8TH - STD - நீதித்துறை -
1.
நீதித்துறை உயர்வே அரசாங்கத்தின் உயர்வைக் காட்டும் அளவீடாகும்.
2.
அரசியல் அமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக விளங்குவது - நீதித்துறை.
3.
மக்களை ஆள்வதற்கு ஓர் அரசாங்கத்தாலோ (அ) நிறுவனத்தாலோ விதிக்கப்படும் விதிகளின் அமைப்பு – சட்டம்.
4.
பண்டைய இந்தியாவில் ஸ்மிருதிகள் தனிமனிதனின் சமூகக் கடமைகளை வரையறுத்தது- மனுஸ்மிருதி , நாரதஸ்மிருதி , யக்ஞவல்கிய ஸ்மிருதி.
5. கனங்களின் குடியரசுகள் தங்களுக்கென கொண்டு இருந்த சட்ட அமைப்பு - குலிகா நீதிமன்றம்.
6.
வஜ்ஜிகளிடையே குற்ற வழக்குகளை விசாரிக்க எத்தனை குலிகாக்களைக் கொண்ட வாரியம் இருந்தது – 8.
7.
யாருடைய ஆட்சிகாலத்தில் உரிமையியல் நடைமுறைச் சட்டங்கள் தொகுக்கப்பட்டன- துக்ளக்.
8.
உரிமையியல் நடைமுறைச் சட்டங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டது ஃபைகா - இ - பெரோஸ் – ஷாகி. ஒளரங்கசீப் காலத்தில்
9.
1670 ம் ஆண்டு ஃபட்வா - இ - ஆலம்கிர் என்ற சட்டத் தொகுப்பின் படி யாருடைய காலத்தில் மாற்றி அமைக்கப்பட்டது – 1670.
10.
எந்த ஆண்டு ஒழுங்குமறைச் சட்டத்தின்படி உச்ச நீதிமன்றம் நிறுவப்பட்டது -1773.
11.
இந்தியாவில் உச்சநீதிமன்றம் முதன் முதலாக எங்கு நிறுவப்பட்டது - வில்லியம் கோட்டை- கலகத்தா.
12.
உச்சநீதிமன்ற முதல் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் - சர் எலிஜா இம்ஃபே.
13.
மதராஸ் உச்சநீதமன்றங்கள் நிறுவப்பட்ட ஆண்டு -1801.
14.
பம்பாய் உச்சநீதமன்றங்கள் நிறுவப்பட்ட ஆண்டு -1824.
15.
சிவில் வழக்குகளை விசாரிப்பதற்கு ஊரக குடிமையியல் நீதிமன்றம் , குற்றவியல் வழக்குகளை தீர்ப்பதற்காக ஊரக குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கியவர் - வாரன் ஹெஸ்டிங்ஸ்
16.
குடிமையியல் மேல் முறையீட்டு நீதிமன்றம் - சதர் திவானி அதாலத் .
17.
குற்றவியல் மேல்முறையீட்டு நீதிமன்றம் - சதர் நிசாமத் அதாலத் .
18.
உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி முறையை மறுசீரமைத்தவர்-காரன்வாலிஸ்.
19.
காரன்வாலிஸ் ஆட்சியில் மாவட்ட குற்றவியல் நீதிமன்றங்கள் நீக்கப்பட்டு மாகாண மேல்முறையீட்டு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்ட இடங்கள் - கல்கத்தா , டாக்கா, மூர்ஷிதாபாத் , பாட்னா.
20.
இந்தியாவில் யாருடைய ஆட்சியில் மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் நீக்கப்பட்டன- வில்லியம் பெண்டிங்.
21.
மிகப்பழமையான உயர்நீதிமன்றம் - கல்கத்தா உயர்நீதிமன்றம்.
22.
கல்கத்தா உயர்நீதிமன்றம் நிறுவப்பட்ட ஆண்டு-1862.
23.
மிகப்பெரிய உயர்நீதிமன்றம் - அலகாபாத் உயர்நீதிமன்றம் .
24.
சதர் திவானி அதாலத் மற்றும் சதர் நிசாமத் அதாலத் ஆகியவை நிறுவப்பட்ட இடம்- அலகாபாத்.
25.
உரிமையியல் நடைமுறைச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு – 1859.
26.
இந்திய தண்டனைச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு – 1860.
27.
குற்றவியல் நடைமுறைச் சட்டம் உருவாக்கப்பட்ட ஆண்டு – 1861.
28.
கூட்டாட்சி நீதிமன்றங்களை உருவாக்கிய ஆண்டு - இந்திய அரசுச் சட்டம் -1935.
29.
இந்திய உச்சநீதிமன்றம் தொடங்கப்பட்ட நாள் - 1950 ஜனவரி 28.
30.
1966 ம் ஆண்டு நடைமுறை மற்றும் வழிமுறைகள் உச்சநீதிமன்ற விதிகள் ஒழுங்குபடுத்த ஏற்படுத்தப்பட்ட சட்ட பிரிவு - அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 145.
31.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 4 வது அத்தியாயத்தின் கீழ் பகுதி 5 (யூனியன்) ன்படி ஒன்றிய நீதித்துறை , அத்தியாயம் 6 ன் கீழ் பகுதி 6 ன் படி (மாநிலம்) துணை நீதிமன்றங்கள் நிறுவ வழிவகை செய்கிறது
32.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் அமைப்பு மற்றும் அதிகார வரம்பினை வகுத்துக் கூறுகிற அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் - 124 முதல் 147.
