ஜாதக ரீதியாக திருமணம் தாமதமாவதற்குக் காரணங்கள் என்ன?
இந்த மூன்று கிரகங்களை தவிர்த்து ஒரு ஜாதகருக்கு நடக்கும் தசாபுத்தி திருமணம் தாமதமாவதில்
எவ்வளவோ ஜாதகங்கள், பார்த்து விட்டோம் எத்தனையோ ஜாதகங்கள் பொருந்தி வந்தாலும் திருமணம் கைகூடவில்லை, தடைப்பட்டுக்கொண்டே வருகிறது அல்லது தாமதமாகிறது என்று பலரும் கூறுவார்கள். இன்றைய கால கட்டத்தில் பொருளாதார ரீதியாக ஓரளவுக்கு ஸ்திரமாக இருக்க வேண்டும் என்று பெரும்பாலானவர்கள் இளம் வயதில் திருமணம் செய்து கொள்வதை தவிர்க்கிறார்கள். இருபதுகளின் இறுதியில் அல்லது முப்பதுகளின் தொடக்கத்தில்தான் பலரும் திருமணம் செய்து கொள்கிறார்கள். இருப்பினும், அதையும் கடந்து பலருக்கும் திருமணம் நடப்பது இல்லை. திருமணம் தாமதம் ஆவதற்கு ஜாதக ரீதியாக ஒருசில காரணங்கள் இருக்கின்றன அதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
சனியால் தாமதமாகும் திருமணம்:
ஒன்பது கிரகங்களில் தாமதத்தை குறிக்கும் கிரகம் சனியாகும். சனி ஒரு ராசியில் இரண்டரை முதல் மூன்று ஆண்டுகள் சஞ்சரிக்கிறது. எல்லா கிரகங்களை விட சனி மிகவும் மெதுவாக சுழல்கிறது. எனவே இது தாமதம் மற்றும் மந்தப் போக்கை குறிக்கும்.
ஒரு நபரின் பிறப்பு ஜாதகத்தில் திருமண கட்டமான ஏழாம் வீட்டில் சனி இருந்தால் அல்லது ஏழாம் வீடு சனியோடு ஏதேனும் ஒரு வகையில் தொடர்பு கொண்டிருந்தால், அந்த ஜாதகருக்கு கண்டிப்பாகத் திருமணம் தாமதமாகும். இதற்கு விதிவிலக்காக சுக்கிரனும் குருவும் வலுவாக இருந்தால் சரியான நேரத்தில் வயதில் திருமணம் நடக்கும் சாத்தியம் இருக்கிறது.
உதாரணமாக கடக லக்னகாரர்களுக்கு, சனி ஆட்சி செய்யும் மகர வீடு ஏழாம் வீடாக அமைந்திருக்கிறது. ஏழாம் வீட்டில் நேரடியாக சனியின் மற்றும் திருமணத்தைக் குறிக்கும் வீடாக இருப்பதால் இவர்களுக்கு இயல்பாகவே திருமணம் தாமதமாக நடக்கும் திருமணம்.
செவ்வாய் கிரகத்தால் தாமதமாகும் திருமணம்:
சனி எப்படி தாமதத்தை கொடுக்கிறதோ, அதே போல ஏழு அல்லது எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தாலும் அல்லது செவ்வாய் தொடர்பு கொண்டிருந்தாலோ திருமணத் தாமதத்தை குறிக்கும். மேலே குறிப்பிட்ட இடங்களில் செவ்வாய் இருக்கும் பொழுது, இயல்பாகவே அவர்களுக்கு 28 வயதுக்கு மேல் திருமணம் செய்தால் அந்த வயதுக்கேற்ற முதிர்ச்சியும் பக்குவமும் இருக்கும். இளம் வயதில் திருமணம் செய்தால் ஆரம்ப ஆண்டுகளில் திருமண பந்தத்தை சரியாக கையாள முடியாது.
இரண்டு மற்றும் ஏழாம் வீட்டில் கேது:
இதற்கு அடுத்ததாக உங்கள் ஜாதகப்படி இரண்டு அல்லது ஏழாம் வீட்டில் கேது அமர்ந்திருந்தால் அவர்களுக்கு திருமணம் தாமதமாகும் வாய்ப்பு இருக்கிறது.
சாதகமற்ற தசா புத்தி:
இந்த மூன்று கிரகங்களை தவிர்த்து ஒரு ஜாதகருக்கு நடக்கும் தசாபுத்தி திருமணம் தாமதமாவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜாதகத்தில் திருமணம் தாமதம் ஆவதற்கு எந்த அறிகுறியும் இல்லை, திருமண கட்டத்தோடு சனி அல்லது செவ்வாய் தொடர்பு கொள்ளவில்லை என்றாலும் ஜாதகத்தில் சாதகமான தசா புக்தி நடக்கவில்லை என்றால் திருமணம் தாமதமாகும்.
ஆறாம் வீட்டு அல்லது எட்டாம் வீட்டு கிரகத்தின் தசை நடந்தால்:
ஒரு நபருக்கு ஜாதகப்படி அவரது ஆறாம் வீட்டு அல்லது எட்டாம் வீட்டு கிரகத்தின் தசை நடந்தால் அந்த காலகட்டத்தில் திருமணம் நடப்பது கடினம். இதற்கு சில விதிவிலக்குகள் உள்ளன. கோச்சாரப்படி கிரகங்கள் சாதகமாக இருக்கும் பொழுது மற்றும் குறுகிய கால கிரகப் பெயர்ச்சிகளின் போது, உங்கள் ராசிக்கு சாதகமாக அமையும் பொழுது தாமதம் ஆகாமல் சட்டென்று திருமணம் முடியும்.
0 Comments
THANK FOR VISIT