10TH- STD - தேசியம்: காந்திய காலகட்டம் -

1.    மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்தது இந்தியா திரும்பிய ஆண்டு-1915.

2.    காந்தி பிறந்த ஆண்டு -  1869 அக்டோபர் 2 - குஜராத் போர்பந்தர்.

3.    காந்தி தந்தை - காபா காந்தி.

4.    காந்தி தாயார்- புத்லிபாய்.

5.    போர்பந்தரின் திவானாகவும் பின்னர் ராஜ்கோட்டின் திவானாகவும் பொறுப்பு வகித்தவர் - காபா காந்தி. (காந்தி தந்தை).

6.    காந்தி  சட்டம் பயில்வதற்காக இங்கிலாந்துக்குக் கடல் பயணம் மேற்கொண்ட ஆண்டு1888.

7.    காந்தி வழக்கறிஞர் பட்டம்பெற்ற பின்பு இந்தியாவுக்குத் திரும்பிய ஆண்டு -1891,-ஜூன்.

8.    காந்தி டர்பனில் இருந்து பிரிட்டோரியாவுக்கு ரயில்பயணம் மேற்கொண்டபோது எந்த ரயில் நிலையத்தில் முதல்வகுப்புப் பெட்டியிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்பீட்டர் மாரிட்ஸ்பர்க்.

9.    டிரான்ஸ்வாலில் உள்ள இந்தியர்களின் கூட்டத்தைக் கூட்டி அவர்கள் தங்களுடைய குறைகளை உறுதியுடன் வெளிப்படுத்தி களைவதற்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தவேண்டும் என்று அறிவுறுத்தியவர்- காந்தியடிகள்

10.   டிரான்ஸ்வாலில் வசித்த இந்தியர்கள் தலை வரியாக எத்தனை பவுண்டுகளை செலுத்த வேண்டியிருந்தது - 3 பவுண்டுகள்.

11.   காந்தியடிகளுக்கு யாருடைய எழுத்துக்களுடன் அறிமுகம் கிடைத்தது -டால்ஸ்டாய், ஜான் ரஸ்கின்.

12.   கடவுளின் அரசாங்கம் உன்னில் உள்ளது The Kingdom of Within You நூலின் ஆசிரியர் - டால்ஸ்டாய்.

13.   அண்டு திஸ் லாஸ்ட் Undo this Last நூலின் ஆசிரியர் - ஜான் ரஸ்கின்.

14.   சட்டமறுப்பு Cvil Disobedience நூலின் ஆசிரியர் - தாரோ.

15.   காந்தி ஃபீனிக்ஸ் குடியிருப்பு நிறுவிய ஆண்டு -1905.

16.   காந்தி டால்ஸ்டாய் பண்ணை நிறுவிய ஆண்டு - 1910.

17.   ஒப்பந்த தொழிலாளர்கள் மீது விதிக்கப்பட்ட தலைவரி எந்த ஒப்பந்தத்தின்படி ரத்து செய்யப்பட்டது - ஸ்மட்ஸ்-காந்தி.

18.   காந்தி அரசியல் குரு -  கோபால கிருஷ்ண கோகலே.

19.   தீன் காதியா முறை பின்பற்றப்பட்ட இடம் - பிகாரில் உள்ள - சம்பரான்.

20.   இந்திய விவசாயிகள் தங்களின் நிலத்தின் எத்தனை பங்கு பகுதியில் அவுரி (இண்டிகோ) பயிரிட வேண்டும் என்று ஐரோப்பியப் பண்ணையாளர்கள் கட்டாயப்படுத்தினர்3/20 பங்கு

21.   சம்பரானுக்கு வருகை புரியுமாறு காந்தியடிகளைக் கேட்டுக்கொண்ட விவசாயி - ராஜ்குமார் சுக்லா.

