8TH - STD - பணம், சேமிப்பு மற்றும் முதலீடுகள் -
1.
பொது ஏற்புத் தன்மையை அடிப்படையாகக் கொண்டு பண்டங்கள் வாங்கும்போது அதற்கான சிறு தொகையாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய எதனையும் பணம் என்று கூறலாம் - இராபர்ட்சன்.
2.
பணம் என்ற வார்த்தை ரோம் வார்த்தையான " மொனேட்டா ஜூனோ" விலிருந்து பெறப்பட்டது.
3.
இந்தியாவின் ரூபாய் என்ற சொல் எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது- சமஸ்கிருதம்.
4.
ரூபியா என்பதன் பொருள் - வெள்ளி நாணயம்.
5.
பணம் கண்டுபிடிப்பதற்கு முன்பாக பயன்படுத்தப்பட்ட முறை - பண்டமாற்று முறை.
6.
பண்டமாற்று முறையில் உள்ள குறைபாடுகள்:
1. இருமுகத் தேவை பொருத்தமின்மை
2. பொதுவான மதிப்பின் அளவுகோல்
3. பொருட்களின் பகுபடாமை
4. செல்வத்தை சேமிப்பதற்கான சிரமங்கள்
7. பணத்தின் பல நிலைகள்:
1. பண்ட பணம்
2. உலோக பணம்
3. காகிதப் பணம்
4. கடன் பணம்
5. நிகர் பணம்
8.
கி.மு. 8 ம் நூற்றாண்டில் உலோக நாணயத்தை கண்டுபிடித்த லிடியாவின் பேரரசர் - மிடாஸ்.
9. கி.மு. 6 ம் நூற்றாண்டில் முதன் முறையாக மகாஜனபதங்கள் ஆட்சியில் அச்சடிக்கப்பட்ட நாணயங்கள்:
1. பூரணாஸ்
2. கர்ஷபணம்
3. பனாஸ்
10.
தங்கம், வெள்ளி, தாமிரம் (அ) ஈயம் போன்ற நாணயங்களை துளையிட்டு வெளியிட்டார்கள் – மெளரியர்கள்.
11.
கிரேக்க மரபுப்படி சித்திரங்கள் பொறிக்கப்பட்ட நாணயங்களை அறிமுகப்படுத்தியவர்கள் - குஷாண அரசர்கள்.
12.
டெல்லி துருக்கி சுல்தான்கள் தங்கள் நாணயங்களில் இந்திய அரசர்களின் உருவத்தை நீக்கி இஸ்லாமிய எழுத்துக்களை பொறித்து வெளியிட்ட ஆண்டு - 12 ம் நூற்றாண்டு.
13.
தங்கம், வெள்ளி மற்றும் தாமிரத்தால் ஆன நாணயங்களை எவ்வாறு அழைத்தனர் – டாங்கா.
14.
மதிப்பு குறைந்த நாணயங்களை எவ்வாறு அழைத்தனர் - ஜிட்டால்
15.
முகலாய சாம்ராஜ்யம் முழு சாம்ராஜ்யத்திற்கான பணவியல் முறையை ஒருங்கிணைத்த ஆண்டு – 1526.
16.
செர்ஷா சூரி, ஆட்சியில் இருந்த போது எத்தனை கிராம் எடையுள்ள வெள்ளி நாணயத்தை வெளியிட்டார்- 178 கிராம்.
17.
ருபியா என்ற நாணயத்தை வெளியிட்டவர் - செர்ஷா சூரி.
18.
ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி முகலாய நாணையத்தை பிரபலப்படுத்திய ஆண்டு – 1600.
19.
ஆங்கிலேயர்களுக்கு முகலாய நாணயத்தை பம்பாய் அச்சகத்தில் அச்சடிக்க அனுமதி அளித்தவர் - பாருக்ஷாயர் முகலாய பேரரசர் – 1717.
20.
ஆங்கில தங்க நாணயங்கள் – கரோலினா.
21.
வெள்ளி நாணயங்கள் – ஏஞ்ஜேலினா.
22.
செம்பு நாணயங்கள் – கப்ரூன்.
23.
வெண்கல நாணயங்கள் – டின்னி.
24.
மின்னணு வங்கியை எவ்வாறு அழைக்கலாம் - தேசிய மின்னணு நிதி பரிமாற்றம். NEFT.
25. பண மதிப்பின் வகைகள்:
1. பணத்தின் அக மதிப்பு
2. பணத்தின் புற மதிப்பு
26.
உள்நாட்டிலுள்ள பண்ட , பணிகளின் வாங்கும் சக்தியை குறிப்பது- பணத்தின் அக மதிப்பு.
27.
வெளி நாட்டிலுள்ள பண்ட ,பணிகளை வாங்கும் சக்தியை குறிப்பது - பணத்தின் புற மதிப்பு.
28.
இந்திய ரூபாய் குறியீட்டை வடிவமைத்தவர் - உதயகுமார். விழுப்புரம்.
29.
இந்திய ரூபாய் குறியீட்டை இந்திய அரசு அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு - 2010 ஜூலை 15.
30.
பணம் என்பது ஒரு கடினமான கருத்தாகும் என்பது யாருடைய கருத்து- ஸ்டோவ்ஸ்கி.
31.
பணத்தின் மூன்று பணிகள் :
1. கணக்கீட்டின் அலகு
2. மதிப்பின் அளவுகோள்
3. மதிப்பின் நிலைகலன்
32.
பணம் அதன் பணிகளால் வரையறுக்கப்படுகிறது. எது வெல்லாம் பணமாக கருதப்படுகிறதோ அவை பணமாக பயன்படுத்தப்படுகிறது என்பது யாருடைய கூற்று - சர்ஜான் ஹிக்ஸ்.
33.
எதையெல்லாம் செய்யவல்லதோ அதுவே பணம் என கூறியவர்-பேராசிரியர் வாக்கர்.
34.
விலைகள் உயர்ந்து பணத்தின் மதிப்பு வீழ்ச்சி ஆடைவதைக் குறிப்பது- பணவீக்கம்.
35.
விலைகள் குறைந்து பணத்தின் மதிப்பு உயர்வதைக் குறிப்பது- பணவாட்டம்.
36.
இந்திய அரசாங்கம் கருப்பு பணத்திற்கு எதிராக அனைத்து 500,1000 நோட்டுக்களை பண மதிப்பிழப்பு செய்வதாக அறிவித்த நாள் - 2016 நவம்பர் 8.
37.
பண மோசடி நடவடிக்கை தடுப்புச் சட்டம் – 2002.
38.
ஊழல் தடுப்புச் சட்டம் – 1988.
39.
வெளிக்கொணரப்படாத வெளிநாட்டு வருமானம் மற்றும் சொத்து மசோதா சட்டம் -2015 .
40.
பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் – 1988 , திருத்தப்பட்டது - 2016 .
41.
ரியல் எஸ்டேட் (ஒழுங்குமுறை மற்றும் மேம்பாடு) சட்டம் – 2016.
42.
காகித பணத்தை அறிமுகப்படுத்தியது – பிரிட்டிஷ்.
43.
பொருளாதாரத்தில் கருப்பு பணத்தின் விளைவுகள் :
1. இரட்டை பொருளாதாரம்.
2. உண்மை அளவை குறைத்து மதிப்பீடு செய்வது.
3. வரி ஏமாற்றுதல் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு.
4. சமத்துவம் வலுவிழத்தல்.
5. பணக்காரர் மற்றும் ஏழைகளின் இடைவெளி அதிகரித்தல்.
6. ஆடம்பர நுகர்வு செலவு.
7. உற்பத்தி முறையில் விலகல்.
8. பற்றாக்குறை பணத்தை விநியோகித்தல்.
9. சமுதாயத்தில் பொது ஒழுக்க நிலைகளின் வீழ்ச்சிகள்.
10. உற்பத்தி மீதான விளைவுகள்.
44. வங்கி பணம் என்பது :
1.
காசோலை
2.
வரைவு
3. கடன் மற்றும் பற்று அட்டைகள்
45.
பணவியல் ,நிதித்தகவல் சேகரிப்பு , வெளியீட்டுக்கு பொறுப்பானது- இந்திய ரிசர்வ் வங்கி.
46.
வங்கி என்ற சொல் எந்த வார்த்தையிலிருந்து பெறப்பட்டது – இத்தாலியம்.
47.
இந்திய வங்கியியல் கட்டுப்பாட்டுச் சட்டம் – 1949.
48.
பொருத்துக:
1. பண்டமாற்று முறை -
பண்டங்களுக்கு பண்டங்கள் பரிமாற்றம்
2. இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் -
1935
3. மின் – பணம் - மின்னணு பணம்
4. சேமிப்பு -
நுகர்வு தவிர்த்த வருமானம்
5. கருப்பு பணம் -
வரி ஏமாற்றுபவர்கள்
0 Comments
THANK FOR VISIT