வல்லினம் மிகா இடங்கள்
1. எழுவாய்ச் சொற்களை அடுத்து வல்லினம் மிகாது. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது- தம்பி படித்தான்.
2. அது, இது, எது ஆகிய சொற்களை அடுத்து வல்லினம் மிகாது - அது சென்றது, இது பெரியது.
3. எது, எவை என்னும் வினாப் பெயர்களின் பின் வல்லினம் மிகாது - எது கிடைத்தது?
4. பெயரெச்சம், எதிர்மறைப் பெயரெச்சம் ஆகியவற்றை அடுத்து வல்லினம் மிகாது-எழுதிய பாடல்.
5. இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து வரும் இடங்களில் (இரண்டாம் வேற்றுமைத்தொகை) வல்லினம் மிகாது- இலை பறித்தேன்.
6. உகரத்தில் முடியும் வினையெச்சங்கள் மென்தொடர்க் குற்றியலுகரமாகவோ, இடைத்தொடர்க் குற்றியலுகரமாகவோ இருந்தால் வல்லினம் மிகாது - செய்து பார்த்தாள்.
7. வினைத்தொகையில் வல்லினம் மிகாது – எழுதுபொருள், வளர்பிறை.
8. அப்படி, இப்படி, எப்படி ஆகிய சொற்களைத் தவிர, படி என முடியும் பிறசொற்களை அடுத்து வல்லினம் மிகாது.
9. உம்மைத்தொகையில் வல்லினம் மிகாது – தாய்தந்தை , இரவுபகல்.
10. மூன்றாம், ஆறாம் வேற்றுமை விரிகளில் வல்லினம் மிகாது, அண்ணனோடு போ,எனது சட்டை
11. விளித் தொடர்களில் வல்லினம் மிகாது- தந்தையே பாருங்கள்.
12. படி என்று முடியும் வினையெச்சத்தில் வல்லினம் மிகாது- வரும்படி சொன்னார்.
13. வியங்கோள் வினைமுற்றுத் தொடரில் வல்லினம் மிகாது- வாழ்க தமிழ் .
14. எட்டு, பத்து தவிர பிற எண்ணுப் பெயர்களுடன் புணரும் வல்லினம் மிகாது - ஒரு புத்தகம்.
15. அன்று, இன்று, என்று, ஆவது, அடா, அடி, போன்ற என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது- அன்று சொன்னார்.
16. அவ்வளவு, இவ்வளவு, எவ்வளவு, அத்தனை, இத்தனை, எத்தனை, அவ்வாறு, இவ்வாறு, எவ்வாறு, அத்தகைய, இத்தகைய, எத்தகைய, அப்போதைய, இப்போதைய, எப்போதைய, அப்படிப்பட்ட, இப்படிப்பட்ட, எப்படிப்பட்ட, நேற்றைய, இன்றைய, நாளைய ஆகிய சொற்களின் பின் வல்லினம் மிகாது.
17. மூன்று, ஐந்து, ஆறாம் வேற்றுமைத் தொடர்களில் வல்லினம் மிகாது - என்னோடு சேர்.
18. இரண்டாம், மூன்றாம், நான்காம், ஐந்தாம் வேற்றுமைத் தொகைகளில் வல்லினம் மிகாது- தமிழ் படி - (ஐ) - தமிழைப் படி.
19. சால, தவ, தட, குழ என்னும் உரிச்சொற்களைத் தவிர ஏனைய உரிச்சொற்களின் பின் வல்லினம் மிகாது - உறு பொருள் , கடி காவல் .
20. அடுக்குத் தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றில் வல்லினம் மிகாது- பார் பார் , சலசல .
21. கள் என்னும் அஃறிணைப் பன்மை விகுதி சேரும்போது வல்லினம் மிகாது.
0 Comments
THANK FOR VISIT