22.   நாடு முதன்முதலாக ஒத்துழையாமை இயக்கச் செயல்முறைப் பாடத்தைக் கற்றுக்கொண்டதாக தெரிவித்தவர்காந்தியடிகள்.

23.   அகமதாபாத் மில் வேலைநிறுத்தம் நடந்த ஆண்டு - 1918.

24.   கேதா சத்தியாகிரகம்   நடந்த ஆண்டு1918.

25.   பிடிஉத்தரவு இல்லாமல் கைது நடவடிக்கை, விசாரணை இல்லாமல் சிறையிலடைப்பது என காவல் துறையினருக்கு அதிகாரங்களை வழங்கிய  சட்டம் - ரெளலட் சட்டம்.

26.   ரெளலட் சட்டத்தை கருப்புச் சட்டம் என்று அழைத்தவர்காந்தி.

27.   காந்தி ரெளலட் சட்டத்தை எதிர்த்து நாடு தழுவிய சத்தியாகிரகப் போராட்டத்துக் அழைப்பு விடுத்த ஆண்டு - 1919 - ஏப்ரல் 6.

28.   டாக்டர். சைஃபுதீன் கிச்லு, டாக்டர். சத்யபால் இரண்டு முக்கிய உள்ளூர் தலைவர்கள் போராட்டத்திற்கு தலைமையேற்றதால்  கைது செய்யப்பட்ட நாள்-1919 - ஏப்ரல் -9 .

29.   பீரங்கி வண்டி,ஆயுதமேந்திய வீரர்களுடன் சுற்றி வளைத்தவர் - ஜெனரல் ரெஜினால்டு டயர் . எந்தவித முன்னெச்சரிக்கையுமின்றி சுடத்தொடங்கினார்கள்.

30.   துப்பாக்கிச்சூட்டில் எத்தனை பேர் கொல்லப்பட்டனர்- 379.

31.   அதிகாரபூர்வமற்ற தகவல்கள் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கையை - 1000 அதிகம் என்று தெரிவித்தது

32.   படைத்துறைச்சட்டம் அறிவிக்கப்பட்டு அமிர்த்சாஸ், பஞ்சாப் மக்கள் சவுக்கடி கொடுத்கப்பட்டு தெருக்களில் தவழவிடப்பட்டார்கள்.

33.   ஜாலியன் வாலாபாக் படுகொலை வீரத்திருமகன் (knighthood) என்ற அரசுப் பட்டத்தை திருப்பிக் கொடுத்தவர் - இரபீந்திரநாத் தாகூர்.

34.   ஜாலியன் வாலாபாக் படுகொலை காந்தி திருப்பிக்கொடுத்த பதக்கம் - கெய்சர்--ஹிந்த்.

35.   யாருடைய தலைமையில் கிலாபத் இயக்கம நடந்தது -  மெளலானா முகமது அலி மௌலானா செளகத் அலி .

36.   அலி சகோதரர்கள் - மெளலானா முகமது அலி, மௌலானா செளகத் அலி .

37.   1919 -நவம்பர் மாதம் தில்லியில் நடைபெற்ற அகில இந்திய கிலாபத் இயக்க மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்காந்தி.

38.   அல்லாஹு அக்பர், வந்தே மாதரம், இந்து-முஸ்லிம் வாழ்க ஆகிய மூன்று தேசிய முழக்கங்களை முன்மொழிந்தவர் -செளகத் அலி.

39.   எந்த ஆண்டு அலகாபாத்தில் கூடிய கிலாபத் குழுவின் கூட்டம்  காந்தியடிகளின் அகிம்சை மற்றும் ஓத்துழையாமை இயக்கத்தை ஏற்றுக்கொண்டது- 1920 ஜூன் 9.

40.   ஒத்துழையாமை இயக்கம் எப்போது தொடங்கியது - 1920 ஆகஸ்டு முதல் நாள்.

41.   கல்கத்தாவில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கத்துக்கு அனுமதி வழங்கிய ஆண்டு - 1920 செப்டம்பர்.

