சனி காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.

1.   இரும்பு, இரும்பு சம்மந்தப் பட்ட தொழில்களில் தான் இவர்கள் வல்லுனர்கள் ஆக இருப்பார்கள்.

2.   கடினமாக உழைக்க வல்ல இவர்களுக்கு அம்மாதிரியேதொழில் அமையும்.

3.   இவர்கள் நீல வண்ணமுடைய சரக்குகளை விற்பனை செய்தால் இலாபம் உண்டு

4.   தோல் வியாபாரம் செய்யலாம்

5.   எண்ணெய் வியாபாரி ஆகலாம்

6.   எள் பயிரிட்டு விற்பனை செய்யலாம்

7.   தரகர்களாக தொழில் நடத்தலாம்

8.   மர வியாபாரம் செய்யல்லாம்

9.   இரும்பு வியாபாரம் ஏற்றது

10. அழுகும் பொருட்கள் வியாபாரம் செய்யலாம்

11. கசாப்பு கடை நடத்தலாம்

12. கால்நடைகளை உற்பத்தி செய்து விற்பனை செய்து இலாபம் பெறலாம்

13. காவல் துறை ரகசியப்பிரிவில், உளவுத்துறையில் பணியாற்றலாம்

14. மர வேலைசெய்யலாம்

15. விவசாயம் செய்யலாம்

16. கூலி வேலை செய்யலாம்

17. மறு சுழற்சி தொழில்களில் ஈடுபடலாம்

18. தண்டல், வரி வசூல் செய்யல்லாம்

19. மருந்தாளுனராகலாம்

20. அகழ்வாராய்ச்சி நிறுவனங்களில் பணிபுரியலாம்

21. பொறியியல் துறையில் பணியாற்ற வாய்ப்பு உண்டு

22. வெடி குண்டு தயாரிப்பு கிடங்குகளில் வேலை கிடைக்கும்

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.