பேரண்டம் மற்றும் சூரிய குடும்பம் -
6TH STD -
1.
பெருவெடிப்பு காரணமாய் எண்ணிலடங்கா விண்மீன்களும் வான்பொருட்களும் தோன்றின இவை அனைத்தும் - பேரண்டம், அண்டம்.
2.
விண்மீன் திரள் மண்டலத்தில் உள்ளது -சூரிய குடும்பம்.
3.
பால்வெளி விண்மீன் திரள் மண்டலத்தில் உள்ளது - புவி.
4.
அண்டத்தை பற்றிய படிப்பு - அண்டவியல். Cosmology
5.
காஸ்மாஸ் என்பது எந்த சொல் - கிரேக்கம்.
6.
15 - பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு எற்பட்ட பெரு வெடிப்பின் காரணமாக உருவானது - பேரண்டம்.
7.
கோடிக்கணக்கான விண்மீன் திரள் மண்டலங்கள், விண்மீன்கள் கோள்கள், வால் நட்சத்திரங்கள், சிறுகோள்கள், விண்கற்கள் மற்றும் துணைக் கோள்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது- பேரண்டம்.
8.
ஈர்ப்பு விசையால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு இருக்கும் நட்சத்திரங்களின் தொகுப்பு - விண்மீன் திரள் மண்டலம்.
9.
பெருவெடிப்பு நிகழ்வுக்குப் பிறகு சுமார் 5 பில்லியன் வருடங்களுக்குப் பின் உருவானது - பால்வெளி விண்மீன் திரள் மண்டலம் - Milky Way Galaxy.
10.
ஒளி ஓர் ஆண்டில் பயணிக்கக்கூடிய தொலைவு - ஓர் ஒளியாண்டு.
11.
ஒளியின் திசைவேகம் வினாடிக்கு - 3,00,000 கி.மீ.
12.
ஒலியானது வினாடிக்கு பயணிக்கும் வேகம் - 330 மீட்டர்.
13.
சூரியக் குடும்பம் உருவானது- சுமார் 4.5 பில்லியன் வருடங்களுக்கு முன்பு.
14.
சூரியன், எட்டு கோள்கள் குறுளைக் கோள்கள், துணைக் கோள்கள், வால் நட்சத்திரங்கள், சிறு கோள்கள் , விண்கற்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது- சூரியக்குடும்பம்.
15.
ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ள ஓர்அமைப்பு- சூரியக்குடும்பம்.
16.
சூரியக் குடும்பத்தின் மையத்தில் அமைந்துள்ளது - சூரியன்.
17.
சூரியக் குடும்பத்தின் மொத்த நிறையில் சூரியனின் நிறை - 99.8 % .
18.
ஹைட்ரஜன், ஹீலியம் போன்ற வெப்பமான வாயுக்களால் ஆனது- சூரியன்.
19.
அனைத்து வான்பொருட்களும் - சூரியனைச் சுற்றி வருகின்றன.
20.
சூரியனின் மேற்பரப்பு வெப்பநிலை - 6000' C.
21.
சூரியனின் வெப்பநிலை புவியின் மேற்பரப்பை வந்தடைய ஆகும் நேரம் - 8.3 நிமிடங்கள்.
22.
கோள் என்பது – சுற்றிவருபவர்.
23. சூரியக் குடும்பத்தில் எட்டு கோள்கள்-
1. புதன்
2. வெள்ளி
3. புவி
4. செவ்வாய்
5. வியாழன்
6. சனி
7. யுரேனஸ்
8. நெப்டியூன்.
24.
வெள்ளி மற்றும் யுரேனஸ் - கோள்களைத் தவிர பிற கோள்கள் அனைத்தும் சூரியனை எதிர் கடிகாரச்சுற்றில் சுற்றி வருகின்றது. மேற்கிலிருந்து கிழக்காகச் சுற்றி வருகின்றன.
25.
வாள் நிற விசும்பின் கோள் மீன் சூழ்ந்த இளங்கதிர் ஞாயிறு - சிறுபாணாற்றுப்படை.
26.
சூரியனுக்கு அருகில் உள்ள 4 கோள்கள் - புதன், வெள்ளி, புவி, செவ்வாய்- உட்புறக்கோள்கள் (அ) புவிநிகர் கோள்கள்.
27.
புவிநிகர் கோள்கள் - பாறைகளால் ஆன இக்கோள்களின் மேற்பரப்பில் மலைகள் எரிமலைகள் மற்றும் தரைக்குழிவுப் பள்ளங்கள் காணப்படுகின்றன.
28.