42.   1920 டிசம்பர் நாக்பூரில் நடந்த அமர்வில் ஒத்துழையாமை இயக்கத் தீர்மானம் யாருடைய தலைமையில் நிறைவேற்றப்பட்டது-  சேலம் C. விஜயராகவாச்சாரியார்.

43.   பர்தோலியில் வரிகொடா இயக்க பிரச்சாரத்தை காந்தி அறிவித்த ஆண்டு- 1922 -பிப்ரவரி.

44.   எந்த நிகழ்வைத் தொடர்ந்து காந்தியடிகள் உடனடியாக வரிகொடா இயக்கத்தைத் திரும்பப் பெற்றார் -  செளரி சௌளரா. (உத்திரப்பிரதேசம் கோராக்பூர்).

45.   செளரி செளரா சம்பவம் நடைபெற்ற ஆண்டு - 1922 பிப்ரவரி 5.

46.   அகிம்சை,ஒத்துழையாமை காரணங்களால் இயக்கம் தோல்வி காணவில்லை மாறாக போதுமான எண்ணிக்கையில் அவற்றில் பயிற்சி பெற்ற தலைவர்களும் தொண்டர்களும் இல்லாமல் போனதே காரணம் என்று நம்பியவர்காந்தி.

47.   1923 ஜனவரி முதல் நாள் சுயராஜ்ஜியக் கட்சியை தொடங்கியவர்கள் - மோதிலால் நேரு, சி.ஆர். தாஸ்.

48.   சட்டப்பேரவைகளில் இருந்து சுயராஜ்ஜிய கட்சி விலகிக் கொண்ட ஆண்டு - 1926.

49.   இரட்டை ஆட்சி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு -1919.

50.   மாகாண அரசின் அதிகாரங்கள்  - ஒதுக்கப்பட்ட துறைகள், மாற்றப்பட்ட துறைகள்  என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டது .

51.   மாகாண சுயாட்சி அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு - 1935.

52.   செளரி செளரா நிகழ்வுக்குப் பிறகு ஆர்வலர்களும் மக்களும் அகிம்சை போராட்டம் குறித்த பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என்று உணர்ந்தவர்-  காந்தி.

53.   உங்கள் மாவட்டங்களுக்குச் செல்லுங்கள், கதர், இந்து-முஸ்லிம் ஒற்றுமை, தீண்டாமை ஒழிப்பு ஆகியன பற்றிய செய்திகளைப் பரப்புங்கள். இளைஞர்களை ஒன்றுதிரட்டி அவர்களை சுயராஜ்யத்தின் உண்மையான வீரர்களாக உருமாற்றுங்கள் என்று கூறியவர்காந்தி.

54.   இந்திய அரசியல் சாசன சீர்திருத்தங்களுக்கான இந்திய சட்டபூர்வ ஆணையத்தை நியமிப்பதாக ஆங்கிலேய அரசு அறிவித்த நாள் - 1927 நவம்பர் 8.

55.   சர் ஜான் சைமன் தலைமையிலான சைமன் குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள்- 7.

56.   சைமனே திரும்பிப் போ ஆர்ப்பாட்டத்தில் மிக மோசமாக காயமடைந்து உயிரிழந்தவர்-  லாலா லஜ்பதி ராய்.

57.   இந்தியாவுக்கு அரசியல் சாசனம் உருவாக்க அனைத்துக் கட்சி மாநாடு நடைபெற்ற ஆண்டு- 1928.

58.   1924 வகுப்புவாத அரசியலில் ஈடுபட்ட இந்துக்கள் ,முஸ்லிம்களின் இதயங்களை ர்க்கும் வகையில் காந்தி எத்தனை நாள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்-21 நாள்.

59.   அரசியல் சாசன வரைவுக்காக திட்டம் வகுக்க  யாருடைய தலைமையிலான கமிட்டி அமைக்கப்பட்டது - மோதிலால் நேரு .

