இலக்கண வகை
1.
முதலெழுத்துக்கள் எண்ணிக்கை – 30.
2.
உயிர்மெய் - 216.
3.
ஆய்த எழுத்து - 1.
4.
ஆய்த எழுத்தின் வேறு பெயர்கள் - முப்புள்ளி, முப்பாற்புள்ளி, தனிநிலை.
5.
தமிழில் எழுத்தானது வகை - 2. முதலெழுத்து, சார்பெழுத்து.
6.
சார்பு எழுத்துக்கள் எண்ணிக்கை மொத்தம்- 10.
7.
உயிரெழுத்து - 12 எழுத்துக்கள்.
8.
மெய்யெழுத்து - 18 எழுத்துக்கள்
9.
வல்லினம் எழுத்துக்கள் - க், ச், ட், த், ப், ற். வன்மையாக ஒலிக்கின்றன.
10.
மெல்லினம் எழுத்துக்கள் - ங், ஞ், ண், ந், ம், ன். மென்மையாக ஒலிக்கின்றன.
11.
இடையினம் எழுத்துக்கள் - ய், ர், ல், வ், ழ், ள். வன்மையாகவும் மென்மையாகவும் இல்லாமல்
12.
அளபெடை வகைகள் - 2. உயிரளபெடை, ஒற்றளபெடை.
13.
உயிரளபெடை எத்தனை வகைப்படும்- 3. செய்யுளிசை அளபெடை, இன்னிசை அளபெடை, சொல்லிசை அளபெடை.
14.
செய்யுளிசை அளபெடை எவ்வாறு அழைக்கப்படுகிறது - இசைநிறை அளபெடை.
15.
ஒற்றளபெடை வகை – 11. ங், ஞ், ண், ந்,ம்,ன்,வ்,ய்,ல்,ள் ஃ .
16.
போலி எத்தனை வகைபடும்-3. முதற்போலி, இடைப்போலி , இறுதிப்போலி.
17.
திணை வகைகள்- 2. உயர்திணை, அஃறிணை
18.
உயர்திணை - ஆண்பால், பெண்பால், பலர்பால்.
19.
அஃறிணை - ஒன்றன்பால், பலவின்பால்.
20.
இடம் வகைகள் - 3. தன்மை, முன்னிலை, படர்க்கை.
21.
பால் வகைகள் - ஐந்து வகைப்படும்.
22.
வழக்கு எத்தனை வகைப்படும்-2.இயல்பு வழக்கு, தகுதி வழக்கு.
23.
இயல்புவழக்கு எத்தனை வகைப்படும்-3 .இலக்கணமுடையது, இலக்கணப்பலி , மரூஉ.
24.
தகுதி வழக்கு எத்தனை வகைப்படும்-3. இடக்கரடக்கல், குழூஉக்குறி, மங்கலம்.
25.
வேற்றுமை வகைகள்- 8.
26.
வினைமுற்று வகைகள்-2.
27.
பெயரெச்சம் வகைகள்-2.
28.
வினையெச்சம் வகைகள்-2.
29.
பெயர்ச்சொற்கள் எத்தனை வகைப்படும்- 6.
30.
ஆகுபெயர் வகைகள் -16.
31.
சொற்கள் தொடராகும்போது, இரு சொற்களுக்கிடையே உருபுகள் மறைந்து வரும் தொடர்கள் - தொகைநிலைத் தொடர்கள்.
32.
தொகைநிலைத் தொடர்கள் எத்தனை வகைபடும்- 6.
33.
ஒரு தொடரில் இருசொற்கள் அமைந்து, இரண்டிற்கும் இடையில் சொல்லோ உருபோ மறையாது பொருளை உணர்த்துவது - தொகாநிலைத் தொடர் .
34.
தொகாநிலைத் தொடர்கள் எத்தனை வகைபடும்- 9.
35.
புணர்ச்சி வகைகள் எத்தனை – 2.
36.
விகாரப் புணர்ச்சி வகைகள் – 3. தோன்றல்,திரிதல்,கெடுதல்
37.
தளை எத்தனை வகைப்படும்-7.
38.
அடி எத்தனை வகைப்படும்- 5.
39.
தொடை எத்தனை வகைப்படும்- 8 .
40.
அசை எத்தனை வகைப்படும் - 2.
41.
சீர் எத்தனை வகைப்படும்- 4.
42.
பொருள்கோள் எத்தனை வகைப்படும்- 8.
43.
வினா எத்தனை வகைப்படும்- 6.
44.
விடை எத்தனை வகைப்படும்- 8.
45.
இலக்கண வகை சொற்கள் - 4.
46.
இலக்கிய வகை சொற்கள் - 4.
47.
வழக்கு வகைகள்- 2.
48.
இயல்பு வழக்கு வகைகள் - 3.
49.
தகுதி வழக்கு வகைகள் - 3.
50.
வெண்பா வகைகள் - 6.
51.
ஆசிரியப்பாவின் வகைகள்- 4.
52.
தொழிற்பெயர் வகைகள்: 4.
53.
அடிதோறும் இருசீர்களைப் பெற்று வருவது – குறளடி.
54.
அடிதோறும் முச்சீர்களைப் பெற்று வருவது - சிந்தடி.
55.
அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது - அளவடி அல்லது நேரடி .
56.
அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று வருவது - நெடிலடி .
57.
அடிதோறும் ஆறு அல்லது அதற்குமேற்பட்ட பல சீர்களைப் பெற்று வருவது- கழிநெடிலடி.
0 Comments
THANK FOR VISIT