10TH- STD - தமிழ் நாட்டின் விடுதலை போராட்டம் -

1.    சென்னைவாசிகள் சங்கம் தொடங்கப்பட்ட ஆண்டு1852.

2.    சென்னைவாசிகள் சங்கம் யாரால் தொடங்கப்பட்து - கஜுலு லட்சுமிநரசு , சீனிவாசனார்.

3.    சென்னைவாசிகள் சங்கம் மேற்கொண்ட முயற்சிகளால் நிறுவப்பட்ட ஆணையம்  - சித்திரவதை ஆணையம் .

4.    சித்திரவதை முறைகள் மூலம் கட்டாய வரிவசூல் முறையை நியாயப்படுத்திய - சித்திரவதைச் சட்டம் ஒழிக்கப்பட்டது.

5.    1862 - க்குப் பின்னர் சித்திரவதை ஆணையம் செயலிழந்து இல்லாமலானது.

6.    1877 சென்னை உயர் நீதிமன்றத்தின் முதல் இந்திய  நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் -  T- முத்து சாமி.

7.    1878 ல் சுப்பிரமணியம், M. வீரராகவாச்சாரி மற்றும் இவர்களின் நண்பர்கள் நால்வர் ஆகியோர் இணைந்து தொடங்கிய பத்திரிகை -  தி இந்து.

8.    1891-ல்  சுதேசமித்திரன் என்ற ஒரு தேசியப் பருவ இதழை தொடங்கியவர் - சுப்பிரமணியம்.

9.    தென்னிந்தியாவில் தெளிவான தேசிய நோக்கங்களுடன் தொடங்கப்பெற்ற தொடக்ககால அமைப்பு  -  சென்னை மகாஜன சபை.

10.   சென்னை மகாஜன சபை தொடங்கப்பட்ட ஆண்டு   -  1884 மே 16.

11.   சென்னை மகாஜன சபையின்முக்கிய கோரிக்கைகள்:

1.  குடிமைப் பணிகளுக்கான தேர்வுகள் இங்கிலாந்திலும் இந்தியாவிலும் ஒரே சமயத்தில் நடத்தப்பட வேண்டும்.

2.  லண்டனில் உள்ள இந்திய கவுன்சிலை மூடுவது.

3.  வரிகளைக் குறைப்பது.

4.  இராணுவ குடியியல் நிர்வாக சலவுகளை குறைப்பது.

12.   சென்னை மகாஜன சபையை நிறுவிய தலைவர்கள்- M வீரராகவாச்சாரி,

P. அனந்தாச்சார்லு, P. ரங்கையா.

13.   சென்னை மகாஜன சபையின் முதல் தலைவர் -  P. ரங்கையா.

14.   சென்னை மகாஜன சபையின் முதல் செயலாளர் -  Pஅனந்தாச்சார்லு.

15.   ஆங்கிலேயர்கள் தங்களை தாராளமானவர்கள் என உரிமை கொண்டாடியதில் உள்ள தவறுகளை அம்பலப்படுத்தியது - மிதவாதிகளின் முக்கியப் பங்களிப்பு.

16.   சென்னையைச் சேர்ந்த புகழ்பெற்ற தமிழ்நாட்டு மிதவாதத் தலைவர்கள்:

          1.    V.S. சீனிவாச சஸ்திரி,

          2.    P.S. சிவசாமி,

          3.    V. கிருஷ்ணசாமி

          4.    T.R. வெங்கட்ராமனார்,

          5.    G.A. நடேசன்,

          6.    T.M. மாதவராவ் 

          7.    S. சுப்பிரமணியனார்.

17.   இந்திய தேசியக் காங்கிரசின் முதல் கூட்டம்  நடைபெற்ற ஆண்டு- 1885 பம்பாய்.

18.   இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் - 72.

19.   இந்திய தேசிய காங்கிரசின் முதல் கூட்ட பிரதிநிதிகளில் சென்னையை சேர்ந்தவர்கள் எத்தனை பேர்- 22.