60.   அந்தக் கமிட்டியின் அறிக்கை -  நேரு அறிக்கை என்று அழைக்கப்பட்டது.

61.   மத்திய சட்டப்பேரவையில் இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து சட்டதிருத்தத்தை கொண்டு வந்தார்- முகமது அலி ஜின்னா.

62.   மூன்றில் ஒரு பங்கு இடங்கள் முஸ்லிம்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று கூறியவர்-  முகமது அலி ஜின்னா.

63.   14 அம்சங்கள் தீர்மானத்தை மொழிந்தவர்- முகமது அலி ஜின்னா.

64.   இந்து-முஸ்லிம் ஒற்றுமையின் தூதர் - முகமது அலி ஜின்னா.

65.   1929 டிசம்பர் லாகூரில் யாருடைய தலைமையில் காங்கிரஸ் அமர்வு நடந்தது -  ஜவகர்லால் நேரு.

66.   விடுதலை நாளாக அறிவிக்கப்பட்ட நாள் - 1930 ஜனவரி 26.

67.   78 பேர்களுடன் காந்தி சபர்மதி ஆசிரமத்திலிருந்து தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரையைத் தொடங்கிய ஆண்டு - 1930 மார்ச் 12.

68.   காந்தி தனது 61 ஆவது வயதில் 24 நாட்களில் 241 மைல் தொலைவு யாத்திரையாக நடந்து சென்று தண்டி கடற்கரையை அடைந்தார் - 1930 ஏப்ரல் 5.

69.   தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளியில் இருந்து வேதாரண்யம் வரை யாத்திரையை மேற்கொண்டவர் - சி. ராஜாஜி.

70.   வடமேற்கு எல்லை மாகாணத்தில் சத்தியாகிரக இயக்கத்திற்குத் தலைமை ஏற்றவர் - கான் அப்துல் கஃபார்கான்.

71.   செஞ்சட்டைகள் என்றழைக்கப்பட்ட  குடை கிட்மட்கர் இயக்கத்தை நடத்தியவர் - கான் அப்துல் கஃபார்கான்

72.   ஆங்கிலேயர்கள் முதலாவது வனச்சட்டத்தை நிறைவேற்றிய ஆண்டு- 1865.

73.   எந்த ஆண்டின் இந்திய வனங்கள் சட்டத்தின் படி வனங்களின் உரிமை அரசிடம் இருந்தது -  1878.

74.   பழங்குடியினர் பயன்படுத்தியதை தடை செய்யப்பட்டது - சுழற்சி முறை விவசாயம்.

75.   பழங்குடியினர் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்களுக்கு மிக முக்கிய ஆதாரமாக ராம்பாவில் யாருடைய தலைமையிலான ஆர்ப்பாட்டத்தைக் குறிப்பிடலாம் - அல்லூரி சீதாராம ராஜு

76.   லண்டனில் முதலாவது வட்ட மேசை மாநாடு நடந்தத ஆண்டு  நடந்தத -1930 நவம்பர்.

77.   மாகாண சுயாட்சியுடன் கூடிய மத்திய அரசு பற்றிய யோசனையை அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் - ராம்சே மெக்டொனால்டு.

78.   காந்தி-இர்வின் ஒப்பந்தம் ஏற்பட்ட ஆண்டு - 1931 - மார்ச் 5.

79.   இரண்டாவது வட்டமேசை மாநாடு நடைபெற்ற ஆண்டு - 1931 செப்டம்பர் 7.

80.   படைத்துறைச் சட்டம் அமல்படுத்தப்பட்டு காந்தியடிகள் கைது செய்யப்பட்ட நாள்-1932 ஜனவரி 4.

81.   மூன்றாவது வட்டமேசை மாநாடு -1932 நவம்பர் 17 முதல் டிசம்பர் 24 வரை.

82.   ராம்சே மெக்டொனால்டு வகுப்புவாரி ஓதுக்கீட்டை அறிவித்த ஆண்டு- 1932 ஆகஸ்டு -16.

83.   ஒடுக்கப்பட்ட வகுப்பினரை சிறுபான்மையினர் பட்டியலில் சேர்ப்பதை எதிர்த்தவர்காந்தி.

84.   காந்தி ஓடுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் ஒதுக்கீட்டிற்கு எதிராக சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கும் போராட்டத்தை தொடங்கிய ஆண்டு-1932 செப்டம்பர் 20.

85.   தீவிரப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு காந்தியடிகள் மற்றும் அம்பேத்கர் இடையே ஒப்பந்தம்  - பூனா ஒப்பந்தம்.

86.   பூனா ஒப்பந்தபடி ஒடுக்கப்பட்ட வகுப்பினருக்கான இடங்கள்  எத்தனை அதிகரிக்கப்பட்டது - 71 லிருந்து 148.

87.   பூனா ஒப்பந்தபடி மத்திய சட்டப் பேரவையில் ஓதுக்கப்பட்ட இடங்கள் - 18 % .

88.   அரிஜனர்களுக்கான பயணம் என்ற நாடுதழுவிய பயணத்தை மேற்கொண்டவர்காந்தி.

89.   அரிஜனர் சேவை சங்கத்தை அமைத்து சமூகத்தில் உள்ள பாரபட்சங்களை முழுமையாக அகற்றுவதற்குப் பணியாற்றத் தொடங்கிவர்காந்தி.

90.   கோவில் நுழைவு நாள்  அனுசரிக்கப்பட்டது - 1933-ஜனவரி 8 .

91.   1920 அக்டோபர் இந்திய பொதுவுடைமை கட்சி (கம்யூனிஸ்டு-CP1) எங்கு தொடங்கப்பட்டது- உஸ்பெகிஸ்தான் - தாஷ்கண்டில்.

92.   பொதுவுடைமை (கம்யூனிஸ்டு) கட்சியின் நிறுவன உறுப்பினர்கள் - M.N. ராய், அபானி முகர்ஜி, M.P.T. ஆச்சார்.

93.   1924- கான்பூர் சதித்திட்ட வழக்கில் விசாரிக்கப்பட்டவர்கள் - M.N. ராய், S.A. டாங்கே, முசாஃபர் அஹமது, M சிங்காரவேலர்.

94.   கான்பூரில் அகில இந்திய பொதுவுடைமை மாநாடு நடந்தத ஆண்டு- 1925.

95.   அகில இந்திய தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி நிறுவப்பட்ட ஆண்டு1928.

96.   இந்துஸ்தான் குடியரசு ராணுவம் (HRA) கான்பூரில் உருவாக்கப்பட்ட ஆண்டு-1924.

97.   ராம்பிரசாத் பிஸ்மில், அஷ்ஃபாகுல்லா கான் மற்றும் பலர் லக்னோ அருகே காகோரி என்ற கிராமத்தில் அரசுப்பணத்தை கொண்டுச்சென்ற ஒரு ரயில்வண்டியை நிறுத்திக் கொள்ளையடித்த ஆண்டு - 1925.

98.   பஞ்சாபில் இந்துஸ்தான் குடியரசு ராணுவத்தை மீண்டும் அமைத்தவர்கள் - பகத்சிங், சுக்தேவ், அவர்களது தோழர்கள்.

99.   இந்துஸ்தான் குடியரசு ராணுவம் ,இந்துஸ்தான் சமதர்மவாத குடியரசு அமைப்பு என்று பெயர் மாற்றம் செய்த ஆண்டு  -  1928.

100. லாலா லஜ்பதி ராயின் உயிரிழப்புக்குக் காரணமான தடியடியை நடத்திய ஆங்கிலேய காவல்துறை அதிகாரி -  சாண்டர்ஸ் படுகொலை செய்யப்பட்டார்.

