9TH- STD - உள்ளாட்சி அமைப்புகள் -

1.    இந்தியாவில் உள்ளாட்சி அமைப்பு உச்சநிலையை அடைந்தது யாருடைய காலம் - பிற்காலச் சோழர்கள் , தஞ்சை சோழப்பேரரசு.

2.    நவீன உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடித்தளமிட்டவர்- ரிப்பன் பிரபு.

3.    உள்ளாட்சி அமைப்புகளின் தந்தை- ரிப்பன் பிரபு.

4.    இந்திய அரசு சட்டம், மாகாணங்களில் தன்னாட்சியை அறிமுகப் படுத்திய ஆண்டு1935.

5.    மாகாணங்களில் தன்னாட்சி சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு-1937 .

6.    பஞ்சாயத்து ராஜ் அமைப்புகள் கிராமங்களிலிருந்து நகரங்கள் வரை கட்டமைக்கப்பட வேண்டும் என்பது யாருடைய திட்டம் - மகாத்மா காந்தி.

7.    உள்ளாட்சி அமைப்புகளை அறிமுகம் செய்த ஆண்டு - 1882 ரிப்பன் பிரபு.

8.    இந்தியாவில் நிர்வாகத்தை தாராளமயமாக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்- ரிப்பன் பிரபு.

9.    சமூக அபிவிருத்தி திட்டம் - 1952.

10.   தேசிய நீட்டிப்பு சேவை - 1953.

11.   பஞ்சாயத்து ராஜ் சட்டம் - 1957.

12.   பல்வந்த்ராய் மேத்தா குழு - 1957- மூன்று அடுக்கு பஞ்சயாத்து அமைப்பு.

13.   அசோக் மேத்தா குழு - 1977 - 1978- இரண்டு அடுக்கு பஞ்சயாத்து அமைப்பு.

14.   ஜி.வி.கே. ராவ் குழு      - 1985.

15.   எல்.எம். சிங்வி குழு - 1986.

16.   73 மற்றும் 74 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம்1992.

17.   பல்வந்த்ராய் மேத்தா குழுவின் மூன்று அடுக்கு பஞ்சாயத்து பரிந்துரைகள்

          1.    கிராம அளவில் கிராம ஊராட்சிகள்.

          2.    வட்டார அளவில் பஞ்சாயத்து சமிதி - நேரடித் தேர்தல்.

          3.    மாவட்ட அளவில் ஜில்லா பரிஷத்து - மறைமுகத் தேர்தல்.

18.   அசோக் மேத்தா குழு: 1977.

          1.    இரண்டு அடுக்கு முறை.

          2.    அரசியல் கட்சிகள் அனைத்து நிலைத் தேர்தல்களிலும் பங்குபெற வேண்டும்.

19.   ஜி.வி.கே. ராவ் குழு : 1985.

          1.    திட்டக்குழுவால் நியமிக்கப்படுதல்

          2.    வேரற்ற புற்கள்

20.   எல்.எம். சிங்வி குழு - 1986  - 73 மற்றும் 74 வது அரசமைப்புத் திருத்தச் சட்டம்1992.

21.   தமிழ்நாடு பஞ்சாயத்து ராஜ் அமைப்பு சட்டம் ஆண்டு - 1994.

22.   பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சிறப்பம்சம்:

          1.    மூன்று அடுக்கு அமைப்பு

          2.    கிராம சபை

          3.    தேர்தல் ஆணையத்தினை நிறுவுதல்

          4.    நிதி ஆணையத்தினை நிறுவுதல்

          5.    மக்கள் தொகைக்கு ஏற்ற விகிதத்தில் பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு

          6.    பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீடு

          7.    மாவட்ட திட்டக்குழுக்களை அமைத்தல்.

23.   கிராம ஊராட்சியின் தலைவர் மற்றும் பகுதி உறுப்பினரின் பதவிக் காலம் - 5 ஆண்டு.

24.   500 க்கும் மேற்பட்ட மக்கள் தொகை - கிராமம் ஊராட்சி.

25.   மூன்றடுக்கு அமைப்பு உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்பில் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பெற்றுள்ளது- கிராம ஊராட்சி .

26.   உத்திரமேரூர் கல்வெட்டு உள்ள மாவட்டம்காஞ்சிபுரம்.