20.   தனது எழுத்துக்களின் மூலமாக தேசியத்தை  முன்னெடுத்தவர்- G சுப்பிரமணியம் .

21.   இந்தியா பொருளாதாரரீதியாக ஆங்கிலேயர்களால் சுரண்டப்படுவதைப் புரிந்துகொள்ள யார் செய்த பங்களிப்பு நௌரோஜி, கோகலே ஆகியோருக்கு இணையானவர்- G சுப்பிரமணியம்.

22.   இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு  நடைபெற்றது ஆண்டு -1886 கல்கத்தா.

23.   இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது மாநாடு  யாருடைய தலைமையில் நடைபெற்றது  - தாதாபாய் நௌரோஜி.

24.   இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு  நடைபெற்றது ஆண்டு -1887 சென்னை- ஆயிரம் விளக்கு என்று அழைக்கப்படுகிற மக்கிஸ் தோட்டம்.

25.   இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு யாருடைய தலைமையில் நடைபெற்றது  -  பத்ருதீன் தியாப்ஜி.

26.   மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட அகில இந்திய பிரதிநிதிகள் - 607.

27.   மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட சென்னை மாகாண பிரதிநிதிகள்-362.

28.   சென்னை மாகாணம் உள்ளடக்கிய பகுதிகள்:

          1.    ஆந்திரப் பிரதேசம் - (கடற்கரை மாவட்டங்கள் மற்றும் ராயலசீமா).

          2.    கர்நாடகா - (பெங்களூரு, பெல்லாரி, தெற்கு கனரா).

          3.    கேரளா - (மலபார்).

          4.    ஓடிசா - (கஞ்சம்).

29.   சுதேசி கருத்துகளை பரப்புரை செய்த முக்கிய இரண்டு இதழ்கள் - சுதேசமித்திரன், இந்தியா.

30.   சுதேசி நீராவி கப்பல் நிறுவனம். . . சிதம்பரனாரால் எங்கு தொடங்கப்பட்டது- தூத்துக்குடி.

31.   . .சிதம்பரனார் வாங்கிய 2 கப்பல்கள் - காலியா , லாவோ.

32.   திருநெல்வேலியிலும் தூத்துக்குடியிலும் நூற்பாலைத் தொழிலாளர்களை அணி திரட்டுவதில் சுப்பிரமணிய சிவாவின் தோளோடுதோள் நின்றவர்- .சிதம்பரனார்.

33.   1908 ல் ஐரோப்பியருக்குச் சொந்தமான கோரல் நூற்பாலையில் நடைபெற்ற வேலை நிறுத்தத்திற்குத் தலைமையேற்றவர் - . .சிதம்பரனார்.

34.   பிபின் சந்திரபால் விடுதலை செய்யப்பட்டதைக் கொண்டாடு வதற்காகப் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்ததற்காக கைது செய்யப்பட்டவர்கள் - ..சி, சுப்பிரமணிய சிவா.

35.   சிறைத் தண்டனையைத் தவிர்ப்பதற்காக சுப்பிரமணிய பாரதி பிரெஞ்சுக்காரர்களின் ஆதிக்கத்திலிருந்த எங்கு இடம் பெயர்ந்தார் - பாண்டிச்சேரி.

36.   தமிழ்நாட்டை சேர்ந்த புரட்சிகர தேசியவாதிகள் பலருக்கு புரட்சிகர நடவடிக்கைகள் குறித்த அறிமுகமும் பயிற்சியும்  எங்கு வழங்கப்பட்டது :

          1.    இந்தியா ஹவுஸ் - லண்டன்.

          2.    பாரிஸ்.

          3.    M.PT. ஆச்சாரியா, V.V. சுப்ரமணியனார், T.S.S. ராஜன்.

37.   புரட்சிகர தேசியவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடம் - பாண்டிச்சேரி.

