9TH- STD -இயல்-6
1. "ஓவிய விதானத்து உறைபெறு நித்திலத்து மாலைத்தாமம் வளையுடன் நாற்றி" என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல் - சிலப்பதிகாரம்
2. புலிக்குகை எங்கு அமைந்துள்ளது - மகாபலிபுரம்
3. “கல்லும் உலோகமும் செங்கல்லும் மரமும் மண்ணும் சுதையும் தந்தமும் வண்ணமும்'' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - திவாகர நிகண்டு
4. சிற்பங்களை உருவ அமைப்பின் அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம் - 2
5. உருவத்தின் முன்பகுதியும், பின்பகுதியும் தெளிவாகத் தெரியும் வகையில் அமைந்த சிற்பம் - முழு உருவச் சிற்பம்
6. முன்பகுதி மட்டும் தெரியும்படி அமைக்கப்பட்ட சிற்பம் - புடைப்புச் சிற்பம்
7. உலோகத்தினாலும், கல்லினாலும் சிற்பங்கள் எத்தனை வகையில் அமைக்கப்படுகின்றனர் - 4
8. சிற்பிகள் எவ்வாறு சிறப்பிக்கப்படுகின்றனர் - கற் கவிஞர்கள்
9. தமிழின் தொன்மையான இலக்கண நூலாகிய எதில் சிற்பக்கலை பற்றிய குறிப்பு காணப்படுகிறது - தொல்காப்பியம்
10. தமிழரின் தொடக்க கால சிற்பக்கலைக்கு சான்றாக உள்ளது - நடுகல்
11. சுண்ணாம்புக்கலவை (சுதைச் சிற்பங்கள்) இருந்ததை எந்த நூலின் மூலம் அறிய முடியும் - மணிமேகலை
12. பல்லவர்கள் கால சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டு தருக - மாமல்லபுரம்
13. பல்லவர்கள் கால சிற்பக்கலை எந்தெந்த கோவில்களில் காணப்படுகிறது - காஞ்சி கைலாசநாதர், காஞ்சி வைகுந்த பெருமாள்
14. பல்லவர் கால சிற்பங்கள் எங்கு காணப்படுகின்றன - மாமல்லபுரம்,காஞ்சிபுரம்,மலைக்கோட்டை
15. பாண்டியர் காலச் சிற்பங்கள் காணப்படும் இடங்கள் - திருமயம், கழுகுமலை,பிள்ளையார் பட்டி, குன்றக்குடி,திருப்பரங்குன்றம், வெட்டுவான்கோவில்
16. பாண்டியர் காலச் சிற்பக்கலைக்குச் சான்றாக திகழும் கோயில் சிற்பம் - கழுகுமலை வெட்டுவான் கோவில் சிற்பம்
17. கங்கை கொண்ட சோழபுரத்தை எழுப்பியது - முதலாம் இராசேந்திரன்
18. தாராசுரம் ஐராதீஸ்சுவரர் கோவிலைக் கட்டியவர் - இரண்டாம் இராசராசன்
19. திரிபுவன விரேகவர் கோவிலைக் கட்டியவர் - இரண்டாம் குலோத்துங்கன்
20. பதினான்கு அடி உயரமுள்ள வாயிற்காவலர் உருவங்களும் மிகப்பெரிய நந்தியும் எங்கு காணப்படுகிறது - தஞ்சைப் பெரிய கோவில்
21. ஒரே கல்லில் அமைந்த நவக்கிரமும், சிங்கமும் கிணறும் எங்கு காணப்படுகிறது - கங்கை கொண்ட சோழபுரம்
22. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொடும்பாளூரில் மூவர் கோவில் சிற்பங்கள் யாரால் கட்டப்பட்டது -இரண்டாம் பராந்தகச் சோழன்
23. சீனிவாச நல்லூரில் உள்ள குரங்குநாதர் கோவில் சிற்பங்கள் எந்த மாவட்டத்தில் உள்ளது-திருச்சிராப்பள்ளி
24. சோழர் காலச் சிற்பக்கலை நுட்பத்திற்கு மிகச்சிறந்த சான்றாக திகழும் கோவில் - திருவரங்கக் கோவில்
25. "செப்புத்திருமேனிகளின் பொற்காலம்” என்று யாருடைய காலம் அழைக்கப்படுகிறது - சோழர்
26. தமிழ்நாடு சிற்பக்கலை கல்லூரி எங்கு உள்ளது - மாமல்லபுரம்
27. தமிழகத்தில் உலோகப்படிமங்கள் செய்யும் பயிற்சி நிலையம் அமைந்துள்ள இடம் - சுவாமிமலை , கும்பகோணம்,மதுரை
28. அரசு கவின் கலைக்கல்லூரிகள் எங்கு அமைந்துள்ளன - சென்னை,கும்பகோணம்
29. தமிழ்நாடு அரசு தொழிற்நுட்பக் கல்வி இயக்கம் சிற்பக்கலை பற்றி வெளியிடும் நூலின் பெயர் -சிற்பச்செந்நூல்
30. யாருடைய ஆட்சிக்காலத்தில் கோயில் கோபுரங்கள் உயரமாக கட்டப்பட்டது - விஜய நகர
