10TH- STD - இந்தியா காலநிலை மற்றும் இயற்கை தாவரங்கள்
1.
சமச்சீர் காலநிலை என்பது - பிரிட்டிஷ் காலநிலை.
2.
சமச்சீர் காலநிலை -அதிகவெப்பமுடையதாகவோ (அ) மிகக்குளிருடையதாக வோ இருக்காது.
3. இந்திய காலநிலையை நிர்ணயிக்கும் காரணிகள்:
1. அட்சம் பரவல்,
2. கடலிலிருந்து அமைந்துள்ள தொலைவு.
3. கடல் மட்டத்திலிருந்து உயரம்
4. பருவக்காற்று,
5. நிலத்தோற்றம்,
6. ஜெட் காற்றுகள்.
4.
இந்தியா 8° 4' வட அட்சம் முதல் 37°6' வட அட்சம் வரை அமைந்துள்ளது.
5.
23°30' வட அட்சமான கடகரேகை நாட்டை இரு சமபாகங்களாக பிரிக்கிறது.
6.
புவிப்பரப்பிலிருந்து உயரே செல்ல செல்ல வளிமண்டலத்தில் ஒவ்வொரு 1000 மீட்டர் உயரத்திற்கும் எத்தனை டிகிரி C என்ற அளவில் வெப்பநிலை குறைகிறது - 6.5°C.
7.
இதற்கு இயல்பு வெப்ப வீழ்ச்சி என்ற பெயர்.
8.
கொச்சி கடற்கரை பகுதியில் அமைந்திருப்பதால் அதன் வருடாந்திர சராசரி வெப்பம் -30°C அளவுக்கு மிகாமல் உள்ளது.
9.
புதுடில்லி கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் அமைந்துள்ள வருடாந்திர சராசரி வெப்பம் - 40°C க்கும் அதிகமாக உள்ளது.
10.
கடற்கரைக்கு அருகிலுள்ள கொல்கத்தாவில் மழைப்பொழிவு 119.செ.மீ ஆகவும் உள் பகுதியில் அமைந்திருக்கும் பிகானிரில் (இராஜஸ்தான்) 24 செ.மீக்கு குறைவான மழைப்பொழிவே பதிவாகின்றது.
11.
இந்தியாவின் கால நிலையை பாதிக்கும் மிக முக்கிய காரணி - பருவக்காற்று.
12.
ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள வளிமண்டலத்தின் தன்மையைக் குறிப்பது- வானிலை .
13.
ஒரு குறிப்பிட்ட பகுதியின் சுமார் 30-35 ஆண்டு சராசரி வானிலையைக் குறிப்பது-காலநிலை.
14.
எந்த மலைகள் மத்திய ஆசியாவில் இருந்து வீசும் கடும் குளிர் காற்றை தடுத்து இந்தியத் துணைக் கண்டத்தை வெப்பப் பகுதியாக வைத்திருக்கிறது - இமயமலைகள்.
15.
தென்மேற்கு பருவக்காற்று காலங்கள்:
1. மேற்கு தொடர்ச்சி மலைகளின் மேற்கு சரிவுப்பகுதி கன மழையைப் பெறுகிறது.
2. மகாராஷ்ட்ரா, கர்நாடகா தெலங்கானா ஆந்திரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டின் பெரும் பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலைகளின் மலைமறைவுப் பகுதி அல்லது காற்று மோதாப்பக்கத்தில் அமைந்திருப்பதால் மிகக்குறைந்த அளவு மழையைப் பெறுகின்றன.
16.
வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் குறுகிய பகுதிகளில் வேகமாக நகரும் காற்றுகள் - ஜெட்காற்றுகள்.
17.
மான்சூன் என்ற சொல் "மெளசிம்" என்ற அரபு சொல்லிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் - பருவகாலம் .
18.
அரபிக்கடலில் பருவ காலங்களுக்கு ஏற்ப மாறி வீசும் காற்றுகளை குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்பட்ட சொல்-மெளசிம்.
19.
