9TH - STD –இயல் - 4

1.     ஒளிப்படி இயந்திரம் என்பதற்கு தற்போது புழக்கத்தில் உள்ள சொல் -  Xerox

2.     ஒளிப்படி இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - செஸ்டர் கார்ல்சன்

3.     செஸ்டர் கார்ல்சன் எதனைக்கொண்டு முதல் பிரதியை எடுத்தார் - கந்தகம் தடவிய துத்தநாகத் தட்டைக் கொண்டு

4.     நியூயார்க்கைச் சார்ந்த செஸ்டர் கார்ல்சன் தனது முதல் பிரதியை எந்த ஆண்டு எடுத்தார் - 1938

5.     கிரேக்க மொழியில் சிரோகிராஃபி என்றால் - உலர் எழுத்து முறை

6.     செஸ்டர் கார்ல்சன் ஒளிப்படக் கருவியை உலகிற்கு அறிமுகப்படுத்திய ஆண்டு - 1959

7.     தொலைநகல் இயந்திரத்திற்கு ஆங்கில பெயர் - Fax

8.     குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிக்கண்டவர் - அலெக்ஸாண்டர் பெயின்

9.     எஸ்காட்லாந்தை சேர்ந்த அலெக்ஸாண்டர் பெயின் குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றிக்கண்டு அதற்கான காப்புரிமையை பெற்ற ஆண்டு - 1846

10.   தொலைநகல் கருவியை உருவாக்கியவர் - ஜியோவான்னி காசில்லி

11.   ஜியோவான்னி காசில்லி எந்த துறையில் வல்லவர் - இயற்பியல் துறை

12.   ஜியோவான்னி காசில்லி  உருவாக்கிய தொலைநகல் கருவி- பான்டெலி கிராஃப்

13.   எந்த நகருக்கிடையே தொலைநகல் சேவை முதலில் தொடங்கப்பட்டது - பாரிஸ் நகரிலிருந்து லியான் நகருக்கு

14.   பாரிஸ் நகரிலிருந்து லியான் நகருக்கு தொலைநகல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு - 1865

15.   கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் - ஹாங்க் மாக்னஸ்கி

16.   கணினி மூலம் தொலைநகல் எடுக்கும் முறையை ஹாங்க் மாக்னஸ்கி (அமெரிக்கா) கண்டுபிடித்த ஆண்டு - 1985

17.   ஹாங்க் மாக்னஸ்கி தம் கண்டுபிடித்த இயந்திரத்திற்கு இட்ட பெயர்- காமாஃபேக்ஸ்

18.   தானியக்கப் பண இயந்திரம் ATMன் விரிவாக்கம் என்ன- Automated Teller Machine

19.   தானியக்கப் பண இயந்திரத்தை கண்டுபிடித்தவர் - ஜான் ஷெப்பர்டு பாரன் (இங்கிலாந்து)

20.   பார்க்லேஸ் வங்கிக்காக (லண்டன்) தானியக்கப் பணஇயந்திரம் நிறுவப்பட்ட ஆண்டு - ஜீன் 27, 1967

21.   முதன்முதலில் கடவுச் சொல்லுடன் கூடிய அட்டைக்கு இங்கிலாந்தில் காப்புரிமை பெற்றவர் - ஆட்ரியன் ஆஷ்ஃபீல்டு

22.   ஆளறிச் சோதனைக் கருவிக்கு பெயர் -  Biometric device

23.   இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் - மைக்கேல் ஆல்ட்ரிச்

24.   மைக்கேல் ஆல்ட்ரிச் (இங்கிலாந்து) இணைய வணிகத்தை கண்டுபிடித்த ஆண்டு - 1979

25.   இணையவழி மளிகை கடை அமெரிக்காவில் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது - 1989

26.   இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தத ஆண்டு - 1991

27.   வையக விரிவு வலையை உருவாக்கியவர் - டிம் பெர்னர்ஸ் லீ

28.   எந்த ஆண்டு வையக விரிவு வலையை டிம் பொனர்ஸ் லீ உருவாக்கினார்- 1990

29.   IRCTC இணைய பதிவு எந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது - 2002

30.   தற்போது IRCTC இணைய சேவையை ஒரே நேரத்தில் எத்தனை பேர் பயன்படுத்தலாம்- 3 இலட்சம்

31.   பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை பெற நடைபெறும் தேர்வின் பெயர் - தேசிய திறனாய்வு தேர்வு

