9TH- STD - மனித உரிமை ஆணையம் -

1.    .நா.சபை தொடங்கப்பட்ட ஆண்டு  - 1945.

2.    .நா.சபை - நாள் - அக்டோபர் 24.

3.    உலகளாவிய மனித உரிமைகள் பேரறிக்கை .நா. பொது சபை நிறைவேற்றப்பட்ட ஆண்டு   - 1948 டிசம்பர் 10.

          1.    பொது சபை தீர்மானம் -  217 A.

          2.    உறுப்புகள் - 30

4.    காந்தியடிகள் 1893 ஆம் ஆண்டு ஜூன் 7 -ல் தென் ஆப்ரிக்காவில் உள்ள பிரிடோரியா என்னும் இடத்திற்கு தொடர்வண்டியில் பயணம் செய்து கொண்டிருந்த போது- பீட்டர்மரிட்ஸ்பர்க் என்ற இடத்தில் தள்ளி விடப்பட்டார்.

5.    தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக நெல்சன் மண்டேலா எத்தனை ஆண்டுகள் சிறையில் கழித்தார்- 27 ஆண்டுகள்.

6.    தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கைக்கு எதிராக போராடியவர்-நெல்சன் மண்டேலா.

7.    நெல்சன் மண்டேலா சிறையில் இருந்து விடுதலை செய்தவர்F.W. டி கிளார்க்.

8.    நெல்சன் மண்டேலா விடுதலையான ஆண்டு -1990.

9.    தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் கொள்கை யாருடைய முயற்சியினால் முடிவிற்கு வந்தது- நெல்சன் மண்டேலா , டி கிளார்க்.

10.   நெல்சன் மண்டேலா ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவரான ஆண்டு - 1994.

11.   ஒரு மனிதனின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்குத் தேவையான உரிமைகள்- அடிப்படை உரிமைகள்.

12.   அடிப்படை உரிமைகள்: 6.

          1.    சமத்துவ உரிமை

          2.    சுதந்திர உரிமை

          3.    சுரண்டலுக்கு எதிரான உரிமை

          4.    சமய மற்றும் மனச்சான்று சுதந்திரத்திற்கான உரிமை

          5.    சிறுபான்மையினருக்கான பண்பாடு மற்றும் கல்வி உரிமைகள்

          6.    அரசமைப்புச் சட்ட வழி தீரவுகளுக்கான உரிமை

13.   நமது அரசமைப்புச் சட்டத்தில் எத்தனை வகையான சுதந்திர உரிமை உள்ளது : 6.

          1.    பேச்சுரிமை

          2.    ஆயுதமின்றி கூடும் உரிமை

          3.    சங்கங்கள் அமைக்கும் உரிமை

          4.    இந்தியாவில் எந்த பகுதியிலும் வசிக்கும் உரிமை

          5.    இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாடும் உரிமை

          6.    எந்த தொழிலையும், வணிகத்தையும் செய்யும் உரிமை

14.   14 வயதிற்குட்பட்ட சிறுவர்களை அபாயகரமான தொழில்களில் ஈடுபடுத்துவது எந்த உரிமை - சுரண்டலுக்கு எதிரான உரிமை.

15.   அரசியலமைப்புச் சட்டங்களுக்கான உரிமையின்படி நீதிமன்றத்தை அணுகியதின் மூலம் தனது வேலைவாய்ப்பு உரிமையை வென்றவர்- பிரத்திகா யாஷினி.

16.   இந்திய அரசியலமைப்பில் அடிப்படைக் கடமைகள் இணைக்கப்பட்ட சட்டத் திருத்தம்

1976  - 42 வது சட்ட திருத்தம்.

17.   மூத்த குடிமக்கள் ,பெற்றோர் நலன்கள் பராமரிப்புச் சட்டம் சட்டமாக இயற்றப்பட்ட ஆண்டு -2007.

18.   தேசிய மனித உரிமைகள் ஆணையம் அமைக்கப்பட்ட நாள் - 1993 அக்டோபர் 12.

19.   இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு மாநில மனித உரிமைகள் ஆணையம் அமைக்க வழி செய்யும் பிரிவு - பிரிவு 21.

20.   மனித உரிமைகள் ஆணையம் ஒருதன்னாட்சி அமைப்பு  .

21.   மாநில மனித உரிமை ஆணையத்தில் - 1 தலைவரும் 2 உறுப்பினர்களும் உள்ளனர்.

22.   18 - வயதுவரையுள்ள அனைவரும் குழந்தைகள் என வரையறைக்கும் உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனம் - பிரிவு 25 .

23.   குழந்தைகள் உரிமைகள் பிரகடனத்தை .நா.சபை எற்றுக் கொண்ட நாள் -1989-நவம்பர் – 20.

24.   இந்திய நாடாளுமன்றம் கல்வி உரிமைச் சட்டத்தினை நடைமுறைப் படுத்திய ஆண்டு-  2009.

25.   6 முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வி வழங்கும் அரசமைப்பு பிரிவு - 21A .

26.   ஆபத்து காலத்தில் உதவிட தமிழ்நாடு அரசினால் அறிமுகப்படுத்தப் பட்ட செயலி- காவலன் SOS.

27.   பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு2012  POSCO.

28.   18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைச் செய்யப்படும்போது வன்கொடுமை செய்தவருக்கு மரண தண்டனை வழங்குவதோடு கடுமையான தண்டனைகள் விதிக்க வகைசெய்யும் சட்டம் கொண்டுவரப்பட்ட ஆண்டு- 2018 ஏப்ரல்.

29.   இந்தியாவின் முதல் 24 மணிநேர கட்டணமில்லா அவசர தொலை தொடர்பு சேவை1098.

