8TH- STD -இயல்-7

1.     "எதுகொல் இது மாயை ஒன்று கொல் எரிகொல் மறலிகொள் ஊழி யின்கடை" என்ற கலிங்கத்துப்பரணி பாடலை இயற்றியவர் - ஜெயங்கொண்டார்

2.     "வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி மறைவர் சிலர்வழி தேடி வன்பிலம்" என்ற பாடலை இயற்றியவர் - ஜெயங்கொண்டார்

3.     "அருவர் வருவர் எனா இறைஞ்சினர் அபயம் அபயம் என நடுங்கியே" என்ற பாடலை இயற்றியவர் - ஜெயங்கொண்டார்

4.      மறலி" என்ற சொல்லின் பொருள் - காலன்

5.     "கரி" என்ற சொல்லின் பொருள் - காலன்

6.     ஜெயங்கொண்டார் எந்த ஊரினைச் சேர்ந்தவர் - திபங்குடி

7.     செயங்கொண்டார் எம்மன்னனின் அவைக்களப்புலவராகத் திகழ்ந்தார்- முதல் குலோத்துங்க சோழன்

8.     செயங்கொண்டாரை "பரணிக்கோர் செயங்கொண்டார்" எனப் புகழ்ந்தவர் - பலபட்டடைச் சொக்கநாதப்புலவர்

9.     96 வகைச் சிற்றிலக்கியங்களில் ஒன்று - கலிங்கத்துப்பரணி

10.   தமிழில் எழுந்த முதல் பரணி நூல் - கலிங்கத்துப்பரணி

11.   கலிங்கத்துப்பரணி யாருடைய வெற்றியை பேசுகிறது- முதல் குலோத்துங்கச் சோழன் மற்றும் படைத்தலைவர் கருணாகரத் தொண்டைமான்

12.   கலிங்கத்துப்பரணியை "தென்தமிழ்த் தெய்வப்பரணி" என்று புகழ்ந்தவர்- ஒட்டக்கூத்தர்

13.   கலிங்கத்துப்பரணி எத்தனை தாழிசைகளைக் கொண்டது - 599

14.   கலிங்கத்துப்பரணியின் பா வகை - கலித்தாழிசை

15.   போர் முனையில் ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிக் கொண்ட வீரனை பாடுவது - பரணி

16.   சிங்கம் எங்கு வாழும் - முழை

17.   கலிங்க வீரர்களிடையே தோன்றிய உணர்வு - அச்சம்

18.   சோழ மன்னனின் படையிலுள்ள யானை சினமுற்று இடியைப் போல பிளிறின.

19.   வெங்கரி" என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- வெம்மை + கரி

20.   'என்றிருள்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- என்று + இருள்

21.   போல் + உடன்றன என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- போலுடன்றன

22.   முன்னூறு வருடமாய் முற்றுகையிட்ட " எனத் தொடங்கும் கவிதையை எழுதியவர் - மீரா

23.   சதி வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர் யார்  - பகத்சிங்

24.   மீராவின் இயற்பெயர்  - மீ. இராசேந்திரன்

25.   ஊசிகள்" என்ற நூலை எழுதியவர் - மீரா

26.   ''குக்கூ'' என்ற நூலை எழுதியவர் - மீரா

27.   "மூன்றும் ஆறும்'', "வா இந்தப்பக்கம்"  என்ற நூலை எழுதியவர் - மீரா

28.   "கோடையும் வசந்தமும்" என்ற நூலை எழுதியவர் - மீரா

29.   மீரா நடத்தி வந்த இதழின் பெயர் - அன்னம் விடு தூது

30.   விடுதலைத் திருநாள் என்ற கவிதை எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது - கோடையும் வசந்தமும்

31.   "சீவன்" என்ற சொல்லின் பொருள் - உயிர்

32.    சத்தியம்" என்ற சொல்லின் பொருள் - உண்மை

33.   வானில் முழுநிலவு அழகாகத் - தரிசனம் அளித்தது

34.   இந்த வையம் முழுவதும் போற்றும்படி வாழ்வதே சிறந்த வாழ்வு.

35.   'சிவனில்லாமல்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- சீவன் + இல்லாமல்

36.   விலங்கொடித்து' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- விலங்கு + ஒடித்து

37.   காட்டை + எரித்து என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்- காட்டையெரித்து

38.   இதம் + தரும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்இதந்தரும்

39.   மதிய உணவுத் திட்டம் யார் காலத்தில் தொடங்கப்பட்டது - காமராசர்

40.   மதிய உணவுத் திட்டத்தைசத்துணவு திட்டமாகவிரிவுபடுத்தியவர் - எம். ஜி. இராமசந்திரன்

41.   எம். ஜி. இராமசந்திரனை மக்கள் எவ்வாறு அழைத்தனர்- புரட்சித்தலைவர், மக்கள் திலகம்

42.   எம். ஜி. இராமசந்திரனின் பெற்றோர் எம்மாநிலத்தைச் சேர்ந்தவர் - கேரளா

43.   எம். ஜி. இராமசந்திரனின் பெற்றோர் கேரளாவில் இருந்து எங்கு குடிபெயர்ந்தனர் - இலங்கை

44.   எம். ஜி. இராமசந்திரன் இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்த ஆண்டு - ஜனவரி 17, 1917

45.   எம். ஜி. இராமசந்திரன் பெற்றோர் - கோபாலன் - சத்யபாமா

46.   எம். ஜி. இராமசந்திரன் எத்தனையாவது மகனாக பிறந்தார் - 5வது

47.   எம். ஜி. இராமசந்திரனின் தாயார் குழந்தைகளுடன் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டின் எப்பகுதிக்கு குடிபெயர்ந்தார்- கும்பகோணம்