31. விஜயநகர மன்னர் கால சிற்பங்கள் எந்தெந்த பகுதிகளுடன் தொடர்பு கொண்டு இருந்தனர் - தெலுங்கு, கன்னடம்
32. ஆயிரங்கால் மண்டபத்தை அமைத்தவர்கள் - நாயக்கர்
33. நாயக்கர் காலச் சிற்பங்கள் காணப்படுகின்ற இடங்களில் பொருந்தாதவையை கண்டுபிடி - தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில்
34. மதுரை மீனாட்சியம்மன் கோவில் ஆயிரங்கால் மண்டபத் தூண்களில் காணப்படும் சிற்பங்கள் –கண்ணப்பர்,குறவன், குறத்தி,அரிச்சந்திரன், சந்திரமதி
35. நாயக்கர் காலச் சிற்பங்களில் உச்சநிலை படைப்பு எனக் கருதப்படுவது - கோயம்புத்தூருக்கு அருகில் உள்ள பேரூர் சிவன் கோவில்
36. சமணச்சிற்பங்கள் எங்கு காணப்படுகின்றது - திருநாதர் குன்று , மதுரை
37. பைஞ்சிதை என்பதன் பொருள் – சிமெண்ட்
38. அருவிய முருகியம் ஆர்ப்பப் பைங்கிளி பருகிய தமிழிசை பாடப் பொன்மயில்" என்ற இராவணக்காவிய பாடலின் ஆசிரியர் - புலவர் குழந்தை
39. முக்குழல் என்பதற்கு ஆன குழல்கள் - கொன்றை , ஆம்பல் , மூங்கில்
40. "சிறை" என்பதன் பொருள் - இறகு
41. "மரை'' என்பதன் பொருள் - தாமரைமலர்
42. “விசும்பு " என்பதன் பொருள் - வானம்
43. "கல்லிடைப் பிறந்த ஆறும் கரைபொரு குளனும் தோயும்" - என்ற பாடல் வரி இடம்பெற்றுள்ள நூல் -இராவணக்காவியம்
44. மருத நில வயலில் எந்த மலர்கள் பூத்து நிற்கும் - காஞ்சி, வஞ்சி
45. இலக்கணக்குறிப்பு தருக "கருமுகில்" - பண்புத்தொகை
46. "இராவண காவியம் காலத்தின் விளைவு, ஆராய்ச்சியின் அறிகுறி, புரட்சிப்பொறி, உண்மையை உணரவைக்கும் உன்னத நூல்" என்று கூறியவர் - அண்ணா
47. “இடிகுரல்" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - உவமைத்தொகை
48. “இன்னிளங்குருளை" இலக்கணக்குறிப்பு தருக - பண்புத்தொகை
49. கோர்வை கோவை என்பதற்குரிய வேர்ச்சொல் - கோ
50. தனித்தமிழ் பெருங்கப்பியமாகிய இராவணகாவியம் தோன்றிய காலம் - 20ம் நூற்றாண்டு
51. இராவணகாவியத்தின் காண்டங்கள் - தமிழகக்காண்டம், விந்தக்காண்டம்,இலங்கை காண்டம், பழிபுரிகாண்டம் , போர்க்காண்டம்
52. இராவண காவியம் எத்தனை காண்டங்கள் மற்றும் பாடல்களை கொண்டது - 5 , 3100
53. யார்வேண்டுகோளுக்கிணங்க புலவர் குழந்தை திருக்குறளுக்கு 25 நாட்களில் உரை எழுதினார் - பெரியார்
54. யாப்பதிகாரம், தொடையதிகாரம் உள்ளிட்ட 30 நூல்களை எழுதியவர் - புலவர் குழந்தை
55. இராவண காவியத்தின் முதன்மை நாயகன் - இராவணன்
56. "கதிரொளி தீபம் கலசம் உடனேந்தி சதிரிள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள" என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - நாச்சியார் திருமொழி
57. "தீபம்" என்ற சொல்லின் பொருள் - விளக்கு
58. "சதிர்" என்ற சொல்லின் பொருள் - நடனம்
59. “தாமம்" என்ற சொல்லின் பொருள் - மாலை
60. ஆண்டாள் கனவில் யாரை கண்டதாக கூறுகிறார் – வட மதுரையை ஆளும் மன்னன் கண்ணன்
61. மது என்ற அரக்கனை அழித்தவன் – கண்ணன்
62. "முத்துடைத்தாமம்" என்பதன் இலக்கணக்குறிப்பு - இரண்டாம் வேற்றுமை தொகை
63. திருமாலை வழிபட்டு சிறப்புநிலை எய்திய ஆழ்வார்கள் எத்தனை பேர் - 12
64. இறைவனுக்கு பாமாலையோடு பூமாலையும் சூடியவர் - ஆண்டாள்
65. சூடிக்கொடித்த சுடர்கொடி என அழைக்கப்பட்டவர்
- ஆண்டாள்
66. பெரியாழ்வாரின் வளர்ப்பு மகள் - ஆண்டாள்
67. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பின் பெயர் - நாலாயிர திவ்யபிரபந்தம்
