துவாதசி திதி பலன்கள், துவாதசி திதியில் செய்ய வேண்டியவை, செய்யகூடாதவை

துவாதசி திதி

துவாதச என்பதற்கு பன்னிரண்டு என்று அர்த்தம். துவாதசி என்பது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் 12 வது நாள் துவாதசி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் துவாதசியை சுக்கில பட்ச துவாதசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் துவாதசி தினம் கிருஷ்ண பட்ச துவாதசி என்றும் அழைக்கபடுகிறது.

துவாதசி திதியின் சிறப்புகள்

கார்த்திகை மாதம் வரும் சுக்லபட்ச ஏகாதசிக்கு மறுநாள் வரும் துவாதசி திதிபிருந்தாவன துவாதசிஎன அழைக்கபடுகிறது. அன்று தான் மகாவிஷ்ணு துளசியை திருமணம் செய்து கொண்டதாக விஷ்ணு புராணத்தில் குறிபிடப்பட்டுளது. இந்த பிருந்தாவன துவாதசி திதி வரும் நாளில் எந்த பொருளை தானம் செய்தாலும் அந்த பொருளுடன் துளசியையும் சேர்த்து தானம் செய்தால் கொடுக்கும் பொருளின் அளவும், மதிப்பும் கூடும் என புராணம் கூறுகிறது.

துவாதசி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்

துவாதசி திதியில் பிறந்தவர்கள் தர்மவானாக இருப்பார்கள். மற்றும் நல்ல செல்வந்தராகவும், நூதன தொழில் செய்பவராகவும், ஒழுக்கமான செயல்பாடுகள் கொண்டவராகவும் இருப்பார்கள். வசீகரிக்கும் தோற்றம் கொண்ட இவர்கள் எதிர்ப்புகளை கொண்டவர்கள். நல்ல குணம் கொண்டவர்கள், வித்தியாசமான அணுகுமுறைகளை கொண்டவர்கள், எதிர்பாலினத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர்கள். எல்லோரும் செய்யும் தொழிலை செய்யாமல் புதுமையான தொழில் செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். துவாதசி திதி அன்று பிறந்தவர்கள் கிருஷ்ணருக்கு அவல் படைத்து வழிபட்டு வருவது சிறந்த பரிகாரமாக அமையும்.

துவாதசி திதியில் என்னென்ன செய்யலாம்

துவாதசி திதி மஹாவிஷ்ணுவிற்க்கு உரியதாகும். துவாதசி திதி வரும் நாளில் விளக்கு ஏற்றுதல், மதவிழாக்கள் செய்தல், திருப்பணிகள் செய்தல் நல்ல பலனைத் தரும். இந்நாளில் மதச்சடங்குகளில் ஈடுபடலாம். தெய்வீக காரியங்கள் மேற்கொள்ளலாம்.

துவாதசி திதிக்கான திதி சூன்ய ராசிகள்

துவாதசி திதிக்கான திதி சூன்ய ராசிகள் மகரம், துலாம் .

துவாதசி திதிக்கான தெய்வங்கள்

துவாதசி திதிக்கான வளர்பிறை தெய்வங்கள் : மஹா விஷ்ணு.

துவாதசி திதிக்கான தேய்பிறை தெய்வங்கள் : மஹா விஷ்ணு, சுக்கிரன்.