சூரியக்குடும்பத்தில் உள்ள கடைசி நான்கு கோள்கள் - வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் - வெளிப் புறக்கோள்கள் (அ) வியாழன் நிகர் கோள்கள்.
29.
வெளிப் புறக்கோள்கள் வாயுக்களால் நிரம்பிக் காணப்படுவதால் இவை - வளிமக் கோள்கள்.
30.
எந்த கோள்களுக்கிடையே சிறு கோள் மண்டலம் காணப்படுகிறது- செவ்வாய் - வியாழன்.
31.
மற்ற கோள்களை விட மிகவும் சிறிய கோள்- புதன்.
32.
ரோமானியக் கடவுள்களின் தூதுவரான மெர்குரியின் பெயரால் அழைக்கப்படும் கோள் – புதன்.
33.
நீர் , வாயு இல்லாத கோள் - புதன்.
34.
புதன் கோளுக்குத் துணைக்கோள்கள்- இல்லை
35.
அதிகாலைப் பொழுதிலும், அந்திப் பொழுதிலும் நாம் வெற்றுக் கண்களால் காணமுடியும் கோள் - புதன்
36.
வெப்பமான கோள்- வெள்ளி.
37.
புவியைப் போன்றே ஒத்த அளவுள்ளதால் இரட்டைக் கோள்கள் என அழைக்கப்படும் கோள் - வெள்ளி, புவி.
38.
வெள்ளி தன்னைத் தனே சுற்றிக் கொள்ள எடுத்துக்கொள்ளும் நாள்கள் - 243 நாள்கள்.
39.
யுரேனஸைப் போன்று கிழக்கிலிருந்து மேற்காகச் சுற்றும் கோள்-வெள்ளி.
40.
மற்ற கோள்களை விட மிகவும் மெதுவாகச் சுற்றும் கோள் - வெள்ளி.
41.
அன்பு , அழகைக் குறிக்கும் ரோமானிய கடவுளான 'வீனஸ்' என்ற பெயரால் அழைக்கப்படும் கோள் - வெள்ளி.
42.
காலையிலும் மாலையிலும் விண்ணில் காணப்படுவதால் இக்கோள் - விடிவெள்ளி, அந்தி வெள்ளி. என்ற பெயரால் அழைக்கப்படுறது.
43.
வெள்ளி- கோளுக்குத் துணைக்கோள்கள்-இல்லை
44.
நிலவிற்கு அடுத்தப்படியாக இரவில் பிரகாசமாகத் தெரியும் விண்பொருள் – வெள்ளி.
45.
ஐந்தாவது பெரிய கோள் - புவி .
46.
புவியின் மேற்பரப்பானது – 3/4 பகுதி.
47.
'நீலக்கோள்' என்றும் நீர்க்கோள்' என்றும் அழைக்கப்படுவது-புவி.
48.
ரோமானிய மற்றும் கிரேக்கக் கடவுள்களின் பெயரால் அழைக்கப்படாத ஒரே கோள்- புவி.
49.
புவியின் துருவ விட்டம்- 12714 கிலோ மீட்டர்.
50.
புவியின் நிலநடுக்கோட்டு விட்டம்-12756 கிலோ மீட்டர்.
51.
புவி சூரியனை வினாடிக்கு எத்தனை கிலோமீட்டர் வேகத்தில் சுற்றிவருகிறது- 30 கிலோமீட்டர்.
52.
புவியின் ஒரே துணைக்கோள்- நிலவு.
53.
சூரியனுக்கும், பூமிக்கும் இடையே உள்ள தொலைவு - 150 - மில்லியன் கிலோமீட்டர்.
54.
செந்நிறக் கோள்- செவ்வாய்
55.
புதனுக்கு அடுத்தபடியாக இரண்டாவது சிறிய கோள் - செவ்வாய்.
56.
ரோமானியக் போர்க்கடவுள் மார்ஸ்
(Mars) பெயரால் அழைக்கப்படும் கோள் - செவ்வாய்.
57.
இரும்பு ஆக்ஸைடு உள்ளதால் செந்நிறமாகத் தோற்றமளிக்கிற கோள் - செவ்வாய்.
58.
செவ்வாய் துணைக்கோள் இரண்டு - ஃபோபஸ் , டீமஸ் .
59.
(ISRO) செவ்வாய்க் கோளின் வளிமண்டலம் மற்றும் தரைப்பகுதியை ஆராய்வதற்காக மங்கள்யான் அனுப்பியது-24.09.2014
60.
இந்தியா செவ்வாய்க் கோளினை ஆராயும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா, நாஸா ,ஐரோப்பிய நிறுவனத்திற்கு அடுத்ததாக – 4 இடத்தில் உள்ளது.
61.