38.   புரட்சிகர தேசியவாதிகளில் முக்கியமானவர்கள்- M.P.T. ஆச்சாரியா, V.V. சுப்ரமணியனார் ,T.S.S. ராஜன்.

39.   பாண்டிச்சேரியிலிருந்து வெளிவந்த புரட்சிவாதச் செய்தித்தாள்கள் - இந்தியா, விஜயா, சூர்யோதயம்.

40.   1910 -ல் யாருடைய வருகைக்குப் பின்னர் புரட்சிகர நடவடிக்கைகள் தீவிரமடைந்தன -அரவிந்த கோஷ், V.V. சுப்ரமணியனார்.

41.   1904 - ல் பாரத மாதா சங்கம் எனும் ரகசிய அமைப்பை உருவாக்கியவர்  - நீலகண்ட பிரம்மச்சரியார் ,வேறு சிலரும்.

42.   செங்கோட்டையைச் சேர்ந்த வாஞ்சிநாதன் எந்த அமைப்பால் உள்ளுணர்வு தூண்டப்பட்டார் - பாரத மாதா சங்கம்.

43.   1911 ஜுன் 17 ல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரான ராபர்ட் W.D.E. ஆஷ் என்பவரை மணியாச்சி ரயில் சந்திப்பில் சுட்டுக் கொன்றவர்-  வாஞ்சிநாதன்.

44.   அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கிய ஆண்டு - 1916.

45.   அன்னிபெசன்ட் அம்மையார் அகில இந்திய அளவில் தன்னாட்சி வழங்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்துச்சென்றதில் துணை நின்றவர்கள் -  G.S. அருண்டேல், B.P வாடியா மற்றும் C.P. ராமசாமி.

46.   நியூ இந்தியா, காமன் வீல் இரண்டு செய்தித்தாள்களைத் தொடங்கியவர்- அன்னிபெசன்ட் அம்மையார்.

47.   அதிநவீன வசதிகளுடன் கூடிய ரயிலில் அடிமைகளாக இருப்பதைவிட சுதந்திரத்துடன் கூடிய மாட்டு வண்டியே சிறந்தது என கூறியவர் -  அன்னிபெசன்ட் அம்மையார்.

48.   1910 - ஆண்டு பத்திரிகைச் சட்டத்தின்படி, பிணைத் தொகையாக பெருமளவு பணத்தைச் செலுத்தும்படி அறிவுறுத்தப்பட்டவர் - அன்னிபெசன்ட்.

49.   விடுதலை பெற இந்தியா எப்படித் துயருற்றது How India wrought for Freedom இந்தியா ஒரு தேசம் India: A Nation இரண்டு புத்தகங்களையும் சுயாட்சி குறித்த துண்டுப்பிரசுரத்தையும் எழுதியவர் -  அன்னி பெசன்ட்.

50.   1917 - நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டவர் -  அன்னிபெசன்ட்.

51.   சென்னை திராவிடர் கழகம் உருவாக்கப்பட்ட  ஆண்டு - 1912.

52.   சென்னை திராவிடர் கழகத்தின் உறுப்பினர் -  C. நடேசனார்.

53.   1916 ஜுன் பிராமணர் அல்லாத மாணவர்களுக்காக திராவிடர் சங்க தங்கும் விடுதியை நிறுவியவர்-  C. நடேசனார்.

54.   பிராமணர் அல்லாதோரின் தலைவர்களாக இருந்தவர்கள் - T.M. நாயர், P தியாகராயர்.

55.   P. தியாகராயர், T.M. நாயர், C. நடேசனார் ஆகியோர் தலைமையில் சுமார் 30 பிராமணரல்லாதவர்கள் சென்னை விக்டோரியா பொது அரங்கில் கூடிய ஆண்டு -  1916 நவம்பர் 20.

56.   பிராமணரல்லாதோர்களின் நலன்களை மேம்படுத்துவதற்காகத் உருவாக்கப்பட்ட அமைப்பு - தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்.

