10TH- STD - இந்தியா-மக்கள் தொகை ,போக்குவரத்து,தகவல் தொடர்பு மற்றும் வணிகம்-
1.
இந்திய மக்கள் தொகை (2011) படி - 1,210.19 மில்லியன்.
2.
2001 மக்கள் தொகையை விட 2011 இல்- மக்கள் தொகை - 19.31 கோடி அதிகம்.
3.
உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா -2.4%
4.
உலக மக்கள் தொகையில் இந்தியா -17.5%
5.
உலகில் உள்ள எத்தனை நபர்களில் ஒருவர் இந்தியர்-6.
6.
இந்தியாவில் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது ஆண்டு - 1872.
7.
முழுமையான முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது ஆண்டு-1881.
8.
15-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு- நடை பெற்ற ஆண்டு-2011.
9.
இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகையை கொண்ட மாநிலம்.
1. உத்திரப்பிரதேசம் - 199. 5 மில்லியன்.
2. மகாராஷ்டிரா - 112.5 மில்லியன்.
3. பீகார்- 103.3 மில்லியன் .
4. மேற்கு வங்கம் - 91.3 மில்லியன்.
5. ஆந்திரா - 84.6 மில்லியன்.
10.
இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலம் - சிக்கிம் 0.61 மில்லியன்.
11.
அதிக மக்கள் தொகை கொண்ட யூனியன் பிரதேசம் - டெல்லி - 16.5 மில்லியன்.
12.
2011-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இந்தியாவின் சராசரி மக்கள் அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டருக்கு -382.
13.
இந்தியாவில் மிக அதிக மக்கள் தொகை அடர்த்தி கொண்ட மாநிலம் -பீகார் 1106 பேர் / ச.கி.மீ.
14.
இந்தியாவில் மிகக் குறைந்த மக்கள் அடர்த்தி கொண்ட மாநிலம்-அருணாச்சலப் பிரதேசம். 17 பேர் / ச.கி.மீ)
15.
யூனியன் பிரதேசங்களில் அதிக மக்கள் அடர்த்தி கொண்டது -புதுடெல்லி. 11320பேர் / ச.கி.மீ.
16.
யூனியன் பிரதேசங்களில் மிக குறைந்த மக்கள் அடர்த்தி கொண்டது -அந்தமான் நிக்கோபார் தீவுகள். 46-பேர் / ச.கி.மீ)
17.
மக்கள் தொகை அடர்த்தி தமிழ்நாடு - 555.
18.
2001 லிருந்து 2011 வரை 10 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம்-17.64%.
19.
மக்கள் தொகை பெரும் மக்களியல் பிளவு ஆண்டு -1921. மக்கள் தொகை எதிர் மறை வளர்ச்சி - 0.31%.
20.
மக்கள் தொகை தேக்க நிலை காலம் - 1901-1921.
21.
மக்கள் தொகை வெடிப்பு ஆண்டு - 1961.
22.
மக்கள் தொகை வளர்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள்-பிறப்பு விகிதம், இறப்பு விகிதம், இடப்பெயர்வு.
23.
மக்கள் தொகை பரவலை பாதிக்கும் காரணி- நிலப்பரப்பு, காலநிலை, மண், நீர் பரப்பு, கனிம வளம், தொழிலகம், போக்குவரத்து.
24.
ஒரு வருடத்தில் 1000 மக்கள் எண்ணிக்கையில் உயிருடன் பிறந்த குழந்தை எண்ணிக்கை - பிறப்பு விகிதம்.
25.
ஒரு வருடத்தில் 1000 மககள் தொகையில் இறந்தவர்களின் எண்ணிக்கை - இறப்பு விகிதம்.
26.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 121 கோடி மக்களில் எத்தனை கோடி மக்கள் இடம் பெயர்ந்தவர்கள் - 45 கோடி. ஆண்கள் - 48%, பெண்கள்- 52%
27.
இந்தியாவில் 15 வயதிற்கு குறைவான மக்கள் தொகை - 29.5%.
28.
60 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகை - 8%
29.
இந்தியாவில் உழைக்கும் மக்கள் தொகையின் சதவீதம் -62.5%
30.
2011-பாலின விகிதம் இந்தியா – 940.
31.
2011 பாலின விகிதம் - கேரளா - 1084
32.
குறைந்த பாலின விகிதம் டையூ டாமன் - 618
33.
