இரண்டு மனைவி யாருக்கு?இரண்டு மனைவி யாருக்கு?
பல பெண்களுடன் தொடர்பு
குரு ,சுக்கிரன்
ஏதாவது ஒரு கட்டத்தில் இருந்து, குருவுக்கும் சுக்கிரனுக்கும் அடுத்த கட்டத்தில் அல்லது
அதற்கு முன் கட்டத்தில் புதன் அமர்ந்து இருந்தாள், அந்த ஜாதகருக்கு நிறைய பெண்களுடன்
தொடர்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.
இரண்டு மனைவி யாருக்கு?இரண்டு மனைவி யாருக்கு?
1.
பெண்களின்
விஷ யத்தில் சுக்கிரனுக்கு யோகத்தைப் பற்றி அதிகாரம் வழங்கப் பட்டிருக்கிறது. ஒருவர்
ஜாதகத்தில் சுக்கிரன் மற்ற கிரகத்தோடு சேர்ந்து ஒரு வீட்டில் அமர்ந்து இருந்தால் அவருக்கு
மனைவியைத் தவிர வேறு பெண்ணோடு தொடர்பு ஏற்படும்.
2.
சுக்கிர
னோடு இரண்டு கிரகங்கள் சேர்ந்து ஒரு வீட்டில் இருந்தால் இரண்டு பெண்களின் தொடர்பு ஏற்படும்.
இப்படி சுக்கிரனோடு எத்தனைக் கிரகங்கள் சேர்ந்தாலும் அத்தனைப் பெண்களின் தொடர்பு அந்த
ஜாதகருக்கு ஏற்படும் என்று ஜோதிடத்தின் கணக்குச் சொல்கிறது.
3.
ஆனால்
இரண்டு தாரம் அதாவது முறையாக திருமணம் முடித்து இல்லற வாழ்வில் இரண்டு குடும்பங்கள்
ஏற்பட்டு வாழ்க்கை நடத்துகிறவர் யார்? சோதிட சாஸ்த்திரம் என்ன சொல்கிறது? சோதிட சாஸ்த்திரத்தில்
மிதுனம், கடகம் இந்த ராசிக்காரர்களுக்கு எளிதில் இரண்டு
தாரம் அமைந்து விடுகிறது.
4.
மிதுனத்தில்
புதன் கிரகம் ஆட்சியாக அமர்ந்து இருக்கிறது. புதனுக்கு மனித தேகத்தில் சதைக்கு அதிகாரம்
கொடுக்கப்பட்டு இருக்கிறது. எனவே மிதுனத்தினை ராசியாகக் கொண்ட வர்களும், லக்கினமாகக்
கொண்டவர்களும் சற்று பருமனாக இருப்பார்கள். எனவே புதனின் அதிகாரம் பெற்ற மிதுன ராசிக்
காரர்கள் பெரும்பாலும் இரண்டு தார யோகம் அடைந்த வர்கள். இத்துடன் புதனின் நண்பனான சுக்கிரன்
எந்த இடத்தில் இருந்தாலும் கவனிக்க வேண்டியது இல்லை. ஏனெனில் புத னுக்கு சுக்கிரன்
தக்க நேரத்தில் துணையாக இருந்து இந்த இரண்டு தார யோகத் தைச் செய்து காட்டுவார், முக்கியமாக
சுக்கிரன் குடும்பஸ்தானம் என்னும் இரண்டாம் வீட்டிலும், சப்தமஸ் தானம் என்னும் களத்திர
பாவத்தில் அமர்ந்து இருந்தாலும் இந்த யோகம் கிடைக்கிறது.
5.
இதேபோல
கடக ராசி நேயர்களுக்கும் இரண்டு தார யோகம் காத்து இருக்கும். இந்த ராசிக்காரர்கள் வெகு
நேர்த்தியானவர்கள் இளம் வயது முதலே கடக ராசி நேயர்களை பல பெண்கள் வட்டமடித்துக் கொண்டு
இருப்பார்கள். இருப்பினும் இந்த கடக ராசி நேயர்கள் தனக்குப் பிடித்தவர்களை மணம் முடித்து
இல்லற வாழ்க்கையை வெகு நேர்த்தியாக நடத்தி வருவர். பிறர் என்ன சொல்லுவார்கள் என்பதைப்
பற்றி சிறிதும் கவலையே பட மாட்டார்கள்.
6.
