இரண்டாம் பாவம்

1.   மேஷம் 2 ஆம் இடமாக இருந்தால் ஜாதகர் செல்வச் சீமானாகவும், மாடு கன்று உள்ளவராகவும், பாகியவானவாகவும், வித்வானாகவும் விளங்குவார்.

2.   ரிஷபம் 2 ஆம் இடமாக இருந்தால் விவசாயத்தில் ஈடுபாடும் ரத்தினங்கள் வாங்குவதில் விருப்பம் உள்ளவராகவும் இருப்பார்.

3.   மிதுனம் 2 ஆம் இடமாக இருந்தால் தனவான். இவனுக்கு பெண் பிள்ளைகள் அதிகம் பிறக்க வாய்ப்பு உண்டு. நண்பர்கள்ளல் லாபம் உள்ளவர்.

4.   கடகம் 2 ஆம் இடமாக இருந்தால் நியாயமான மார்கத்தில் சம்பாதிப்பவர். மனைவி மூலம் சுகத்தை அடைபவர். பிள்ளைகளை பேணி காப்பவர்.

5.   சிம்மம் 2 ஆம் இடமாக இருந்தால் நிறைய பொருள் ஈட்டுவார். எல்லோருக்கும் உபகாரியாக இருப்பார்.

6.   கன்னி 2 ஆம் இடமாக இருந்தால் அரசினால் வருமானம். யானை, குதிரை ரத்தினங்கள் முதலியவற்றை வேகுமானமாகப் பெறுவார்.

7.   துலாம் 2 ஆம் இடமாக இருந்தால் பூமியினாலும, பயிர்களினாலும், தன்முயற்சியினாலும் பொருளீட்டிப் பல நற்காரியங்களுக்கு பயன் படுத்துவார்.

8.   விருசிகம் 2 ஆம் இடமாக இருந்தால் கடமையே கண்ணாக உள்ளவர். பெண்களிடத்தில் பிரியமுள்ளவர். நல்ல பேச்சாளர். பிராமணர்களிடமும், தெய்வங்களிடமும் ஈடுபாடு கொண்டவர்.

9.   தனுசு 2 ஆம் இடமாக இருந்தால் தீரச் செயல்களால் செல்வம் கிடைக்கும். மாடு கன்றுகள் வீட்டில் நிறைந்து இருக்கும். தர்ம காரியங்களின் மூலம் புகழ் பெறுவார்.

10. மகரம் 2 ஆம் இடமாக இருந்தால் ஆனால் பலவிதமான் யுக்திகளால் பொருளை ஈட்ட வல்லவர். பிற நாட்டு தொடர்பாலும் அரசு மூலமாகவும் செல்வம் சேரும்.

11. கும்பம் 2 ஆம் இடமாக இருந்தால் ஆனால் பழம், புஸ்பம் இவை மூலம் அதிகமான தனத்தை பெறுகின்றான். நல்லவர்கள் அனுபாவிக்க கூடிய பெரியோர்கள் மூலம் இவன் அனுபவிக்கின்றான்.

12. மீனம் 2 ஆம் இடமாக இருந்தால் நெம நிஸ்டைகள், உபவாசம் ஆகியவற்றால் தனம் கிடைக்கிறது. வித்தை மூலமாகவும், தாய் வழியாகவும், அரசு மூலமாகவும் பொருள் சேரும். புதையல் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.

2 ஆம் இடத்தை இதர கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.

1.   சூரியனால் பார்க்கப்பட்டால் தந்தையின் சொத்தை நாசமாக்குபவன்; பராகிரமசலி, சுகஜீவி

2.   சந்திரனால் பார்க்கப்பட்டால் குடும்ப சுகம் உள்ளவன்; வம்ச விருதியுடையவன்; சரீர நலிவுல்லவன்; தண்ணீரால் பீடைகள் ஏற்பட கூடும்.

3.   செவ்வாயின் திருஷ்டி இருக்குமானால் குடும்ப சுகம் இல்லை. தனலாபம் இல்லை; தீராத வயிற்று வழி உள்ளவர்.

4.   புதனால் பார்க்கப்பட்டால் எப்பொழுதும் ஒப்பற்ற தன சுகம் உள்ளவர்; வஞ்சகர்.

5.   குருவினால் பர்ர்கப்பட்டால் பாக்கியவான். நல்ல குணம் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்.

6.   சுக்கிரனால் பார்க்கப்பட்டால் ஒவ்வொருநாளும் தன சுகம்; உறவினருக்கு உதவுபவன்; பகைவர்களை நாசம் செய்பவன்.

7.   சனியினால் பார்க்கபட்டால் பணத்தை விரயம் செய்பவன். தனது சொந்தகாரர்களையே சத்ருகள்ளக நினைப்பவன்.

சில கிரகங்கள் 2 ஆம் இடத்தில கூட்டாக இருப்பதன் பலன்.

சூரியன், சனி, செவ்வாய் இருந்தால் தனநாசம்

சூரியன் செவ்வாய் இருந்தால் குலதோசம்

சூரியன் பாபர்களின் செர்கையோடு இருந்தால் செல்வத்தை அள்ளிக்கொடுப்பன்.

குரு 2 க்குடையவனாகி 2 ஆம் இடத்திலேயே இருந்து செவ்வாயுடன் கூடுவானாகில் குபேரனுக்கு ஒப்பாக வாழ்வான்.

2 ஆம் இடத்து அதிபதி உச்சம் நீசம் முதலிய வீடுகளில் இருபதால் ஏற்படும் பலன்கள்

2 க்குடையவன் சுபக்கிரகமாகி தனது உச்ச வீட்டிலோ. கேந்திரதிலோ நட்பு வீட்டிலோ, சுபரின் வீட்டிலோ இருக்கப் பிறந்தவன் தனது வாக்கின் திறமையை வைத்தே குடும்பத்தை காப்பாற்ற வல்லவன்.

2 ஆம் இடத்தில 2 க்கு உடையவன் இருந்தாலும் புதனோ சுக்கிரனோ 2க்கு உடையவன் ஆனாலும் அல்லது 2 க்கு உடையவன் நட்பு வீட்டில் இருந்தாலும் மக்கள் போற்றும் பரோபகரியாக விளங்குவான். திரிகோண வீட்டில் இருந்தால் பணக்காரனாக மட்டும் ஆவான்.

2 க்கு உடையவன் 12 ல் இருந்த போதிலும் இரண்டு கிரகங்களுடன் சேர்ந்து இருப்பானேயானால் அதிகமான் செல்வத்தை பெறுகிறான்.

2 க்கு உடையவான் உச்ச வீட்டில் இருந்து குருவினால் பார்க்கப்பட்டால் ஆயிரம் பேர்களை காப்பார்ருபாவனாக அமைகிறான்

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.