8TH- STD -இயல்-8

  1.     "ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் நன்றே நினைமின் நமனில்லை நாணாமே" என்ற பாடலை இயற்றியவர் - திருமூலர்

  2.     திருமந்திரத்தை இயற்றியவர் திருமூலர்

  3.     "நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில் படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே" என்ற பாடலை இயற்றியவர் - திருமூலர்

  4.     அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராகவும், பதிணென் சித்தர்களுள் ஒருவராகவும் கருதப்படுபவர் - திருமூலர்

  5.     திருமந்திரம் எத்தனை பாடல்களை கொண்டுள்ளது - 3000

  6.     தமிழ் மூவாயிரம் என அழைக்கப்படும் நூல்  - திருமந்திரம்

  7.     பன்னிரு திருமுறைகளில் திருமந்திரம் எத்தனையாவது திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது-10

  8.     படமாடக்கோயில்என்ற சொல்லின் பொருள் - படங்கள் அமைந்த மாடங்களையுடைய கோயில்

  9.      உய்ம்மின்என்ற சொல்லின் பொருள் ஈடேறுங்கள்

 10.   "கள்ளக் கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே" என்ற பாடல் வரியின் ஆசிரியர் - குணங்குடி மஸ்தான் சாகிபு

 11.   குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் - சுல்தான் அப்துல் காதர்

 12.   குணங்குடி மஸ்தான் சாகிபு தவம் இருந்து ஞானம் பெற்ற இடம் - சதுரகிரி,புறா மலை, நாகமலை

 13.   "எக்காளக்கண்ணி" என்ற நூலின் ஆசிரியர் - குணங்குடி மஸ்தான் சாகிபு

 14.   மனோன்மணிக் கண்ணி" என்ற நூலின் ஆசிரியர் - குணங்குடி மஸ்தான் சாகிபு

 15.   நந்தீசுவரக்கண்ணி" என்ற நூலின் ஆசிரியர் - குணங்குடி மஸ்தான் சாகிபு

 16.   ஐம்பொறிகளை - தீய வழியில் செல்ல விடாமல் காக்க வேண்டும்.

 17.   ஞானியர் சிறந்த கருத்துகளை மக்களிடம் - பகர்ந்தனர்

 18.   'ஆனந்தவெள்ளம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது- ஆனந்தம் + வெள்ளம்

 19.   உள் + இருக்கும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - உள்ளேயிருக்கும்

 20.    சமத்துவம், பகுத்தறிவு கொள்கைகளை மக்களிடம் பரவலாக்கியவர்- பெரியார், அண்ணல் அம்பேத்கார்

 21.   சமத்துவம், பகுத்தறிவு கொள்கைகளை பரப்புவதில் தந்தை பெரியார் மற்றும் அண்ணல் அம்பேத்கருக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் - அயோத்திதாசர்

 22.   தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை - அயோத்திதாசர்

 23.   அயோத்திதாசர் பிறந்த ஆண்டு - 21 மே 1845

 24.   அயோத்திதாசர் பிறந்த இடம் - சென்னை

 25.   அயோத்திதாசரின் இயற்பெயர் - காத்தவராயன்

 26.   காத்தவராயன் யாரிடம் கல்வி மற்றும் சித்த மருத்துவம் கற்றார் - அயோத்திதாசர் பண்டிதர்

 27.   நீலகிரிக்கு சென்று வாழ்ந்த அயோத்திதாசர் திருமணத்திற்கு பிறகு எங்கு சென்றார் - பர்மா

 28.   பர்மாவில் கூலித்தொழிலாளர்களாக இருந்த தமிழர்களின் உரிமைக்காக போராடியவர்-அயோத்திதாசர்

 29.   அயோத்திதாசருக்கு தெரிந்த மொழிகள் - பாலி, தமிழ் , வடமொழி ,ஆங்கிலம்

 30.   காலணா விலையில் அயோத்திதாசர் தொடங்கிய வார இதழ் - ஒரு பைசாத்தமிழன்

 31.   அயோத்திதாசர் ஒரு பைசாத்தமிழன் இதழைத் தொடங்கிய ஆண்டு - 1907

 32.   ஒரு பைசாத்தமிழன் இதழின் பெயரை அயோத்திதாசர் என்னவென்று பெயர் மாற்றம் செய்தார் - தமிழன்

 33.   ஒரு மனிதனின் அறிவு வளர்ச்சிபெற வேண்டுமானால், கல்வி அறிவு அவசியம் என்று கருதியவர் - அயோத்திதாசர்

 34.   நிலவு நாளும் வளர்ந்து முழு நிலவாகி ஒளிவீசுவது போல் கல்வி நிறுவனங்களில் அறிவை வளர்க்கும் நூல்கள் கற்பிக்கப்பட வேண்டும்" என்று கூறியவர்- அயோத்திதாசர்

 35.   அகத்தியர் இருநாறு என்ற நூலை பதிப்பித்தவர்அயோத்திதாசர்

 36.   அயோத்திதாசர் பதிப்பித்த நூல்களில் - போகர் எழுநூறு, சிமிட்டு இரத்திரனச் சுருக்கம் , பாலவாகடம்

 37.   "மக்களும் அவர்தம் நோக்கங்களும் பெருமைப்படத்தக்கனவாக இருக்கவேண்டுமானால், அவர்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டி அமையவேண்டும்" என்று கூறியவர்- அயோத்திதாசர்

 38.   "வானம் பொய்ப்பதற்கு காரணம் ஒழுக்கமுள்ள ஞானிகள் இல்லாமையே. ஞானிகள் இல்லாமைக்குக் காரணம் நீதியும் நெறியும் வாய்மையும் நிறைந்த அறிவாளிகள் இல்லாமையாகும்" என்றவர்அயோத்திதாசர்

 39.   என் பகுத்தறிவு பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடியாகத் திகழ்ந்தவர்" என்று பெரியார் யாரைக் குறிப்பிடுகிறார் - அயோத்திதாசர் , அப்பாதுரையார்

 40.    அன்பு கொண்ட நாட்டில் புலியும் பசுவும் ஒரே நீர்த்துறையில் நீர் அருந்தும்என்றவர்- அயோத்திதாசர்

 41.   "நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கை கூட உதவாதுஎன்றவர் - அயோத்திதாசர்

 42.   "இந்திரதேச சரித்திரம்" என்ற நூலை எழுதியவர் - அயோத்திதாசர்

 43.   அயோத்திதாசர் எழுதிய நூல்கள் - புத்தரது ஆதிவேதம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா

 44.   அயோத்திதாசர் யாருடைய கோட்பாடுகளுக்கு, பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார் - திருவள்ளுவர் , ஒளவையார்

 45.   அயோத்திதாசர் பண்டிதர் மருத்துவமனை எங்கு அமைந்துள்ளது - சென்னை

 46.   திராவிட மகாஜன சங்கம் என்ற அமைப்பை அயோத்திதாசர் பண்டிதர் தோற்றுவித்த ஆண்டு - 1892

 47.   "விடுதலை என்பது வெறும் ஆட்சி மாற்றம் அல்ல, அது மக்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்துவதாக அமைய வேண்டும்என்பது யாருடைய கருத்தாகும்-அயோத்திதாசர்

 48.   கல்வியோடு கைத்தொழில் கற்க வேண்டும் என்பது யாருடைய கருத்து- அயோத்திதாசர்

 49.   அயோத்திதாசரின் புதுமையான சிந்தனைகளுக்கு அடித்தனமாக அமைந்தது அவரது- ஆழ்ந்த படிப்பு

 50.   மக்களின் ஒழுக்கத்துடன் தொடர்புடையது - மழை

 51.   "நல்ல குடிமக்கள் இல்லாத நாட்டுக்கு இயற்கை கூட உதவாது'' என்றவர் - அயோத்திதாசர்

 52.   தென்னிந்தியச் சமூகச் சீர்திருத்தத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறவர்- அயோத்திதாசர்

 53.   அக்காலத்தில் வழக்கிலிருந்த அளவைப்பெயர் - மாகாணி, வீசும்

 54.   அந்த காலத்தில் வழக்கத்தில் இருந்த நாணயப்பெயர் - அணா சல்லி,துட்டு

 55.   பதினாறு அணாக்கள் கொண்டது எத்தனை ரூபாய் - ஒரு ரூபாய்

 56.   சிறுகதை மன்னன் என்று அழைக்கப்படுபவர் - புதுமைப்பித்தன்

 57.   புதுமைப்பித்தனின் இயற்பெயர் - சொ. விருத்தாசலம்

 58.   புதுமைப்பித்தன் - 100 க்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்

 59.   "கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்" என்ற சிறுகதையின் ஆசிரியர் - புதுமைப்பித்தன்

 60.   "சாபவிமோசனம்" என்ற சிறுகதையின் ஆசிரியர் புதுமைப்பித்தன்

 61.   பொன்னகரம்" என்ற சிறுகதையின் ஆசிரியர் - புதுமைப்பித்தன்

 62.   "ஒரு நாள் கழிந்தது" என்ற சிறுகதையின் ஆசிரியர் - புதுமைப்பித்தன்

 63.   மனித எந்திரம் என்ற சிறுகதை எந்த இதழில் வெளியானதுமணிக்கொடி

 64.   மரபுக்கவிதைகளை எழுதுவதற்கான இலக்கணம் எனப்படும்  - யாப்பு இலக்கணம்

 65.   யாப்பு இலக்கணத்தின்படி செய்யுளுக்கு உரிய உறுப்புகள் எத்தனை- 6

 66.   யாப்பு இலக்கணத்தின் செய்யுளுக்கு உரிய உறுப்பு வகை - எழுத்து, அசை, சீர், தளை,அடி. தொடை

 67.   யாப்பிலக்கணத்தின்படி எழுத்துகளை எத்தனை வகையாக பிரிப்பர்- மூன்று

 68.   எழுத்துகள் ஒன்றோ சிலவோ சேர்ந்து அமைவது - சீர்

 69.   குறில் அல்லது நெடில் எழுத்து தனித்து வந்தாலும் ஒற்றுடன் சேர்ந்து வந்தாலும் அவைநேரசை

 70.   இரண்டு குறில் எழுத்துகள் அல்லது குறில், நெடில் எழுத்துகள் இணைந்து வந்தாலும் அவற்றுடன் ஒற்றெழுத்து சேர்ந்து வந்தால் அவை - நிரையசை

 71.   ஓர் அசையோ ஒன்றுக்கு மேற்பட்ட அசைகளோ சேர்த்து அமைவது - சீர்

 72.   சீர் எத்தனை வகைப்படும்- 4

 73.   சீர்கள் ஒன்றோடு ஒன்று பொருந்துவது - தளை

 74.   தளை எத்தனை வகைப்படும்7

 75.   இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட சீர்களைக் கொண்டு வருவது- அடி

 76.   அடி எத்தனை வகைப்படும் - 5

 77.   செய்யுளில் ஓசை இன்பமும், பொருள் இன்பமும் தோன்றும் வகையில் சீர்களுக்கு இடையிலோ, அடிகளுக்கு இடையிலோ அமையும் ஒற்றுமை - தொடை

 78.   தொடை எத்தனை வகைப்படும் - 8

 79.   முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது - மோனை தொடை

 80.   இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது - எதுகைதொடை

 81.   இறுதி எழுத்து அல்லது இறுதி ஓசை ஒன்றிவரத் தொடுப்பதுஇயைபுத்தொடை

 82.   பாடலின் இறுதிச்சீர் அல்லது அடியின் இறுதிப்பகுதி அடுத்த பாடலின் முதல்சீர் அல்லது அடியின் முதலில் வருமாறு பாடப்படுவது- அந்தாதித்தொடை

 83.   "பா" எத்தனை வகைப்படும் - நான்கு

 84.   நான்கு வகை பா வகைகள் - வெண்பா, ஆசிரியப்பா,கலிப்பா,வஞ்சிப்பா

 85.   அறநூல்கள் பலவும் எந்த பா வகையில் அமைந்தவை- வெண்பா

 86.   வெண்பாவிற்கு உரிய ஓசை - செப்பல்

 87.   ஆசிரியப்பாவிற்கு உரிய ஓசை - அகவல்

 88.   சங்க இலக்கியம் பலவும் எந்த பாவால் பாடப்பட்டுள்ளது- ஆசிரியப்பா

 89.   கலிப்பாவிற்கு உரிய ஓசை - துள்ளல்

 90.   கலித்தொகை எந்த பாவால் பாடப்பட்டுள்ளது- கலிப்பா

 91.   வஞ்சிப்பாவிற்கு உரிய ஓசை - தூங்கல்

 92.   அசை எத்தனை வகைப்படும் - இரண்டு

 93.   "விடும்" என்பது - நிரையசை

 94.   "நாட்டின் தலைவன் வீரம், விடாமுயற்சி, ஈகை, ஆராய்ந்து அறியும் ஆற்றல்

 95.   பெற்றவனாக விளங்குதல் வேண்டும்" என்று கூறியவர்அயோத்தியதாசர்

 96.   பகுத்தறிவு என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் - Rational

 97.   சீர்திருத்தம் என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல்Reform

 98.   "கான முயல் எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது'' என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - பிறிது மொழிதல் அணி

 99.   நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தோறும் பண்புடை யாளர் தொடர்பு " என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி

100.  "பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம் தீமை யால்திரிந்து அற்று' என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - உவமை அணி

101.  ஆண்மையின் கூர்மை - பகைவருக்கு உதவுதல்

102.  வறுமை வந்த காலத்தில் ஊக்கம் குறையாமல் வாழ வேண்டும்

103.  பெருஞ்செல்வம்' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக்கிடைப்பது - பெருமை + செல்வம்

104.  'ஊராண்மை' என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது - ஊர் + ஆண்மை

105.  திரிந்து + அற்று என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் - திரிந்தற்று

106.  பொருத்துக

           1.     நமன் - எமன்

           2.     சித்தம் - உள்ளம்

           3.     நம்பர் - அடியார்

           4.     நாணாமே - கூசாமல்

107.  பொருத்துக.

           1.     பகராய் - தருவாய்

           2.     ஆனந்த வெள்ளம் - இன்பப்பெருக்கு

           3.     பராபரம் - மேலான பொருள்

           4.     அறுத்தவருக்கு - நீக்கியவர்க்கு

108.  பொருத்துக

              1.     தொண்டு - Charity

              2.     ஞானிSaint

              3.     தத்துவம் - Philosophy

              4.     நேர்மை- Integrity

109.  பொருத்துக.

              1.     இன்பம் தருவது - பண்புடையவர் நட்பு

              2.     நட்பு என்பது - சிரித்து மகிழ மட்டுமன்று

              3.     பெருமையை அழிப்பது - குன்றிமணியளவு தவறு

              4.     பணிவு கொள்ளும் காலம் - செல்வம் மிகுந்த காலம்

              5.     பயனின்றி அழிவது - நற்பண்பில்லாதவன் பெற்ற பெருஞ்செல்வம்

https://www.a2ztnpsc.in/