ்வாறு அழைக்கப்பட்டான்- கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன்
34. கடம்பர் என்னும் கடற்கொள்ளையர்களை அடக்கியவர்கள் - சேரர்கள்
35. சேரர்களின் சிறந்த துறைமுகங்களில் ஒன்று - முசிறி
36. முசிறி துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை - யானைத் தந்தங்கள்,மிளகு , முத்து, பட்டு, மணி
37. முசிறி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் - பொன், மென்மைமிக்க புடவைகள், சித்திர வேலைப்பாடமைந்த ஆடைகள், பவளம், செம்பு, கோதுமை
38. "மீனோடு நெற்குவை இ மிசையம்பியின் மனைமறுக்குந்து " என்ற பாடல் இடம்பெற்ற நூல் - புறநானூறு
39. சேர நாட்டில் விலையை கணக்கிட அடிப்படையாக இருந்தது - நெல்
40. சேரநாட்டில் நெல்லுக்கு இணையான மதிப்பை பெற்றிருந்த பொருள் எது - உப்பு
41. "நெல்லும் உப்பும் நேரே ஊரீர் கொள்ள ரோவெனச் சேரிதொறும் நுவலும் " என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - அகநானூறு
42. கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்கு தொடர்ச்சி மலையும் சந்திக்கும் இடம் - நீலகிரி
43. நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலைகள் - தேயிலைத் தொழிற்சாலை,புகைப்படச் சுருள் தயாரிப்பு,துப்பாக்கி வெடிமருந்து தொழிற்சாலை
44. கோவன்புத்தூர் என்னும் பெயர் மருவி என வழங்கப்பட்டு வருகிறது - கோயம்புத்தூர்
45. மலர் உற்பத்தியில் முதலிடம் வைக்கும் மாவட்டம் - திண்டுக்கல்
46. தமிழ்நாட்டின் ஹாலந்து என்று சிறப்பிக்கும் மாவட்டம் - திண்டுக்கல்
47. சின்னாளபட்டி எதற்கு பெயர் பெற்றது - சுங்குடிச் சேலைகள்
48. தமிழ்நாட்டில் பரப்பளவின் அடிப்படையில் இரண்டாவது பெரிய நகரம் - ஈரோடு
49. தமிழகத்தில் மஞ்சள் சந்தை எங்கு நடைபெறுகிறது- ஈரோடு
50. மிகச்சிறந்த பின்னலாடை நகரம் - திருப்பூர்
51. இந்தியாவின் முதல் ஆயத்த ஆடைப் பூங்காவான நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா எந்த மாவட்டத்தில் அமைந்துள்ளது- திருப்பூர்
52. காங்கேயம் காளைகள் எந்த மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்றன- திருப்பூர்
53. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலைகள் - பச்சைமலை,கொல்லிமலை,சேர்வராயன் மலை
54. தென் இந்தியாவிலேயே முட்டை உற்பத்தியில் முதன்மையான மாவட்டம் - நாமக்கல்
55. மாங்கனி நகரம் என அழைக்கப்படுவது - சேலம்
56. இந்தியாவிலேயே எந்த மாவட்டத்தில் ஜவ்வரிசி அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது- சேலம்
57. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுவது - ஊட்டி
58. வஞ்சி மாநகரம் என்று அழைக்கப்படும் மாவட்டம் - கரூர்
59. கரூரைத் தமிழகத்தின் முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக் குறிப்பிட்ட கிரேக்க அறிஞர் - தாலமி
60. பேருந்துக் கட்டுமானத் தொழிலின் சிகரமாக விளங்கும் மாவட்டம் - கரூர்
61. ஆன்பொருநை என்று அழைக்கப்படும் ஆறு - அமராவதி
62. வீட்டு உபயோகப் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டம்- கோயம்புத்தூர்
63. முடியுடைய மூவேந்தர்களில் பழமையானவர்கள்- சேரர்கள்
64. வெஞ்சனம் என்ற சொல்லின் பொருள் - பொரியல்
65. காலம் உடன் வரும் என்ற சிறுகதையை எழுதியவர் - கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார்
66. சீரங்கராயன் சிவக்குமார் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்- திருப்பூர்
67. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் எத்தனைக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார்- 150
68. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் சிறுகதைக்களுக்கான - இலக்கியச் சிந்தனை விருது விருதைப் பெற்றுள்ளார்
69. கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் எழுதிய நூல்கள்- கன்னிவாடி,குணச்சித்திரங்கள், உப்புக்கடலைக் குடிக்கும் பூனை
70. நிலைமொழி ஈறும், வருமொழி முதலும் இணைவது - புணர்ச்சி
71. நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் - உயிரீற்றுப் புணர்ச்சி
72. நிலைமொழி இறுதி எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் - மெய்யீற்றுப் புணர்ச்சி
73. வருமொழியின் முதல் எழுத்து உயிர் எழுத்தாக இருந்தால் - உயிர் முதல் புணர்ச்சி
74. வருமொழியின் முதல் எழுத்து மெய் எழுத்தாக இருந்தால் - மெய் முதல் புணர்ச்சி
75. நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி இணைவது - இயல்பு புணர்ச்சி
76. இரண்டு சொற்கள் இணையும்போது நிலைமொழியிலோ, வருமொழியிலோ அல்லது இரண்டிலுமோ மாற்றங்கள் நிகழ்வது புணர்ச்சி - விகாரப்புணர்ச்சி
77. விகாரப்புணர்ச்சி எத்தனை வகைப்படும் - மூன்று
78. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது புதிதாக ஓர் எழுத்துத் தோன்றுவது- தோன்றல் விகாரம்
79. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து வேறு எழுத்தாக மாறுவது- திரிதல் விகாரம்
80. நிலைமொழியும் வருமொழியும் இணையும்போது ஓர் எழுத்து மறைவது - கெடுதல் விகாரம்
81. 'பாலாடை' - இச்சொல்லுக்குரிய புணர்ச்சி - திரிதல் விகாரம்
82. தமிழ்நாட்டில் பழுப்பு நிலக்கரி சுரங்கம் எங்குள்ளது - நெய்வேலி
83. கொங்கு மண்டல எல்லையாக கூறப்பட்ட பகுதிகள்
1. வடக்கே - பெரும்பாலை
2. தெற்கே - பழனிமலை
3. கிழக்கே - மதிற்கரை
4. மேற்கே - வெள்ளிமலை
84. பொருத்துக.
1. தூத்துக்குடி - முத்து நகரம்
2. சிவகாசி - குட்டி ஜப்பான்
3. மதுரை - தூங்கா நகரம்
4. திருவண்ணாமலை - தீப நகரம்
85. பொருத்துக.
1. வாரி - வருவாய்
2. எஞ்சாமை - குறைவின்றி
3. முட்டாது - தட்டுப்பாடின்றி
4. ஒட்டாது - வாட்டம் இன்றி
86. பொருத்துக.
1. வைகுக - தங்குக
2. ஒதை - ஓசை
3. வெரீஇ - அஞ்சி
4. யாணர் - புதுவருவாய்
87. பொருத்துக.
1. மட்பாண்டம் - திரிதல் விகாரம்
2. மரவேர்- கெடுதல் விகாரம்
3. மணிமுடி- இயல்புப் புணர்ச்சி
4. கடைத்தெரு - தோன்றல் விகாரம்
88. பொருத்துக
1. நூல் - Thread
2. தறி - Loom
3. பால் பண்ணை - Dairy farm
4. தோல் பதனிடுதல் - Tanning
89. பொருத்துக.
1. தையல்- Stitch
2. ஆலை- Factory
3. சாயம் ஏற்றுதல் - Dyeing
4. ஆயத்த ஆடை- Readymade Dress
90. பொருத்துக
1. ஆயிரங்காலத்துப் பயிர் - நீண்டகாலமாக இருப்பது
2. கல்லில் நார் உரித்தல் - இயலாத செயல்
3. கம்பி நீட்டுதல்- விரைந்து வெளியேறுதல்
4. கானல் நீர் - இருப்பது போல் தோன்றும், ஆனால் இருக்காது
5. கண்ணை மூடிக்கொண்டு- ஆராய்ந்து பாராமல்
0 Comments
THANK FOR VISIT