48.   பள்ளிக் குழந்தைகளுக்கு காலனி வழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் - எம். ஜி. இராமசந்திரன்

49.   எம். ஜி. இராமசந்திரனுக்கு டாக்டர் பட்டம் வழங்கிய பல்கலைக்கழகம் - சென்னை பல்கலைக்கழகம்

50.   எம்.ஜி.ஆர் க்கு பாரதரத்னா (இந்திய மாமணி) விருது வழங்கப்பட்ட ஆண்டு - 1988

51.   பொன்மனச் செம்மல் என்று அழைக்கப்படுபவர் - எம்.ஜி.ஆர்

52.   யார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்களை சிலவற்றை எம்.ஜி.ஆர் நடைமுறைப்படுத்தினார்- பெரியார்

53.   எம்.ஜி.ஆர் அவர்கள் மதுரை மாநகரில் எத்தனையாவது உலகத்தமிழ் மாநாட்டைச் சிறப்பாக நடத்தினார்- 5வது

54.   எம்.ஜி.ஆர் எம்மாவட்டத்தில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தைத் தோற்றுவித்தார்- தஞ்சை

55.   எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசு எப்பேருந்து நிலையங்களுக்கு எம்.ஜி.ஆர் பெயரை சூட்டியுள்ளது- சென்னை , மதுரை

56.   எம்.ஜி.ஆர் கல்வி பயின்ற இடம்- கும்பகோணம்

57.   எம்.ஜி.ஆர் படிப்பைத் தொடர முடியாமைக்குக் காரணம் - குடும்ப வறுமை

58.   எம். ஜி. ஆருக்கு இந்திய அரசு சிறந்த நடிகருக்கான வழங்கிய பட்டம் - பாரத்

59.   ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் - மதுரை

60.   எம். ஜி. ஆருக்கு அழியாத புகழைத் தேடித்தந்த திட்டம் - மதிய உணவுத்திட்டம்

61.   எந்த மன்னனின் அன்பினால் ஔவையார் அரண்மனையிலேயே தங்கிவிட்டார் - அதியமான்

62.   அதியமான் ஒளவையருக்கு எதை வழங்கினார் - அரிய நெல்லிக்கனி

63.   சிறியிலை நெல்லித் தீங்கனி குறியாது ஆதல் நின்னகத்து அடக்கிச் சாதல் நீங்க மெக்கீந் தனையே'' என்ற பாடல் வரியை இயற்றியவர் - ஒளவையார்

64.   அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர்ஒளவையார்

65.   இவ்வே பீலியணிந்து மாலை சூட்டிக் கண்திரள் நோன்காழ் திருத்தி" என்ற பாடல் வரியை இயற்றியவர்ஒளவையார்

66.   ஒளவையார் சொல்லின் உட்பொருளை அறிந்து கொண்டு போர் வேண்டாம் என்று முடிவு செய்தவர்தொண்டைமான்

67.   அந்த, இந்த என்னும் சுட்டுத்திரிபுகளை அடுத்து வல்லினம் மிகும்

68.   எந்த என்னும் வினாத்திரியை அடுத்து வல்லினம் மிகும்

69.   இரண்டாம் வேற்றுமை உருவாகிய '' வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்

70.   நான்காம் வேற்றுமை உருவாகிய 'கு' வெளிப்படையாக வருமிடத்தில் வல்லினம் மிகும்

71.   இகரத்தில் முடியும் வினையெச்சங்களை அடுத்து வல்லினம் மிகும்

72.   உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் வன்தொடர்க் குற்றியலுகரமாக இருந்தால் மட்டும் வல்லினம் மிகும்

73.   ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சத்தில் வல்லினம் மிகும்

74.   உவமைத்தொகையில் வல்லினம் மிகும்

75.   உருவகத்தில் வல்லினம் மிகும்

76.   எண்ணுப்பெயர்களில் 8, 10 என்ற எண்ணுப்பெயர்களில் மட்டும் வல்லினம் மிகும்.

77.   அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகும்

78.   திசைப்பெயர்களை அடுத்து வல்லினம் மிகும்

79.   மகர மெய்யில் முடியும் சொல்லை அடுத்து வல்லினம் அந்த மகர மெய் அழிந்து அவ்விடத்தில் வல்லினம் மிகும்

80.   எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது

81.   அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது

82.   இரண்டாம் வேற்றுமை தொகையில் வல்லினம் மிகாது

83.   உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது

84.   வினைத்தொகையில் வல்லினம் மிகாது

85.   உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது

86.   பொருத்துக.

           1.     ஆனந்த தரிசனம்  - மகிழ்வான காட்சி

           2.     வையம் - உலகம்

           3.     சபதம் - சூளுரை

           4.     மோகித்து - விரும்பி

87.   பொருத்துக.

           1.     அருவர் - தமிழர்

           2.     உடன்றன - சினந்து எழுந்தன

           3.     தூறு - புதர்

           4.     முழை - மலைக்குகை

88.   பொருத்துக

           1.     மண்டுதல் - நெருங்குதல்

           2.     இறைஞ்சினர் - வணங்கினர்

           3.     வழிவர் - நழுவி ஓடுவர்

           4.     பிலம் - மலைக்குகை

89.   பொருத்துக

           1.     குதிரையேற்றம் -  Equestrian

           2.     கதாநாயகன் - The Hero

           3.     முதலமைச்சர் - Chief minister

           4.     தலைமைப்பண்பு - Leadership

90.   பொருத்துக

           1.     ஆதரவு - Support

           2.     வரி - Tax

           3.     வெற்றி - Victory

           4.     சட்டமன்ற உறுப்பினர் - Member of Legislative Assembly

https://www.a2ztnpsc.in/