வரப்போகும் வாழ்க்கைத் துணையின் திசையைக் காணும் முறை :

1.   இதனை தோராயமாகவே தான் சொல்ல முடியும். ஒருவரின் ஜனன ஜாதகத்தில், லக்கினத்திற்கு 7 ஆம் அதிபதி எந்த ராசியில் இருக்கிறாரோ, அந்த ராசிக்குரிய திசையை சொல்வதானால், 70-80 சதவீதம் சரியாக வரும்.

2.   ஒருவரின் ஜனன ஜாதகத்தில், 7 ஆம் இடத்தில் ஒரு கிரகம் இருப்பதாக இருந்தால், ஏழாம் அதிபதியை விட்டுவிட்டு ஏழில் இருக்கும்  கிரகத்தின் திசையை எடுத்துக்கொள்ளவேண்டும்.

3.   இதே,  ஒருவரின் ஜனன ஜாதகத்தில், 7 ஆம் இடத்தில் பல கிரகங்கள் இருந்தால், அந்த கிரகங்களின் பாகை வரிசைப்படி , எந்த கிரகம் அதிக பாகை பெற்றிருக்கிறது என அறிந்து அந்த திசையை சொல்லவேண்டும்.

கிரகங்களின் திசைகளை அறிவோம்.

1.       சூரியன் - கிழக்கு

2.       சந்திரன் - வடமேற்கு

3.       செவ்வாய்- தெற்கு

4.       புதன் - வடக்கு

5.       குரு - வடகிழக்கு

6.       சுக்கிரன் - தென்கிழக்கு

7.       சனி - மேற்கு

8.       ராகு/கேது - தென்மேற்கு அல்லது அவை நிற்கும் வீட்டின் திசை.

1.       மேஷம், சிம்மம், தனுசு -   கிழக்கு

2.       ரிஷபம், கன்னி, மகரம் - தெற்கு

3.       மிதுனம், துலாம், கும்பம் - மேற்கு

4.       கடகம், விருச்சிகம் , மீனம் -  வடக்கு

மேற்சொன்ன விதிகளை மிகவும் ஆராய்ந்து பின்னர் அறிவிக்க வேண்டும்.

உதாரணத்திற்கு இங்கு இரண்டு ஜாதகங்களைக் காண்போம் :

உதாரணம் -1

ஒருவர், மேஷ லக்கினம் என்று கொள்வோம். இந்த ஜாதகத்தில் , ஏழாம் வீட்டு அதிபதி சுக்கிரன். ஆனால் அங்கு புதன் நிற்பதால், புதனுக்குரிய திசை வடக்கு எனக் கூறவேண்டும். அவர் நிற்கும் ராசி துலாம் என்பதால், அது மேற்கு திசையைக் குறிப்பதாகும். இப்போது நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் அந்த ஜாதகருக்கு வரப்போகும் வரன் ஆனது ஒன்று வடக்கிலிருந்து வரும் அல்லது வடமேற்கிலிருந்து வரும் என அடித்துக் கூறலாம். அது சரியாகவரும்.

உதாரணம் -2

இன்னொருவர், அவரும் மேஷ லக்கினம் என்று கொள்வோம். இந்த ஜாதகத்தில், ஏழாம் வீட்டு அதிபதி சுக்கிரன். ஆனால் அங்கு பல கிரகங்கள்  நிற்பதாகக் கொள்ளுவோம். இப்போது அங்கு நிற்கும் கிரஹங்களில் எது அதிக பாகை பெற்றிருக்கிறதோ அந்த திசையையே எடுத்துக்கொள்ளவேண்டும். அது சரியாகவரும். உதாரண ஜாதகத்தில் குருவின் பாகையே அதிகமாக வருவதால், வடகிழக்கு திசையில் என்று தீர்மானிக்கலாம்.