9TH- STD – இயல் - 9

1.     இதழ்கள், கருத்தரங்குகள், மாநாடுகள், நிறுவனங்கள் மூலம் தமிழியலை உலகச் செயல்பாடாக ஆக்கியவர் - தனிநாயகம்

2.     "யாதும் ஊரே யாவருங்கேளிர்'' என்ற பாடல்வரி யாருடையது - கணியன் பூங்குன்றனார்

3.     "நான் மனிதன், மனிதனைச் சார்ந்த எதுவும் எனக்குப் புறமன்று'' என்று கூறிய இலத்தீன் மொழிப் புலவர் - தெறன்ஸ்

4.     "முதிர்ந்த ஆளுமைக்கு மூன்று இலக்கணங்கள் இன்றியமையாதவை" எனக் கூறியவர்- கோர்டன் ஆல்போர்ட்

5.     கோர்டன் ஆல்போர்டின் மூன்று இலக்கணங்கள் - ஈடுபாடுகளை வளர்த்தல்,அறிந்து கொள்ளும் ஆற்றல்,வாழ்க்கைத் தத்துவத்தைக் கடைபிடித்தல்

6.     குறிக்கோள் இல்லாதவன் வெறும் சதைப்பிண்டம் என்பதைப் 'பூட்கையில்லோன் யாக்கை போல' என்று புறநானூற்று பாடலில் பாடியவர் - ஆலத்தார் கிழார்

7.     Altruism என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்- பிறநலவியல்

8.     சீனநாட்டில் நலவியலை கற்பித்தவர் - லாவோட்ஸ்

9.     பிளாட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் எந்த நாட்டைச் சேர்ந்த தத்துவ ஞானிகள்- கிரேக்கம்

10.   பண்டைக்காலத்தில் எந்த நூல் பிறரைக் கவனத்தில் கொள்ளவில்லை- தருமசாத்திர நூல்

11.   "மக்கள் அனைவரும் உடன் பிறந்தவர்கள், பிறப்போ, சாதியோ, சமயமோ அவர்களைத் தாழ்த்தவோ உயர்த்தவோ முடியாது" என்று கூறியவர்கள் - ஸ்டாயிக்வாதிகள்

12.   "திருக்குறளில் உள்ளது போன்ற உயர்ந்த கொள்கைகளைக் கொண்ட செய்யுட்களை உலக இலக்கியங்களில் காண்பது அரிது" என்று கூறியவர் - ஆல்பர்ட் சுவைட்சர்

13.   நிலத்தை ஐந்து வகையாகப் பிரித்தவர் - தொல்காப்பியர்

14.   படுதிரை வையம் பாத்திய பண்பே' என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - தொல்காப்பியம்

15.   இம்மைச் செய்தது மறுமைக்கும் ஆமெனும் ஆறவிலை வணிகன் ஆய் அலன்" என்ற பாடல்வரி இடம்பெற்ற நூல் - புறநானூறு

16.   திருக்குறளில் பண்புடைமை எனும் அதிகாரத்திற்கு உரை கண்டவர் - பரி பெருமாள்

17.   முதல் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு - கோலாம்பூர், 1966

18.   இரண்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு - சென்னை, 1968

19.   மூன்றாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு - பாரீஸ்,1970

20.   நான்காவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு - யாழ்ப்பாணம்,1974

21.   ஐந்தாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு - மதுரை, 1981

22.   ஆறாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் ,ஆண்டு - கோலாம்பூர்,1987

23.   ஏழாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம் , ஆண்டு - மொரீசியஸ், 1989

24.   எட்டாவது உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற இடம், ஆண்டு- தஞ்சாவூர், 1995

25.   செம்மொழி மாநாடு நடைபெற்ற இடம் ,ஆண்டு - 2010, கோவை

26.   'இமயத்துக் கோடு உயர்ந்தன்ன தம் இசை நட்டுத் ' என்று தொடங்கும் பாடல் இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு

27.   'இமயத் தீண்டி இன்குரல் பயிற்றிக் கொண்டல் மாமழை பொழிந்த' என்ற பாடல் இடம்பெற்றுள்ள நூல் - புறநானூறு

28.   பூட்கைமகன் அல்லது குறிக்கோள் மாந்தனின் இயல்புகள் குறித்து கூறும் நூல் - திருக்குறள்

29.   "Sapens” எனப்படும் இலட்சிய புருஷனைப் போற்றி வந்த நாடு - இத்தாலி

30.   தமிழ்ச்சான்றோர் பலர் வாழும் ஊரே வாழ்க்கைக்கு இன்பத்தைத் தருவதாகும்" என்று கோப்பெருஞ்சோழனிடம் கூறியவர் - பிசிராந்தையர்

