அகப்பொருள் இலக்கணம்

1.    அகத்திணையில் வகைகள்

          1.    குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை ஆகிய ஏழும் அகத்திணைகள் ஆகும்.

          2.    இவற்றுள் முதல் ஐந்தும் அன்பின் ஐந்திணைகள்.

2.    முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியன ஐந்திணைகளுக்கு உரியன.

3.    நிலமும் பொழுதும் முதற்பொருள் எனப்படும்.

4.    ஒரு நிலத்தின் தெய்வம், மக்கள், தொழில், விலங்கு இவையெல்லாம் கருப்பொருள்கள்.

5.    ஐவகை நிலங்கள்

          1.    குறிஞ்சி மலையும் மலைசார்ந்த இடமும்

          2.    முல்லை காடும் காடு சார்ந்த இடமும்

          3.    மருதம் வயலும் வயல் சார்ந்த இடமும்

          4.    நெய்தல் கடலும் கடல்சார்ந்த இடமும்

          5.    பாலை சுரமும் சுரம் சார்ந்த இடமும்.

6.    பொழுது, பெரும்பொழுது, சிறுபொழுது என இருவகைப்படும்..

7.    பெரும்பொழுது - ஓராண்டின் ஆறு கூறுகளைப் பெரும்பொழுது என்று நம் முன்னோர் பிரித்துள்ளனர்.

          1.    கார்காலம் - ஆவணி, புரட்டாசி

          2.    குளிர்காலம் - ஐப்பசி, கார்த்திகை

          3.    முன்பனிக் காலம் - மார்கழி, தை

          4.    பின்பனிக் காலம் - மாசி, பங்குனி

          5.    இளவேனிற் காலம் - சித்திரை, வைகாசி

          6.    முதுவேனிற் காலம் - ஆனி, ஆடி

8.    சிறுபொழுதுகள் - ஒரு நாளின் ஆறு கூறுகளைச் சிறு பொழுது என்று பிரித்துள்ளனர்.

          1.    காலை - காலை 6 மணி முதல் 10 மணி வரை

          2.    நண்பகல் - காலை 10 மணி முதல் 2 மணி வரை

          3.    எற்பாடு - பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை

          4.    மாலை - மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை

          5.    யாமம் - இரவு 10 மணி முதல் இரவு 2 மணி வரை

          6.    வைகறை - இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை.

9.    எற்பாடு  - 'எல்' என்றால் ஞாயிறு, 'பாடு' என்றால் மறையும் நேரம். எல்+பாடு = எற்பாடு .

https://www.a2ztnpsc.in/