9TH- STD - தேர்தல், அரசியல் கட்சிகள் மற்றும் அழுத்தக் குழுக்கள்-
1.
தமக்கான பொது சேவகர் ஒருவரை மக்கள் வாக்களித்து தேர்வு செய்யும் முறை- தேர்தல்.
2.
இந்திய தேர்தல் முறை, எந்த நாட்டின் தேர்தல் முறையினைப் பின்பற்றி ஏற்றுக்கொள்ளப்பட்டது- இங்கிலாந்து.
3.
உலகின் மிகப்பெரிய மக்களாட்சி கொண்ட நாடு – இந்தியா.
4.
இந்தியா ஒரு சமத்துவ, மதச்சார்பற்ற, மக்களாட்சி, குடியரசு நாடாகும்.
5.
இந்திய அரசியலமைப்பின் தேர்தல் பற்றி குறிப்பிடுவது : பகுதி-XV , பிரிவு
- 324 முதல் 329 வரை.
6.
தன்னிச்சையான தேர்தல் ஆணையம் அமைத்திட இந்திய அரசியலமைப்பு சட்டப் பிரிவு - பிரிவு 324.
7.
யாருடைய காலத்தில் குடவோலை வாக்களிக்கும் முறை வழக்கத்தில் இருந்தது – சோழர்கள்.
8.
தேசிய வாக்காளர் தினம் கொண்டாடப்படும் நாள் - ஜனவரி - 25.
9.
தேசிய அளவில் அரசாங்கத்தின் தலைவர் – பிரதமர்.
10.
இந்திய தேர்தல் ஆணையம் : ஒரு தலைமை தேர்தல் ஆணையர் , 2 - தேர்தல் ஆணையர்கள்.
11.
பாராளுமன்ற தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் போன்ற சட்டங்களை இயற்றுவது- நாடாளுமன்றம்.
12.
மாநில சட்டசபைத் தேர்தல் சம்மந்தமான வாக்காளர்களின் பட்டியல் தயாரித்தல், தொகுதிகளை வரையறை செய்தல் போன்றவற்றை அரசியலமைப்பிற்குட்பட்டு
12. தேவையான சட்டங்களை இயற்றுவது- மாநில சட்ட சபை.
13.
நோட்டா - எவரும் இல்லை . (NOTA =
None Of The Above)
14.
பொதுத் தேர்தலில் முதல் முறையாக NOTA அறிமுகப்படுத்தப்பட்ட
ஆண்டு -2014.
15.
NOTA வை அறிமுகப்படுத்திய நாடுகளில் இந்தியா எத்தனையாவது நாடு – 14.
16.
இந்திய தேர்தல் நடத்தை விதிகள்- (1961) -இல் எனும் சட்டத்தின் விதி எண் 49-O இம்முறை பற்றி விவரிக்கிறது.
17.
வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கைச் சோதனை - VVPAT (Voters
Verified Paper Audit Trial).
18.
ஒருவர் தான் வாக்கு சரியானபடி பதிவாகி உள்ளதா என்று தெரிந்து கொள்ள பொதுத் தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்திய ஆண்டு - 2014.
19. இந்தியாவில் காணப்படும் தேர்தல் முறைகள்- 2. நேரடி தேர்தல் , மறைமுக தேர்தல்.
20.
வாக்காளர்கள் தமது பிரதிநிதிகளைத் தாங்களே நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவது - நேரடித் தேர்தல்.
21.
மக்களவை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MP) தேர்தல் முறை - நேரடித் தேர்தல்.
22.
சட்டமன்றத் தேர்தல்களில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் (MLA) தேர்தல் முறை - நேரடித் தேர்தல்.
23.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர் , தலைவர்கள் தேர்தல் முறை- நேரடித் தேர்தல்.
24.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் வாக்களித்துத் தேர்வு செய்யும் முறை - மறைமுகத் தேர்தல்.
25.
குடியரசுத் தலைவர் தேர்தல் முறை - மறைமுக தேர்தல்.
26.
இந்திய குடியரசுத் தலைவர் எந்த உறுப்பினர்கள் கொண்ட தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்-பாராளுமன்றத்தின் இரு அவையின்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்.
1. இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்கள் ,யூனியன் பிரதேசங்களில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள்.
2. பாராளுமன்ற இரு அவைகள் மற்றும் மாநில சட்டமன்றங்களில் நியமிக்கப்படும் நியமன உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெறமாட்டார்கள்.
27.
கட்சி முறையின் வகைகள்- ஒரு கட்சி முறை, இரு கட்சி முறை, பல கட்சி முறை.
28.
ஒரே ஒரு ஆளும் கட்சி மட்டும் பங்கு பெறுவது - ஒரு கட்சி முறை
- எதிர்கட்சிகள் அனுமதிக்கப்படுவதில்லை.
29.
ஒரு கட்சி முறை
எ.கா : சீனா, கியூபா, முன்னாள் சோவியத் யூனியன்.
30.
இரு முக்கிய கட்சிகள் மட்டுமே பங்கு பெறுவது - இரு கட்சி முறை.
31.
இரு கட்சி முறை எ.கா : அமெரிக்க ஐக்கிய நாடுகள், இங்கிலாந்து.
32.
இரண்டிற்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கு பெறுவது - பல கட்சி முறை .
பல கட்சி முறை எ.கா : இந்தியா, இலங்கை, பிரான்ஸ், இத்தாலி.
33.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சியின் வகைகள் -2- தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள்.
34.
ஒரு கட்சி குறைந்தது நான்கு மாநிலங்களிலாவது மாநிலக் கட்சி என்ற தகுதியை பெற்றிருக்குமானால் அது - தேசியக் கட்சி.
35.
தேசியக் கட்சிகளுக்கும், மாநிலக் கட்சிகளுக்கும் சில சிறப்புச் சலுகைகளை வழங்குகிறது. இக்கட்சிகளுக்கு தனித்தனிச் சின்னங்கள் வழங்கப்படுகிறது.
36.
ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் மட்டுமே அக்கட்சியின் சின்னத்தை உபயோகிக்க முடியும்.
37.
2017 நிலவரப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ள தேசிய கட்சிகளின் எண்ணிக்கை - 7.
38.
ஒரு கட்சி தேசியக் கட்சி எனும் பங்கு பெற பின்வரும் முறைகளில் ஏதேனும் ஒன்றை நிறைவு செய்திருத்தல் வேண்டும்.
1. மக்களவை தேர்தல் (அ) மாநில சட்டசபைத் தேர்தல் குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் பதிவான மொத்தச் செல்லத்தகுந்த வாக்குகளில் குறைந்தபட்சம் 6% பெற்றிருக்க வேண்டும்.
2. மக்களவையில் குறைந்தபட்சம் 2 சதவீத இடங்களில் வெற்றி பெற வேண்டும். மேலும் குறைந்தபட்சம் மூன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
3. குறைந்தபட்சம் நான்கு மாநிலங்களில் ‘மாநிலக் கட்சியாக’ அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
39.
அரசாங்கத்தினை அமைத்து, அவற்றை வழிநடத்துவது- அரசியல் கட்சிகள்-
40.
அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையில் ஒரு பாலமாக செயல்படுவது- அரசியல் கட்சி.
41.
எதிர்கட்சித் தலைவர் - கேபினட் அமைச்சர் தகுதி பெறுகிறார்.
42.
பொது நடவடிக்கைகளை பாதிக்கும் ஆளும் கட்சியின் தவறான கொள்கைகளை எதிர்ப்பவர்-எதிர்கட்சித் தலைவர்.
43.
பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக அரசுத் துறைகளின் செயல்பாடுகளைக் கேள்விக்குள்ளாக்குவதோடு மக்கள் நலனுக்காகச் செலவிடப்படும் பொதுப் பணத்தை ஆய்வு செய்பவர்- எதிர்கட்சித் தலைவர்.
44.
மத்தியக் கண்காணிப்பு ஆணைத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பிலும் முக்கியப் பங்கு வகிப்பவர் - எதிர்கட்சித் தலைவர்.
45.
அழுத்தக் குழுக்கள் என்பது - நலக்குழுக்கள் (அ) தனிப்பட்ட நலக்குழுக்கள்.
46.
அழுத்தக் குழுக்கள்- தேர்தலில் போட்டியிடுவதில்லை. அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற விளைவதும் இல்லை.
47.
அரசியலின் மற்றொரு முகம் - அழுத்தக் குழுக்கள்.
48.
உலகில் அதிக எண்ணிக்கையிலான அழுத்தக் குழுக்கள் உள்ள நாடு – இந்தியா.
49.
எந்த நாட்டின் தேர்தல் முறையினை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது-இங்கிலாந்து.
50.
இந்திய தேர்தல் ஆணையம் ஒரு- சுதந்திரமான அமைப்பு.
51.
இந்திய தேர்தல் ஆணையம் அமைக்க வழி செய்யும் அரசியலமைப்பு பிரிவு - பிரிவு 325.
52.
இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தேர்தல் ஆணையத்தைப் பற்றி கூறுகிறது-பகுதி XV.
53.
பல்வேறு அரசியல் கட்சிகளைத் தேசியக் கட்சியாகவோ (அ) மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிப்பது - தேர்தல் ஆணையம்.
54.
நோட்டா NOTA முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு - 2014.
55.
அழுத்தக்குழுக்கள் எனும் சொல்லினை உருவாக்கிய நாடு- அமெரிக்க ஐக்கிய நாடுகள்.
56.
தேசிய வாக்காளர்கள் தினம் அனுசரிக்கப்படும் நாள் - ஜனவரி – 25.
57.
இந்தியாவில் பின்பற்றப்படுகிறது கட்சி முறை - பல கட்சி முறை.
58.
நர்மதா பச்சோவோ அந்தோலன் என்பது ஒரு - அழுத்தக் குழு.
59.
பொருத்துக:
1. தேசியக் கட்சி - ஏழு
2. ஒரு கட்சி ஆட்சி முறை - சீனா
3. இரு கட்சி ஆட்சி முறை - அமெரிக்க ஐக்கிய நாடுகள்
4. அழுத்தக் குழுக்கள் - வணிகக் குழுக்கள்
60.
இந்தியாவில் அழுத்தக் குழுக்களுக்கான
எ.கா:
1. இந்திய வணிகம் மற்றும் தொழிற்துறை சம்மேளத்தின் கூட்டமைப்பு (FICCI)
2. அகில இந்தியத் தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC)
3. அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS)
4. இந்திய மருத்துவச் சங்கம் (IMA)
5. அகில இந்திய மாணவர் சம்மேளனம் (AISF)
6. அகில இந்திய சீக்கிய மாணவர் பேரவை
7. இளம் பதாகா சங்கம்(YBA)
8. தமிழ்ச் சங்கம்
9. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்
10. நர்மதா பச்சாவோ அந்தோலன்
0 Comments
THANK FOR VISIT