9TH- STD -இயல்-5

1.     சங்க காலத்தில் உயர்ந்திருந்த பெண்கல்வி, எந்தக் காலத்தில் நலிந்து காணப்பட்டது -இடைக்காலத்தில்

2.     சங்ககால பெண்புலவர்கள் - வெண்ணியக் குயத்தியார்,அள்ளூர் நன்முல்லையார்,நக்கண்ணையார்

3.     சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்விகற்ற பெண்ணாக இருந்த மாதவியின் மகள்- மணிமேகலை

4.     பக்தி இயக்கம் வளர்ந்த காலத்தில் இறைவனுக்கு பாமாலை சூட்டியவர்கள்- ஆண்டாள்,காரைக்கால் அம்மையார்

5.     தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் - முத்துலட்சுமி

6.     இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் - முத்துலட்சுமி

7.     சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்- முத்துலட்சுமி

8.     தேவதாசி ஒழிப்புச்சட்டம் நிறைவேற காரணமாக இருந்தவர் - முத்துலட்சுமி

9.     இருதார திருமண தடைச்சட்டம் நிறைவேற காரணமாக இருந்தவர் - முத்துலட்சுமி

10.   பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம் நிறைவேற காரணமாக இருந்தவர் - முத்துலட்சுமி

11.   முத்துலட்சுமி அடையாற்றில் அவ்வை இல்லத்தை தொடங்கிய வருடம் - 1930

12.   முத்துலட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கிய ஆண்டு- 1952

13.   முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர் - பெரியார்

14.   விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் - பாரதியார்

15.   பெண்ணடிமை தீரும் வரை மண்ணடிமை தீருமோவென இடிமுழக்கம் செய்தவர் - பாரதிதாசன்

16.   1882 ல் முதன் முதலில் பெண்கல்விக்கு பரிந்துரை செய்த குழு - ஹண்டர் குழு

17.   ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே இணையர் முதன்முதலில் பெண்களுக்கான பள்ளியை தொடங்கிய மாநிலம்- மராட்டியம்

18.   தமிழகத்தின் சமூகச் சீர்திருத்தவாதி, எழுத்தாளர், திராவிட இயக்க அரசியலில் செயல்பட்டவர் -  மூவலூர் இராமாமிர்தம்

19.   தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறத் துணை நின்றவர் - மூவலூர் இராமாமிர்தம்

20.   தமிழக அரசு 8ஆம் வகுப்புவரை படித்த இளம் பெண்களுக்கு திருமண உதவித் தொகையை யார் பெயரில் வழங்கி வருகிறது - மூவலூர் இராமாமிர்தம்

21.   முத்துலட்சுமியின் காலக்கட்டம் - 1886-1968

22.   பெண்கள் மருத்துவராவதை மருத்துவ உலகமே விரும்பாத காலத்தில் தமிழகத்திற்கு வந்து மருத்துவரானவர் - ஐடாஸ் சோபியா ஸ்கட்டர்

23.   ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் எங்கு இலவச மருத்துவம் அளித்தார் - வேலூர்

24.   இந்தியாவில் குழந்தைகளைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவி இதுவரை 80000 குழந்தைகள் கல்வி பெற உதவியவர் - கைலாஷ் சத்யார்த்தி

25.   கைலாஷ் சத்யார்த்தி நோபல் பரிசு பெற்ற ஆண்டு - 2014

26.   பாகிஸ்தானில் பெண்கல்வி வேண்டுமெனப் போராட்டக் களத்தில் இறங்கிய போது மலாலாவின் வயது என்ன - 12

27.   சாவித்திரிபாய் பூலே எந்த ஆண்டு பெண்களுக்கெனத் தொடங்கப்பட்ட பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார் - 1848

28.   இந்திய நாட்டின் முதல் பெண் ஆசிரியர் - சாவித்திரிபாய் பூலே

29.   பட்டமேற்படிப்பிற்கான இலவச கல்வி உதவித்தொகை திட்டம் யார்பெயரில் வழங்கப்படுகிறது- .வெ.ரா- நாகம்மை

30.   சிவகாமி அம்மையார் கல்வி உதவித்திட்டம் எதனுடன் தொடர்புடையது - கல்வி,திருமண உதவித்தொகை

31.   தனித்தமிழில் சிறந்து விளங்கியவர் - நீலாம்பிகை அம்மையார்

32.   மறைமலையடிகளின் மகள் பெயர் - நீலாம்பிகை அம்மையார்

33.   நீலாம்பிகை அம்மையாரின் காலம் - 1903 - 1943

34.   நீலாம்பிகை அம்மையார் இயற்றிய நூல்கள்- முப்பெண்மணிகள் வரலாறு,வடசொல் தமிழ் அகரவரிசை,பட்டினத்தார் பாராட்டிய மூவர்

35.   மகளிர் கல்வியை வலியுறுத்திய கோத்தாரி கல்விக் குழு ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு - 1964

36.   சாரதா சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு - 1929

37.   .. இராஜேஸ்வரி அம்மையாரின் காலம்-1906 - 1955

38.   இராஜேஸ்வரி அம்மையார் எந்த கல்லூரியில் அறிவியல் பேராசியராகப் பணியாற்றி உள்ளார்-இராணிமேரி

39.   இராஜேஸ்வரி அம்மையார் எழுதிய நூல்கள்சூரியன் , பரமானுப்புராணம்

40.   குழந்தை திருமணச்சட்டம் நிறைவேற காரணமாக இருந்தவர் - முத்துலட்சுமி அம்மையார்

41.   1930 ல் முத்துலட்சுமி அடையாற்றில் அவ்வை இல்லத்தை தொடங்கினார்

42.   1952 ல் முத்துலட்சுமி புற்றுநோய் மருத்துவமனையை தொடங்கினார்

43.   மறுமலர்ச்சி இலக்கியம் தோன்றிய நூற்றாண்டு - 20 நூற்றாண்டு

44.   குடும்ப விளக்கின் ஆசிரியர் - பாரதிதாசன்

45.   கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம் என்றவர் - பாரதிதாசன்

46.   களர்நிலம் என்பதன் பொருள்- உவர் நிலம்

47.   கல்வியைக் கற்ற பெண்கள் பண்பட்ட நன்செய் நிலத்தினைப் போன்றவர்கள்-

48.   யாண்டும் என்ற சொல்லின் பொருள் காண்க - எப்பொழுதும்

49.   இலக்கணக்குறிப்பு தருக "மாக்கடல்"- உரிச்சொல் தொடர்

50.   இலக்கணக்குறிப்பு தருக "பொன்னேபோல்"- உவம உருபு

51.   இலக்கணக்குறிப்பு தருக "ஆக்கல்"- தொழிற்பெயர்

52.   இலக்கணக்குறிப்பு தருக "வில்வாள்"- உம்மைத்தொகை

53.   இலக்கணக்குறிப்பு தருக "மலர்க்கை'' - உவமைத்தொகை

54.   இலக்கணக் குறிப்பு தருக "தவிர்க்க ஒணா"- ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

55.   பெண்களுக்கு எது முதன்மையானது என்று பாரதிதாசன் கூறுகிறார் - கல்வி

56.   குடும்ப விளக்கு என்ற நூல் எத்தனை பகுதியாகப் பிரிக்கப்பட்டது - 5

57.   குடும்பவிளக்கு நூலில் விருந்தோம்பல் " எந்த பகுதியில் இடம் பெற்றுள்ளது- 2

58.   பாரதிதாசனின் இயற்பெயர் - கனக சுப்புரத்தினம்

59.   பாரதிதாசனின் நூல்கள் - பாண்டியன் பரிசு , அழகின் சிரிப்பு , இருண்ட வீடு

60.   பாரதிதாசனின் எந்த நாடக நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது- பிசிராந்தையார்

