10TH- STD - இந்தியாவின் சர்வதேச உறவுகள்-

1.    ஒரு மோசமான அண்டை நாடு துரதிர்ஷ்டம்; அதுவே ஒரு நல்ல நாடாக அமையும் ஆனால் அதைவிட ஆசீர்வாதம் வேறு இல்லை என்று கூறியவர்- ஹெசாய்ட்.

2.    நாம் ஒருவரை முற்றிலும் சார்ந்தோ அல்லது தனித்தோ இருக்க முடியாது. ஆனால் இவ்வுலகில் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கிறோம் . என்று கூறியவர் - ஜவகர்லால் நேரு.

3.    இந்தியாவும் அதன் அண்டை நாடுகளும்:

          1.    வடமேற்கில்  - பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான்

          2.    வடக்கில்               - சீனா, நேபாளம் , பூடான்

          3.    கிழக்கில்               - வங்காளதேசம்

          4.    தூரக்கிழக்கில்       - மியான்மர்

          5.    தென்கிழக்கில்        - இலங்கை

          6.    தென்மேற்கில்        - மாலத்தீவு

4.    அதிக எண்ணிக்கையிலான அண்டை நாடுகளுடன் தனது எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் - சீனா,ரஷ்யா.

5.    ஆப்கானிஸ்தானின் ஹீரட் மாகாணத்தில் உள்ள சல்மா அணையைக் கட்ட உதவி புரிந்த நாடுஇந்தியா.

6.    இந்தியா காந்தகார் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை எந்த நாட்டில் கட்டியுள்ளதுஆப்கானிஸ்தான்.

7.    வங்காளதேசத்தின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடுஇந்தியா.

8.    இந்தியாவும் வங்கதேசமும் எத்தனை கி.மீ நீளம் கொண்ட மிக நீண்ட நிலப்பரப்பை எல்லையாக பகிர்ந்து கொள்கின்றன - 4,096.7 கி.மீ.

9.    வங்காளதேசம் பூடான், இந்தியா, நேபாளம் மோட்டார் வாகன ஒப்பந்தம்- BBIN – MVA.

10.   இந்தியாவிற்கும் வங்காளதேசத்திற்கும் இடையே கங்கை நீரை பகிர்ந்து கொள்ள பராக்க ஒப்பந்தம் கையெழுத்தான ஆண்டு-1977.

11.   இந்தியாவிற்கும் வங்காள தேசத்திற்கும் பொதுவானதாக உள்ள நதிகள்54.

12.   சிலிகுரி (மேற்கு வங்காளம்) பர்பதிபூர் (வங்காளதேசம்) ஆகிய இடங்களுக்கு இடையே எத்தனை கி.மீ நீளம் நட்புறவு குழாய் போக்குவரத்தை அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது- 130 கி.மீ.

13.   இந்தியாவிற்கு சொந்தமான டீன்பிகா என்ற பகுதி வங்காள தேசத்திற்கு எந்த ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டது- 2011.

14.   மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேசத்திற்கு இடையேயான  எல்லையில் உள்ளதுடீன்பிகா.

15.   இமயமலையில் உள்ள ஒரு சிறிய அரசுபூடான்.

16.   இடி , மின்னல், நிலம் என்று அறியப்படும் நாடு- பூடான்.

17.   உலகின் ஏழ்மையான நாடுகளில் ஒன்று - பூடான்.

18.   இந்தியா மற்றும் பூடான் இடையேயான ராஜதந்திர உறவுகள் எந்த ஆண்டிலிருந்து தொடங்கியது- 1968.

19.   இந்தியா பாரத் முதல் பூடான்  வரை B2B இருதரப்பு வணிக உறவினை அறிவித்துள்ளது.

20.   இந்தியா பூடானில் அமைத்துள்ள மூன்று நீர்மின்சக்தி திட்டங்கள் - சுக்கா, குரிச்சி, தலா.

21.   இந்தியாவிலிருந்து - பூடானுக்கு  சென்றார்  புத்த துறவி - குரு பத்மசம்பவா.

22.   பூடானில் புத்த சமயத்தை பரப்பியதன் மூலம் இரு நாட்டு மக்களிடையே பாரம்பரியத்தை உறுதிப்படுத்தினார் - குரு பத்மசம்பவா.

23.   இந்தியாவுடன் ஒப்பிடுவதற்குத் தகுதி வாய்ந்த நாடு - சீனா .மட்டுமே.

24.   சீனாவால் துவங்கி வைக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பில் (ShanghaiCooperation) இந்தியாவிற்குப் பார்வையாளர் தகுதியை வழங்கியுள்ளது.

25.   சார்க் (SARRC) அமைப்பில் - பார்வையாளர் தகுதி சீனாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

26.   இந்தியா, சீனா மற்றும் பூடானின் கிழக்குப் பகுதி ஆகிய பகுதிகளுக்கு இடையே உள்ள எல்லைக்கோடு - மக்மகான் எல்லைக்கோடு  .