57.   தென்னிந்திய நலவுரிமைச் சங்கத்தின் 3 செய்தித்தாள்கள்:

(South Indian Liberal Federation - SILF)

          1.    ஆங்கிலம் - ஜஸ்டிஸ் Justice – நீதி.

          2.    தமிழ் - திராவிடன்.

          3.    தெலுங்கு - ஆந்திர பிரகாசிகா.

58.   எந்த கட்சி தனது நோக்கங்களை கோடிட்டுக் காட்டி பிராமணரல்லாதோரின் அறிக்கையை வெளியிட்டது -  நீதிக்கட்சி.

59.   நீதிக்கட்சி :

          1.    நீதிக்கட்சி அரசுப் பணியிடங்களில் பிராமணரல்லாதோர்களுக்கு இட ஒதுக்கீடு , பிரதிநிதித்துவ அமைப்புகளில் இட ஒதுக்கீடு கோரியது.

          2.    நீதிக்கட்சி வகுப்புவாத பிரதிநிதித்துவத்தை கோரியது.

          3.    தன்னாட்சி இயக்கத்தை பிராமணர்களின் இயக்கம் என எதிர்த்தது.

          4.    சென்னை அரசாங்கம் நீதிகட்சியை ஆதரித்தது.

60.   எந்த ஆண்டு சட்டம் பிராமணரல்லாதோர்களுக்குத் தேர்தலில் இட ஒதுக்கீடு வழங்கியது  - 1919.

61.   1920 ல் நடைபெற்ற தேர்தலில் மொத்தமிருந்த 98 இடங்களில் எத்தனை இடங்கள் நீதிக்கட்சி வெற்றி பெற்றது  - 63 இடங்கள்.

62.   நீதிக்கட்சியின் முதலாவது முதலமைச்சர்-  A சுப்பராயலு.

63.   1923 ல் நீதிக் கட்சி அமைச்சரவையை அமைத்தவர் -  பனகல் அரசர்.

64.   நீதிக்கட்சியின் பல்வேறு நடவடிக்கைகள்:

          1.    உள்ளாட்சித் துறையிலும் கல்வி நிலையங்களிலும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டது.

          2.    பணியாளர் தேர்வுக் குழு நிறுவப்பட்டது.

          3.    இந்து சமய அறநிலையத்துறை சட்டமும், சென்னை அரசு தொழில் உதவி சட்டமும் இயற்றப்பட்டது.

          4.    தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது.

          5.    ஏழை எளிய மக்களுக்கு வீடு கட்டிக் கொள்வதற்காக புறம்போக்கு நிலங்களை பட்டா செய்து வழங்கப்பட்டன.

          6.    கல்வி கட்டண சலுகை , கல்வி உதவி தொகை வழங்கப்பட்டது.

          7.    மதிய உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

65.   1919 ஆங்கில அரசு  கொடூரமான குழப்பவாத புரட்சிக் குற்றச் சட்டத்தைப் ரௌளலட்சட்டம் பரிந்துரை செய்த குழு  - சர் சிட்னி ரெலட் குழு.

66.   எந்த ஆண்டு மெரினா கடற்கரையில் நடைபெற்ற கூட்டத்தில் காந்தியடிகள் உரையாற்றினார்  - 1919 மார்ச் 18.

67.   கருப்புச் சட்டத்தை எதிர்க்கும் நோக்கில் கடையடைப்பும் வேலை நிறுத்தங்களும் நடத்தப்பட்டன ஆண்டு-  1919 ஏப்ரல் 6.

68.   மதுரையில் தன்னாட்சி இயக்கத்தை ஏற்படுத்தியவர்  -  ஜார்ஜ் ஜோசப்.

69.   தமிழ்நாட்டில் குற்றப் பரம்பரைச் சமூகங்களின் பாதுகாவலராக விளங்கியவர்  -   ஜார்ஜ் ஜோசப்.

70.   மதுரை மக்கள் ஜார்ஜ் ஜோசப்பை எவ்வாறு அன்புடன் அழைத்தனர் - ரோசாப்பு துரை.