61.    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்'' என்ற பாடல் இயற்றியவர் - பாரதியார்

62.   மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா' என்ற பாடல் இயற்றியவர்- கவிமணி

63.   "பெண் எனில் பேதை என்ற எண்ணம் இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும் உருப்படல் என்பது சரிப்படாது'' என்ற பாடலை இயற்றியவர் - பாவேந்தர்

64.   "தமிழியக்கம்" என்ற நூலை எழுதியவர்பாரதிதாசன்

65.   "பூவாது காய்க்கும் மரம் உள நன்று அறிவார் மூவாது மூத்தவர் நூல் வல்லார்: தாவா" என்ற பாடலைவரியை இயற்றியவர் - காரியாசான்

66.   சிறுபஞ்சமூலம் என்ற நூலின் ஆசிரியர் - காரியாசான்

67.   "பூவாது காய்க்கும் மரம் உள நன்று அறிவார்" என்ற பாடலில் பயின்று வரும் அணி - எடுத்துக்காட்டு உவமையணி

68.   தாவா என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு தருக - ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்

69.   விதையாமை, உரையாமை என்ற சொல்லின் இலக்கணக்குறிப்பு- எதிர்மறைத் தொழிற்பெயர்

70.   அறிவார், வல்லார் என்பதன் இலக்கணக்குறிப்பு - வினையாலணையும் பெயர்

71.   தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து வந்த நூல்கள் - நீதி நூல்கள்

72.   நீதி நூல்கள் எவ்வாறு தொகுக்கப்பட்டு உள்ளது - பதினெண்கீழ்கணக்கு நூல்கள்

73.   சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் - ஐந்து சிறிய வேர்கள்

74.   சிறுபஞ்சமூலம் கூறும் ஐந்து சிறிய வேர்கள் - கண்டங்கத்திரி, சிறுமல்லி சிறுவழு துணை ,நெருஞ்சி, பெருமல்லி

75.   மதுரைத் தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் காரியாசான்

76.   சிறுபஞ்சமூலத்தில் எத்தனை கருத்துகள் உள்ளன - 5

77.   காரியாசானின் இயற்பெயர் - காரி

78.   எந்த நூல் இவரைக் மாக்காரியாசான் என்று சிறப்பிக்கிறது - பாயிரச்செய்யுள்

79.   10 வயதில் சொற்பொழிவு ஆற்றும் ஆற்றல் பெற்றவர் - வள்ளலார்

80.   11 வது வயதிலேயே அரசவையில் கவிதை எழுதி 'பாரதி' என்னும் பட்டம் பெற்றவர் - பாரதியார்

81.   பிரெஞ்சு இலக்கிய கழகத்துக்கு தன் 15 வயதில் கவிதைகளை அனுப்பியவர் - விக்டர் ஹியூகோ

82.   16 வயதில் தமது தந்தையின் போர்ப்படையின் தளபதி ஆனவர் - அலெக்ஸாண்டர்

83.   தன் 17 வது வயதிலேயே பைசா நகரத்து சாய்கோபுர விளக்கு ஊசலாடுவது பற்றி ஆராய்ந்தவர்கலீலியோ

84.   "நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன் " என்றவர் - ஆபிரகாம் லிங்கன்

85.   நடுவண் அரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட 5 ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு - 2009

86.   அண்ணா நூற்றாண்டு நூலகம் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது - 2010

87.   அண்ணாவின் பொன்மொழிகள்

           1.     மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கு மணம் உண்டு

           2.     கத்தியை தீட்டாதே, உன்றன் புத்தியைத் தீட்டு

           3.     எதையும் தாங்கும் இதயம் வேண்டும

           4.     சட்டம் ஒரு இருட்டறை

           5.     தமிழரைத் தட்டி எழுப்பும் தன்மான இலக்கியங்கள் தேவை

           6.     நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்

88.   இளைஞர்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதையும் தேவை என்று கூறியவர் - அண்ணா