32.   எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை பெற நடைபெறும் தேர்வின் பெயர் - தேசிய திறனாய்வு தேர்வு, கல்வி உதவி தொகை தேர்வு

33.   கிராமப்புறத்தில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை பெற நடைபெறும் தேர்வின் பெயர் - ஊரகத் திறனாய்வு தேர்வு

34.   விரலி என்ற தமிழ்ச்சொல்லுக்கு இணையான ஆங்கிலச் சொல்Pendrive

35.   என் சமகாலத் தோழர்களே என்ற கவிதை யாருடைய கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது- வைரமுத்து

36.   கிளிக்கு றெக்கை இருக்கும் வரைக்கும் கிழக்கு வானம் தூரமில்லை" என்ற கவிதையை எழுதியவர் - வைரமுத்து

37.   "அறிவியல் என்னும் வாகனம் மீதில் ஆளும் தமிழை நிறுத்துங்கள்" என்ற கவிதையை எழுதியவர் - வைரமுத்து

38.   "ஏவுகணையிலும் தமிழை எழுதி எல்லாக் கோளிலும் ஏற்றுங்கள்" என்ற கவிதையை எழுதியவர் - வைரமுத்து

39.   இலக்கணக்குறிப்பு தருக சொன்னோர் - வினையாலணையும் பெயர்

40.   இலக்கணக்குறிப்பு தருக "பண்பும் அன்பும்" - எண்ணும்மை

41.   இலக்கணக்குறிப்பு தருக "இனமும் மொழியும்" - எண்ணும்மை

42.   கவிஞர் வைரமுத்து தேனி மாவட்டத்தில் உள்ள எந்த ஊரில் பிறந்தார் - மெட்டூர்

43.   வைரமுத்து இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷன் ஐப் பெற்றுள்ளார்

44.   கவிஞர் வைரமுத்து கள்ளிக்காட்டு இதிகாசம் என்ற புதினத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற ஆண்டு - 2003

45.   . வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை எத்தனை முறை பெற்று உள்ளார் - 7

46.   கவிஞர் வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான மாநில விருதை எத்தனை முறை பெற்றுள்ளார் - 6

47.   "புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின் வலவன் ஏவா வான ஊர்தி'' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு

48.   "வெந்திற லான், பெருந் தச்சனைக் கூவி, ஓர் எந்திரவூர்திஇ யற்றுமின்'' என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - சீவக சிந்தாமணி

49.   ஐம்பொறிகளில் - கண்,வாய்,உடல்

50.   "ஒன்றறி வதுவே உற்றறி வதுவே இரண்டறி வதுவே அதனொடு நாவே" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - தொல்காப்பியம்

51.   தொல்காப்பியத்தின் ஆசிரியர் - தொல்காப்பியர்

52.   ஓரறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக - புல், மரம்

53.   ஈரறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக - சிப்பி , நத்தை

54.   மூவறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக - கரையான், எறும்பு

55.   நான்கறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக - நண்டு, தும்பி

56.   ஐந்தறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக - பறவை, விலங்கு

57.   ஆறறிவு உயிருக்கு எடுத்துக்காட்டு தருக - மனிதன்

58.   தமிழ்மொழியில் கிடைக்கப்பெற்ற முதல் இலக்கண நூல் - தொல்காப்பியம்

59.   பிற்காலத்தில் தோன்றிய பல இலக்கண நூல்களுக்கு முதல் நூலாக அமைந்த நூல்- தொல்காப்பியம்

60.   தொல்காப்பியத்தின் அமைப்புகளில் அதிகாரங்களில் தவறானவை  - யாப்பு

61.   தொல்காப்பியம் எத்தனை இயல்களை உடையது - 27

62.   தொல்காப்பியத்தில் எழுத்து, சொல் அதிகாரம் எதனை விளக்குகிறது - மொழி இலக்கணம்

63.   தொல்காப்பியத்தில் பொருள் அதிகாரம் எதை விளக்குகிறது - தமிழர் அகம், புறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளையும், தமிழ் இலக்கிய கோட்பாடுகளை

64.   இலக்கணக்குறிப்பு தருக "உணர்ந்தேர் - வினையாலணையும் பெயர்

65.   இஸ்ரோவின் ஒன்பதாவது தலைவராக பதவியேற்ற தமிழர் - சிவன்

66.   இஸ்ரோவின் தலைவராகப் பதவியேற்ற முதல் தமிழர் - சிவன்

67.   2015 ஆம் ஆண்டு விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக பணியாற்றியவர் - சிவன்

68.   சிவன் அவர்களின் சொந்த ஊர் நாகர்கோவில்

69.   சிவன் அவர்களின் தந்தை பெயர் - கைலாச வடிவு

70.   சிவன் அவர்களின் கல்வித்தகுதி - இளங்கலை கணினி அறிவியல்,வானூர்தி பொறியியல்

71.   சிவன் அவர்கள் இஸ்ரோவில் பணிக்கு சேர்ந்த ஆண்டு - 1982

72.   PSLV திட்டத்தை தொடங்க அரசு அனுமதி அளித்த ஆண்டு - 1983

73.   செயற்கைக்கோள் ஏவு ஊர்தி பற்றிய முழு விவரங்களையும் மின்னிலக்க முறையில் சேகரிக்கும் சித்தாரா செயலியை உருவாக்கியவர்- சிவன்

74.   SITARAன் விரிவாக்கம் - Software for Integrated projector analysis with Real time application.

75.   இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை - விக்ரம் சாராபாய்

76.   இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் - ஆர்யபட்டா,1975

77.   ஆர்யபட்டா செயற்கைக்கோள் உதவியுடன் தொலைக்காட்சி வழியாக, ஐம்பது லட்சமக்களுக்கு கல்வியை எடுத்துச் சென்றவர்  - விக்ரம் சாராபாய்

78.   சிவனை மென் பொறியாளர் என்று அழைத்தவர் - அப்துல்கலாம்

79.   இந்தியாவின் 11வது குடியரசுத் தலைவர் - அப்துல்கலாம்

80.   அப்துல்கலாம் தமிழ்நாட்டில் எந்த பகுதியை சேர்ந்தவர்- இராமேஸ்வரம்

81.   இந்திய ஏவுகணை நாயகன் என்று போற்றப்படுபவர் - அப்துல்கலாம்

82.   அப்துல்கலாம் இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா ஐப் பெற்றுள்ளார்

83.   இரஷ்யா உள்ளிட்ட பல நாடுகள் எந்த ஆண்டு முதல் செயற்கைக்கோள்களை ஏவி உள்ளன - 1957

84.   இந்தியாவிற்காக இதுவரை எத்தனை செயற்கைக் கோள்கள் செலுத்தப்பட்டு உள்ளன- 45

85.   வளர்மதி எந்த ஊரில் பிறந்தார்- அரியலூர்

86.   வளர்மதி தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற வருடம் - 2015

87.   வளர்மதி இஸ்ரோவில் எந்த ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார் - 1984

88.   2012 ல் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் ரேடார் இமேஜிங் செயற்கைக்கோள் திட்டத்தின் இயக்குநராக பணியாற்றியவர் யார்- வளர்மதி

89.   இஸ்ரோவின் செயற்கைகோள் திட்ட இயக்குனராக பணியாற்றிய 2 வது பெண் அறிவியல் அறிஞர் - வளர்மதி

90.   மீனவர்களுக்காக உருவாக்கப்பட்ட செயலி - நேவிக்

91.   விண்வெளி துறையில் எத்தனை வகையான தொழில்நுட்பங்கள் உள்ளது - 3

92.   விண்வெளி துறையில் மூன்று வகையான தொழில்நுட்பம்

           1.     செயற்கைக்கோள் ஏவுவதற்கான தொழில்நுட்பம்

           2.     செயற்கைக்கோளை ஏற்றிச்செல்லும் ஏவு ஊர்தி

           3.     ஏவு ஊர்தியிலிருந்து செயற்கைக்கோளிலிருந்து வரும் செய்தி

93.   GSLV மார்க் - 2 ஏவுகணையின் சுமக்கும் திறன் - 2.25 டன்

94.   GLSV மார்க் - 3 ஏவுகணையின் சுமக்கும் திறன் - 3 டன்

95.   நம் நிலவின் புறவெளியை ஆராய அனுப்பிய செயற்கைக்கோளின் பெயர் - சந்திரயான் - |

96.   சந்திரயான் 2 ல் உள்ள ஆராயும் ஊர்தியின் பெயர் - ரோவர்

97.   சந்திரயான் 2 ல் உள்ள ரோவர் நிலவில் இறங்கி எத்தனை நாள் பயணிக்கும் - 14

98.   திருநெல்வேலி மாவட்டத்தின் ஏர்வாடிக்கு அருகில்  கோதைசேரி என்னும் ஊரைச் சேர்ந்தவர்- அருணன் சுப்பையா