71.   மதுரை தொழிலாளர் சங்கம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு  - 1918.

72.   1918 மதுரை தொழிலாளர் சங்கம் எனும் அமைப்பை ஏற்படுத்துவதற்கு ஹார்வி மில் தொழிலாளர்களுக்கு உதவியவர் - ஜார்ஜ் ஜோசப்.

73.   துருக்கியின் கலீபா  பதவியை மீட்பதற்காக தொடங்கப்பட்ட இயக்கம்- கிலாபத் இயக்கம்.

74.   தமிழ்நாட்டில் மெளலானா செளகத் அலி தலைமையேற்ற ஒரு பொதுக்கூட்டத்துடன் கிலாபத் நாள் கடைப்பிடிக்கப்பட்ட ஆண்டு -  1920 ஏப்ரல் 17.

75.   கிலாபத் எழுச்சி நடவடிக்கைகளின் முக்கிய மையமாகத் திகழ்ந்தது - வாணியம்பாடி.

76.   தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கத்தை வழி நடத்யவர்கள் - தந்தை பெரியார் , ராஜாஜி.

77.   முஸ்லிம் லீக்கின் சென்னைக் கிளையை நிறுவியவர் -  யாகுப் ஹசன். ராஜாஜி நெருக்கமாகச் செயல்பட்டார்.

78.   எந்த ஆண்டில் சட்ட மறுப்பு இயக்கத்தைத் தொடங்குவதென முடிவு செய்யப்பட்டது  -  1921 நவம்பர்.

79.   ஜனவரி 13 எந்த இளவரசரின் வருகை புறக்கணிக்கப்பட்டது  - வேல்ஸ் இளவரசர்.

80.   1922  செளரி செளரா நிகழ்வில் எத்தனை காவலர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது -  22 காவலர்கள்.

81.   தஞ்சாவூரில் - வரிகொடா இயக்கம் ஒன்று நடைபெற்றது.

82.   கள்ளுண்பதற்கு தனது எதிர்ப்பைக் காட்டும் வகையில் தனக்குச் சொந்தமான தோப்பிலிருந்த தென்னை மரங்கள் அனைத்தையும் வெட்டியவர்- தந்தை பெரியார்.

83.   திருவாங்கூர் அரசின் ஆட்சியிலிருந்த வைக்கம் எனும் ஊரில் நடைபெற்ற கோவில் நுழைவுக்கான சத்தியாகிரகத்தில் முக்கியப்பங்கு வகித்தவர் -  தந்தை பெரியார்.

84.   வைக்கத்தில் கோவிலைச் சுற்றி இருந்த வீதிகளில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்ட ஆண்டு  - 1925 ஜூன்.

85.   தேசியக் கல்வியை முன்னெடுக்கும் பொருட்டு ஒரு குருகுலமானது V.V. சுப்பிரமணியனாரால் எங்கு நிறுவப்பெற்றதுசேரன்மாதேவி.

86.   1925 நவம்பர் 21  காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் சட்டசபையில் பிராமணரல்லாதோருக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் எனும் கோரிக்கையை முன் வைத்தவர்  -  பெரியார்.

87.   ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து காங்கிரஸ், இரு பிரிவாக பிரிந்தது -  மாற்றத்தை விரும்பாதோர், மாற்றத்தை விரும்புவோர்.

88.   யருடன் சேர்ந்து கொண்ட ராஜாஜி சட்டமன்றத்தைப் புறக்கணிப்பது எனும் கருத்தை முன்வைத்தார் - கஸ்தூரிரங்கர், M.A. அன்சாரி.

89.   சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர்கள் - சித்தரஞ்சன் தாஸ் , மோதிலால் நேரு.

90.   தமிழ்நாட்டில் சுயராஜ்ய கட்சி தலைமை ஏற்றவர்கள்- சீனிவாசனார், S.சத்தியமூர்த்தி.

