குரு காரகத்துவம் பெற்றவர்களுக்கு அமையும் தொழில்கள்.
1.
ஆன்மீக
துறையில் நாட்டம் கொண்டு அதன் வாயிலாக சிலருக்கு ஜீவனம் அமையும்.
2.
சிலர்
மாகத்துமாவாக மாறி பிறர் மூலம் காப்பாற்றப்படுகின்றனர்.
3.
நகை
வியாபாரமும், புஸ்பராக வியாபாரமும் ஏற்றது.
4.
எலுமிச்சை,
ஊதுவத்தி, தென்னை, பாக்கு, கரும்பு வெல்லம் வியாபாரம் ஏற்றது
5.
பொதுவாக
யாகங்கள், புரோகித தொழிலில் ஈடுபடுதல், கதா கலோட்சபம் செய்தல், தெய்வீக காரியங்களில்
ஈடுபடுதல், மதப் பிரசாரம் செய்தல், ஆலயங்களில் மதப் பிரச்சாரம் செய்தல், ஆலயங்களில்
அறங்காவல் துறையில் ஈடுபடுதல், மடங்களில் இருத்தல், தொண்டு செய்தல், ஆலய குருக்களாக
இருத்தல் போன்ற முழுவதுமான ஆன்மீகத் தொழிலிலே தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருமானத்தைப்
பெருகிக் கொள்ளலாம்.
6.
வேறு
சிலர் குறிப்பட்ட இனம், மதம், பிராந்தியம் போன்றவற்றிற்க்கு தலைவராகி அதன் மூலம் வாழ்க்கை
நடத்துவர்.
7.
இன்சுரன்சு
துறை ஏற்றது
8.
எங்கெங்கு
காசு, பணம் புழங்குகின்றதோ அங்கெல்லாம் இவர்கள் காசாளர்களாக இருக்க தகுதி வாய்க்கும்.
9.
இவர்கள்
தேர்தலில் நின்றால் சட்டமன்ற உருப்பினராகவோ, மந்திரிகளாகவோ கூட ஆகலாம்.
10. இவர்களில் பலருக்கு வக்கீலாகவும், நீதிபதி
ஆகவும் தகுதி உண்டு
11. அரசியலில் இவர்கள் மிக்க ஈடுபாடு கொண்டவர்களாக
இருப்பார்கள்.
12. பிறர்மீது குற்றம் சாட்டப்பட்டு விசாரிக்கப்படும்
பொது, அந்த விசாரணை கமிசனில் இவர்கள் முக்கிய பொறுப்பில் இருப்பார்கள்.
13. இவர்கள் நிர்வாக துறையில் சிறப்பாக ஈடுபட
முடியும்.
14. மளிகை கடை வைத்தால் இலாபத்தை அடையக்கூடியவர்களாக
சிலர் விளங்குவார்கள்.
15. தங்கச் சுரங்கத்தில் பணியாற்றும் தகுதி சிலருக்கு
வாய்க்கும்.
16. தொழிலார்களின் தலைவர்களாகவும் சிலர் விளங்குவர்
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT