விளக்கு ஏற்றுவதின் நன்மைகள் :
தீபம் ஏற்றுவது வேள்வி செய்வதற்கு சமமாகும். தீபத்தில் உள்ள எண்ணெய் தெய்வத்துக்கு அவிர் பாகமாகப் போய்ச் சேரும். இரண்டு வேளையும் இல்லத்தில் விளக்கேற்ற வேண்டும்.
வீடுகளில் காலை 4.30 மணி முதல் 6 மணி வரை (பிரம்ம முகூர்த்தம்), மாலை 4.30
மணி முதல் 6 மணி வரை (தினப்பிரதோஷம்) காலங்களில் விளக்கேற்றுவதால், மிகுந்த புண்ணியத்தைத் தரும்.
நமது கர்ம வினைகள் நீங்கும். தெய்வத்தின் அருள் எளிதில் கிட்டும். வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து தடைகளும் நீங்கும்.
ஒரு முகம் விளக்கேற்றினால் நினைத்த செயல்களில் வெற்றி உண்டாகும். துன்பங்கள் நீங்கும். நன்மதிப்பு உண்டாகும்.
இரண்டு முகம் கணவன்-மனைவி ஒற்றுமை உண்டாகும்.
மூன்று முகம் புத்திர தோஷம் நீங்கி மக்கட் பேறு உண்டாகும்.
நான்கு முகம் அனைத்து பீடைகளும் நீங்கும். அனைத்து செல்வங்களும் கிட்டும்.
ஐந்து முகம் எல்லா நன்மைகளும் கிட்டும். அஷ்ட ஐஸ்வரியங்களும் உண்டாகும். குடும்ப ஒற்றுமை உண்டாகும். திருமணத்தடை நீங்கும். பண்ணியம் பெருகும்.
=====================================
0 Comments
THANK FOR VISIT