101. 1929 மத்திய சட்டப் பேரவையில் புகைக்குண்டு ஒன்றை  வீசியவர்கள்பகத்சிங், B.K. தத்து .

102. 1930 ஏப்ரலில் சிட்டகாங் ஆயுதக்கிடங்கு மீதான தாக்குதல் - சூர்யா சென் ,அவரது நண்பர்களால் மேற்கொள்ளப்பட்டது.

103. எந்த ஆண்டு கைது செய்யப்பட்ட தசூர்யா சென் ஓராண்டுக்குப் பிறகு தூக்கிலிடப்பட்டார் -1933.

104. பொதுவுடைமை கட்சி தடைசெய்யப்பட்ட ஆண்டு- 1934.

105. ஜெயப்பிரகாஷ் நாராயண், ஆச்சார்ய நரேந்திரதேவ், மினுமசானி ஆகியோரின் முன்முயற்சியால் காங்கிரஸ் சமதர்ம (சோஷலிஷ) கட்சி உருவான  ஆண்டு - 1934.

106. ஒருசிலர் அதிகாரத்துக்கு வருவதால் உண்மையான சுயராஜ்ஜியம் கிடைத்துவிடாது, ஆனால் தாங்கள் பெற்ற அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தப்படும் போது நிர்வாகத்தினரை எதிர்க்கும் திறனை அனைவரும் பெறச்செய்வதே சுயராஜ்ஜியமாகும் கூறியவர்காந்தியடிகள்.

107. இந்திய அரசுச் சட்டத்தின் கீழ் பர்மா இந்தியாவில் இருந்து பிரிக்கப்பட்ட ஆண்டு -1935.

108. 1937 - ஆம் ஆண்டு தேர்தலில் 11 மாகாணங்களில் போட்டியிட்டு எத்தனை மாகாணங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது - 7 மாகாணம்.

109. காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகிய நாளை மீட்பு நாள் என்று அறிவித்தவர்-  ஜின்னா.

110. சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைவரான ஆண்டு -1939.

111. பார்வர்டு பிளாக் கட்சியைத் தொடங்கியவர் - சுபாஷ் சந்திர போஸ்.

112. பொதுவுடைமை கட்சி மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்ட ஆண்டு- 1942.

113. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக மாணவர்-  ரஹ்மத் அலி .

114. 1933 பஞ்சாப், காஷ்மீர், வடமேற்கு எல்லை மாகாணம், சிந்து மற்றும் பலுச்சிஸ்தான் ஆகிய மாகாணங்களை இணைத்து பாகிஸ்தானை உருவாக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தியவர் - ரஹ்மத் அலி .

115. 1940 அக்டோபர் 17 சத்தியாகிரகப் போராட்டத்தை முதன் முதலாக ஆரம்பித்தவர்-வினோ பாபா.

116. 1942 மார்ச் 22 அமைச்சரவை யாருடைய தலைமையில் ஒரு தூதுக்குழுவை பிரிட்டிஷ் அரசு அனுப்பியது - சர் ஸ்ட்ராபோர்ட் கிரிப்ஸ்.

117. திவாலாகும் வங்கியில் பின் தேதியிட்ட காசோலை என்று கிரிப்ஸ் தூதுக்குழு திட்டங்களை அழைத்தவர்காந்தி.

118. செய் அல்லது செத்து மடி என்ற முழக்கத்தை வெளியிட்டவர்காந்தி.

119. பம்பாயில் கூடிய அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வெள்ளையனே வெளியேறு தீர்மானத்திற்கு வித்திட்ட ஆண்டு  - 1942 ஆகஸ்டு 8.

120. நாம் நமது முயற்சியின் விளைவாக இந்தியாவுக்கு சுதந்திரம் பெற்றுத் தருவோம், அல்லது நாம் நமது அடிமைத்தனத்தைக் காண உயிருடன் இருக்கமாட்டோம், என்று கூறியவர்: காந்தியடிகள்.