27.   10 - 12ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்பு முறை யாருடைய ஆட்சிக்காலத்தில் உச்சநிலையை அடைந்தது- சோழர்கள்.

28.   கிராம சபையின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க எந்த இரகசிய தேர்தல் முறை புழக்கத்தில் இருந்தது - குடவோலை முறை.

29.   மதராஸ் கிராம பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு1950.

30.   மதராஸ் பஞ்சாயத்து சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-1958.

31.   மதராஸ் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு-1958.

32.   கிராம சபை கூட்டங்கள் நடைபெறும் நாட்கள்- 4.

          1.    ஜனவரி 26 - குடியரசு தினம்

          2.    மே 1 - உழைப்பாளர் தினம்

          3.    ஆகஸ்ட் 15 - சுதந்திர தினம்

          4.    அக்டோபர் 2 - காந்தி பிறந்த தினம்

33.   பல ஊராட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கப்படுவது - ஊராட்சி ஒன்றியம்.

34.   ஊராட்சி ஒன்றியத்தின் வளர்ச்கிப் பணிகளை மேற்பார்வையிடும் அதிகாரம் பெற்றுள்ளவர்கள்- மாவட்ட ஆட்சியர், திட்ட அலுவலர் ,சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் .

35.   மாவட்ட ஊராட்சி - 50000 மக்கள் தொகை.

36.   நகர்ப்புற உள்ளாட்சிகள் :

          1.    பேரூராட்சி     - 10000. மக்கள் தொகை

          2.    நகராட்சி  - 100000. மக்கள் தொகை

          3.    மாநகராட்சி   - பல லட்சம். மக்கள் தொகை

37.   கிராமப்புறங்களின் பிரதிநிதிகளை மக்களாகக் கொண்ட கிராம சுயராஜ்ஜியத்தை விரும்பியவர்  - மகாத்மா காந்தி.

38.   இந்தியாவின் ஆன்மா கிராமங்களில் வாழ்கிறது என்பதை உணர்ந்தவர்-  மகாத்மா காந்தி.

39.   பேரூராட்சி நிர்வாகம் தலைவர் - செயல் அலுவலர்.

40.   நகராட்சி நிர்வாகம் தலைவர் - நகராட்சி ஆணையர்.

41.   மாநகராட்சி நிர்வாகம் தலைவர்- மாநகராட்சி ஆணையர்.

42.   மாநகராட்சி தலைவர் -மேயர்.

43.   தமிழ்நாட்டில் உள்ள  மாநகராட்சிகள் - 15.

          1.    சென்னை

          2.    கோவை

          3.    மதுரை

          4.    திருச்சி

          5.    திருநெல்வேலி

          6.    சேலம்

          7.    ஈரோடு

          8.    வேலூர்

          9.    தூத்துக்குடி

         10.   திருப்பூர்

         11.   தஞ்சாவூர்

         12.   திண்டுக்கல்

         13.   நாகர்கோயில்

         14.   ஓசூர்

         15.   ஆவடி

44.   பெரியார் .வே.ரா எந்த ஆண்டில் இருந்து பல ஆண்டுகள் ஈரோடு நகராட்சியின் பெருந்தலைவராக பதவி வகித்தார் -1917.

45.   பெரியார் ஈரோட்டில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் முறையினை செயல்படுத்திய ஆண்டு -1919.

46.   இந்திய நகராட்சி நிர்வாகங்களில் குழாய் மூலம் குடிநீர் விநியோகம் முறையினை முதன்முதலில் செயல்படுத்தியவர்பெரியார்.

47.   1985 ம் ஆண்டு திட்டக் குழவினால் நிறுவப்பட்ட குழு - G.V.K ராவ் மேத்தா குழு.

48.   73 மற்றும் 74வது அரசமைப்புத் திருத்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வந்த ஆண்டு - 1992.

49.   ஊராட்சிகளின் ஆய்வாளராகச் செயல்படுகின்றவர்- மாவட்ட ஆட்சியர்.

50.   பொருத்துக:

          1.    மாவட்ட ஊராட்சி   - மாவட்ட ஆட்சியர்.

          2.    கிராம சபைகள் - கிராமங்கள்.

          3.    பகுதி குழுக்கள் - நகராட்சிகள்.

          4.    ஊராட்சி ஒன்றியம் - பெருந்தலைவர்.

          5.    மாநகராட்சி  - மாநகரத் தலைவர்.

https://www.a2ztnpsc.in/