மீன ராசி நேயர்களும்
இரண்டு தாரத்திற்கு உட் பட்டவர்கள். ஏனெனில் சுக்கிரன் மீனத்தில் உச்சம் பெற்று இருப்பதாலும்,
அங்கு குரு ஆட்சி பெற்று இருப்ப தாலும் இந்த ராசி நேயர்கள் அல்லது லக்கினத்தோர்களுக்கு
இரண்டு தாரம் யோகம் அமைந்து விடுகிறது. முறையாக செய்வது ஒன்றும், கள்ளத்தனமாக வைத்துக்
கொள்வதுமாக அமைந்து விடுகிறது. புத்திர காரகனான குருவான வர் மீனத்தில் ஆட்சியும், கடகத்தில்
உச்சம் பெற்று இருப்பதாலும், இந்த இரண்டு ராசி நேயர்களுக்கும் நிச்சயமாக இரண்டு தாரம்
உண்டாகி விடுகிறது. இவைகள் எல்லாம் சரியான நேரம் வரும் போது அமைந்து விடும். எந்த திசை
ஆனாலும் சுக்கிர புத்தி வரும்போதும் அல்லது சுக்கிரன் அதிகாரம் பெற்ற நட்சத்திரங்களில்
ராகுவோ, சனியோ அல்லது சப்தமஸ் தானத்தில் அமர்ந்த கிரகத்தின் திசை நடந்தாலும் இந்த யோகத்
தைச் செய்து விடுகிறது.
7.
துலாம், ரிஷபம்
இந்த இரண்டு ராசிக்காரர் களுக்கும் இந்த இரண்டு தாரம் யோகம் வாய்த்து விடுகிறது. ஏனெனில்,
சனிபகவான் துலாத்தில் உச்சம் பெறுவதும், சூரியன் துலாம் ராசியில் நீச்சம் பெறுவதும்
ஏற்படுகிறது. சுக்கிரனுக்கும் சனி பகவானுக்கும் அவ்வளவு நேசம். இந்த ராசிக்காரர்களுக்கு
சனி திசையில் சுக்கிர புத்தி வரும்போது நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்பட்டு தாரத்தைத்
தந்து விடுகிறது. அதாவது இரண்டாவது தாரத்தைத் தந்துவிடுகிறது.
8.
ரிஷப
ராசிக்காரர் களுக்கும் இந்த யோகம் நிச்சயமாகக் கிடைத்துவிடுகிறது. காரணம் சுக்கிரன்
ஆட்சி பெற்ற இடம் ரிஷபம். இரண்டு தாரம் யோகம் காத்து இருக்கிறது. திசைகள் நல்ல விதமாக
அமைந்துவிட்டால் போதும் நிச்சயம் இரண்டு தாரம் அமைந்து குடும்பம் நடத்துவார்கள். மிதுனம், கடகம், ரிஷபம், துலாம், மீனம் இந்த ஐந்து ராசிக்காரர்களுக்கும்
இரண்டு தாரம் அமைந்து விடும் என்பது விதி. இவர்களுக்கு மட்டும்தானா? மற்ற ராசிக் காரர்களுக்கு
கிடையாதா என்றால் அவர்களுக்கும் உண்டு.
9.
எப்படி
என்றால் மற்ற ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் இரண்டாம் இடத்திலும் ஏழாமிடத்திலும், அமர்ந்து
இருந்து பாவக்கிரகங்கள் சுக்கிரச் சாரம் ஆனால், பரணி, பூசம்,
பூராடம் நட்சத்திரத்தில் அமர்ந்து இருந்து அதனுடைய திசை புத்தி நடந்து வந்தால்
நிச்சயம் பெண்களின் தொடர்பு ஏற்படும். ஆனால் முறையாக இரண்டாவது தாரம் என்பது ஏற்படாது.
பல பெண்களின் தொடர்பு ஏற்படும் அவ்வளவே.
10. அதேபோல்தான் பெண்களின் ஜாதகத்திலும் ஏற்படும்.
ஆண்களுக்கு மட்டும் என்று எண்ண வேண்டாம். மனித தேகத்தில் ஆண் சட்டையும், பெண் சட் டையும்
அணிந்து வந்த இருபாலருக்கும் மேற்சொன்ன பலன் பொதுவானது. இன்னும் சோதிட சாஸ்த்திரத்திற்குள்
சென்றால் அனேக ரகசியங்கள் இருக்கிறது.
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT