9TH- STD -இயல்-2
1. திருக்குறளில் "வான்சிறப்பு" என்னும் தலைப்பில் எத்தனை குறட்பாக்கள் உள்ளன -
10
2. "மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும்" என்று இயற்கையை வாழ்த்திப் பாடியவர்- இளங்கோவடிகள்
3. உலகச் சுற்றுச்சூழல் தினம் - ஜீன் 5
4. நீர் நிலைகள் தொடர்பான பெயர்களில் பொருந்தாது - அகழி, ஆழிக்கிணறு, உறைக்கிணறு ,ஊருணி, அணை, ஏரி,கேணி, குளம், கண்மாய்
5. "நீரின்று அமையாது உலகம்" என்று கூறியவர் - திருவள்ளுவர்
6. "மழை உழவுக்கு உதவுகிறது விதைத்த விதை ஆயிரமாகப் பெருகிறது. நிலமும் மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்னும் நோக்கில் வளர்கின்றன" என்று கூறியவர் - மாங்குடி மருதனார்
7. எந்த மண்டலத்தில் ஏரியைக் கண்மாய் என்று அழைப்பார்கள் - பாண்டியர்
8. உறைகிணறு எங்கு தோண்டப்படுகிறது - மணற்பாங்கான இடத்தில்
9. மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலைக்கு என்று பெயர் - ஊருணி
10. தமிழக வரலாற்றில் பல நூற்றாண்டுகளுக்கு முன் யார் காலத்தில் கட்டப்பட்ட கல்லணையே விரிவான பாசனத்திட்டமாக இருந்தது - கரிகால் சோழன்
11. கல்லணையின் நீளம் எத்தனை அடி - 1080 அடி
12. கல்லணையின் அகலம் எத்தனை அடி - 40 - 60 அடி
13. கல்லணையின் உயரம் எத்தனை அடி - 15 - 18 அடி
14. நாட்டின் சிறந்த அரண்களுள் நீருக்கே முதலிடம் தந்தவர் - திருவள்ளுவர்
15. "உணவெனப்படுவது நிலத்தோடு நீரே" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு
16. "இந்திய நீர்பாசனத்தின் தந்தை" என்று அழைக்கப்படுபவர் - சர் ஆர்தர் காட்டன்
17. ஆங்கில அரசால் சர் ஆர்தர் காட்டன் காவிரிப்பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட ஆண்டு - 1829
18. எந்த அணைக்கு கிரான்ட் அணைகட் என்ற பெயரை சர் ஆர்தர் காட்டன் சூட்டினார் - கல்லணை
19. 1873 ஆம் ஆண்டு சர் ஆர்தர் காட்டன் கோதாவரி ஆற்றின் குறுக்கே எந்த அணையைக் கட்டினார்- தௌலீஸ்வரம்
20. தமிழ்நாடு வெப்பமண்டலம் பகுதியில் உள்ளது
21. "தமிழ் மரபில் நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன" என்று கூறியவர்- தொ.பரமசிவன்
22. "குளிர்தல் என்பது குளித்தல் என்று ஆயிற்று" எனக் கூறியவர் - தொ.பரமசிவன்
23. "குள்ளக் குளிரக் குடைந்து நீராடி" என்றவர் - ஆண்டாள்
24. தெய்வச் சிலைகளைக் குளி(ர)க்க வைப்பதை ஆடல் என்று கூறுவர் - திருமஞ்சனம் ஆடல்
25. "நீராடல் பருவம்" என்பது எந்த சிற்றிலக்கியத்தில் இடம்பெற்றுள்ளது - பிள்ளைத்தமிழ்
26. திருமணமானபின் கடலாடுதல் என்னும் வழக்கமும் தமிழகத்தில் நிலவுகிறது
27. "சனிநீராடு" என்பது யாருடைய வாக்கு - ஒளவையார்
28. நிலத்தடி நீர்வளம் குறைந்து வரும் நாடுகள் - அமெரிக்கா ,இந்தியா , பாகிஸ்தான்
29. நமது நாட்டில் எந்த மாநிலத்தில் 700 அடிகளில் கூட ஆழ்குழாய் அமைத்தும் நீர் கிடைக்கவில்லை- இராஜஸ்தான்
30. கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் - அகழி
31. மலைமுகட்டு தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது- அருவி
32. கடலருகே தோண்டிக் கட்டியக் கிணறு - ஆழிக்கிணறு
33. சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு - கட்டுக்கிணறு