31.   "எல்லாருடைய நாடுகளும் நமக்குத் தாய்நாடு என்றும், நம்நாடு எல்லா மக்களுக்கும் தாய்நாடு என்றும் நாம் கருதுதல் வேண்டும்'' என்ற கூற்றினைக் கூறியவர் - செனக்கா

32.   நான் பகுத்தறியும் கூட்டுறவும் உடையவன், நான் அன்டோநீனஸ் ஆதலால் உரோமுக்கு உரியவன் : நான் மனிதன் என்பதால் உலகிற்கு உரியவன்" என்று கூறியவர் - மார்க்ஸ் அரேலியஸ்

33.   மக்கள் அனைவரும் மக்கட்தன்மையை வளர்க்க வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூல் - திருக்குறள்

34.   திருவள்ளுவரை 'உலகப்புலவர்' என்று போற்றியவர் - ஜி.யு.போப்

35.   தனிநாயகம் அடிகள், பஸ்கர் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவை எங்கு ஆற்றினார் - இலங்கை

36.   தமிழ் பண்பாடு என்ற இதழைத் தொடங்கியவர் - தனிநாயகம்

37.   அகில உலக தமிழாய்வு மன்றம் மற்றும் உலக தமிழராய்ச்சி நிறுவனம் உருவாகவும் காரணமாக இருந்தவர் - தனிநாயகம்

38.   லாவோட்ஸ் பிறந்த ஆண்டு - பொ..மு. 604

39.   கன்பூசியஸ் அவர்களின் காலம் - பொ..மு. 551 - 479

40.   உண்டாலம்ம இவ்வுலகம் " என்ற பாடல்வரி இடம்பெற்றுள்ள நூல்புறநானூறு

41.   உரைநடையில் கவிதை எழுதுவதை தம் வசன கவிதைகளின் வழியாகத் தொடங்கியவர் - பாரதியார்

42.   யாருடைய கவிதைகளில் மனிதம் பரவலாக வலியுறுத்தப்படுகிறது- கல்யாண்ஜி

43.   "சைக்கிளில் வந்த தக்காளிக் கூடை சரிந்து" என்ற கவிதையை இயற்றியவர் - கல்யாண்ஜி

44.   உருண்டது","போனது" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - ஒன்றன்பால் வினைமுற்று

45.   சரிந்து' என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - வினையெச்சம்

46.   "அனைவரும்என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - முற்றும்மை

47.   கல்யாண்ஜியின் இயற்பெயர் - கல்யாண சுந்தரம்

48.   வண்ணதாசன் என்ற பெயரில் கதை எழுதுபவர் யார்- கல்யாண்ஜி

49.   கல்யாண்ஜி எழுதிய கவிதைகள் - புலரி, மணல் உள்ள ஆறு,முன்பின், அன்னியமற்ற நதி,ஆதி

50.   கல்யாண்ஜி எழுதிய கட்டுரை தொகுப்பின் பெயர்  - அகமும் புறமும்

51.   கலைக்க முடியாத ஒப்பனைகள் என்ற சிறுகதையை எழுதியவர் - கல்யாண்ஜி

52.   ஒளியிலே தெரிவது என்ற சிறுகதையை எழுதியவர் - கல்யாண்ஜி

53.   தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் என்ற சிறுகதையை எழுதியவர் - கல்யாண்ஜி

54.   உயரப்பறத்தல் என்ற சிறுகதையை எழுதியவர் - கல்யாண்ஜி

55.   கல்யாண்ஜியின் கடிதங்கள் எந்த பெயரில் தொகுக்கப்பட்டது - சில இறகுகள் சில பறவைகள்

56.   'ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு கல்யாண்ஜி எந்த ஆண்டு சாகித்திய அகாடமி பரிசு பெற்றார் - 2016

57.   "இந்தக் காட்டில் எந்த மூங்கில் புல்லாங்குழல்'' என்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர்அமுதோன்

58.   பிம்பங்களற்ற தனிமையில் ஒன்றிலொன்று முகம் பார்த்தன சலூன் கண்ணாடி" என்ற பாடலின் ஆசிரியர் - நா.முத்துக்குமார்

59.   "வெட்டுக்கிளியின் சப்தத்தில் மலையின் மௌனம் ஒருகணம் அசைந்து திரும்புகிறதுஎன்ற ஹைக்கூ கவிதையை எழுதியவர் - பாஷோ

60.   ஒரு சிறு இசை' என்ற சிறுகதைத் தொகுப்பிற்காக கல்யாண்ஜி 2016 ல் - சாகித்திய அகாடமி பரிசு பெற்றார்

61.   தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள் என்ற சிறுகதையை எழுதியவர்கல்யாண்ஜி

62.   எட்டுத்தொகை நூலில் நல்ல என்னும் அடைமொழி பெற்ற நூல் - குறுந்தொகை

63.   நசை பெரிது உடையர் நல்கலும் நல்குவர் பிடிபசி களைஇய பெருங்கை வேழம் எனத் தொடங்கும் குறுந்தொகை பாடகை இயற்றியவர் - பாலை பாடிய பெருங்கடுங்கோ

64.   பிடி என்பதன் பொருள் - பெண் யானை

65.   வேழம் என்பதன் பொருள் ­- ஆண் யானை

66.   "யாமரம்" என்பது எந்த நிலத்தில் வளரும் ஒரு வகை மரம் பாலை

67.   "களை இய" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - சொல்லிசை அளபெடை

68.    பொளிக்கும்" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - செய்யும் என்னும் வினைமுற்று

69.   அன்பினஎன்பதன் இலக்கணக்குறிப்பு தருக - பலவின்பால் அஃறிணை வினைமுற்று

70.   நல்கலும் நல்குவா என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - எச்ச உம்மை

71.   பெருங்கை" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - பண்புத்தொகை

72.   மென்சினை என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - பண்புத்தொகை

73.   பிடிபசி" என்பதன் இலக்கணக்குறிப்பு தருக - ஆறாம் வேற்றுமைத்தொகை

74.   குறுந்தொகை கடவுள் வாழ்த்துடன் எத்தனை பாடல்களை உடையது - 401

75.   குறுந்தொகையின் அடிவரையறையைக் கூறுக - 4 அடி சிற்றெல்லையும் 8 அடி பேரெல்லையும்

76.   குறுந்தொகையை பதிப்பித்தவர் - சௌரிப்பெருமாள் அரங்கனார்

77.   சௌரிப்பெருமாள் அரங்கனார் குறுந்தொகையை பதிப்பித்த ஆண்டு - 1915

78.   பாலைபாடிய பெருங்கடுங்கோ எந்த மரபைச் சார்ந்தவர் சேர

79.   தாய்மைக்கு வறட்சி இல்லை என்ற நூலின் ஆசிரியர் - சு.சமுத்திரம்

80.   சு.சமுத்திரம் எந்த மாவட்டத்தைச் சார்ந்தவர் - திருநெல்வேலி

81.   சமுத்திரம் திருநெல்வேலி மாவட்டத்தில் எங்கு பிறந்தார் - திப்பணம்பட்டி

82.   என் கதைகளின் கதை'' என்ற கதையை எழுதியவர் - சு.சமுத்திரம்

83.   "வாடாமல்லி" என்ற சிறுகதையை எழுதியவர்யார் - சுரதா

84.   பாலைப்புறா'' என்ற சிறுகதையை எழுதியவர்யார் - சு.சமுத்திரம்

85.   "மண்கமை' என்ற சிறுகதையை எழுதியவர் - சு.சமுத்திரம்

86.   "தலைப்பாகை'' என்ற சிறுகதையை எழுதியவர் - சு.சமுத்திரம்

87.   "காகித உறவு" என்ற சிறுகதையை எழுதியவர் - சு.சமுத்திரம்

88.   சமுத்திரம் அவர்களின் சாகித்ய அகாடமி பரிசு பெற்ற நூல் - வேரில் பழுத்த பலா

89.   சமுத்திரம் அவர்களின் தமிழக அரசு பரிசு பெற்ற நூல் - குற்றம் பார்க்கில்

90.   செய்யுளின் கருத்தை அழகுபடுத்துவது - அணி

91.   அணி என்பதன் பொருள் - அழகு

92.   இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று" என்ற குறளில் பயின்று வரும் அணி - உவமை அணி

93.   உவமை, உவமேயம் என்னும் இரண்டும் ஒன்றே என்று தோன்றக் கூறுவது எவ்வகை அணி - உருவக அணி

94.   ஒரு செய்யுளில் முன்னர் வந்த சொல்லோ பொருளோ மீண்டும் பல இடத்தும் வருதல்  எவ்வகை அணி - பின்வரு நிலையணி

95.   பின்வரு நிலையணி எத்தனை வகைப்படும் - 3

96.   வந்த சொல்லே பின்னும் பலவிடத்தும் வந்து வேறு பொருளை உணர்த்துவது எவ்வகை அணி - சொல் பின்வரு நிலையணி

97.   துப்பு என்பதன் பொருள் - மழை

98.   செய்யுளில் முன்வந்த ஒரு சொல்லின் பொருளே பின்னரும் பல இடங்களிலும் வருவது எவ்வகை அணி - பொருள் பின்வரு நிலையணி

99.   "அவிழ்ந்தன, அலர்ந்தன, நெகிழ்ந்தன, விண்டன, விரிந்தன, கொண்டன" ஆகிய சொற்கள் - மலர்ந்தனர் பொருளைத் தரும்.

