1. புவியிலுள்ள
உயிர் மற்றும் உயிரற்ற பொருட்களைப் பாதிக்கக்கூடிய நிகழ்வை - இடர்(ஹசார்டு)
2. ஹசார்டு
என்ற சொல் ஹசார்ட் என்ற பழமையான பிரெஞ்சு சொல்லிலிருந்து
தோன்றியது.
3. ஹசார்ட்
என்பதன் பொருள் - பகடைவிளையாட்டு.
4. இடர்
அரபு மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது - அஸ் - சஹர் .
5. இடர்
ஸ்பானியம் மொழியில் எவ்வாறு அழைக்கப்படுகிறது – அசார்.
6. மனித
உயிர்கள் மற்றும் உடைமைகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கும் இயற்கையான நிகழ்வுகள் –இயற்கை இடர்கள்.
7. இடர்களின் வகைகள்:
1. நிகழ்விற்கான
காரணிகளின் அடிப்படையிலான இடர்கள்
2. தோற்றத்தின்
அடிப்படையிலான இடர்கள்
8. நிகழ்விற்கான காரணிகளின் அடிப்படையிலான இடர்கள்:
1. இயற்கையினால்
ஏற்படும் இடர்கள்
2. மனித
செயல்களால் உருவாக்கப்படும் இடர்கள்
3. சமூக
– இயற்கை
காரணிகளால் ஏற்படும் இடர்கள்
9. இயற்கை இடர்பாடுகளுக்கு எ. கா:
1. நில
அதிர்வு
2. வெள்ளப்
பெருக்கு
3. சூறாவளி
4. புயல்கள்
5. வறட்சி
6. நிலச்சரிவு
7. சுனாமி
8. எரிமலை வெடிப்பு
10. மனிதனால் உருவாக்கப்படும் இடர்களுக்கு எ.கா :
1. குண்டு
வெடிப்புகள்
2. அபாயகரமான
கழிவுகள்
3. காற்று
,நீர்,நிலம்
மாசடைதல்
4. அணைக்கட்டு
உடைதல்
5. போர்
6. உள்நாட்டுக்
கலவரங்கள்
7. தீவிரவாதசெயல்கள்
11. சமூக – இயற்கை இடர்களுக்கு எ.கா:
1.
வெள்ளப்பெருக்கு
2.
நிலச்சரிவு
3. பனிப்புகை
12. இந்தியாவை
எத்தனைநில அதிர்வுமண்டலங்களாக வகைப்படுத்தியுள்ளது -5.
13. நில அதிர்வுமண்டலங்கள் வகைகள் :
1. மண்டலம் 5 - மிகஅதிகம்
2. மண்டலம் 4 அதிகம்
3. மண்டலம் 3 மிதமானது
4. மண்டலம் 2 குறைவு
14. தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் உள்ள இடம் – புதுடெல்லி.
15. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான முக்கிய காரணங்கள் : 3.
1. வானிலையியல்
காரணிகள்
2. இயற்கைக்
காரணிகள்
3. மனிதக் காரணிகள்
16. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வானிலையியல் காரணிகள்:
1. கனமழை
2. அயனமண்டல
சூறாவளி
3. மேகவெடிப்பு
17. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான இயற்கைக் காரணிகள்:
1. பரந்த
நீர்பிடிப்பு பகுதிகள்
2. போதிய
வடிகால் அமைப்பு இல்லாமை
18. வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான மனிதக் காரணிகள்:
1.
காடழிப்பு
2.
வண்டல் படிவுகள்
3.
முறையற்ற வேளாண்முறைகள்
4.
முறையற்ற நீர்பாசன முறைகள்
5.
அணைகள் உடைதல்
6. நகரமயமாக்கல்
19. தேசிய
நீரியல் நிறுவனம் உள்ள இடம் – புதுடெல்லி.
20. வளிமண்டலத்தில்
குறைந்த காற்றழுத்த பகுதிகளில் சுழலும் வலிமையான காற்று -சூறாவளிப்புயல்.
21. சூறாவளிப்
புயல் காற்று வடஅரைக்கோளத்தில்- கடிகாரம் சுற்றும் திசைக்கு எதிர்திசையில்
சுழல்கிறது.
22. சூறாவளிப்
புயல் காற்று தென்அரைக்கோளத்தில் – கடிகார திசையில் சுழல்கிறது.
23. சூறாவளிப்
புயல் காற்றின் வேகம் மணிக்கு எத்தனை கி.மீ. வரை வீசக்கூடும்- 200 கி.மீவேகம்.
24. வறட்சியின் வகைகள்:
1. வானிலையியல்
வறட்சி
2. நீரியியல்
வறட்சி
3. வேளாண் வறட்சி
25. நாட்டின்
எத்தனை பங்கு பகுதிகள் வறட்சியினால் பாதிக்கப்படுகின்றன - 1/3 பங்கு.
26. 16 சதவீதம் நிலப்பரப்பையும் 12 சதவீதம் மக்கள் தொகையையும் கடுமையாக
பாதிக்கிறது-
வறட்சி.
27. ஆண்டு
மழைப்பொழிவு எத்தனை செ.மீக்கும் குறைவான மழை பெறும் பகுதிகள் இந்தியாவில்
வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகளாகும்- 60 செ.மீ.
28. இந்தியாவில்
எத்தனை சதவீத நிலப்பரப்பு நிலச்சரிவு அபாயத்திற்கு உள்ளாகும் பகுதி-15.
29. தமிழ்நாட்டில் நிலச்சரிவால் அதிகம் பாதிக்கப்படும் பகுதிகள் :
1. கொடைக்கானல் -திண்டுக்கல் மாவட்டம்.
2. உதகமண்டலம் -நீலகிரி மாவட்டம்.
30. கடலடி
நிலஅதிர்வு, கடலடிநிலச்சரிவு
,எரிமலைவெடிப்பு ஆகியவற்றின் காரணமாக கடலில் ஏற்படும் பேரலை – சுனாமி.
31. சுனாமி
அலைகள் மணிக்கு சுமார் 640 கி.மீலிருந்து - 960 கி.மீ. வேகம் வரை பயணிக்கிறது.
32. சுனாமி
என்றவார்த்தை எந்த செல்லிருந்து பெறப்பட்டது – ஜப்பானியம்.
33. சுனாமி - (சு–துறைமுகம், நாமி–அலை)
34. இந்திய
பெருங்கடலில் சுனாமி ஏற்பட்ட ஆண்டு - 2004 டிசம்பர் 26 காலை 7.59 மணி.
35. இந்தோனேஷியாவின் சுமத்ரா கடற்கரையைத் தாக்கியது நிலநடுக்கம் ரிக்டர் அளவு- 9.1.
36. செர்னோபில்
முன்னால் சோவியத் யூனியன் அணு உலை விபத்து ஏற்பட்ட ஆண்டு - 1986 ஏப்ரல் 26.
37. ஹிரோஷிமா
மீது அணுகுண்டு வீசப்பட்ட ஆண்டு – 1945.
38. 2016 ஆண்டு கதிர் இயக்கவியல்
சார் மற்றும் சுற்றுச்சூழல் உயிர்கோளப்பெட்டகம் என்று அறிவிக்கப்பட்ட நாடு – உக்ரைன்.
39. முதன்மை மாசுபடுத்திகளுக்கு எ.கா:
1. சல்பர்டை
ஆக்சைடு
2. நைட்ரஜன்
ஆக்சைடு
3. கார்பன்
– டை- ஆக்சைடு
4. துகள்ம பொருட்கள்
40. இரண்டாம் நிலை மாசுபடுத்திகளுக்கு எ.கா: தலைமட்ட ஓசோன் , பனிப்புகை.
41. இந்தியாவில் நீர்மாசடைதலுக்கான முக்கிய காரணங்கள் :
1. நகரமயமாக்கல்
2. தொழிற்சாலை
கழிவுகள்
3. கழிவுநீர்
4. வேளாண்
நீர் வழிந்தோடல்
5. முறையற்ற
வேளாண் நடைமுறைகள்
6. கடல்நீர்
உட்புகுதல்
7. திண்மக் கழிவுகள்
42. பெரும்
சுற்றுச்சூழல் பேரழிவு காரணமாக இந்தியாவில் 2017 ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் சுமார் எத்தனை பேர்
இறந்துள்ளனர் – 22000.
43. 1998 – 2017 ஆண்டுகளில் உலகில் 5 இலட்சத்க்கும் மேலான மக்கள்- மோசமான வானிலை நிகழ்வுகளால்
இறந்துள்ளனர்.
44. காற்றில்
உள்ள நைட்ரஜன் சதவீதம் - 78.09%
45. இந்தியப்
பெருங்கடலில் சுனாமி ஏற்பட்ட ஆண்டு - 2004
46. சுனாமி
என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது – ஜாப்பனிய மொழி.
47. புவி
மேற்பரப்பு நீருக்கு எ.கா – ஏரிகள்.
48. பருவமழை
பொய்ப்பின் காரணமாக ஏற்படுவது – வறட்சி.
49. இடர்கள்
தோன்றுவதன் அடிப்படையில் எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம் – 8.
50. பொருத்துக:
1. முதல்
நிலை மாசுபடுத்திகள் - சல்பர் ஆக்சைடுகள்
2. அபாயகர
கழிவுகள் - காலாவதியான
மருந்துகள்
3. நில
அதிர்வு - சுனாமி
4. வானிலையியல்
வறட்சி - மழைப்பொழிவு
குறைதல்
5. மனிதனால்
தூண்டப்பட்ட இடர்- தீவிரவாதம்
0 Comments
THANK FOR VISIT