30.   பச்பன் பச்சாவ் அந்தோலன்- குழந்தைகள் உரிமை அமைப்புகளின் நிறுவனர் -கைலாஷ் சத்யார்த்தி.

31.   இதுவரை 86000க்கும் மேற்பட்ட இந்தியக் குழந்தைகளை குழந்தை உழைப்பு, கொத்தடிமை போன்ற செயல்களிலிருந்து காப்பாற்றியுள்ளவர்- கைலாஷ் சத்யார்த்தி.

32.   1998 ல் குழந்தை உழைப்பு முறை மீது திசை திருப்ப, - 80000.  கி.மீ. நீள குழந்தை உழைப்புக்கு எதிரான உலகளாவிய அணிவகுப்பை முன்னின்று நடத்தியவர்- கைலாஷ் சத்யார்த்தி.

33.   14 - வயதுக்குட்பட்ட எந்த குழந்தையும் ஆபத்தான வேலை களில் ஈடுபடுத்தக்கூடாது என்று கூறும் சட்டப்பிரிவு -  பிரிவு 24.

34.   14 - வயது நிறைவடையும்வரை இலவச மற்றும் கட்டாயக் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று கூறும் சட்டப்பிரிவு - பிரிவு 45.

35.   பச்பன் பச்சாவ் அந்தோலன் இயக்கம்என்பது- இளமையைக் காப்பாற்று இயக்கம்.

36.   தமிழ்நாடு இந்து வாரிசு உரிமை (தமிழ்நாடு திருத்தச்) சட்டம்1989.

37.   மூதாதையரின் சொத்துகளில் பெண்களுக்கு சம உரிமை வழங்கும் சட்டம் -1989. 

38.    மத்திய அரசு இந்து வாரிசுரிமைச் திருத்த சட்டம்2005.

39.   மூதாதையரின் பிரிக்கப்படாத செத்தில் வாரிசு அடிப்படையில் பெண்களுக்கு சம உரிமையினை அளிக்கும் சட்டம்2005.

40.   தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீடு பிரிவுகள்:

          1.    பிற்படுத்தப்பட்டோர்26.5  %

          2.    பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள்- 3.5 %.

          3.    மிகப் பிற்படுத்தப்பட்டோர் / சீர்மரபினர்20 %.

          4.    ஆதிதிராவிடர்18 %.

          5.    பழங்குடியினர் - 1 %.

41.   தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு ஒவ்வொரு பிரிவின்கீழ் எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கியுள்ளது- 20சதவீதம்.

42.   தகவல் அறியும் உரிமைச்சட்டம் இந்தியாவில் இயற்றப்பட்ட ஆண்டு-2005 அக்டோபர்.

43.   தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து விலங்கு அளிக்கப்படும் துறைகள்:

          1.    எல்லைப் பாதுகாப்புப் படை

          2.    மத்திய சேமக் காவல் படை

          3.    உளவுத்துறைப் பணியகம்

44.   இருப்பாலினருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்பதை உறுதி செய்யும் அரசியலமைப்பு பிரிவு - பிரிவு 39பி.

45.   தொழிலாளர் நலனில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் பங்களிப்புகள்:

          1.    தொழிற்சாலையில் வேலை நேரம் குறைப்பு

          2.    தொழிற்சங்கங்களின் கட்டாய அங்கீகாரம்

          3.    இந்தியாவில் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் அமைத்தல்

          4.    தொழிலாளர் காப்பீட்டுக்கழகம் (ESI)

          5.    தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம்

          6.    நிலக்கரி மற்றும் மைகா சுரங்கத்தின் வருங்கால வைப்பு நிதி

46.   ஒரு மனிதனுடைய உரிமை அச்சுறுத்தப்படும்போது, ஒவ்வொரு மனிதனுடைய உரிமையும் குறைக்கப்படுகிறது என்று கூறியவர் - ஜான். எஃப். கென் எடி.

47.   இன ஒதுக்கல் என்னும் கொள்கையைப் பின் பற்றிய நாடு - தென் ஆப்பிரிக்கா.

48.   ஒரு 10 வயது பையன் கடையில் வேலைபார்த்துக் கொண்டிருக்கிறான் - எந்த உரிமையைப் பயன்படுத்தி அவனை மீட்பாய் - குழந்தை உழைப்பு மற்றும் சுரண்டலுக்கு எதிரான உரிமை.

49.   தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி தகவலைப் பெறுவதற்கான கால வரம்பு-30 நாட்கள்.

50.   .நா. சபையின்படி எத்தனை  வயது நிறைவு பெறாதோர் குழந்தை ஆவார் - 18 வயது.

51.   அமைதிக்கான நோபல் பரிசு கைலாஷ் சத்தியார்த்தி மற்றும் மலாலா விற்கு கொடுக்கப்பட்டது.

52.   அடிப்படைக் கடமைகள் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் திருத்தத்தின்படி42 வது  சட்ட திருத்தம் படி சேர்க்கப்பட்டது.

53.   1989 - ல் பெண்களுக்கான மூதாதையர் சொத்துரிமை சட்டத்தை நடைமுறைப்படுத்திய இந்திய மாநிலம்தமிழ்நாடு.

54.   பொருத்துக:

          1.    வாக்களிக்கும் உரிமை - அரசியல் உரிமை.

          2.    சங்கம் அமைக்கும் உரிமை - சுதந்திர உரிமை.

          3.    பாரம்பரியத்தை பாதுகாக்கும் உரிமை - பண்பாட்டு உரிமை.

          4.    இந்து வாரிசுரிமைச் சட்டம்2005.

          5.    குழந்தை தொழிலாளர்சுரண்டலுக்கெதிரான உரிமை.

 

https://www.a2ztnpsc.in/