நவாம்ச பலன்கள் – விருச்சிகம்
1.
விடாமுயற்சி
கொண்டவர். புத்திசாலிதனமே இவரது மூலதனம். பார்ப்பதற்கு குழந்தைதனம் கொண்டவாராக தெரிவார்.
குறும்பு சேஷ்டைகள் செய்வார். ஆசைகளை வெளியே காட்டிகொள்ளாமல் பழகுவார்.
2.
காரியமாகத்தான்
வந்திருக்கின்றார் என்று தெரியாது. ரகசியங்களை தெரிந்து வைத்திருப்பார். இவரை கூட்டு
சேர்த்து கொள்ளவும் முடியாது. விட்டுவிடவும் முடியாது.
3.
இவரை
சீண்டாமல் இருப்பதே நல்லது. கலகப்படுத்திவிடுவார், ரகசியமாக பிறரை தட்டி விட்டு காரியத்தை
முடித்து விடுவார். வெளியில் தெரியாமல் முடித்து விடும் சாமர்த்தியசாலி.
4.
இளம்
பிரயாத்தில் நோய் நொடிகள் இருந்தாலும் எதிர்காலத்தில் நோயோர்ர்`நோயற்ற வாழ்வே ஏற்படும்.
முதுமையிலும் சுருசுருபாக தொழில் செய்வார். வருமானம் நிலையாக இருக்காது.
5.
வீட்டு
நிலவரத்துக்கும், கையிருப்புக்கும் சம்பந்தம் இருக்காது. உத்தியோகம் பார்த்தல் சில
சமயம் பதவி விலக நேரும். தொழிலை மாற்றவும், சில காலம் மூடி வைக்கவும் நேரும். பொறுமை
இருக்காது. அங்கும் இங்கும் வங்கிப்போட்டு எதையாவது துவங்குவார்.
6.
விரைவில்
மூடுவிழா நடக்கும். உண்மையில் நஷ்டம் இவருக்கு இருக்காது என்றாலும் கலவரமாக காட்சியளிப்பார்.
இவரை நம்பி முதலீடு செய்தவர்களை பதறவைப்பார்.
7.
மது
இவருக்கு எதிரி. நண்பர்களோ மது பிரியர்களாக வந்து சேருவர். மதுவால் வீடும், உறவும்
பாதிக்கப்படும்.
8.
தலைவர்
போல் இருந்தாலும் சாதாரண வாழ்க்கை வாழ்வார்.ஆடம்பரம் இருக்காது. விக்ரமாதித்தன் போன்றவர்கள்
என்பதால் கால வித்தியாசங்களில் ஏற்படும் ஏற்ற இறக்கம் பற்றி கவலைப்பட வேண்டாம். தாமதம்
கூட நன்மையே தரும். தடங்கல் கூட இடைஞசலை நீக்கும்.
9.
எதிர்பார்த்த
வருமானமும், பதவிகளும் தானே வந்து சேரும் என்பது நிச்சயம். இளமையை விட பாதி வயதுக்கு
மேல் தான் பதவியும், பணமும், உயர்வும் கிடைக்கும்.
நவாம்சத்தில் விருச்சிக சூரியன்
சுதந்திரமாக தன்
போக்கில் எதையும் செய்வார்.யாருக்கும் உரிய மரியாதை தர மாட்டார். பெற்றவரே ஆனாலும்
சரியே. இவரிடம் சிக்கிய பணம் யானை வாய் கரும்பே. திரும்ப வராது. பிரச்சனைகளைப் பற்றி
கொஞ்சம் கூட கவலைப் பட மாட்டார்.. இவரது ஆசைகளுக்கு தடை போட முடியாது. அதே போல் வீண்
செலவுகளை நிறுத்தவும் முடியாது. பிறரிடம் இல்லாத ஒன்று தன்னிடம் உண்டு என்று காட்டி
கொள்வார். தனித்திறமை கொண்டவர் என்ற பெயரை வைத்துக் கொண்டு காலத்தை ஓட்டுவார்.
நவாம்சத்தில் விருச்சிக சந்திரன்
பாலுணர்வு மிக்கவர்.
ஆண் ஜாதகம் என்றால் காதல் திருமனத்திற்கு வாய்ப்பு அதிகம். பெண்கள் மீது எப்போதும்
தணியாத காதல் இருக்கும். மலருக்கு மலர் தாவுவார். எல்லோரையும் காதலிப்ப்பார். பெண்
ஜாதகம் எனில் திருமண வாழ்க்கை சந்தேகம், சச்சரவு என்று வீணாகி விடும்.