சூரியக் குடும்பத்தின் மிகப் பெரியக் கோள் - வியாழன்.
62.
நிலா மற்றும் வெள்ளி கோளுக்கு அடுத்ததாக பிரகாசமாக விண்ணில் தெரிவது- வியாழன்.
63.
தன் அச்சில் மிகவும் வேகமாகச் சுழலக்கூடிய கோள்- வியாழன்.
64.
சூரியனைப் போன்றே வளிமண்டலத்தில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் வாயுக்கள் காணப்படும் கோள்- வியாழன்.
65.
அதிகமான துணைக்கோள்களை கொண்டுள்ள கோள் - வியாழன்.
66.
வியாழன் மிகப்பெரிய துணைக்கோள்- அயோ ,யூரோப்பா ,கனிமீடு ,கேலிஸ்டோ .
67.
ரோமானியர்களின் முதன்மை கடவுள்
(Jupiter) பெயரால் அழைக்கப்படும் கோள் – வியாழன்.
68.
சூரியக் குடும்பத்தின் இரண்டாவது பெரிய கோள்-சனி.
(Saturn)
69.
ரோமானிய வேளாண்மை கடவுளின் பெயரால் அழைக்கப்படும் கோள் - சனி.
70.
பாறைத்துகள்கள், பனித்துகள்கள் மற்றும் தூசுக்களால் ஆன பல பெரிய வளையங்கள் இக்கோளைச் சுற்றிக் காணப்படுகின்ற கோள் - சனி.
71.
சனி கோள்களின் துணைக்கோள்-62.
72.
சனி கோளின் மிகப்பெரிய துணைக்கோள்-டைட்டன்
(Titan)
73.
சூரியக் குடும்பத்தில் காணப்படும் துணைக்கோள்களில் நைட்ரஜன் மற்றும் மீத்தேன் ஆகிய வாயுக்களைக் கொண்ட வளிமண்டலம் மற்றும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுகின்ற ஒரே துணைக்கோள்-டைட்டன்.
74.
சனிக் ஈர்ப்புத் திறன்
(Specific Gravity) - நீரை விடக் குறைவு.
75.
உருளும் கோள் - யுரேனஸ்
76.
வில்லியம் ஹெர்ஷல் என்ற வானியல் அறிஞரால் 1781
ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கோள்- யுரேனஸ்.
77.
தொலை நோக்கியால் கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோள்- யுரேனஸ்.
78.
மீத்தேன் வாயு இக்கோளில் உள்ளதால் பச்சை நிறமாகத் தோன்றும் கோள் - யுரேனஸ்.
79.
கிரேக்க விண் - கடவுளான யுரேனஸ் பெயரில் அழைக்கப்படுகிறது.
80.
தன் அச்சில் கடிகாரச் சுற்றில் சுற்றும் கோள் - யுரேனஸ்.
81.
தன் சுற்றுப்பாதையில் உருண்டோடுவது போன்று சூரியனைச் சுற்றி வருகிறும் கோள்-யுரேனஸ்.
82.
யுரேனஸின் துணைக்கோள்- 27.
83.
யுரேனஸின் 27 துணைக்கோள்களில் மிகப் பெரியது - டைட்டானியா
84.
குளிர்ந்த கோள் - நெப்டியூன்.
85.
சூரியக் குடும்பத்தில் மிகத் தொலைவில் அமைந்துள்ள கோள் - நெப்டியூன்.
86.
நெப்டியூனின் துணைக்கோள்- 14.
87.
14 - துணைக்கோள்களைக் கொண்ட நெப்டியூனின் மிகப் பெரிய துணைக்கோள் - டிரைட்டன் .
88.
கோளுக்கு அப்பால் தொலைவில் காணப்படும் சிறிய விண்பொருட்கள்- குறுங்கோள்கள்.
89.
சூரியக் குடும்பத்தில் காணப்படும் 5 - குறுங்கோள் - புளுட்டோ, செரஸ், ஈரிஸ், மேக்மேக், ஹெளமியா.
90.
கோள்களைச் சுற்றிவரும் விண்பொருட்கள்- துணைக்கோள்.
91.
நிலவு தன்னைத்தானே சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம், புவியைச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரம் - 27 நாள்கள் 6 மணி நேரம்.
92.
நிலவிற்கு - வளிமண்டலம் கிடையாது.
93.
நிலவு புவியிலிருந்து அமைந்துள்ளது தொலைவு - 3,84,400 கி. மீ.
94.
மனிதன் தரையிறங்கிய ஒரே விண்பொருள்- நிலவு.
95.
இந்தியா சந்திராயன்-1 விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு - 2008.
0 Comments
THANK FOR VISIT