91.   எந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் சுயராஜ்ஜியக் கட்சியினர் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றனர் - 1926.

92.   நீல் சிலை அகற்றும் போராட்டம் நடைபெற்ற ஆண்டு -1927.

93.   நீல் சிலை அகற்றும் போராட்டம் தலைமை ஏற்றவர்-சோமையாஜுலு. 

94.   1937-யாருடைய தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருந்தபோது நீல் சிலை அகற்றப்பட்டு சென்னை அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது -இராஜாஜி.

95.   1930  நடைபெற்ற தேர்தலில் சுயராஜ்ஜியக் கட்சியினர் போட்டியிடாததால் எளிதாக வெற்றி பெற்ற கட்சி -  நீதிக்கட்சி.

96.   1919 ஆம் ஆண்டுச் சட்டத்தின் செயல்பாடுகளைப் பரிசீலனை செய்து , சீர்திருத்தங்களைப் பரிந்துரை செய்ய, 1927 ல் இந்திய சட்டப்பூர்வ ஆணையம் ஒன்று யார் தலைமையில் அமைக்கப் பெற்றது  -  சர் ஜான் சைமன்

97.   சென்னையில் யாருடைய தலைமையில் சைமன் குழு எதிர்ப்பு பிரச்சாரக் குழுவொன்று உருவாக்கப்பட்டது-  S. சத்தியமூர்த்தி.

98.   சைமன் குழு சென்னைக்கு வந்த ஆண்டு  - 1929 பிப்ரவரி 18.

99.   எந்த ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் சென்னை மாநாடு முழுமையான சுதந்திரமே தனது இலக்கு என அறிவித்தது  - 1927.

100. சைமன் குழுவினை எதிர்த்து, அரசியல் அமைப்புச் சீர்திருத்தங்களை வடிவமைப்பதற்காக காங்கிரஸ் யாருடைய தலைமையில் ஒரு குழுவை அமைத்தது -  மோதிலால் நேரு .

101. எந்த ஆண்டில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பூரண சுயராஜ்ஜியம் (முழு சுதந்திரம்) என்பதே இலக்கு எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது -  1929, லாகூர்.

102. ராவி நதியின் கரையில் சுதந்திரத்தை அறிவிக்கும் விதமாக ஜவகர்லால் நேரு தேசியக் கொடியை ஏற்றிய  ஆண்டு - 1930 ஜனவரி 26.

103. காந்தியடிகள் தண்டியை நோக்கி உப்பு சத்தியாகிரக யாத்திரையைத் துவக்கிய ஆண்டு - 1930 மார்ச் 12.

104. 1930 ஏப்ரல் தமிழகத்தில் உப்பு சத்தியாகிரகம் தலைமையேற்று வேதாரண்யம் நோக்கி அணி வகுத்துச் சென்றவர் - ராஜாஜி.

105. வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் ராஜாஜி தலைமையில் 1930 ஏப்ரல் 13 லதிருச்சியிலிருந்து தொடங்கி ஏப்ரல் 28 இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் வேதாரண்யம் வரை நடைபெற்றது. இதில் எத்தனை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்100.

106. ராஜாஜியின் தலைமையில் எத்தனை தொண்டர்கள் உப்புச் சட்டத்தை மீறி உப்பை அள்ளினர் -  12 தொண்டர்கள்.

107. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று வருகுது, சத்திய நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர் எனும் சிறப்புப் பா எழுதியவர்-  நாமக்கல் கவிஞர் ராமலிங்கனார்.

108. வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்ற முக்கியத் தலைவர்கள: 

          1.    T.S.S. ராஜன்,

          2.    திருமதி. ருக்மணி லட்சுமிபதி

          3.    சர்தார் வேதரத்தினம்,

          4.    C. சாமிநாதர்

          5.    K. சந்தானம்.

109. தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரக நினைவு சின்னம் அமைக்கப்பட்டுள்ள இடம்வேதாரண்யம்.