89.   அறிஞர் அண்ணா எந்த மொழிகளில் சிறந்த பேச்சாளராக விளங்கினார் - தமிழ்,ஆங்கிலம்

90.   தென்னகத்துப் பெர்னாட்ஷா என்று அழைக்கப்படுவர் - அண்ணா

91.   அண்ணாவின் படைப்புகள் - இன்ப ஒளி, சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்

92.   சென்னை, பெத்தநாயக்கன் பேட்டை, கோவிந்த நாயக்கன் பள்ளியில் ஒரு ஆண்டு ஆங்கில ஆசிரியராக அண்ணா பணியாற்றிய ஆண்டு-  1935

93.   அறிஞர் அண்ணா எந்தெந்த இதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றினார் - ஹோம்லேண்ட், மாலைமணி, ஹோம்ரூல், நம்நாடு, திராவிட நாடு, காஞ்சி

94.   அண்ணா எந்தெந்த இதழ்களில் துணையாசிரியராக பணியாற்றினார் - குடியரசு , விடுதலை

95.   இருமொழி சட்டத்தை உருவாக்கியவர் - அண்ணா

96.   சென்னை மாகாணத்தை 'தமிழ்நாடு' என்று மாற்றியவர் - அண்ணா

97.   ஆசியாவிலேயே மிகப்பழமையான நூலகம் எங்கு உள்ளது -  சரஸ்வதி மகால், தஞ்சை

98.   உலகளவில் தமிழ் நூல்கள் அதிகம் உள்ள நூலகம் எங்கு உள்ளது - கன்னிமாரா, சென்னை

99.   இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் - திருவனந்தபுரம் நடுவண் நூலகம்

100.  இந்தியாவின் மிகப்பெரிய தேசிய நூலகம்  - கொல்கத்தா நூலகம்

101.  கொல்கத்தாவில் நூலகம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1836

102.  கொல்கத்தா நூலகம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்ட ஆண்டு - 1953

103.  உலகின் மிகப்பெரிய நூலகம் - லைப்ரரி ஆப் காங்கிரஸ், அமெரிக்கா

104.  " வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்குத் தரப்பட வேண்டும்" என்று கூறியவர் - அண்ணா

105.  "உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகம்" என்றவர் - கதே

106.  தேசிய நூலக நாள் எந்நாளில் கொண்டாடப்படுகிறது - ஆகஸ்டு 9

107.  யாருடைய பிறந்த நாள் தேசிய நூலக நாளாக கொண்டாப்படுகிறது - இரா.அரங்கநாதன்

108.  இளைஞாகள் உரிமைப் போர்ப்படையின் ஈட்டி முனைகள்" என்ற பொன்மொழியை கூறியவர்அண்ணா

109.  எந்த வகையான இடைச்சொற்கள் தற்காலத்தில் பயன்படுகிறது - உம், .,மட்டும், தான், ஆவது, ஆம், கூட,

110.  'உம்' என்னும் இடைச்சொல் எந்ததெந்த பொருள்களில் வரும் - எதிர்மறை, சிறப்பு அளவை, எச்சம், ஐயம், முற்று, தெரிநிலை, ஆக்கம்

111.  என்னும் இடைசொல் எத்தனை பொருளில் வரும் என நன்னூல் கூறுகிறது - 8

112.  என்னும் இடைசொல் எத்தனை பொருளில் வரும் என நன்னூல் கூறுகிறது- 6

113.  தற்காலத்தில் 'ஏகார' என்னும் இடைச்சொல் எந்த பொருளில் மட்டுமே வருகிறது - அழுத்தம்