68. ஆண்டாள் இயற்றிய நூல்கள் - திருப்பாவை, நாச்சியார் திருமொழி
69. நாச்சியார் திருமொழி மொத்தம் எத்தனை பாடல்களை உடையது - 143
70. 12 ஆழ்வார்களில் ஒரே பெண் ஆழ்வார் - ஆண்டாள்
71. “கொட்ட" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - பெயரெச்சம்
72. அன்பளிப்பு என்ற சிறுகதைக்காக கு. அழகிரிசாமி சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு - 1970
73. சக்தி வைத்தியம் என்ற சிறுகதைக்காக தி. ஜானகிராமன் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு-1979
74. முதலில் இரவு வரும் என்ற சிறுகதைக்காக ஆதவன் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு-1987
75. அப்பாவின் சிநேகிதர் என்ற சிறுகதைக்காக அசோகமித்திரன் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு-1996
76. மின்சாரப்பூ என்ற சிறுகதைக்காக மேலாண்மை பொன்னுசாமி சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு - 2008
77. சூடிய பூ சூடற்க என்ற சிறுகதைக்காக நாஞ்சில் நாடன் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு-2010
78. ஒரு சிறு இசை என்ற சிறுகதைக்காக வண்ணதாசன் சாகித்திய அகாடமி விருது பெற்ற ஆண்டு- 2016
79. தி.ஜானகிராமன் தனது ஜப்பான் பயண அனுபவங்களை உதயசூரியன் என்னும் தலைப்பில் எந்த வார இதழில் எழுதினார் - சுதேசமித்திரன்
80. தி.ஜானகிராமன் ரோம் செக்கோஸ்லோவோக்கியா சென்ற அனுபவங்களை 1974ல் எந்த தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார் - கருங்கடலும் கலைக்கடலும்
81. தி.ஜானகிராமன் காவிரிக்கரை வழியான பயணத்தை எந்த தலைப்பில் நூலாக வெளியிட்டுள்ளார் - நடந்தாய் வாழி காவேரி
82. தி.ஜானகிராமன் எழுதிய பயணக்கட்டுரை - அடுத்த வீடு ஐம்பது மைல்
83. தஞ்சை மண்வாசனையுடன் கதைகளை படைத்தவர் - தி.ஜானகிராமன்
84. 'அவரவர் அனுபவிப்பதும் எழுத்தாக வடிப்பதும் அவரவர் முறை' என்றவர் - தி.ஜானகிராமன்
85. செய்தி என்னும் சிறுகதை என்ற தொகுப்பில் இடம் பெற்றுள்ளது - சிவப்பு ரிக்ஷா
86. நாகசுரம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் வாசிக்கப்பட்டது - 600
87. சங்கீத இரத்னாகரம் என்ற நூல் எந்த நூற்றாண்டில் எழுதப்பட்டது - 13 ஆம் நூற்றாண்டு
88. நாகசுரக் கருவி எந்த மரத்தால் செய்யப்படுகிறது - ஆச்சா மரம்
89. தி. ஜானகிராமனின் உதயசூரியன் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு – 1967
90. புணர்ச்சி எத்தனை வகைப்படும் - 2
91. புணர்ச்சியை நிலைமொழி இறுதி எழுத்து, வருமொழி முதல் அடிப்படையில் எத்தனை வகையாகப் பிரிக்கலாம் - 4
92. உயிரிற்று" என்பதற்கு எடுத்துக்காட்டு தருக - கலை+ அழகு
93. உயிர்முன் மெய்" என்பதற்கு எடுத்துக்காட்டு தருக - பனிக்காற்று
94. இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு தருக - மண் + மலை
95. விகாரப் புணர்ச்சி எத்தனை வகைப்படும் - 3
96. சொல்லின் இறுதியில் நிற்கும் உகரத்தின் முந்தைய எழுத்தைப் பொறுத்துக் குற்றியலுகரம் வகைப்படும் - 6
97. நிலைமாழி ஈற்றில் “இ,ஈ,ஜ" ஆகிய எழுத்துக்கள் வந்து வருமொழியில் உயிர்எழுத்துக்கள் வந்தால் உடம்படுமெய்யாக வரும் எழுத்து - ய்
98. நிலைமொழி ஈற்றில் “இ,ஈ,ஜ" ஆகிய எழுத்துக்களை தவிர பிற உயிர்எழுத்துக்கள் வந்து வருமொழி யில் உயிர்எழுத்துக்கள் வந்தால் உடம்படுமெய்யாக வரும் எழுத்து - வ்
99. நிலைமொழி ஈற்றில் ஏ காரம் வந்து வருமொழியில் உயிர் எழுத்துக்கள் வந்தால் உடம்படுமெய்யாக வரும் எழுத்து - ய்,வ்