110. யார்  தலைமையில் சத்தியாகிரகிகள் சென்னைக்கு அருகேயுள்ள உதயவனம் என்ற இடத்தில் ஒரு முகாமை அமைத்திருந்தனர் - T. பிரகாசம், K. நாகேஸ்வர ராவ்.

111. உப்புச்சட்டங்களை மீறியதற்காக அபராதம் கட்டிய முதல் பெண்மணி - ருக்மணி லட்சுமிபதி.

112. 1932 ஜனவரி 26 புனித ஜார்ஜ் கோட்டையின் உச்சியில் தேசியக் கொடியை ஏற்றியவர் -  ருக்மணி லட்சுமிபதி.

113. பரவலாக ஆரியா என அழைக்கப்பட்ட பாஷ்யம்- ருக்மணி லட்சுமிபதி.

114. எந்த ஆண்டில் திருப்பூரில் கொடிகளை ஏந்திய வண்ணம் திருப்பூர் குமரன் நாட்டுப்பற்று மிகுந்த பாடல்களைப் பாடி சென்றார்-  1932 ஜனவரி 11.

115. எந்த ஆண்டு இந்திய அரசாங்கச் சட்டம் மாநில சுயாட்சிக்கு வழி வகுத்தது - 1935 .

116. 1937 ஆம் ஆண்டு தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றது  -  காங்கிரஸ்.

117. 1937 ஆம் ஆண்டு தேர்தலில் படு தோல்வி அடைந்த கட்சி- நீதி கட்சி.

118. யார் முதல் காங்கிரஸ் அமைச்சரவையை அமைத்தார்-  ராஜாஜி.

119. ராஜாஜி மதுவிலக்கு பரிசோதனை முயற்சியாக அறிமுகம் செய்த இடம் - சேலம்.

120.  மதுவிலக்கு மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுசெய்ய அறிமுகப்படுத்திய வரி- விற்பனை வரியை.

121. யார் மேற்கொண்ட முயற்சியினால் ஜமீன்தார்களின் பகுதிகளைச் சேர்ந்த குத்தகைதாரர்களின் நிலை குறித்து விசாரணை செய்ய விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட்டது-  T. பிரகாசம்.

122. மதுரை ஹரிஜன சேவக் சங்கத்தின் தலைவர் வைத்தியநாதர், செயலர் L.N. கோபால்சாமி ஆகியோரால் மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஹரிஜன மக்களுடன் நுழையத் திட்டமிடப்பட்ட ஆண்டு - 1939 ஜுலை 9.

123. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக உள்ள குடிமை, சமூகக் குறைபாடுகளை அகற்றுவதற்காக கோவில் நுழைவு அங்கீகார, இழப்பீட்டுச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு  -  1939.

124. இந்தி எதிர்ப்பு மாநாடு ஒன்றினை சேலத்தில் நடத்தியவர் - தந்தை பெரியார்.

125. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறையில் மரணமடைந்த இருவர்- தாளமுத்து,நடராஜன்.

126. இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு திருச்சியிலிருந்து சென்னைக்கு ஊர்வலம் ஒன்று திட்டமிடப்பட்டது. இதில் பெரியார் உட்பட எத்தனை  போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர் -1200.

127. வெள்ளையனே வெளியேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட ஆண்டு -  1942 ஆகஸ்டு 8.

128. செய் அல்லது செத்துமடி எனும் முழக்கத்தை வழங்கியவர்  - மகாத்மா காந்தி.

129. பம்பாயிலிருந்து ஊர் திரும்பிக் கொண்டிருந்த காமராசர் ரயில் நிலையங்களில் முக்கிய தலைவர்களை கைது செய்வதை தெரிந்துகொண்டு காவல்துறையினரின் கண்ணில் படாமல் இறங்கிய இடம்அரக்கோணம்.

130. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது இராணுவத்துடனான காங்கிரஸ் தொண்டர்கள் மோதல் நடைபெற்ற இடம்மதுரை.