114.  தான் என்னும் இடைசொல் அழுத்தப் பொருள்களில் எத்தனை முறை வரும் -1

115.  மட்டும் என்ற சொல் வரையறை பொருளை தருகிறது

116.  '' என்னும் இடைச்சொல் பொருள் வரும்- வினா

117.  'ஆம்' என்னும் இடைசொல் எந்தெந்த பொருள்களில் வரும் - இசைவு , சாத்தியம் , பொருத்தம்

118.  "உரிச்சொற்கள் செய்யுளுக்கே உரியது" என்று கூறியவர் - நன்னூலார்

119.  உரிச்சொற்கள் எத்தனை வகைப்படும் - 2

120.  ஒரு சொல் பல பொருள்களில் வரும் என்ற உரிச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு தருக - கடி

121.  உரிச்சொற்களில் பல சொல் குறித்து ஒரு பொருளில் வரும் உரிச்சொல்லுக்கு எடுத்துக்காட்டு தருக- உறு,தவ,நனி

122.  நா. காமராசனின் கவிதை நூல் - கருப்பு மலர்கள்

123.  திரைப்படமாக வெளிவந்த கோமல் சுவாமிநாதனின் நாடக நூல் - தண்ணீர் தண்ணீர்

124.  நோபல் பரிசு பெற்ற சானஸ்ட் ஹெமிங்வேவின் குறுநாவல் - கிழவனும் கடலும்

125.  சிற்பியின் சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூல் - ஒரு கிராமத்து நதி

126.  எஸ்.ராமகிருஷ்ணனின் சிறார் நாவல் - சாக்ரட்டின் சிவப்பு நூலகம்

127.  ஓயந்திருக்கலாகாது என்ற கல்விச் சிறுகதையினைத் தொகுத்தவர் - அரசி ஆதிவள்ளியப்பன்

128.  "முதல் ஆசிரியா என்ற நூலின் ஆசிரியர் - சிங்கிஸ் ஐத்மாத்தவ்

129.  "கல்வியில் நாடகம் என்ற நூலின் ஆசிரியர் - பிரளயன்

130.  "கரும்பலகை யுத்தம்" என்ற நூலின் ஆசிரியர் - மலாலா

131.  இலக்கணக்குறிப்ப தருக "பூவாது" - எதிர்மறைப் பெயரெச்சம்

132.  பொருத்துக

           1.     சிறுபஞ்சமூலம் - அற இலக்கியம்

           2.     குடும்ப விளக்கு - தற்கால இலக்கியம்

           3.     சீவகசிந்தாமணி - காப்பிய இலக்கியம்

           4.     குறுந்தொகை - சங்க இலக்கியம்

133.  பொருத்துக.

           1.     சமூக சீர்திருத்தவாதி- Social Reformer

           2.     தன்னார்வலர்- Volunter

           3.     களர் நிலம்- Saline sail

           4.     சொற்றொடர்- Sentence

134.  பொருத்துக

           1.     மூவாது - முதுமை அடையாமல்

           2.     நாறுவ - முளைப்ப

           3.     தாவா - கெடாதிருத்தல்

135.  பொருத்துக.

           1.     வையம் - உலகம்

           2.     நவிலல் - சொல்லல்

           3.     மாக்கடல் - பெரிய கடல்

           4.     மின்னாளை - மின்னலைப் போன்றவள்

           5.     தவிர்க்க ஒணா - தவிர்க்க இயலாத

136.  பொருத்துக.

           1.     மின்னாள் - ஒளிரமாட்டாள்

           2.     தணல் - நெருப்பு

           3.     தாழி - சமைக்கும் கலன்

           4.     அணித்து - அருகில்

           5.     இயற்றுக - செய்க

137.  பொருத்துக.

           1.     மூவலூர் இராமாமிர்தம் - 1883 - 1962

           2.     பண்டித ரமாபாய் - 1858 - 1922

           3.     ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் - 1870 - 1960

           4.     சாவித்திரிபாய் பூலே - 1831 - 1897

 

https://www.a2ztnpsc.in/