34. சிறிதாய் அமைந்த குளிக்கும் நீர் நிலை - குண்டம்
35. குளிப்பதற்கேற்ற சிறுகுளம் - குண்டு
36. பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் - இலஞ்சி
37. அடி நிலத்து நீர், நிலமட்டத்திற்குக் கொப்பளித்து வரும் ஊற்று - குமிழி ஊற்று
38. அகலமும், ஆழமும் உள்ள பெருங்கிணறு - கேணி
39. உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை - கூவல்
40. தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை - சிறை
41. நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர் நிலை - புனற்குளம்
42. கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு - பூட்டைக்கிணறு
43. முல்லை பெரியாறு அணையால் பாசனம் பெரும் மாவட்டங்கள் - திண்டுக்கல் ,சிவகங்கை , இராமநாதபுரம்
44. முல்லை பெரியாறு அணையைக் கட்டியவர் - ஜான் பென்னி குவிக்
45. பட்டமரம் என்ற கவிதையை எழுதியவர் - தமிழ்ஒளி
46. "மொட்டைக் கிளையொடு நின்று
தினம் பெரு மூச்சு விடும் மரமே” எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் - தமிழ்ஒளி
47. தமிழ்ஒளி பிறந்த ஆண்டு - 1924
48. தமிழ்ஒளி எங்கு பிறந்தார்- புதுவை
49. பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கியவர் - தமிழ்ஒளி
50. கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளில் - மாதவி காவியம்,நிலைபெற்றசிலை, வீராயி
51. கவிஞனின் காதல், மே தினமே வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி என்ற நூலை எழுதியவர் - தமிழ்ஒளி
52. இலக்கணக்குறிப்பு தருக “வெம்பி" - வினையெச்சம்
53. இலக்கணக்குறிப்பு தருக எய்தி – வினையெச்சம்
54. காவிரியின் பாதையெல்லாம் பூவிரியும் கோலத்தை அழகாக விவரிக்கும் நூல் - பெரிய புராணம்
55. "காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம் நெருங்குவளை' என்ற பாடலை பாடியவர்- சேக்கிழார்
56. காடுகளின் பக்கங்களின் எங்கும் கரிய மலர் மலர்ந்து உள்ளன- குவளை
57. எந்த நாடு முழுவதும் நீர்நாடு என்று சொல்லத் தக்கதாய் உள்ளது- சோழநாடு
58. அன்னங்கள் விளையாடும் அகலமான துறைகளைக் கொண்ட நீர்நிலையில் எருமைகள் வீழ்ந்து மூழ்கும்
59. சோழநாட்டில் காணப்படும் மரங்களில் சரியானது - தென்னை மரம் , நரந்தம்மரம் , பச்சிலைமரம்
60. சோழ நாட்டில் நீண்ட இலைகளை உடையது - வஞ்சி, காஞ்சி
61. "தடவரை'' இலக்கணக்குறிப்புத் தருக
- உரிச்சொல் தொடர்
62. “கருங்குவளை" இலக்கணக்குறிப்புத் தருக - பண்புத்தொகை
63. “விரிமலர்” இலக்கணக்குறிப்புத் தருக
- வினைத்தொகை
64. செந்நெல் இலக்கணக்குறிப்புத் தருக - பண்புத்தொகை
65. திருத்தொண்டத் தொகையை எழுதியவர் - சுந்தரர்
66. திருத்தொண்டர் திருவந்தாதி என்ற நூலினை எழுதியவர் - நம்பியாண்டார் நம்பி
67. சேக்கிழார் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தவர் - கி.பி.12
68. சேக்கிழார் யாருடைய அமைச்சரவையில் அமைச்சர் ஆக இருந்தார் - இரண்டாம் குலோத்துங்கன்
69. "பக்திசுவை நனி சொட்டச் சொட்ட பாடிய கவி வலவ" என்று சேக்கிழாரை
போற்றியவர் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
70. “வானகமே, இளவெயில், மரச்செறிவே, நீங்களெல்லாம் கானலின் நீரோ? வெறுங்காட்சிப் பிழைதானோ?' என்ற பாடலை பாடியவர் - பாரதியார்