27.   மக்மகான் எல்லைக்கோடு பிரிட்டிஷ் இந்தியா, திபெத் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டத்தில் எந்த ஆண்டு தீர்மானிக்கப்பட்டது-1914.

28.   பிரிட்டிஷ் இந்தியாவின் சார்பில் இந்தியாவிற்கான செயலாளராக இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்- ஆர்தர் ஹென்றி மக்மோகன்.

29.   இந்தியா தன் இரண்டாவது மிக நீளமான எல்லையை பகிர்ந்து கொண்டுள்ளது நாடுமியான்மர்.

30.   1989  - வரை மியான்மர் பர்மா என அறியப்பட்டது.

31.   இந்தியா தென்கிழக்கு ஆசியாவிற்குள் செல்வதற்கான நுழைவாயிலாக  உள்ள நாடுமியான்மர்.

32.   கொல்கத்தாவை மியான்மரில் உள்ள சிட்வேயுடன் இணைப்பதற்காகச் சாலை-நதிதுறைமுகம் திட்டத்தினை இணைப்பதற்கு இந்தியா உருவாக்கி வருகிற திட்டம் - கலடன் பன்முக மாதிரி போக்குவரத்து.

33.   இந்தியாவுடன் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஆகியவற்றில் முக்கிய பங்குதாரராக உள்ள நாடு- மியான்மர்.

34.   இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான இயற்கையாக அமைந்த இடைப்படு நாடுநேபாளம்.

35.   நேபாள எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்திய மாநிலங்கள் - 5

          1.    சிக்கிம் ,

          2.    மேற்கு வங்காளம்

          3.    பீகார்

          4.    உத்திரப்பிரதேசம்

          5.    உத்தரகாண்ட்

36.   இந்தியாவையும் காத்மண்டுவையும் இணைப்பதற்கான 204 கி.மீ நீளமுள்ள  எந்த இணைப்பை இந்தியா கட்டியுள்ளது- மகேந்திரா ராஜ் மார்க்.

37.   இந்தியா நேபாள மொழியை அரசியலமைப்பின் எத்தனையாவது அட்டவணையில் சேர்த்துள்ளது8 அட்டவணை.

38.   எந்த ஆற்றின் குறுக்கே ஒரு கூட்டு மின்சக்தி திட்டம் இந்தியா நேபாளம் கட்டப்பட்டு வருகிறதுசாரதா.

39.   இந்தியா மற்றும் நேபாள அரசு கையெழுத்திட்டுள்ள மூன்று சகோதரி நகர் ஒப்பந்தங்கள்:

          1.    காத்மண்டுவாரணாசி.

          2.    லும்பினிபுத்தகயா.

          3.    ஜனக்பூர்அயோத்தி.

40.   1949 - ஆண்டு தீர்மானிக்கப்பட்டது போர் நிறுத்தக் கோடு - ராட்கிளிஃப் கோடு.

41.   1972 - ஆண்டின் சிம்லா ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்றுக்கொள்ளப்பட்ட எல்லை - ராட்கிளிஃப் கோடு.

42.   எல்லை ஆணையத்தின் தலைவராக இருந்தவர்ராட்கிளிஃப்.

43.   ராட்கிளிஃப் கோடு - தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது- கட்டுப்பாட்டு கோடு.

44.   இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நிலசந்திபாக்ஜலசந்தி.

45.   இந்தியாவின் நாளந்தா பல்கலைக்கழகத் திட்டத்தில் ஒரு பங்குதாரராக உள்ள நாடுஇலங்கை.

46.   அசோகர் புத்த மதத்தை பரப்புவதற்காக இலங்கைக்கு யாரை அனுப்பினார்:

          1.    மகன் மகிந்தா

          2.    மகள் சங்கமித்திரை

47.   இலங்கையின் வட பகுதியை கைப்பற்றிய சோழ அரசர்கள்:

          1.    முதலாம் இராஜராஜன்

          2.    முதலாம் இராஜேந்திரன்

48.   இராணுவ கூட்டாண்மைக்கு வழிவகுக்கும் தகவல் தொடர்பு, இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இந்தியா எந்த நாட்டுடன் கையெழுத்திட்டுள்ளது    ( COMCASA - communication compatibility and security agreement ) – அமெரிக்கா.

49.   எந்த நாடுகள் இணைந்து சர்வதேச சூரியசக்தி திட்டங்களை அறிமுகப்படுத்தி  கடகரேகை மற்றும் மகரரேகை ஆகியவற்றுக்கு இடையே உள்ள நாடுகளை ஒன்று சேர்க்கிறது - இந்தியாபிரான்ஸ்.

50.   இந்தியா -ஆஸ்திரேலியா   இடையே நடைபெறும் கடற்படை பயிற்சி – AUSINDUX.