33.
இந்திய உச்சநீதிமன்றம்:
1. இதன் முடிவுகள் அனைத்து நீதிமன்றங்களையும் கட்டுப்படுத்துகிறது
2. உயர்நீதிமன்ற நீதிபதிகளை இடமாற்றம் செய்யலாம்
3. எந்தவொரு நீதிமன்றத்தின் வழக்குகளையும் தன் கட்டுபாட்டிற்குள் கொண்டு வர முடியும்.
4. வழக்குகளை ஒரு உயர்நீதிமன்றத்திலிருந்து மற்றொரு உயர்நீதி மன்றத்திற்கு மாற்றலாம்
34.
உயர் மன்றம்:
1. கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீடுகளை விசாரித்தல்.
2. அடிப்படை உரிமைகளை பெறுவதற்காக நீதிப்பேராணைகள் வழங்கும் அதிகாரம்.
3. மாநிலத்தின் எல்லைக்குள் உள்ள வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம்.
4. கீழ் நீதிமன்றங்களைக் கண்காணிக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் அதிகாரம்.
35.
மாவட்ட மன்றம்:
1. மாவட்ட எல்லைக்குள் எழும் வழக்குகளைக் கையாளுகிறது.
2. கீழ் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்பின் மேல்முறையீடுகளை விசாரிக்கிறது.
3. கடுமையான குற்றவியல் தொடர்பான வழக்குகளை தீர்மானிக்கிறது.
36.
உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை பரிசீலிக்கும் நீதிமன்றங்கள்- துணை நீதிமன்றங்கள்.
37.
ஒரு சுதந்திரமான நீதித்துறை என்ற கருத்தை முன்மொழிந்த முதல் அரசியல் தத்துவஞானி –மாண்டெஸ்கியூ.
38.
மாவட்ட அளவில் சிவில் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் - மாவட்ட நீதிமன்றங்கள்.
39.
குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றங்கள் - அமர்வு நீதிமன்றங்கள்.
40.
கிராம அளவில் உரிமையியல் மற்றும் குற்றவியல் வழக்குகளை கையாளும் நீதிமன்றம் - பஞ்சாயத்து நீதிமன்றங்கள்.
41.
நில ஆவணங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கிறது- வருவாய் நீதிமன்றங்கள்.
42.
விரைவான நீதியை வழங்க அமைக்கப்பட்ட நீதிமன்றங்கள் - லோக் அதாலத் (மக்கள் நீதிமன்றங்கள்)
43.
லோக் அதாலத் நீதிமன்றங்களுக்கு தலைமை வகிப்பவர்- ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி , ஒரு சமூக பணியாளர் , ஒரு வழக்கறிஞர்
44.
1982 முதல் லோக் அதாலத் நடைபெற்ற இடம் – குஜராத்-ஜூனாகம்.
45.
இ - நீதிமன்றங்கள் திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன – 2005.
46.
உச்ச நீதிமன்றம் நீதிப்பேராணை சட்டப்பிரிவு – 32.
47.
உயர்நீதிமன்றம் நீதிப்பேராணை சட்டப்பிரிவு – 226.
48.
பஞ்சாப், ஹரியானா, சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு பொதுவான நீதிமன்றம் .
49.
உயர்நீதிமன்றத்தின் அதிகார வரம்புகள் :
1. முதன்மை அதிகார வரம்பு
2. மேல் முறையீட்டு அதிகார வரம்பு
3. நீதிப் பேராணை வழங்கும் அதிகார வரம்பு
50.
மாநிலங்களில் உயர்நீதிமன்றத்தின் கீழ் செயல்படும் நீதிமன்றம் - துணை நீதிமன்றம்.
51.
இந்தியாவில் இரண்டு வகையான சட்டப்பிரிவுகள் உள்ளன - உரிமையியல் சட்டங்கள் , குற்றவியல் சட்டங்கள்.
52.
எந்த அதிகார வரம்பின் மூலம் இரு மாநிலங்களுக்கிடையேயான பிரச்சனைகளை உச்சநீதிமன்றம் தீர்க்க வழிவகைசெய்கிறது - முதன்மை அதிகார வரம்பு.
53.
எந்த மாநிலம் / யூனியன் பிரதேசம் பொதுவான உயர்நீதிமன்றத்தைக் கொண்டுள்ளது- பஞ்சாப், ஹரியானா , சண்டிகர்.
54.
இந்தியாவில் உச்ச நிலையில் உள்ள நீதிமன்றங்கள் எத்தனை – ஒன்று.
55.
உச்சநீதிமன்றம் அமைந்துள்ள இடம் – புதுதில்லி.
56.
FIR என்பது என்ன FIRST INFORMATION REPORT - முதல் தகவல் அறிக்கை.
57.
குற்றவியல் வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் - அமர்வு நீதிமன்றம்.
58.
பொருத்துக:
1. உச்ச நீதிமன்றம் -
இறுதி மேல் முறையீட்டு நீதிமன்றம்
2. உயர் நீதிமன்றம் -
மாநிலத்தின் உயர்ந்த நீதிமன்றம்
3. லோக் அதாலத் -
விரைவான நீதி
4. சர் எலிஜா இம்ஃபே - முதல் தலைமை நீதிபதி
5. ஸ்மிருதி -
சமூக கடமைகள்
0 Comments
THANK FOR VISIT