100. இயல்பு புணர்ச்சி - பொன் + வளை
101. குற்றியலுகர புணர்ச்சி - நாடு + யாது
102. வன்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு தருக - நாக்கு
103. மென்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு தருக - நெஞ்சு
104. இடைத்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு தருக - மார்பு
105. உயிர்த்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு தருக - வரலாறு
106. ஆய்தத்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு தருக - அஃது
107. நெடில்த்தொடர்க் குற்றியலுகரத்திற்கு எடுத்துக்காட்டு தருக - காது
108. பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும் நிலப்பகுதி - முல்லை
109. 'அதிரப் புகுதக் கனாக் கண்டேன்' யார் கனவில் யார் அதிரப்புகுந்தார் - ஆண்டாளின் கனவில் கண்ணன் புகுந்தான்
110. மரவேர் - கெடுதல் புணர்ச்சி
111. திருநாதர் குன்றில் ஒரு பாறையில் புடைப்புச் சிற்பங்களாக உள்ளவை - தீர்த்தங்கரர் உருவங்கள்
112. "எத்தனை பெரிய வானம்! எண்ணிப்பார் உனையும் நீயே" எனத் தொடங்கும் பாடலை இயற்றியவர் - பாரதிதாசன்
113. “புதிய ஆத்திச்சூடியை" இயற்றியவர் - பாரதியார்
114. ஆவணக் குறும்படம் என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் - Document short film
115. புணர்ச்சி என்பதற்கு இணையான ஆங்கிலச் சொல் - Combination
116. "நட்புக் காலம்" என்ற நூலின் ஆசிரியர் - அறிவுமதி
117. "திருக்குறள் கதைகள்" என்ற நூலின் ஆசிரியர் - கிருபானந்த வாரியார்
118. “கையா, உலகே ஒரு உயிர்" என்ற நூலின் ஆசிரியர் - ஜேம்ஸ் லவ்லாக்
119. “கையா, உலகே ஒரு உயிர்" என்ற நூலை தமிழில் மொழிபெயர்த்தவர் - சா.சுரேஷ்
120. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் எத்தனை - 18
121. திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் எத்தனை - 133
122. சிற்றிலக்கியங்கள் எத்தனை வகைப்படும் - 96
123. சைவத்திருமுறைகள் எத்தனை - 12
124. நாயன்மார்கள் மொத்தம் எத்தனைப்பேர் - 63
125. ஆழ்வார்கள் மொத்தம் எத்தனைப்பேர் - 12
126. ய கர ஈற்றுச் சொற்கள் முன் மெல்லினம் மிகும்
127. வேற்றுநிலை மெய்மயக்கத்தில் ய,ர,ழ முன்னர் மெல்லினம் மிகும்
128. புளி என்ற சுவைப்பெயர் முன்னர் வல்லெழுத்து மட்டுமின்றி மெல்லினமும் மிகும்
129. பூ என்னும் பெயர் முன்னர் வல்லினத்தோடு மெல்லினமும் மிகும்
130. "அன்புநாண் ஒப்புரவுக் கண்ணோட்டம் வாய்மையொடு- ஐந்துசால்பு ஊன்றிய தூண்" - இக்குறளில் பயின்று வரும் அணி - ஏகதேச உருவக அணி
131. “ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்(கு) ஆழி எனப்படு வார்"- இக்குறளில் பயின்று வரும் அணி - ஏகதேச உருவக அணி
132. "உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து ”- இக்குறளில் பயின்று வரும் அணி - ஏகதேச உருவக அணி
133. எழுத்துவகையை அறிந்து பொருத்துக
1. இயல் - உயிர் முதல்மெய்யீறு
2. புதிது - மெய்ம் முதல் உயிரீறு
3. ஆணி - உயிர் முதல் உயிரீறு
4. வரம் - மெய்முதல் மெய்யீறு
134. புணர்ச்சிகளை "முதல், ஈற்றுச்" சொல்வகையால் பொருத்துக
1. செல்வி + ஆடினாள்- உயிரீறு + உயிர்முதல்
2. பாலை + திணை
- உயிரீறு + மெய்ம்முதல்
3. கோல் + ஆட்டம் - மெய்யீறு + உயிர்முதல்
4. மண் + சரிந்தது - மெய்யீறு + மெய்ம்முதல்
135. சேர்த்து எழுதுக பொருத்துக.