ஜாதகருக்கு உதவாக்கரைகளுடன்
நட்பு ஏற்படும்.புரட்சி சீர்திருத்தம் என்று பேசுவார். உலகை திருத்த வேண்டும் என்று
புறப்படுவார். தன் வசிக்கும் பகுதியில் அல்லது தொழில் செய்யும் இடத்தில புரட்சி கருத்துகளை
விதைப்பார். சக்தி மிக்கவர்களை எதிர்த்து போராடவேண்டிய சந்தர்பங்கள் பலமுறை ஏற்படும்.
நவாம்சத்தில் விருச்சிக செவ்வாய்
சண்டைகோழி என்று
பெயர் எடுப்பார். விபத்துகள் பல உண்டு. நண்பர்கள் நீடித்து இருக்க மாட்டார்கள். வேலைகாரகள்
அடிக்கடி வெளியேறுவர். வீட்டில் இருப்பவர்களை மதித்து நடக்க மாட்டார். கஷ்டப்பட்டு
சம்பாதித்து விருப்பம் போல் செலவு செய்வார். அசையாத சொத்துகள் பிற்காலத்தில் ஏற்படும்.
நவாம்சத்தில் விருச்சிக புதன்
அனைவர்க்கும் பிடித்தவர்.
பலரது பிரச்சனைகளை தீர்த்து வைப்பார். உளவு பார்க்கும் குணம் கொண்டவர். புதிதாக எதையாவது
கண்டு பிடிப்பார். அது பலருக்கும் உபயோகமாக இருக்கும். பிரயாணங்களில் பிரச்சனைகள் உண்டு.
நவாம்சத்தில் விருச்சிக குரு
மலர்ந்த முகத்துடன்
காணப்படுவார். சுயமாக முடிவு எடுப்பார். சிக்கலுக்கு காரணம் என்னவென்று ரகசியமாக துப்பு
துலக்குவார். இவரால் ஒரு சிலருக்கு நன்மையும், ஒரு சிலருக்கு தீமையும் ஏற்படும்.
நவாம்சத்தில் விருச்சிக சுக்கிரன்
பெண்களே உலகம்.
பெண்களை அடிப்படையாக் வைத்தே பல சம்பவங்கள் நடக்கும். வரவுக்கு மீறி செலவுகள் ஏற்படும்.
அவை தேவையற்ற செலவுகளே. உடன் இருப்பவர்கள் வேகமாக முன்னுக்கு வருவார்கள். குடும்ப வருமானத்தை
நம்பி இருக்க நேரும்.
நவாம்சத்தில் விருச்சிக சனி
தந்தைக்கும், ஜாதகருக்கும்
ஆகாது. தன்னலம் மிகுந்து இருக்கும்.பலனை எதிர்பார்த்தே எதையும் செய்வார். உத்தியோகம்
பார்பவராயின் உயர்வுகள் தரும் சனி பகவான். சர்வாதிகாரி என்ற பெயரையும் சேர்த்து தருவார்.
கெட்ட பெண்கள் தொடர்பு ஏற்பட்டு பெயர் கெட வாய்ப்பு உண்டு. இவரது மறைவு பலரும் பேசும்
படி இருக்கும்.
நவாம்சத்தில் விருச்சிக ராகு
எப்போதும் எதாவது
தொல்லைகள் வந்து கொண்டே இருக்கும். சளைக்காமல் சமாளித்தவண்ணம் இருப்பார்.எதற்கும் பணிந்து
போக மாட்டார். அனுசரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. சண்டை போட்டுக் கொண்டு வீட்டை விட்டு
வெளியே தங்கவும் வாய்ப்பு உண்டு.
நவாம்சத்தில் விருச்சிக கேது
நண்பர்கள் எதிரிகள்
ஆவார்கள். கூட்டாளிகள் துரோகம் செய்வார்கள். குற்றங்களை கண்டுபிடிக்கும் ஆற்றல் இருக்கும்.
பிறரது பிரச்சனைகளை அறிந்து கொள்வதே இவருக்கு துன்பத்தை வரவழைக்கும். இவரிடம் சிக்கிக்
கொண்டால் மன்னிக்க மாட்டார். இவர் பிறரை மன்னிக்காவிட்டால், சமாதானத்திற்கு உடன்படாவிட்டால்
இவரது முடிவு பயங்கரமாக இருக்கும்.
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT