உயிரளபெடை
1.
உயிரளபெடை
செய்யுளில் ஓசை குறையும் போது, அதனை நிறைவு செய்ய, மொழிக்கு முதலிலும் இடையிலும் இறுதியிலும் நிற்கிற உயிர் நெட்டெழுத்துகள் ஏழும் தத்தம் அளவில் நீண்டு ஒலிக்கும். அதைக் குறிக்க நெட்டெழுத்துகளின் இனமான குற்றெழுத்துகள் அவற்றின் பின்னால் வரும். இவ்வாறு வருவது உயிரளபெடை எனப்படும்.
2.
உயிரளபெடை மூன்று வகைப்படும்:
1. செய்யுளிசை அளபெடை
2. இன்னிசை அளபெடை
3. சொல்லிசை அளபெடை
அ) செய்யுளிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவு செய்ய, நெட்டெழுத்துகள் அளபெடுத்தலைச் செய்யுளிசை அளபெடை என்போம். இதனை இசைநிறை அளபெடை என்றும் கூறுவர்.
ஓஒதல் வேண்டும் - மொழி முதல்
உறாஅர்க்கு உறுநோய் - மொழியிடை
நல்ல படாஅ பறை - மொழியிறுதி
ஆ) இன்னிசை அளபெடை
செய்யுளில் ஓசை குறையாத இடத்திலும் இனிய ஓசைக்காக குறில் நெடிலாகி அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
இ) சொல்லிசை அளபெடை
செய்யுளில் ஒரு பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது சொல்லிசை அளபெடை ஆகும்.
உரனசைஇ உள்ளம் துணையாகச் சென்றார்
வரனசைஇ இன்னும் உளேன்.
நசை - விருப்பம்; விரும்பி என்னும் பொருள் தருவதற்காக நசைஇ என அளபெடுத்தது. பெயர்ச்சொல், வினை அடையாக மாறியது.
3.
ஒற்றளபெடை
செய்யுளில் ஓசை குறையும்போது அதனை நிறைவுசெய்ய மெய்யெழுத்துகளான ங், ஞ், ண், ந், ம், ன், வ், ய், ல்,ள் ஆகிய பத்தும், ஃ என்னும் ஆய்த எழுத்தும் அளபெடுப்பது ஒற்றளபெடை ஆகும்.
எங்ங்கிறைவன்
எஃஃகிலங்கிய கையராய் இன்னுயிர்
0 Comments
THANK FOR VISIT