71. "நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்" என்ற புறநானூறு பாடலை இயற்றியவர்- குடபுலவியனார்
72. "உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே " என்ற புறநானூற்று பாடலில்
குடபுலவியனார் யாரை போற்றிப் பாடியுள்ளார் - பாண்டியன் நெடுஞ்செழியன்
73. "நீரும் நிலமும் புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே!" என்ற புறநானூற்றுப் பாடலில் இடம்பெற்றுள்ள திணை மற்றும் துறையைக் குறிப்பிடுக - பொதுவியல், பொருண்மொழிக்காஞ்சி
74. வெட்சி முதலிய புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான செய்திகளைக் கூறும் திணை- பொதுவியல் திணை
75. அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல்- பொருண்மொழிக்காஞ்சி துறை
76. இலக்கணக்குறிப்பு தருக முதூர், நல்லிசை, புன்புலம் - பண்புத்தொகை
77. இலக்கணக்குறிப்பு தருக "நிறுத்தல்" - தொழிற்பெயர்
78. இலக்கணக்குறிப்பு தருக "அமையா" - ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
79. இலக்கணக்குறிப்பு தருக "நீரும் நிலமும்" - எண்ணும்மை
80. இலக்கணக்குறிப்பு தருக "உடம்பும் உயிரும்"- எண்ணும்மை
81. இலக்கணக்குறிப்பு தருக "அடுபோர்"- வினைத்தொகை
82. இலக்கணக்குறிப்பு தருக "கொடுத்தோர்"- வினையாலணையும் பெயர்
83. எட்டுத்தொகை நூல்களில் ஒன்று - புறநானூறு
84. பண்டைய வேந்தர்களின் வீரம், வெற்றி, கொடை குறித்து செய்திகளை கூறும் நூல்- புறநானூறு
85. உணவு தந்தவர் உயிரை தந்தவர் என்ற செய்தி இடம் பெற்றுள்ள நூல் - புறநானூறு
86. பண்டையத் தமிழர்களின் அரிய வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பண்பாட்டுக் கருவூலமாகத் திகழும் நூல் - புறநானூறு
87. "குளம் தொட்டுக்கோடு பதித்து வழிசீத்து" என்ற பாடல்வரி இடம் பெற்றுள்ள நூல்-
சிறுபஞ்சமூலம்
88. "உண்பது நாழி உடுப்பவை இரண்டே
என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு
89. "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு
90. "சான்றோன் ஆக்குதல் தந்தைக்கு கடனே! நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே!" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு
91. "உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல்- புறநானூறு
92. "தண்ணீர்'' என்ற சிறுகதையின் ஆசிரியர் - கந்தர்வன்
93. கந்தர்வனின் இயற்பெயர் - நாகலிங்கம்
94. கந்தர்வன் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர்- இராமநாதபுரம்
95. கந்தர்வன் எழுதிய சிறுகதை தொகுப்புகள் – சாசனம்,ஒவ்வொரு கல்லாய்,கொம்பன்
96. வினைச்சொற்களை அமைப்பின் அடிப்படையில் - 2 வகைப்படுத்தலாம்
97. பகுபதமாக உள்ள வினையடிகளைக் என்பர் - கூட்டுவினை
98. கூட்டு வினைக்கு எடுத்துக்காட்டு தருக – ஆசைப்பட்டேன்,கண்டுபிடித்தார்கள்,தந்தியடித்தேன்
99. கூட்டுவினைகள் மூன்று வகைப்படும்
100. ஒரு கூட்டுவினையின் முதல் உறுப்பாக வந்து தன் அடிப்படை பொருளைத் தரும் வினை- முதல் வினை
101. முதல் வினைக்கு துணையாக வேறு இலக்கணப் பொருளைத் தரும் வினை - துணை வினை
102. தமிழில் ஏறத்தாழ – 40 துணை வினைகள் உள்ளன.
103. மிசை என்பதன் எதிர்ச்சொல் - கீழே
104. நீரின்று அமையாது யாக்கை என்று கூறியவர் - ஒளவையார்
105. மல்லல் என்ற சொல்லின் பொருள்- வளம்
106. “வீட்டின் பக்கத்தில் நிற்கிறது ஒரு மரம்” என்ற கவிதையின் ஆசிரியர் - யூமா வாசுகி
107. "கல்லும் மலையும் குதித்துவந்தேன்" என்ற பாடலை பாடியவர் - கவிமணி
108. அழகின் சிரிப்பு என்ற நூலின் ஆசிரியர்- பாரதிதாசன்
109. தண்ணீர் தண்ணீர் என்ற நூலின் ஆசிரியர் - கோமல் சுவாமிநாதன்
110. தண்ணீர் தேசம் என்ற நூலின் ஆசிரியர் – வைரமுத்து
111. வாய்க்கால் மீன்கள் என்ற நூலின் ஆசிரியர் - வெ. இறையன்பு
112. மழைக்காலமும் குயிலோசையும் என்ற நூலின் ஆசிரியர் - மா.கிருஷ்ணன்
113. மறைநீர் என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல் - Virtual water
114. கண்ணுக்குப் புலப்படாத தண்ணீரும் புலப்படும் உண்மைகளும் என்ற நூலின் ஆசிரியர் - மா.அமரேசன்
115. ஒரு கிலோ ஆப்பிளை உற்பத்தி செய்ய எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது- 822 லிட்டர்
116. ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய எவ்வளவு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது-1780 லிட்டர்
117. ஒரு கிலோ அரிசியை உற்பத்தி செய்ய எவ்வளவு லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது-2500 லிட்டர்
118. ஒரு கிலோ காப்பிக் கொட்டையை உற்பத்தி செய்ய எத்தனை லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது-18,900 லிட்டர்
119. பொருத்துக:
1. குமிழிக்கல் - Conical stone
2. நீர் மேலாண்மை - Water management
3. பாசனத்தொழில் நுட்பம் - Irrigation technology
4. வெப்ப மண்டலம் - Tropical zone
120. பொருத்துக
1. குந்த - உட்கார
2. கந்தம் - மணம்
3. விசனம் - கவலை
4. மிசை - மேல்
121. பொருத்துக
1. வெந்து - வினையெச்சங்கள்
2. மூடுபனி - வினைத்தொகை
3. ஆடுங்கிளை - பெயரெச்சத்தொடர்
4. வெறுங்கனவு - பண்புத்தொகை
122. பொருத்துக.
1. மா - வண்டு
2. மது - தேன்
3. வாவி - பொய்கை
4. தரளம் - முத்து
123. பொருத்துக.
1. வளர்முதல் - நெற்பயிர்
2. பணிலம் - சங்கு
3. வரம்பு - வரப்பு
4. குழை - சிறுகிளை
124. பொருத்துக.
1. மாடு - பக்கம்
2. நெருங்குவளை - நெருங்குகின்ற சங்குகள்
3. துதைந்து எழும் - கலக்கி எழும்
4. பாண்டில் – வட்டம்
125. பொருத்துக.
1. நாளிகேரம் - தென்னை
2. இரும்போந்து - பருத்த பனைமரம்
3. சந்து- சந்தனமரம்
4. நாகம் - நாகமரம்
5. காஞ்சி - ஆற்றுப்பூவரசு
126. பொருத்துக.
1. கழை - கரும்பு
2. கா- சோலை
3. அரும்பு – மலர்,மொட்டு
4. கோடு - குளக்கரை
127. பொருத்துக.
1. ஆடும் - நீராடும்
2. மேதி - எருமை
3. கன்னி வாளை - இளமையான வாளைமீன்
4. சூடு - நெல் அரிக்கட்டு
128. பொருத்துக:
1. நரந்தம் - நாரத்தை
2. கோளி - அரசமரம்
3. சாலம் - ஆச்சாமரம்
4. தமாலம் - பச்சிலை மரங்கள்
129. பொருத்துக.
1. கரிவளை - சங்கு
2. வேரி - தேன்
3. பகடு - எருமைக்கடா
4. சிமயம் - மலையுச்சி
130. பொருத்துக.
1. யாக்கை - உடம்பு
2. தாட்கு - முயற்சி
3. புணரியோர் - தந்தவர்
4. புன்புலம் - புல்லிய நிலம்
0 Comments
THANK FOR VISIT