1. தமிழ் + பேசு - தமிழ்பேசு
2. தமிழ் + பேச்சு – தமிழ்ப்பேச்சு
3. கை+ கள் – கைகள்
4. சே + அடி - சேயடி , சேவடி
136. சேர்த்து எழுதுக பொருத்துக.
1. பூ + கள்' - பூக்கள்
2. பூ + இனம்
- பூவினம்
3. இசை + இனிக்கிறது- இசையினிக்கிறது
4. திரு + அருட்பா - திருவருட்பா
137. பொருத்துக.
1. உயிரீறு - கலை + அழகு
2. மெய்யீறு - மண் + குடம்
3. உயிர்முதல் - வாழை + இலை
4. மெய்ம்முதல் - வாழை + மரம்
138. பொருத்துக.
1. உயிர்முன் உயிர் - மணியடி
2. உயிர்முன் மெய் - பனிக்காற்று
3. மெய்முன் உயிர் - ஆலிலை
4. மெய்முன் மெய் - மரக்கிளை
139. பொருத்துக .
1. மைவனம் - மலைநெல்
2. முருகியம் - குறிஞ்சிப்பறை
3. பூஞ்சினை - பூக்களை உடைய கிளை
4. சாந்தம் - சந்தனம்
140. பொருத்துக.
1. பூவை - நாகணவாய்ப்பறவை
2. பொலம் - அழகு
3. கடறு - காடு
4. பொலி - தானியக்குவியல்
141. பொருத்துக.
1. உழை - ஒரு வகை மான்
2. வாய்வெரீஇ - சோர்வால் வாய் குழறுதல்
3. குருளை - குட்டி
4. இனைந்து - துன்புறுதல்
142. பொருத்துக.
1. உயங்குதல் - வருந்துதல்
2. படிக்கு உற - நிலத்தில் விழ
3. கோடு - கொம்பு
4. கல் - மலை
143. பொருத்துக.
1. முருகு - தேன்
2. மல்லல் - வளம்
3. செறு - வயல்
4. கரிக்குருத்து - யானைத்தந்தம்
144. பொருத்துக.
1. புரைதப - குற்றமின்றி
2. தும்பி - ஒரு வகை வண்டு
3. துவரை - பவளம்
4. மதியம் - நிலவு
145. பொருத்துக.
1. இன்னுயிர் - பண்புத்தொகை
2. பிடிபசி - வேற்றுமைத்தொகை
3. பூவையும் குயில்களும் - எண்ணும்மை
4. அதிர்குரல் - வினைத்தொகை
146. பொருத்துக.
1. பைங்கிளி - பண்புத்தொகை
2. முதிரையும் சாமையும் - எண்ணும்மை
3. மன்னிய - பெயரெச்சம்
4. வெரீஇ - சொல்லிசை அளபெடை
147. பொருத்துக
1. முதுவெயில் - பண்புத்தொகை
2. கடிகமழ் - உரிச்சொல்தொடர்
3. மலர்க்கண்ணி - மூன்றாம் வேற்றமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
4. எருத்துக்கோடு - ஆறாம் வேற்றுமைத்தொகை
148. பொருத்துக.
1. பெருங்கடல் - பண்புத்தொகை
2. கரைபொரு - இரண்டாம் வேற்றுமைத்தொகை
3. மரைமுகம் - உவமைத்தொகை
4. வருமலை - வினைத்தொகை
149. பொருத்துக.
1. குடைவரைக் கோவில் - Cave Temple
2. கருவூலம் - Treasury
3. மதிப்புறு முனைவர் - Honory Doctorate
4. மெல்லிசை - Melody
0 Comments
THANK FOR VISIT