8TH - STD - குடிமக்களும் குடியுரிமையும் -
1.
குடிமகன் (Citizen) என்ற சொல் சிவிஸ் என்னும் எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது – இலத்தீன்.
2.
இந்தியக் குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு- 1955.
3.
இந்தியா மக்களுக்கு வழங்குகிற குடியுரிமை - ஒற்றைக் குடியுரிமை.
4.
குடியுரிமையின் வகைகள் : 2 வகை.
1. இயற்கை குடியுரிமை : பிறப்பால் இயற்கையாக பெறக்கூடிய குடியுரிமை.
2. இயல்புக் குடியுரிமை : இயல்பாக விண்ணப்பித்து பெறும் குடியுரிமை.
5.
இந்தியாவில் எத்தனை வழிமுறைகளில் குடியுரிமையை பெறலாம் : 5.
1. பிறப்பால் குடியுரிமை .
2. வம்சாவழியாக குடியுரிமை பெறுதல்.
3. பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்.
4. இயல்பு குடியுரிமை.
5. பிரதேசங்கள் இணைத்ததன் மூலம் பெரும் குடியுரிமை.
6.
இந்தியாவில் எத்தனை வழிமுறைகளில் குடியுரிமையை இழத்தல் : 3.
1. தானாக முன்வந்து குடியுரிமையை துறத்தல்- குடியுரிமையை துறத்தல்
2. குடியுரிமையை முடிவுக்கு வருதல்- சட்டப்படி நடைபெறுதல்
3. குடியுரிமை மறுத்தல்- கட்டாயமாக முடிவுக்கு வருதல்
7.
இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன் எத்தனை ஆண்டுகள் இந்தியாவில் வசிப்பவராக இருத்தல் வேண்டும் -7 ஆண்டுகள்.
8.
இயல்பு குடியுரிமை :
1. விண்ணப்பிப்பது மூலம் குடியுரிமை பெறலாம்.
2. வெளிநாட்டு குடியுரிமையை துறக்கும் பட்சத்தில் பெறலாம்.
9.
1950 ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர் 10 முன்னர் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் அவரின் தந்தை இந்தியக் குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர் பெறும் குடியுரிமை - வம்சாவழி குடியுரிமை.
10.
பிறப்பால் பெரும் குடியுரிமை :
1. 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை வரை இந்தியாவில் பிறந்த பெற்றோரின் மகன் .
2. 1987ஜூலை 1 மற்றும் அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.
3. 2004 டிசம்பர் 3 மற்றும் அதற்குப் பிறகு இந்தியாவில் பிறந்தவர்கள்.
11.
சிவிஸ் என்பதன் பொருள்- குடியிருப்பாளர்.
12.
1992 டிசம்பர் 10 மற்றும் அதற்கு பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அவர் பெரும் குடியுரிமை - வம்சாவளிக் குடியுரிமை.
13.
2004 டிசம்பர் 3 ம் நாள் முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளிக் குடிமகனாக முடியாது.
14.
பாண்டிச்சேரி இந்தியாவுடன் இணைந்த பொழுது இந்தியா குடியுரிமையை வழங்கியஆண்டு-1962.
15.
அரசியலமைப்புச் சட்டத்தின் குடியுரிமையைப் பற்றிக் குறிப்பிடப்படும் பகுதி , பிரிவுகள் –
பகுதி II , பிரிவு 5 -11.
16.
பூர்வீகம், பிறப்பு , இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாக பெறும் நிலை- குடியுரிமை.
17.
இரட்டைக் குடியுரிமை உள்ள நாடுகள்- அமெரிக்கா & சுவிட்சர்லாந்து.
18.
ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவனுக்கு வழங்கப்படுவது- குடியுரிமை.
19.
வெளிநாடு வாழ் இந்தியர் தினம் - பிரவாசி பாரதிய தினம் - ஜனவரி 9.
20.
காந்தி தென்னாப்பிரிக்காவிலிருந்து வந்த தினம் - ஜனவரி 9.
21.
PIO முறை 0CI - ல் இணைக்கப்பட்ட ஆண்டு - 2015 ஜனவரி 9
22.
இந்திய கடவுச்சீட்டினைப் பெற்று வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமக்கள் – NRI - NON
RESIDENT INDIAN.
23.
இந்திய குடியுரிமை உடைய மூதாதையர்களை கொண்ட வெளிநாட்டில் குடியுரிமை பெற்றிருக்கும் ஒருவர் இந்திய பூர்வீக குடிகள் ஆவார் – PIO - PERSON ON
INDIAN ORIGIN.
24.
வெளிநாட்டு குடிமக்கள் காலவரையின்றி இந்தியாவில் வசித்தல் மூலம் பெரும் குடியுரிமை – OCI- OVERSEAS
CITIZEN OF INDIAN CARD.
25.
ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களின் வகைகள் என்ன - அந்நியர் , குடியேறியவர்.
26.
வெளிநாடு வாழ் இந்தியர் தினம் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கொண்டாடப்படுகிறது - 2 ஆண்டுகள்.
27.
இந்தியாவின் முதல் குடிமகன் - குடியரசுத் தலைவர்.
28.
அமெரிக்க ஐக்கிய நாடுகள் - இரட்டை குடியுரிமை வழங்குகிறது.
29.
இந்தியா - ஒற்றைக் குடியுரிமை வழங்குகிறது.
30.
குடியுரிமையை உரிமையை - மாற்ற முடியும். நாட்டு உரிமையை - மாற்ற இயலாது.
0 Comments
THANK FOR VISIT