லக்னாதிபதி பலன்கள்

லக்னத்திற்கு உரிய அதிபதி ஜாதகத்தில் எந்த இடத்தில் அமைந்துள்ளான் என்பதை வைத்து பலன் பலன் கண்டுபிடிக்கும் முறை:

1.   லக்னாதிபதி லக்னதிலேயே இருந்தால்:

நீண்ட ஆயுளுள்ளவர். எப்பொழுதும் சுகமான வாழ்வு அமைகிறது. நல்ல உழைப்பாளியகவும் இவர் விளங்குகின்றான். இவருக்கு இரண்டு மனைவிகள் அமைவதற்கு இடமிருக்கிறது.

2.   லக்னாதிபதி இரண்டாம் வீட்டில் இருந்தால்:

செழிப்பும் உயரமும் கொண்ட தேக அமைப்பு கிடைக்கிறது. தனவான், தர்மம் செய்பவர். ஒழுக்கம் உள்ளவர். மான உணர்வு மிக்கவர்.

3.   லக்னாதிபதி மூன்றான் இடத்தில் இருந்தால்:

சகோதரர்களின் சகாயம் அவருக்கு எப்போதும் உண்டு. சிங்கத்திற்கு ஒப்பான பராகிரமம் உள்ளவர். சகல சௌபாக்கியங்களையும் பெற்றவர்.

4.   லக்னாதிபதி நான்காம் இடத்தில் இருந்தால்:

அரசரால் போற்றப்படகூடிய அந்தஸ்தை பெறுகிறார். தெய்வ வழிபாடுடையவர். பெற்ற தாய் தந்தையரின் மகிசிக்காக எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுபவர். தர்ம ஸ்தாபனத்தில் தன்னை ஈடுபடுத்தி கொள்பவர்.அதக சகோதர்கள் உள்ளவர். வாகன யோகம் உள்ளவர். தேகசுகம் உள்ளவர்.

5.   லக்னாதிபதி 5 ஆம் இடத்தில் இருந்தால்:

நீண்டகாலம் வாழும் புத்திரர்களை உடையவர். சுபகாரியங்களுகாக பொருளை செலவிடகூடியவர். சங்கீத ஞானத்தில் பற்றுள்ளவர். பணிவும் அடக்கமும் இவரது பண்பு நலன்கள். பூர்வ புண்ணியம் வாய்க்கப்பெற்றவர்.

6.   லக்னாதிபதி 6 ஆம் இடத்தில் இருந்தால்:

எப்போதும் பகைவர்களின் தொல்லை உண்டு.சுப குணம் இவர் உடன் பிறந்தது.தாய் மூலம் சௌகர்யத்தை தேடிகொள்பவர். தாய் மாமனின் உதவியும் இவருக்கு உண்டு. மாடு கன்று வைத்து வாழ்பவர். லக்னாதிபதி 6ஆம் இடத்தில இருபது அவ்வளவு நல்ல பலன்களை உண்டாக்காது.

7.   லக்னாதிபதி 7 ஆம் இடத்தில் இருந்தால்:

பெண்கள் மூலம் சுகம், செல்வம் இவற்றை அடைவார். ஒழுக சீலர். அலங்கார பிரியர். ஆனாலும் இவரது மனைவி நெடு நாள் வாழ்வது சந்தேகமே. ஒரு கட்டத்தில் இவர் விரக்தியடைந்து வேறு தேசம் செல்லவும் நேரிடலாம்.

8.   லக்னாதிபதி 8 ஆம் இடத்தில் இருந்தால்:

பற்பல துன்பத்திற்கு ஆளாகிறார். மரணத்திற்கு ஒப்பான உபாதை ஏற்படுகிறது. எவ்வளவு பாடுபட்டாலும் செல்வம் இவரிடம் சேராது. எப்பொழுதும் யாரோடும் வாதிட்டு கொண்டே இருபதால் ஒரு சமயத்தில், திருடராகவும், பிறர் மனைவியிடத்தில் நாட்டமுள்ளவராகவும், கொடுமையாளராகவும் மாற வாய்ப்புள்ளது.

9.   லக்னாதிபதி 9 ஆம் இடத்தில் இருந்தால்:

எல்லோரிடமும் சரளமாக பழகி நல்ல நட்பை தேடிகொள்வார். தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பார். பெரும்புகழ் பெறுவார். அரசர்களும் பணியகூடிய அந்தஸ்தை பெறக்கூடியவர். பேச்சாற்றல் மிக்கவர். இல்லறத்தை நல்லறமாக்குபவர். திருமாலை வழிபடுபவர்.

10. லக்னதிபாதி 1௦ ஆம் இடத்தில் இருந்தால்:

அரசர்கொப்பான வாழ்க்கை உடையவர். குரு பூஜை செய்பவர். தாயும் தந்தையும் போற்ற வாழ்பவர். சகல சுகமும் பெற்றவர். நோயில்லாமல் நிறை வாழ்வு வாழ்பவர்.

11. லக்னாதிபதி 11 ஆம் இடத்தில் இருந்தால்:

தெளிவான் சிந்தனையும் நிறைவான் வாழ்வும், அமைப்பான வாகன சுகமும், அரச மரியாதையும் பெறுவார்.

12. லக்னாதிபதி 12 ஆம் இடத்தில் இருந்தால்:

ஜாதகரின் வாயில் இனிய சொற்களை எதிர்ப்பார்ப்பது அரிது. கடுகடுதவர். குடிகேடுபவர். துஷ்டர் சகவாசமும் கேட்ட நினைப்பும் கொண்டவர். தன் சகோதரனுகே எதிரியாவார். தன் தேசம் விட்டு வேறு தேசம் செல்லும் நிலைக்கு ஆளாவார். நல்ல பெயர் எடுபதற்கு வாய்ப்பு இல்லை.

லக்னத்தை மற்ற கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.

1.   சூரியன் லக்னத்தை பார்த்தால் தகப்பன் வழி சொத்து கிடைக்கும். அரசாங்கத்தில் பணியாற்றுவார். பெண்களிததில் முரட்டுதனமாக நடந்து கொள்வார்.

2.   சந்திரன் லக்னத்தை பார்த்தால் அழகுள்ளவர். தாயாள குணம் மிக்கவர். பெண்களுக்கு வசபடுபவர். திரவ சம்பந்தமான பொருள்களை வியாபாரம் செய்பவர்.

3.   செவ்வாய் லக்னத்தை பார்த்தால் எத்தகைய முரடனானாலும் தன்னுடைய சாகஸத்தால் சிநேகிதர் ஆக்கி கொள்பவர். தர்ம சிந்தனை உள்ளவர்.

4.   புதன் லக்னத்தை பார்த்தால் சிற்பகலையில் ஈடுபாடு கொண்டவர். புகழ்மிக்கவர். பல வழிகளில் வெகுமானம் பெறுபவர்.

5.   குரு லக்னத்தை பார்த்தால் யாகம், விரதம் ஆகியவற்றில் ஈடுபாடு கொண்டவர்.சதுகளிடமும், ஞானிகளிடமும் ப்ரீதி உள்ளவர்.

6.   சுக்ரன் லக்னத்தை பார்த்தால் வேசிகளின் சேர்கை உள்ளவர். தனலாபம் உள்ளவர்.

7.   சனி லக்னத்தை பார்த்தால் பயங்கர ரோகதால் பீடிகப்பட்டவர். மூர்க்க குணம் உள்ளவர்

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.