திரிதியை திதி பலன்கள், திரிதியை திதியில் செய்ய வேண்டியவை

திரிதியை திதி

திரிதியை என்பது வடமொழி சொல்லாகும். திரிதியை என்றால் மூன்று என்று பொருள். இது அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் மூன்றாவது நாள் ஆகும். அமாவாசைக்கு அடுத்து வரும் திரிதியை சுக்கில பட்ச திருதியை என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் திரிதியை கிருஷ்ண பட்ச திரிதியை என்றும் அழைக்கபடுகிறது.

திரிதியை திதியின் சிறப்புகள்

சித்திரை மாதத்தில் வரும் திருதியை திதியானது, அதிக முக்கியத்துவம் பெறுகிறது. ஏனென்றால் சித்திரை மாத வளர்பிறையில் வரும் திருதியை திதியைதான் நாம்அட்சய திருதியைஎன்ற பெயரில் கொண்டாடுகிறோம்.

அட்சயம்என்றால்தேயாதது’, ‘வளர்தல்என்று பொருள். அதனால்தான் எல்லா நலன்களையும் குறையில்லாமல் வாரி கொடுக்கும் இந்தத் திருதியை, ‘அட்சய திருதியைஎன்று பெயர் பெற்றது.

மகாபாரத காலத்தில் பஞ்ச பாண்டவர்கள் வனவாசத்தை மேற்கொண்டபோது அவர்கள் உணவுக்கு கஷ்டப்படாமல் இருக்க பகவான் கண்ணன் மூலம் சூரிய தேவனால் அட்சய பாத்திரம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அந்த பாத்திரத்தில் இருந்து தேவையான உணவை, அள்ள அள்ள குறையாமல் அவர்கள் பெற்று உண்டு வந்தனர். இந்த அட்சய பாத்திரமானது, பாண்டவர்களுக்கு ஒரு அட்சய திருதியை நாளில் தான் கிடைத்தது.

திரிதியை திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

உடையவர்கள், எண்ணியதை முடிப்பவர்கள், கீர்த்தி உடையவர்கள், தனவான், பயந்த சுபாவம் உள்ளவர்கள், பராக்கிரமம் உடையவன், தூய்மையானவர்கள் திருக்கோவில் வேலைகளை விருப்பமுடன் செய்பவர்கள்.

திரிதியை திதியில் என்னென்ன செய்யலாம்

இந்த திருதியை திதியின் அதிதேவதை கெளரிமாதா எனப்படும் பராசக்தி ஆவார். இந்நாளில் சிகை திருத்தம் செய்தல், முகசவரம், நகம் வெட்டுதல் முதலியன நன்மை தரும். மேலும் பிறந்த குழந்தைக்கு முதல் முதலாக உணவு ஊட்டி பழக்கலாம். சங்கீதம் மற்றும் இசை கற்றுக்கொள்ளலாம். கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு செய்யலாம். சிற்பம் செதுக்கும் காரியங்களில் ஈடுபடலாம். அழகு சம்மந்தமான வேலைகளில் ஈடுபடலாம் அல்லது கற்றுக் கொள்ளலாம். மேலும் வீட்டில் அனைத்து வகையான சுப காரியங்களையும் செய்யலாம்.

 

திரிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள்

திரிதியை திதிக்கான திதி சூன்ய ராசிகள்  : மகரம் ,சிம்மம்

 

திரிதியை திதிக்கான தெய்வங்கள்

திரிதியை திதிக்கான வளர்பிறை தெய்வங்கள் : சிவன், கௌரி.

 

திரிதியை திதிக்கான தேய்பிறை தெய்வங்கள் : குபேரன், சந்திரன்.