திருமணபந்தம் முறிவைக் கொடுத்திடும் ஜாதக அமைப்பு

பெண்களுக்கென்று ஜாதகத்தில் தனி அமைப்புக்கள் உள்ளனவா?

ஏன் இல்லாமல்? பெண்களுக்கென்று உடல் அமைப்பு, கால் அமைப்புக்கள் மாறுபடும்போது, ஜாதகத்தில் மட்டும் சில தனி அமைப்புக்கள்  இல்லாமல் போகுமா என்ன?

கைம்பெண் நிலைமையைப் பற்றி ஜோதிடம் என்ன சொல்கிறது?

கைம்பெண் என்றால் என்னவென்று தெரியுமல்லவா? கணவனை இழந்த பெண். விதவை. widow அதாவது கணவனை இழக்கும் நிலை ஒரு பெண்ணுக்கு எவ்வாறு ஏற்படுகிறது?

1.   விதவையோகத்தைக் குறிக்கும் செவ்வாய் ஏழாம் வீட்டில் இருந்து, அது அவருக்குப் பகை வீடு என்னும் நிலைமை விதவையோகத்தைக் குறிக்கும்

2.   விதவையோகத்தைக் குறிக்கும் ஏழில் அமர்ந்திருக்கும் கேதுவும் அதே காரியத்தைச் செய்யும்

3.   விதவையோகத்தைக் குறிக்கும் வலுவிழந்து, பாபகர்த்தாரி யோகத்துடன் ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரனும் அந்த வேலையைச் செய்யும்

4.   விதவையோகத்தைக் குறிக்கும் பெண்களுக்கு, சனிதான் கணவனுக்கான காரகன் என்கிறார். அத்துடன் பெண்ணின் ஜாதகத்தில்    சனீஷ்வரன் செவ்வாய் அல்லது கேதுவுடன் சேர்ந்து ஏழில் இருந்தால், பெண் சீக்கிரம் விதவையாகிவிடுவாள் என்கிறார்.

5.   பெண்ணிற்கு மாங்கல்ய தோஷம்.பெண்களின் ஜாதகத்தில் எட்டாம் வீடு மாங்கல்ய ஸ்தானம். அந்த  ஸ்தானத்தை, அதாவது அந்த வீட்டை செவ்வாயோ அல்லது கேதுவோ பார்த்தால் பெண்ணிற்கு மாங்கல்ய தோஷம்.

ஜாதகியின் இரண்டாம் வீட்டில் சுபக்கிரகங்கள் இருந்தால், அது அவளை விதவையாகாமல் காப்பாற்றிவிடும். அதுபோல மேற்கண்ட  வீடுகளை குரு பகவான் தன்னுடைய நேரடிப் பார்வையில் வைத்திருந்தாலும், அந்த அமைப்பு ஜாதகியைக் காப்பாற்றும்

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.