99.   அருணன் சுப்பையா திருவனந்தபுரத்திலுள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் எந்த ஆண்டு பணியில் சேர்ந்தார்- 1984

100.  2013 ல் தொடங்கப்பட்ட இந்தியாவின் செவ்வாய் சுற்றுகலன் திட்டமான மங்கள்யான் திட்டத்தின் இயக்குனர் - அருணன் சுப்பையா

101.  இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் - மயில்சாமி அண்ணாதுரை

102.  கோவை மாவட்டத்தில் கோதவாடி என்னும் சிற்றூரில் பிறந்தவர் - மயில்சாமி அண்ணாதுரை

103.  மயில்சாமி அண்ணாதுரை இதுவரை எத்தனை முனைவர் பட்டங்களை பெற்றுள்ளார் - 5

104.  மயில்சாமி அண்ணாதுரை இஸ்ரோவில் எந்த ஆண்டு பணியில் சேர்ந்தார் - 1982

105.  சந்திரயான் 1 ன் திட்ட இயக்குனர்  - மயில்சாமி அண்ணாதுரை

106.  சர்.சி.வி.ராமன் நினைவு அறிவியல் விருது பெற்றவர் - மயில்சாமி அண்ணாதுரை

107.  தமது அறிவியல் அனுபவங்களை கையருகே நிலா என்னும் நூலாக எழுதி உள்ளவர்- மயில்சாமி அண்ணாதுரை

108.  இஸ்ரோவின் 3 வகையான திட்டங்கள்  - 3 ஆண்டுகள், 7 ஆண்டுகள், 15 ஆண்டுகள்

109.  அக்னி சிறகுகள் என்ற நூலின் ஆசிரியர் - அப்துல்கலாம்

110.  மின்மினி என்ற நூலின் ஆசிரியர் - ஆயிஷா நடராஜன்

111.  ஏன், எதற்கு, எப்படி? என்ற நூலின் ஆசிரியர் - சுஜாதா

112.  பொங்கியும் பொலிந்து நீண்ட புதுப்பிடா மயிர்சிலிர்க்கும்" என்று தொடங்கும் பாடலின் ஆசிரியர் - பாரதிதாசன்

113.  நாக்கிற்கு தெரிந்த ஆதார சுவைகள் எத்தனை - 4

114.  ஒரு சராசரி மனிதனுடைய நாக்கில் எத்தனை சுவை அரும்புகள் உள்ளன - 9000

115.  நம் மனித உடலில் மூக்குக்கு மொத்தம் எத்தனை வாசனைகள் உண்டு - 7

116.  PNR ன் விரிவாக்கம் - Passenger Name Record

117.  மின்னணு இயந்திரம் என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்லைக் காண்க - Electronic device

118.  வினாப்பெயர்களின் பின் வல்லினம் மிகாது

119.  எழுவாய் தொடரில் வல்லினம் மிகாது

120.  மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது

121.  இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது

122.  வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது

123.  படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது

124.  அன்று, இன்று, என்று என்ற சொற்களின் பின் வல்லினம் மிகாது

125.  அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு என்ற சொற்களின் பின் வல்லினம் மிகாது

126.  மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது

127.  நிலைமொழி உயர்திணையில் அமையும் பெயர்த்தொகையில் வல்லினம் மிகாது

128.  உவமைத்தொகையில் வல்லினம் மிகாது

129.  அடுக்குத்தொடர், இரட்டைக்கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது

130.  அது, இது என்ற சுட்டுப்பெயர்களின் பின் வல்லினம் மிகாது

131.  விளித்தொடர்களின் பின் வல்லினம் மிகாது

132.  பெயரெச்சத்தில் வல்லினம் மிகாது

133.  வினைத்தொகையில் வல்லினம் மிகாது

134.  எட்டு, பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுக்கு பின் வல்லினம் மிகாது

135.  இரண்டாம், மூன்றாம் வேற்றுமைத்தொகையில் வல்லினம் மிகாது

136.  வினாப்பெயர்களின் பின் வல்லினம் மிகாது

137.  பொருத்துக

           1.     ஏவு ஊர்தி - Launch vehicle

           2.     ஏவுகணை - Missile

           3.     கடல் மைல் - Natical mile

           4.     காணொலிக் கூட்டம் - Video conference

 

https://www.a2ztnpsc.in/