தளை, அடி, தொடை, அசை , சீர்
1.
தளை எத்தனை வகைப்படும்-7.
1. நேரொன்றாசிரியத்தளை - மா முன் நேர்
2. நிரையொன்றாசிரியத்தளை- விளம் முன் நிரை
3. இயற்சீர் வெண்டளை- மா முன் நிரை, விளம் முன் நேர்
4. வெண்சீர் வெண்டளை- காய் முன் நேர்
5. கலித்தளை- காய் முன் நிரை
6. ஒன்றிய வஞ்சித்தளை- கனி முன் நிரை
7. ஒன்றா வஞ்சித்தளை- கனி முன் நேர்
2.
அடி எத்தனை வகைப்படும்- 5.
1. குறளடி
2. சிந்தடி
3. அளவடி (அ) நேரடி
4. நெடிலடி
5. கழிநெடிலடி
3.
அடிதோறும் இருசீர்களைப் பெற்று வருவது – குறளடி.
4.
அடிதோறும் முச்சீர்களைப் பெற்று வருவது - சிந்தடி.
5.
அடிதோறும் நான்கு சீர்களைப் பெற்று வருவது - அளவடி அல்லது நேரடி .
6.
அடிதோறும் ஐந்து சீர்களைப் பெற்று வருவது - நெடிலடி .
7.
அடிதோறும் ஆறு அல்லது அதற்குமேற்பட்ட பல சீர்களைப் பெற்று வருவது- கழிநெடிலடி.
8.
தொடை எத்தனை வகைப்படும்- 8 .
1. மோனைத்தொடை
2. எதுகைத்தொடை
3. முரண்தொடை
4. இயைபுத்தொடை
5. அளபெடைத்தொடை
6. இரட்டைத்தொடை
7. அந்தாதித் தொடை
8. செந்தொடை
9.
அசை எத்தனை வகைப்படும் - 2.
1. நேரசை
2. நிரையசை
10.
சீர் எத்தனை வகைப்படும்- 4.
1. ஓரசைச்சீர்
2. ஈரசைச்சீர்
3. மூவசைச்சீர்
4. நாலசைச்சீர்
0 Comments
THANK FOR VISIT