100.  முன்னர் வந்த சொல்லும் பொருளும் பின்னர் பல இடங்களில் வருவது எவ்வகை அணி - சொற்பொருள் பின்வரு நிலையணி

101.  "எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப் பொய்யா விளக்கே விளக்கு'' என்ற குறளில் பயின்று வரும் அணி - சொற்பொருள் பின்வரு நிலையணி

102.  புகழ்வது போலப் பழிப்பதும், பழிப்பது போலப் புகழ்வது எவ்வகை அணி - வஞ்சப்புகழ்ச்சி அணி

103.  தேவ ரனையர் கயவர் அவருந்தாம் மேவன செய்தொழுக லான்'' என்ற குறளில் பயின்று வரும் அணி - வஞ்சப்புகழ்ச்சி அணி

104.  மாரி என்பதன் பொருள் - மழை

105.  இமயத்துக் கோடு உயர்ந்தன்ன'' என்ற பாடலில் கோடு என்ற சொல்லின் பொருள் - மலையுச்சி

106.  தமிழ்ப்புலவரைப் போலவே உரோமச் சிந்தனையாளர் கொண்ட கொள்கை - ஒன்றே உலகம்

107.  வண்ணதாசனுக்கு சாகித்திய அகாடமி பரிசு பெற்றுத் தந்த நூல் - ஒரு சிறு இசை

108.  "கேடில் விழுச் செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை" இக்குறளில் பயின்று வந்துள்ள அணி - பொருள் பின்வரு நிலையணி

109.  ஐந்தாம் வேதம்" என அழைக்கப்படுவது - மகாபாரதம்

110.  பாஞ்சாலி சபதத்தினை எழுதியவர் - சுப்பிரமணி பாரதியார்

111.  பாஞ்சாலி சபதம் என்ற நூல் யார் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது - பாஷாபிமானிகளும்,தேசாபிமானிகளும்

112.  'ஞான பாநு' என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியர்  - S. சுப்பிரமணிய சிவா

113.  எந்த நூற்றாண்டில், கம்பரின் இராமாயணம் இலக்கியம் எனத் தகுதி பெற்றதோடு ஆய்வுக்குரிய பெருநூலாகவும் கருதப்பட்டது - 20 ஆம் நூற்றாண்டு

114.  வால்மீகியிலிருந்து கம்பர் வேறுபடும் இடங்களை விரிவாகத் தொகுத்து உரைத்தவர்- அ. பாண்டுரங்கன்

115.  வசைபாடுவதில் வல்லவர் - காளமேகம்

116.  "எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும்'' எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் - வள்ளலார்

117.  "சிற்பியின் மகள்'' என்ற நூலின் ஆசிரியர் - பூ வண்ணன்

118.  அப்பா சிறுவனாக இருந்தபோது'' என்ற நூலின் ஆசிரியர்  - அலெக்சாண்டர் ரஸ்கின்

119.  "அப்பா சிறுவனாக இருந்தபோது " என்ற நூலை தமிழில் எழுதியவர் - முகமது செரீபு

120.  "இன்சொல் விளைநிலமா ஈதலே வித்தாக வன்சொற் களைகட்டு வாய்மை எருவட்டி" என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி - உருவக அணி

121.  துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத் துப்பாய தூஉம் மழை என்ற குறளில் பயின்று வந்துள்ள அணி - சொல் பின்வருநிலையணி

122.  அவிழ்ந்தன தோன்றி யலர்ந்தன காயா நெகிழ்ந்தன நேர்முகை முல்லை மகிழ்ந்திகழ்" என்ற பாடலில் பயின்று வந்துள்ள அணி - பொருள் பின்வருநிலையணி

123.  பொருத்துக.

           1.     நசை - விருப்பம்

           2.     நல்கல் - வழங்குதல்

           3.     பொளிக்கும் - உரிக்கும்

           4.     ஆறு - வழி

124.  பொருத்துக.

           1.     வெண்பாவிற்கு - புகழேந்தி

           2.     விருத்தம் - கம்பன்

           3.     அந்தாதி - ஒட்டக்கூத்தன்

           4.     கலம்பகம் - இரட்டையர்

125.  பொருத்துக

           1.     ஆளுமை - Personality

           2.     பண்பாட்டுக் கழகம் - Cultural Academy

           3.     கட்டில்லாக் கவிதை - Free verse

           4.     மனிதம் – Humane

           5.     உவமை அணி  - Simile

           6.     உருவக அணி  - Metaphor

https://www.a2ztnpsc.in/