கோடைக்காலத்தில் தென்மேற்கு திசையிலிருந்து வடகிழக்கு நோக்கியும் குளிர்காலத்தில் வடகிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு நோக்கியும் வீசும் காற்று- பருவக்காற்று.
20.
பூமியிலேயே வறண்ட பாலைவனம் - அடகாமா பாலைவனம்.
21.
பருவங்களுக்கு கேற்றவாறு தங்களது திசைகளை மாற்றிக்கொண்டு வீசும் கோள் காற்று-பருவக்காற்று.
22.
வானிலை நிபுணர்கள் இந்திய காலநிலையில் எத்தனை பரவலாக குறிப்பிடுகின்றனர் -4.
23.
பருவக்காற்றுக்காலம் :4.
1. குளிர்காலம் - ஜனவரி -பிப்ரவரி .
2. கோடைக்காலம் - மார்ச்- மே.
3. தென்மேற்கு பருவக்காற்று காலம் (அ) மழைக்காலம் - ஜுன் - செப்டம்பர்.
4. வடகிழக்கு பருவக் காற்று காலம் - அக்டோபர் -டிசம்பர்.
24.
குளிர்காலத்தில் சூரியனின் செங்குத்து கதிர்கள் எதன் மீது செங்குத்தாக விழுகிறது- மகர ரேகை.
25.
முன் -பருவக்காற்றுக்காலம் அல்லது கோடைக்காலம். இப்பருவத்தில் சூரியனின் செங்குத்துக் கதிர்கள் எதன் மீது விழுகிறது - இந்திய தீபகற்ம்.
26.
மாஞ்சாரல் (Mango shower) என்ற இடியுடன் கூடிய மழையானது எந்த கடற்கரை பகுதிகளில் விளையும் "மாங்காய்கள்" விரைவில் முதிர்வதற்கு உதவுகிறது- கேரளா,கர்நாடகா.
27.
ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் வடமேற்கு திசையிலிருந்து வீசும் தலக்காற்று - நார்வெஸ்டர் அல்லது கால்பைசாகி.
28.
உலகளாவிய காலநிலை நிகழ்வான எல்நினோ எந்த காலத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது - தென்மேற்கு பருவக்காற்று காலம்.
29.
தென்மேற்கு பருவக்காற்று தொடங்குவதற்கு முன் வட இந்திய வெப்பநிலை எத்தனை ° C வரை உயர்கிறது - 46°C.
30.
தென்மேற்கு பருவக்காற்றின் இடி மற்றும் மின்னலுடன் கூடிய துவக்கம் (தென் இந்தியாவில்) - பருவமழை வெடிப்பு.
31.
உலகில் மிக அதிக அளவு மழைப்பெறும் பகுதி - மெளசின்ராம் .1141 செ.மீ. மேகாலயா.
32.
இந்தியாவின் மொத்த மழைப்பொழிவு 75% மழைபொழிவு ஆனது எந்த பருவகாற்று காலத்தில் கிடைக்கிறது - தென்மேற்கு பருவகாற்று காலம்.
33.
தென்மேற்கு பருவக்காற்று எந்த மாத இறுதியில் பின்னடைகிறது-செப்டம்பர்.
34.
தென்மேற்கு பருவக்காற்று பின்னடையும் பருவக்காற்றாக நிலப்பகுதியிலிருந்து எந்த கடலை நோக்கி வீசுகிறது - வங்காள விரிகுடா.
35.
பூமி சுழல்வதால் ஏற்படும் விசையின் (கொரியாலிஸ்) காரணமாக காற்றின் திசை மாற்றப்பட்டு வடகிழக்கிலிருந்து வீசுகிறது இக்காற்று - வடகிழக்கு பருவக்காற்று.
36.
இந்தியாவில் ஆண்டு சராசரி மழையளவு - 118 செ.மீ.
37.
ஆந்திரா ஹரியனா, பஞ்சாப், மாநிலத்திற்கு மாநில விலங்கு-கலைமான்.
38.
மொத்த காடுகள் மற்றும் மரங்கள் - 8,02,088 ச.கி.மீ.
39.
புவி பரப்பின் சதவிகிதம் - 24.39%.
40.
2017 - மொத்த வனப்பரப்பு -7,08,273 ச.கி.மீ.
41.
புவி பரப்பின் சதவீதம் - 21.54%.
42.
மரம் சூழ்ந்துள்ள பரப்பளவு- 93,815 ச.கி.மீ.
43.
நீலகிரி வரையாடு எண்ணிக்கை குறைவதற்கான காரணம்- தொடர்ச்சியான வேட்டையாடுதல் ,யுகிலிபட்ஸ் சாகுபடி பண்ணுதல்.
44.
இயற்கை தாவரங்களின் பரவல் மற்றும் வளர்ச்சியை கட்டுப்படுத்துவது - காலநிலை, மண் வகைகள் , மழைப்பொழிவு, நிலத்தோற்றங்கள்.
45.
அயன மண்டல பசுமை மாறாக் காடுகள் :
1. ஆண்டு மழை பொழிவு -200 செ.மீ மேலும் .
2. வெப்பநிலை 22 Cஅதிகமாகவும் , ஈரப்பதம் 70% மேலும் உள்ள பகுதிகளில் இவ்வகை காடுகள் காணப்படுகின்றன.
3. கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, அந்தமான் நிக்கோபார் ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.
4. இரப்பர், எபனி, ரோஸ் மரம், தென்னை, மூங்கில், சின்கோனா சிடார் போன்ற மரங்கள் இங்கு காணப்படுகின்றன.
46.
அயன மண்டல இலையுதிர் காடுகள்-
1. ஆண்டு சராசரி மழை பொழிவு - 100 செ.மீ முதல் 200 செ.மீ வரை.
2. ஆண்டு சராசரி வெப்பநிலை- 27 C.
3. சராசரி ஈரப்பதம் 60% - 70% வரை.
4. பஞ்சாப், அசாம், வட சமவெளிகள், ஹரியானா, ஆந்திரா, கேரளா தமிழ்நாடு ஆகிய பகுதிகளில் காணப்படுகின்றன.
5. தேக்கு மற்றும் சால் மிக முக்கிய மரங்களாகும். சந்தனம், ரோஸ் மரம், குசம், மாகு,, பாலாங், ஆம்லா, மூங்கில், சிசம், படாக்.
6. இக்காடுகள் நறுமண திரவியங்கள், வார்னீஷ், சந்தன எண்ணெய்,வாசனை திரவியங்களை அளிக்கின்றன.
47.
அயன மண்டல வறண்ட காடுகள்.
1. ஆண்டு மழை பொழிவு 50 செ.மீ முதல் 100 செ.மீ வரை,
2. அயன மண்டல வறண்ட காடுகள் - ஒரு இடைநிலை வகை காடுகள்.
3. அயன மண்டல வறண்ட காடுகள் காணப்படுகின்ற பகுதி - கிழக்கு ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தின் மேற்கு பகுதி , தமிழ்நாட்டின் கிழக்குப் பகுதி.
4. முக்கிய மரவகைகள் - இலுப்பை , ஆலமரம், ஆவாரம் பூ மரம், பலா, மஞ்சக்கடம்பு கருவேலம் ,மூங்கில்.
48.
மலைக் காடுகள்:
1. உயரம் மற்றும் மழையளவின் அடிப்படையில் இக்காடுகள் மேற்கு இமயமலைக்காடுகள் மற்றும்கிழக்கு இமயமலைக்காடுகள் என பிரிக்கப்பட்டுள்ளன:
2. கிழக்கு இமயமலை காடுகள் - வடகிழக்கு இந்திய மாநிலங்களில் உள்ள கிழக்கு இமயமலைச் சரிவுகள்.
3. மேற்கு இமயமலை காடுகள் - ஜம்மு-காஷ்மீர், இமாச்சல் பிரதேசம் உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் மிதமான மழை பொழிவு உள்ள பகுதிகளில் இக்காடுகள் காணப்படுகின்றன.
49.
2400 -மீ மேல் உள்ள இமயமலைகளின் உயரமான பகுதியில் காணப்படும் காடுகள்: அல்பைன் காடுகள்.
50.
அல்பைன் காடுகளில் காணப்படும் முக்கிய மர வகைகள்- ஓக், சில்வர், பின், பைன், ஜுனிபர்.
51.
டெல்டாக்கள், பொங்கு முகங்கள், கடற்கழிமுகப் பகுதிகளில் காணப்படும் காடுகள் - ஓத அலைக் காடுகள். சதுப்பு நில காடுகள் / டெல்டா காடுகள்.
52.
உலகில் மிகப் பெரிய சதுப்பு நில காடுகள் காணப்படும் பகுதி - கங்கை - பிரம்மபுத்திரா டெல்டா.
53.
மாங்குரோவ் காடுகள் என்று அழைக்கப்படுவது - ஓத அலைக் காடுகள்.
54.
கடற்கரையோரக் காடுகள் காணப்படுகின்ற மரம் - சவுக்கு, பனை, தென்னை.
55.
கடற்கரையோரக் காடுகள் காணப்படுகின்ற பகுதி - கோரளா மற்றும் கோவா.
56.
கங்கை , யமுனை நதி பாயும் பகுதிகளில் குறிப்பாக காதர் பகுதிகளில் காணப்படும் காடுகள் -நதி வனப்பகுதி அல்லது ஆற்றங்கரை காடுகள்.
57. 200 .செ.மீ அதிகமான மழை பொழிவை பெறும் இடங்கள்:
1. மேற்கு கடற்கரை
2. அசாம்
3. மேகாலயாவின் தென்பகுதி
4. திரிபுரா
5. நாகாலாந்து
6. அருணாச்சல பிரதேசம்
58. 100 - செ.மீ குறைவான மழை பொழிவை பெறும் இடங்கள் :
1. ராஜஸ்தான் .
2. பஞ்சாப்.
3. ஹரியானா.
4. உத்தரப்பிரதேசம் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதி.
5. மத்திய பிரதேசத்தின் மேற்கு பகுதி.
6. மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு பகுதி.
7. தக்காண பீடபூமி பகுதி .
8. தமிழக கடற்கரையில் ஒரு குறுகிய பகுதி
59.
இமயமலையில் 2,400 மீட்டர் உயரத்திற்கு மேல் காணப்படும் காடுகள் - அல்பைன் காடுகள்.
60.
நிலம் மற்றும் கடலோர சுற்றுச் சூழலைப் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட ஒன்று - உயிர்க்கோள பெட்டகம்.
61.
IBWL இந்திய வனவிலங்கு வாரியம் நிறுவப்பட்ட ஆண்டு - 1952
62.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றிய ஆண்டு-1972 .
63.
எந்த ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் சபையின் உயிரியல் பன்மை மரபு என்ற கருத்தரங்கில் உயிரியல் வளங்களைப் பயன்படுத்தும் இறையாண்மை அங்கீகரிக்கப்பட்டது - 1992.
64.
இந்தியாவில் எத்தனை தேசிய பூங்காக்கள் உள்ளன -102.
65.
இந்தியாவில் எத்தனை தேசிய பூங்காக்கள் சரணாலயங்கள் உள்ளன-515.
66.
புலிகள் பாதுகாப்பு திட்டம் தொடங்கபட்ட ஆண்டு -1973.
67.
வனப்பரப்பு அதிகரித்துள்ள முதல் ஐந்து மாநிலங்கள் :
1. ஆந்திர பிரதேசம் - 2,141ச.கி.மீ.
2. கர்நாடகா -1,101 ச.கி.மீ.
3. கேரளா -1,043 ச.கி.மீ.
4. ஓடிசா - 885 ச.கி.மீ.
5. தெலுங்கானா - 565 ச.கி.மீ.
68.
வனப்பரப்பு குறைந்துள்ள முதல் ஐந்து மாநிலங்கள் :
1. மிசோரம் - 531 ச.கி.மீ.
2. நாகாலாந்து - 450 ச.கி.மீ.
3. அருணாச்சலப் பிரதேசம் -190 ச.கி.மீ
4. திரிபுரா -164 ச.கி.மீ.
5. மேகாலயா -116 ச.கி.மீ.
69.
உலகிலுள்ள 1.5 மில்லியன் வகையான வனவிலங்கு உயிரினங்களில் இந்தியாவில் மட்டும் எத்தனை வகையான வனவிலங்குகள் உள்ளன - 81251.
70. இந்தியாவின் வன விலங்குகள்:
1. முதுகெலும்பற்ற உயிரினங்கள் -6500.
2. மெல்லுடலிகள்-5000.
3. மீன்கள்-2546.
4. பறவையினம்-1228.
5. பாலூட்டி வகைகள்- 458.
6. ஊர்வன வகைகள்- 446.
7. இருவாழ்விகள் - 204.
8. சிறுத்தைகள் வகை- 4.
9. பூச்சி வகைகள் - 6000
71.
இந்தியா எத்தனை உயிர்க்கோள காப்பகங்களை ஏற்படுத்தியுள்ளது -18.
72. இந்தியாவில் உள்ள 18 உயிர்க்கோள காப்பகங்களில் எத்தனை காப்பகங்கள் யுனெஸ்கோவின் (UNESCO) மனித மற்றும் உயிர்கோள காப்பக திட்டத்தின் கீழ் செயல்படுகின்றன -11.
1. மன்னார் வளைகுடா.
2. நந்தா தேவி.
3. நீலகிரி.
4. நாக்ரேக்.
5. பச்மாரி .
6. சிம்லிபால்.
7. சுந்தரவனம் .
8. அகத்திய மலை.
9. பெரிய நிக்கோபார்.
10. கஞ்சன் ஜங்கா .
11. அமர்கண்டாக்.
73. உயிர்க்கோளக் காப்பகங்கள் - 18.
1. அமர்கண்டாக் - மத்திய பிரதேசம்.
2. அகத்தியமலை - கேரளா.
3. திப்ரு செய்கொவா-அசாம்.
4. திகேங் திபங் - அருணாச்சல பிரதேசம்.
5. பெரிய நிக்கோபர் -அந்தமான் - நிக்கோபர் தீவுகள்.
6. மன்னார் வளைகுடா- தமிழ்நாடு.
7. கட்ச் - குஜராத்.
8. கஞ்சன் ஜங்கா- சிக்கிம்.
9. மானாஸ்-அசாம்.
10. நந்தா தேவி - உத்தரகாண்ட் .
11. நீலகிரி- தமிழ்நாடு.
12. நாக்ரெக் - மேகாலயா.
13. பச்மாரி - மத்திய பிரதேசம்.
14. சிம்லிபால் -ஒடிசா.
15. சுந்தரவனம் - மேற்கு வங்கம்.
16. குளிர் பாலைவனம் - இமாச்சல் பிரதேசம்.
17. சேஷாசலம் குன்றுகள் - ஆந்திர பிரதேசம்.
18. பன்னா - மத்திய பிரதேசம்.
74.
வானிலையியல் ஒரு - சமூக அறிவியலாகும்.
75.
நாம் பருத்தி ஆடைகளை எந்த காலத்தில் அணிகிறோம்-கோடைக்காலம்.
76.
மேற்கத்திய இடையூறுகளால் மழைப்பொழிவை பெரும்பகுதி -பஞ்சாப்.
77.
கேரளா மற்றும் கர்நாடக கடற்கரைப் பகுதிகளில் விளையும் மாங்காய்கள் விரைவில் முதிர்வதற்கு உதவும் காற்றுகள் - மாஞ்சாரல்.
78.
ஒரேஅளவுமழைபெறும் இடங்களை இணைக்கும் கோடு - சம மழைக்கோடுகள்.
79.
இந்தியாவின் காலநிலை என்ன என்று பெயரிடப்பட்டுள்ளது - அயன மண்டல பருவகாற்று காலநிலை.
80.
சேஷாசலம் உயிர்க்கோள பெட்டகம் அமைந்துள்ள மாநிலம்-ஆந்திரப் பிரதேசம்.
0 Comments
THANK FOR VISIT