121. இந்தியப் போர்க்கைதிகளை கொண்டு மலாயா மற்றும் பர்மாவில் இருந்த ஜப்பானியர்களின் ஆதரவோடு இந்திய தேசிய ராணுவத்தை (ஆசாத் ஹிந்த் ஃபாஜ்) உருவாக்கியவர் - ஜெனரல் மோகன் சிங்.

122. இந்திய தேசிய ராணுவம் கேப்டன் லட்சுமி செகல் என்பவரால் நடத்தப்பட்டது .

123. இந்திய தேசிய ராணுவத்தை மூன்று படையணிகளாக மறுசீரமைத்தவர்  - சுபாஷ் சந்திர போஸ்.

          1.    காந்தி பிரிகேட்.

          2.    நேரு பிரிகேட் .

          3.    பெண்கள் பிரிவாக ராணி லக்ஷ்மி பாய் பிரிகேட்.

124. சுபாஷ் சந்திரபோஸ் எங்கு சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தை நிறுவினார் - சிங்கப்பூர்.

125. தில்லிக்கு புறப்படு (தில்லி சலோ) என்ற முழக்கத்தை வெளியிட்டவர் - சுபாஷ் சந்திரபோஸ்.

126. பம்பாயில் ராயல் இந்திய கடற்படை மாலுமிகள் கிளர்ச்சி செய்த ஆண்டு  - 1946 பிப்ரவரி.

127. வேவல் திட்டம் அறிவிக்கப்பட்ட ஆண்டு  -1945 - ஜூன்-14.

128. அனைத்து முஸ்லிம் உறுப்பினர்களும் முஸ்லிம் லீக்கில் இருந்துதான் இடம்பெற வேண்டும், அவர்கள் அனைத்து முக்கிய விஷயங்களிலும் வீட்டோ அதிகாரங்களையும் பெறவேண்டும் என்று கோரியவர் - ஜின்னா.

129. பிரிட்டனில் தொழிற்கட்சி வெற்றி பெற்று பிரதமராக பொறுப்பேற்றவர்  - கிளெமன்ட் அட்லி.

130. இந்தியாவுக்கு வந்த தூதுக்குழு அமைச்சர்கள் - பெதிக் லாரன்ஸ் , ஸ்டராஃபோர்ட், கிரிப்ஸ், A.V. அலெக்ஸாண்டர்.

131. 1946 ஆகஸ்டு 16 நாளை நேரடி நடவடிக்கை நாளாக அறிவித்தவர் -ஜின்னா

132. ஜவகர்லால் நேரு தலைமையில் இடைக்கால அரசு  அமைக்கப்பட்ட ஆண்டு - 1946  செப்டம்பர்.

133. முஸ்லிம் லீக் இடைக்கால அரசில் இணைந்தத ஆண்டு - 1946 - அக்டோபர் .

134. இடைக்கால அரசில் நிதி றுப்பினராக ஆக்கப்பட்டவர் - லியாகத் அலிகான்.

135. 1948 - ஜூன் மாதவாக்கில் அதிகாரமாற்றம் ஏற்படும் என்று 1947ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் என்பவர் அறிவித்தவர் - கிளெமன்ட் அட்லி.

136. மவுண்ட்பேட்டன் திட்டம் அறிவிக்கப்பட்ட ஆண்டு - 1947 ஜூன் - 3.

137. மவுண்ட்பேட்டன் திட்டத்தின் படி யாருடைய தலைமையில் எல்லைகளை நிர்ணயிக்கும் ஆணையம் அமைக்கப்பட்டது-  ராட்கிளிஃப் பிரவ்ன்.

138. பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்திய விடுதலைச் சட்டத்தை இயற்றியதையடுத்து மவுண்பேட்டன் திட்டத்துக்கு செயல்வடிவம் தரப்பட்டது - 1947 ஜூலை18.