7TH- STD - தென்இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்-
1. பண்டைய சோழ அரசின் பகுதி - காவிரி கழிமுகப் பகுதி.
2. பண்டைய சோழ அரசின் தலைநகரம்- உறையூர் (திருச்சிராப்பள்ளி).
3. 9 - ஆம் நூற்றாண்டில் சோழ வம்சத்தை மீட்டெடுத்தவர்-விஜயாலயன்.
4. தஞ்சாவூரைக் கைப்பற்றி தலைநகராக ஆக்கியவர் - விஜயாலயன்.
5. முதலாம் இராஜேந்திரனும் அவருக்குப்பின் வந்தோரும் எந்த இடத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தனர்- கங்கைகொண்ட சோழபுரம்.
6. சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் - முதலாம் ராஜராஜன் . 985 -1014.
7. ராஜராஜேஸ்வரம் கோவிலைத் (பிரகதீஸ்வரர்கோவில்) தஞ்சாவூரில் கட்டியவர் - முதலாம் ராஜராஜன்.
8. முதலாம் ராஜராஜன் மகன் – முதலாம் ராஜேந்திரன். 1014 – 1044.
9. முதலாம் ராஜேந்திரன் அரியணை ஏறிய ஆண்டு - 1023 .
10. கங்கை கொண்டான் (கங்கையைக் கைப்பற்றியவர்) என்று
தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்- முதலாம் ராஜேந்திரன்.
11. வடஇந்தியப் போர்களில் பெற்ற வெற்றியின் நினைவாக எழுப்பப்பட்டது- கங்கைகொண்ட சோழபுரம் கோவில். முதலாம் ராஜேந்திரன்.
12. முதலாம் ராஜேந்திரன் ஸ்ரீவிஜயப் பேரரசைக் (தெற்கு சுமத்ரா) கைப்பற்ற துணைபுரிந்தது – கடற்படை.
13. விஜயாலயன் வழிவந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் – அதிராஜேந்திரன்.
14. யாருடைய ஆட்சி காலத்தில் சோழர்களுக்கும் கீழை சாளுக்கியர்களுக்கும் இடையிலான திருமண உறவு தொடங்கியது - முதலாம் ராஜராஜன்.
15. முதலாம் ராஜராஜனின் மகளான குந்தவையை மணந்த சாளுக்கிய இளவரசர் – விமலாதித்தன்.
16. முதலாம் இராஜேந்திரனின் மகளான அம்மங்கா தேவியை மணந்தவர்- ராஜராஜ நரேந்திரன்.
17. குந்தவை மற்றும் விமலாதித்தனுடைய மகன் - ராஜராஜ நரேந்திரன்.
18. அம்மங்காதேவி மற்றும் ராஜராஜ நரேந்திரனுடைய மகன் - முதலாம் குலோத்துங்கன்.
19. சாளுக்கிய - சோழ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர்- முதலாம் குலோத்துங்கன்.
20. இலங்கையில் சோழர்களுக்கு சொந்தமாக இருந்த பகுதிகளை இழந்தவர் - முதலாம் குலோத்துங்கன்.
21. 1279 ல் பாண்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் தோற்கடிக்கப்பட்ட கடைசி சோழ வம்சத்தின் மன்னர் - மூன்றாம் ராஜேந்திர சோழன்.
22. அரசருடைய மூத்தமகன் எவ்வாறு அழைக்கப்பட்டார் – யுவராஜன்.
23. சோழர்கள் நிர்வாகம் வரிசை - பேரரசு - மண்டலங்கள் - நாடுகள் – கூற்றங்கள்.
24. சோழர்களின் நிர்வாகத்தில் மிகச்சிறிய அலகு – கிராமம்.
25. சோழர் ஆட்சி காலத்தில் உள்ளாட்சி நிர்வாகம்- ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார்.
26. சோழ ஆட்சியின் கிராம சபை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்து தெளிவாக விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டுகள் அமைந்துள்ள இடம் – காஞ்சிபுரம்.
27. சோழர் ஆட்சிக் காலத்தில் நிலவரி (1/3) – காணிக்கடன்.
28. வேளாளரில் நிலங்களின் உடமையாளர்களாக இருக்க இயலாதவர்-உழுகுடி பிரிவினர்.
29. கிராம சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை:
1. ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் (வார்டு) ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
2. மொத்தம் இருந்த குடும்பங்கள்- 30.
3. போட்டியிடும் ஆடவர் வயது -35 முதல் 70 .
4. வேதங்களிலும் சமய நூல்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பதும், நில உரிமையாளராகவும் சொந்த வீடு உடையவராகவும் இருக்க வேண்டும்.
30. பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்- பிரம்மதேயம்.
31. சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் - பள்ளிச் சந்தம்.
32. கோவில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் - தேவதான கிராமங்கள்.
33. வேளாண்வகை என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்- வேளாளர்.
34. 16- மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணையை முதலாம் ராஜேந்திர சோழன் உருவாக்கிய இடம்- கங்கைகொண்ட சோழபுரம்.
35. நீரைக் கொண்டு வருவது – வாய்க்கால்.