51.   டெல்லி மெட்ரோ ரயில் எந்த நாட்டின் ஒத்துழைப்பில் உருவானதுஜப்பான்.

52.   மும்பை , அகமதாபாத் இடையேயான அதிவேக ரயில் போக்குவரத்திற்கு MAHRS  ஒத்துழைப்பு அளித்த நாடு- ஜப்பான்.

53.   2017 ஜப்பான் - இந்தியா JIM உற்பத்தி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள மாநிலங்கள்:

          1.    குஜராத்

          2.    கர்நாடகா

          3.    ராஜஸ்தான்

          4.    தமிழ்நாடு

54.   மேற்கு ஆசியா என்பது எந்த நாடுகளை உள்ளடக்கியது :

          1.    எகிப்து

          2.    அரேபிய தீபகற்பம்

          3.    துருக்கி

          4.    ஈரான்

55.   சபஹார் ஒப்பந்தம் (முக்கூட்டு ஒப்பந்தம்) எந்த நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டுள்ளது :

          1.    இந்தியா

          2.    ஆப்கானிஸ்தான்

          3.    ஈரான்

56.   உலகின் மிகப்பழமையான கடல் வர்த்தக பாதை சுமேரியாவில் இருந்து பஹ்ரைன் வழியாக மெலுக்கா என்று அழைக்கப்பட்ட சிந்து சமவெளி வரை அமைக்கப்பட்டிருந்தது .

57.   இடைக்காலத்தில் இந்தியர்களின் மருத்துவம் கணிதம் மற்றும் வானியல் திறமைகளை அரேபிய மற்றும் ஈரானிய அறிஞர்கள் பெரிதும் மதித்ததோடு இறுதியில் அவர்களது அறிவுசார் பாரம்பரியத்தின் பகுதியாகவும் ஆனது - எம். எஸ். அக்வானி.

58.   பிரிக்ஸ் அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள இடம்  - சீனா – ஷாங்காய்.

59.   பிரிக்ஸ் என்ற சொல்  உருவாக்கிய பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் -ஜிம் நேய்ல்.

60.   BRICS கூட்டமைப்பில் உள்ள நாடுகள்  :

          1.    பிரேசில்,

          2.    ரஷ்யா,

          3.    இந்தியா,

          4.    சீனா,

          5.    தென்னாப்பிரிக்கா

61.   OPEC பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு எந்த நகரில் நிறுவப்பட்ட ஒரு அரசு அமைப்பாகும்- ஈராக்கின் பாக்தாத்.

62.   OPEC தலைமையகம் உள்ள இட‌ம் - ஆஸ்திரியாவின் - வியன்னா.

63.   ஒபெக் நிறுவன உறுப்பினர்கள் :

          1.    ஈரான்,

          2.    ஈராக்,

          3.    குவைத்

          4.    சவுதி அரேபியா ,

          5.    வெனிசுலா

64.   OPEC இலச்சினையை வடிவமைத்தவர் ஆஸ்திரிய வடிவமைப்பாளர்ஸ்வோபோடா.

65.   மக்மகான் எல்லைக்கோடு எந்த இரு நாடுகளுக்கும் இடையே உள்ள எல்லை- இந்தியாசீனா.

66.   இந்தியா  எந்த அமைப்பில் உறுப்பினராக இல்லை - ஏசியன் (ASEAN).

67.   ஒபெக் (OPEC) என்பது - எண்ணெய் ஏற்றுமதி நிறுவனங்களின் அமைப்பு.

68.   இந்தியா தனது மிக நீண்ட நில எல்லையை எந்த நாட்டோடு பகிர்ந்து கொள்கிறது-வங்காளதேசம்.

69.   எத்தனை நாடுகள் இந்தியாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன7.

70.   எத்தனை மாநிலங்கள் நேபாளத்துடன் தங்கள் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன-5.

71.   இந்தியா மற்றும் மியான்மரின் கலடன் போக்குவரத்துத்திட்டம் பின்வரும் போக்குவரத்து முறைகளில் எந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளது :

          1.    சாலை

          2.    கப்பல்

          3.    உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து

72.   பொருத்துக:

          1.    சல்மா அணைஆப்கானிஸ்தான்.

          2.    பராக்கா ஒப்பந்தம்- வங்காளதேசம்.

          3.    சுக்கா நீர்மின்சக்தி திட்டம்பூடான்.

          4.    சாரதா கூட்டு மின்சக்தி திட்டம்நேபாளம்.

          5.    பிராண்டிக்ஸ் - விசாகப்பட்டினத்தில் ஆடை நகரம்.

          6.    ஷிங்கன்சென்ஜப்பான்.

          7.    பிரிக்ஸ்ஷாங்காய்.

          8.    ஒபெக் - வியன்னா.

          9.    தகவல் தொடர்பு இணக்கத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒப்பந்தம் COMCASA - அமெரிக்க நாடுகள்.