36. நீரை வெளியேற்றுவது – வடிகால்.
37. நிர்வாக பிரிவில் மட்டத்தில் பயன்பட்டது- நாடு வாய்க்கால்கள்.
38. அனைவருக்கும் சொந்தமான வாய்க்கால் - ஊர் வாய்க்கால்.
39. திருமுறைகளை தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி.
40. எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் வேத கல்லூரியை நிறுவியவர்- முதலாம் ராஜேந்திரன்
41. புதுச்சேரி அருகே திருபுவனை எனும் ஊரில் வேத கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு - 1048.
42. செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமுக்கூடலில் வேத கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு- 1067.
43. பெரியபுராணம்,கம்பராமாயணம் யாருடைய காலத்தில் இருந்த உன்னதமான இலக்கியங்களாகும் – சோழர்கள்.
44. சோழர்களின் காலத்தில் வணிகம் மேற்கொண்ட வணிகக்குழு கில்டு அமைப்புகள்:
1. கடல் கடந்து வணிகம் செய்பவர்கள்- அஞ்சு வண்ணத்தார்.
2. உள் நாட்டு வணிகர்கள்- மணி கிராமத்தார்.
45. அஞ்சு - வண்ணத்தார் குழு உள்ளடக்கியது:
1.
மேற்கு ஆசியர்கள்
2.
அராபியர்கள்
3.
யூதர்கள்
4.
கிறிஸ்தவர்கள்
5. இஸ்லாமியர்கள்
46. அஞ்சு - வண்ணத்தார், மணி – கிராமத்தார் காலப்போக்கில் எவ்வாறு ஒருங்கிணைந்தன- ஐநூற்றுவர் , திசை - ஆயிரத்து ஐந்நூற்றுவர்.
47. கடல்கடந்த வணிக நடவடிக்கைகளில் செயல்படுத்திய அமைப்பு - ஐநூற்றுவர்.
48. ஆரம்பகால பாண்டியர்களின் துறைமுகமாகவும் தலைநகரமாகவும் இருந்தது- கொற்கை.
49. பொ.ஆ. 6 ஆம் நூற்றாண்டில் களப்பிரர்களை வெற்றிகொண்டு தென் தமிழகத்தில் தங்களை மீண்டும் வலுவாக நிறுவி கொண்டவர்கள்- பாண்டியர்கள்.
50. களப்பிரர் ஆட்சியை முடித்து வைத்தவர் என அரியபடுபவர் – கடுங்கோன்.
51. பல்லவ அரசர்கள் முதலாம் மகேந்திரவர்மன் , முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரின் சமகால பாண்டிய மன்னர்- அரிகேசரி மாறவர்மன்.
52. அரிகேசரி மாறவர்மன் அரியணை ஏறிய ஆண்டு - கி.பி. 642.
53. அரிகேசரி மாறவர்மன் சமணர்களை துன்புறுத்திய - கூன்பாண்டியன் என அடையாளப்படுத்தப்படுகிறார் .
54. அரிகேசரி மாறவர்மனை சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர் – திருஞானசம்பந்தர்.
55. அரிகேசரி மாறவர்மன் எத்தனை சமணர்களைக் கழுவேற்றியதாக கூறப்படுகிறது-8000.
56. அரிகேசரிக்கு பின்னர் பாண்டிய அரச வம்சத்தின் மகத்தான மன்னர் - முதலாம் வரகுணன். ஜடில பராந்தக நெடுஞ்சடையன்.
57. வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி- முதலாம் வரகுணன்.
58. பல்லவர்களால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய மன்னர்கள்:
1.
ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்
2. இரண்டாம் வரகுணன்
59. 920 இரண்டாம் ராஜசிம்மன் எந்த சோழ மன்னனிடம் தோல்வியைத் தழுவினார்- முதலாம் பராந்தகன்.
60. விஜயாலயனின் வழிவந்த கடைசி அரசர் – அதிராஜேந்திரன்.
61. பிற்கால பாண்டியர்களின் தலை நகரம் மற்றும் துறைமுகம் - மதுரை மற்றும் காயல்.
62. வெனிஸ் நாட்டைச் சேர்ந்த பயணி மார்க்கோ போலோ காயலுக்கு வருகை தந்த ஆண்டு- 1288,1293.
63. பாண்டிய அரசு "செல்வச் செழிப்புமிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதி என்று புகழாரம் சூட்டியவர் – மார்க்கோ போலோ.
64. காயல் துறைமுக நகர் அரேபிய, சீனக் கப்பல்கள் நிரம்பியிருந்தது. சதி உடன்கட்டையேறுதல் - வழக்கம் இருந்தது தனது பயண குறிப்புகளில் பதிவு செய்தவர் - மார்க்கோ போலோ.
65. இலங்கையோடு சேர்ந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்க கற்களையும் முத்துக்களையும் உற்பத்தி செய்வது - காயல் துறைமுகம்.
66. ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பாண்டிய அரசர் - சடைய வர்மன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்.
67. இரண்டாம் பாண்டியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர்- சடையவர்மன் சுந்தரபாண்டியன்.
68. சடைய வர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி -ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை பரவி இருந்தது,
69. சுந்தரபாண்டியனின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு கப்பம் கட்ட சம்மதித்தவர்- சேர அரசர்,
70. கண்ணனூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் சுந்தரபாண்டியன் - வீர சோமேசுவரரை. தோற்கடித்தார்.
71. சுந்தரபாண்டியனின் ஆட்சியின்போது அவருடன் இரண்டு பேர் கூட்டு அரசர்களாக ஆட்சி செய்தவர்கள் - விக்கிரம பாண்டியன் , வீரபாண்டியன்.
72. மாறவர்மன் குலசேகரன் ஆட்சி புரிந்த ஆண்டுகள் - 40 ஆண்டுகள்.
73. மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகன்கள்- விக்கிரம பாண்டியன், சுந்தரபாண்டியன்.
74. மாறவர்மன் குலசேகரன் யாரை கூட்டு அரசனாக நியமித்தார் – வீரபாண்டியன்.
75. சுந்தர பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்த டெல்லி சுல்தான் - அலாவுதீன் கில்ஜி.
76. யாருடைய படையெடுப்புக்குப் பின்னர் மதுரை, டெல்லி சுல்தானுக்கு கட்டுப்பட்ட ஒரு முஸ்லிம் அரசு உருவாக்கப்பட்டது – மாலிக்கபூர்.
77. மதுரை பொதுமக்களால் எவ்வாறு அழைக்கப்பட்டது- கூடல்.
78. பாண்டிய மன்னர்கள் பாரம்பரியமாக எவ்வாறு மதிக்கப்பட்டனர்- கூடல்கோன், கூடல் காவலன்.
79. பாண்டியர்கள் குதிரைகளை எங்கிருந்து இறக்குமதி செய்தனர்- அரேபியா.
80. பாண்டிய மன்னர்கள் - மனு சாஸ்திரத்தின் படி ஆட்சி செய்தனர்.
81. பாண்டிய மன்னர்கள் உருவாக்கிய பிராமணர் குடியிருப்புககள் - மங்களம் (அ) சதுர்வேதிமங்கலம்.
82. நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் - பூமி புத்திரர் (அ) வேளாளர்.
83. சமூக மக்கள் ஒன்றிணைந்த மன்றம் - சித்திர மேழி பெரிய நாட்டார் .
84. பாண்டியர்கள் ஆட்சியில் அரசு செயலகம் - எழுத்து மண்டபம்.
85. படைத்தளபதிகளின் பட்டங்கள்:
86. பாண்டிய நாட்டின் நிர்வாகம் வரிசை- மண்டலம் - வளநாடு - நாடு – கூற்றம்.
87. நாடுகளை நிர்வகித்தவர்கள்- நாட்டார்.
88. 800 ஆம் ஆண்டை சேர்ந்த மானூர் கல்வெட்டு எதன் தொடர்பான செய்திகளைக் கொண்டுள்ளது - கிராம நிர்வாகம்.
89. மானூர் கல்வெட்டு - திருநெல்வேலி மாவட்டம்.
90. பாண்டிய அரசர்கள் - வேத நடைமுறைகளுக்கு ஆதரவு நல்கினர்.
91. பாண்டிய அரசர்கள் செய்த அஸ்வமேதயாகம்: ஹிரண்ய கர்ப்பம், வாஜ்பேய வேள்வி .
92. பாண்டிய மன்னர்கள் சைவம், வைணவம் இரண்டையும் சமமாகவே கருதினர்.
93. பாண்டியர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றை ஆதரித்து வளர்த்தனர்.
94. துறைமுகத்தில் மாலிக் உல் இஸ்லாம் ஜமாலுதீன் எனும் அரேபிய வணிகரின் வணிக நிறுவனம் செயல்பட்டது - காயல்.
95. அரசர்கள் குதிரைகளுக்குகாக முதலீடு செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளவர்கள்-
1. மார்கோபோலோ
2. வாசப்
96. குதிரை வணிகம் குறித்து எழுதியவர் – வாசப்.
97. 10000 மேற்பட்ட குதிரைகள் காயலிலும் ஏனைய இந்திய துறைமுகத்திலும் இறக்குமதி ஆயின.
98. ஜமாலுதீன் பொறுப்பில் இனப்பெருக்கம் செய்து வளர்ந்து வந்த குதிரைகள்-1400 குதிரைகள்
99. ஒவ்வொரு குதிரையின் சராசரி விலை - 200 தினார்கள்.
100. குதிரை வணிகத்தில் ஈடுபட்டவர்களை எவ்வாறு அழைத்தனர் - குதிரைச் செட்டிகள்.
101. பொருத்துக:
1. மதுரை -
பாண்டியர்களின் தலைநகர்
2. கங்கைகொண்ட சோழபுரம் -
சோழர்களின் தலைநகர்
3. அஞ்சு வண்ணத்தார் -
கடல்சார் வணிகர்
4. மணி - கிராமத்தார் -
உள்நாட்டு வணிகர்
102. ராஜேந்திர சோழன் சூட்டிக்கொண்ட பட்டம் - கங்கைகொண்ட சோழன்.
0 Comments
THANK FOR VISIT