2011-எழுத்தறிவு விகிதம் இந்தியா-74.04% ஆண்கள்-82.14% ,பெண்கள்-65.46%. ஆண் - பெண் வித்தியாசம்- 16.68%
34.
இந்தியாவில் அதிக எழுத்தறிவு பெற்ற மாநிலம்-கேரளா.
35.
இந்தியாவில் குறைந்த எழுத்தறிவு பெற்ற மாநிலம் -பீகார்.
36.
2011இந்தியாவில் வேலையில் பங்கேற்போர் விகிதம் - 39.79%.
37.
முதன்மை தொழிலாளர் - 6 மாதம் (அ) 183 நாட்கள்.
38.
6 மாதங்களுக்கு குறைவாக வேலை செய்யும் தொழிலாளர் - பகுதி நேர தொழிலாளர்.
39.
இந்தியாவில் வேலையில் பங்கேற்போர் ஆண்கள் - 53.25%,பெண்கள் - 25.51%, முதன்மை தொழிலாளர் - 75.23%,பகுதி நேர தொழிலாளர் - 24.77%.
40.
எந்த மாநிலம் மிகுந்த நகரம் மயமாக்கப்பட்ட பகுதியாக உள்ளது -கோவா 62.17%.
41.
குறைந்த நகர மயமாக்கப்பட்ட பகுதி- இமாச்சல் பிரதேசம். 10.04%
42. நகர மயமாக்கப்பட்ட பகுதிகளின் சதவீதம்:
1. டெல்லி -97.50%
2. தமிழ்நாடு - 48.4%
3. கேரளா - 47.7%
4. மகாராஷ்டிரா - 45.2%
43.
2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் நகர்ப்புற மக்கள்தொகை - 377-மில்லியன்கள்.
44.
மெகா நகரம் - மும்பை 18.4 மில்லியன், டெல்லி 16.3 மில்லியன், கொல்கத்தா - 14.1 மில்லியன்.
45.
மனிதவள மேம்பாடு என்பது கல்வி, உடல்நலம், வருமானம்அதிகாரம் போன்றவைகளில் மக்களுக்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும் ஒரு செயல்முறையாகும் என்று கூறியவர் -மெகபூப் - உல் - ஹ்க்.
46.
மனித வளர்ச்சியின் குறியீடுகள் (UNDP)-மக்கள் தொகை போக்குகள், ஆரோக்கிய வெளிப்பாடு, கல்வி சாதனைகள், தேசிய வருமானம், வள - கூட்டமைப்பு, தொழில், வேலைவாய்ப்பு, மனித பாதுகாப்பு, மனித மற்றும் முதலீட்டு ஈர்ப்பு.
47.
மனித வளம் துணை குறியீடு- நலவாழ்வியல் உணர்வு, அடிப்படை உரிமை ஒப்பந்தம்.
48.
மனித வள மேம்பாடு என்பது மூன்று அடிப்படை பரிணாமங்களைக் கொண்டது அவை - ஆரோக்கியம், கல்வி, வருமானம்.
49.
மனிதவள மேம்பாட்டு குறியீடு - HDI
1. குறைந்த மனிதவள மேம்பாடு - 0.550.
2. மிதமான மனிதவள மேம்பாடு - 0.550 - 0.699.
3. அதிக மனிதவள மேம்பாடு - 0.700 - 0.799.
4. மிக அதிக மனிதவள மேம்பாடு - 0.800 அதற்குமேல்.
50.
2016 ஆம் ஆண்டின் படி இந்தியா சுமார் எத்தனை கிலோ மீட்டர் நீளசாலையை கொண்டு உலகின் இரண்டாவது நீண்ட சாலைவலைப் பின்னல் அமைப்பை பெற்றுள்ளது - 56,03,293.
51.
ஷெர்சா சூரி தன்னுடைய பேரரசை பலப்படுத்தவும் ஒருங்கிணைக்கவும் - சாஹி -சாலையை சிந்து பள்ளத்தாக்கில் இருந்து மேற்கு வங்கத்தில் உள்ள சோனார் பள்ளத்தாக்கு வரை அமைத்தார்.
52.
கொல்கத்தாவிலிருந்து பெஷாவர் வரை உள்ள சாலை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது- கிராண்ட் டிரங்க் சாலை.
53.
தற்போது இச்சாலை - அமிர்தசரஸில் இருந்து கொல்கத்தா - வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. NH1 -டெல்லியில் இருந்து அமிர்தசரஸ் வரை,
NH2 டெல்லியிலிருந்து கொல்கத்தா வரை.
54.
2016 இன் படி மொத்த தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் எத்தனை கி.மீ-1,01,011.கி.மீ.
55.
இந்தியாவின் மிக நீளமான தேசிய நெடுஞ்சாலை -NH-7 (வாரணாசியிலிருந்து - கன்னியாகுமரி வரை 2369 கி.மீ.
56.
மிகக் குறைந்த தேசிய நெடுஞ்சாலை -NH-47A. (எர்ணாகுளம்- கொச்சி துறைமுகம் வில்லிங்டன் தீவு - 6km)
57.
2016 இன் படி மாநில நெடுஞ்சாலைகளின் நீளம் -1,76,166கி.மீ.
58.
2016 இன் படி இந்தியாவில் மாவட்ட சாலைகளின் நீளம் - 5,61,940.கி.மீ.
59.
2016 இன் படி இந்தியாவில் கிராமப்புற சாலைகளின் மொத்த நீளம் - 39,35,337 கி. மீ.
60.
NHAI -இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நிறுவப்பட்ட ஆண்டு - 1995.
61.
எல்லைப்புற சாலைகள் நிறுவனம் அமைக்கப்பட்ட ஆண்டு-1960.
62.
உலகிலேயே உயரமான எல்லைப்புற சாலை லடாக்கில் உள்ள லேவில் இருந்து எங்கு வரை அமைக்கப்பட்டுள்ளது - சண்டிகர். 4270 மீட்டர் உயரத்தில் உள்ளது.
63.
தங்க நாற்கர சாலையின் மொத்த நீளம் - 5846. கி. மீ.
64.
தங்க நாற்கர சாலைகளை இணைக்கும் பகுதிகள் - புதுடெல்லி-கொல்கத்தா-சென்னை - மும்பை.
65.
தங்க நாற்கர சாலை திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு -1999.
66.
வட தென் பகுதி ஸ்ரீநகர் - கன்னியாகுமரி - 4076 கி.மீ
67.
கிழக்கு - மேற்கு பகுதி அசாம் (சில்சார்) -குஜராத் ( போர்பந்தர்) - 3,640 கி.மீ.
68.
சாலைகளின் அடர்த்தி மிக அதிகமாக உள்ள மாநிலம்-கேரளா.
69.
சாலையின் அடர்த்தி மிக குறைவாக உள்ள பகுதி -ஜம்மு காஷ்மீர்.
70.
விரைவு சாலைகள் :
1. மும்பை -பூனா - விரைவுச்சாலை.
2. கொல்கத்தா- டம்டம் - விமான நிலைய விரைவு சாலை.
3. துர்காப்பூர் - கொல்கத்தா - விரைவுசாலை.
4. புதுடெல்லி மற்றும் ஆக்ரா - யமுனா விரைவுச்சாலை.
71.
இந்திய ரயில் போக்குவரத்து அமைப்பு ஆசியாவின் மிகப்பெரியதும் உலக அளவில் - 2 வது பெரியது.
72.
இந்திய ரயில்வே துறை எத்தனை ரயில்வே மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது -16.
73.
இந்தியாவின் முதல் ரயில் போக்குவரத்து மும்பை - தானே நகரங்களுக்கு இடையே 34 கிலோ மீட்டர் தூரத்திற்கு தொடங்கப்பட்ட ஆண்டு - 1853.
74.
இந்தியன் ரயில்வே தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு -1952.
75.
இந்தியன் ரயில்வே தலைமையிடம்-புதுடெல்லி.
76.
இந்தியாவின் முதல் புறநகர் ரயில் போக்குவரத்து 1925 எங்கு தொடங்கப்பட்டது-மும்பை.
77.
2017 - இன் படி மொத்த ரயில் பாதை நீளம் - 67368 கி.மீ.
78.
மொத்த ரயில் நிலையங்கள் - 7349.
79.
ரயில்வே இருப்புப்பாதை - 4 பிரிவு
1. அகலப் பாதை - 1.676 மீ.
2. மீட்டர் பாதை - 1.00 மீ.
3. குறுகிய பாதை - 0.762 மீ.
4. குறுகிய தூக்கு பாதை - 0.610 மீ.
80.
சென்னை நகரம் மெட்ரோ ரயில் சேவையில் எத்தனை ஆவது நகரம் ஆகும் -6.
81.
இந்தியாவின் மிக அதிவேக ரயில் வண்டி- காத்திமன் இதன் வேகம்-160 கி.மீ
82.
காத்திமன் ரயில் புதுடெல்லியையும் ஆக்ராவையும் 200 கிலோமீட்டர் தொலைவை எத்தனை நிமிடங்களில் கடக்கிறது-105 நிமிடம்.
83.
கொங்கன் ரயில்வே அமைக்கப்பட்ட ஆண்டு -1998.
84.
கொங்கன் ரயில்வே - இடைப்பட்ட 760 கி.மீ நிலத்தை -மகாராஷ்டிரா ( ரோகோவிற்கும்) உள்ள கர்நாடகா (மங்களூருக்கு)இணைக்கிறது.
85.
பொறியியல் துறையின் அதிசயமாக கருதப்படும் ரயில்வே - கொங்கன் ரயில்வே.
86.
கொங்கன் ரயில்வே 146 ஆறுகள் மற்றும் சிற்றோடைகளையும் சுமார் 2000 பாலங்களையும் 73 சுரங்கப் பாதைகளையும் கடந்து செல்கிறது.
87.
ஆசியாவின் மிக நீளமான 6.44 கி.மீ நீளம் கொண்ட சுரங்கப்பாதை இவ்வழியில் அமைந்துள்ளது
88.
மகாராஷ்டிரா, கோவா மற்றும் கர்நாடகா மாநிலங்கள் கூட்டுமுயற்சியால் இந்த வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது.
89. இந்தியாவில் எத்தனை பெருநகரங்களில் மெட்ரோ ரயில் சேவை வழங்கப்படுகிறது-8.
1. கொல்கத்தா.
2. சென்னை.
3. புதுடெல்லி .
4. பெங்களூர்.
5. குர்கயோன் (ஹரியானா),
6. கொச்சி.
7. மும்பை.
8. ஜெய்ப்பூர்.
90.
இந்தியாவில் முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட-கொல்கத்தா.
91.
2018 இன் படி இந்தியாவில் மொட்ரோ ரயில் இருப்புபாதை நீளம் -507 கி. மீ.
92.
மெட்ரோ ரயில் நிலையங்கள்-381.
93.
ரயில் போக்குவரத்து இல்லாத மாநிலம் - மேகாலயா.
94.
பழமையான மற்றும் மலிவான போக்குவரத்து முறை-நீர்வழி போக்குவரத்து.
95.
உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு -1986.
96.
தேசிய நீர்வழி போக்குவரத்து எண்.1 - ஹால்தியாஅலகாபாத் இடையே 1620 கி.மீ நீளத்தைக் கொண்டு கங்கை - பாகிரதி - ஹுக்ளி ஆறுகளுடன் இணைந்து செயல்படுகிறது.
97.
தேசிய நீர்வழி போக்குவரத்து எண். 2 - பிரம்மபுத்ரா ஆற்றில் துபிரி மற்றும் காடியாவிற்கு இடையே சுமார் 891 கிலோ மீட்டர்நீளத்தை கொண்டுள்ளது.
98.
தேசிய நீர்வழி போக்குவரத்து எண்.3 - கேரள மாநிலத்தின்கொல்லம் மற்றும் கோட்டபுரம் இடையே உள்ளது. 24 மணிநேரமும் செயல்பட்டு 205 கிலோ மீட்டர் தொலைவிற்குபோக்குவரத்து வசதி அளிக்கக்கூடிய இந்தியாவின் முதல்தேசிய நீர்வழி போக்குவரத்து .
99.
பெரிய துறைமுகங்கள் -13.
100. நடுத்தர மற்றும் சிறிய துறைமுகங்கள் - 200.
101. இந்திய அஞ்சல் நிலையங்கள் -1,55,000.
102. கிராமப்புறங்களில் உள்ள தபால் நிலையங்கள்- 1,39,000.
103. கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகங்கள்:
1. கொல்கத்தா .
2. ஹால்தியா.
3. பாரதீப் .
4. விசாகப்பட்டினம்.
5. சென்னை.
6. எண்ணூர்.
7. தூத்துக்குடி.
104. மேற்கு கடற்கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகங்கள்.
1. காண்ட்லா.
2. மும்பை.
3. நவசேவா (ஜவஹர்லால் நேரு துறைமுகம்).
4. மர்மகோவா.
5. நியூமங்களூரு.
6. கொச்சின்.
105.
இந்தியா கப்பல் கட்டும் தொழிலில்:
1. இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் - விசாகப்பட்டணம்.
2. கார்டன் ரீச் கப்பல் கட்டும் தொழிற்சாலை - கொல்கத்தா.
3. மசாகான் கப்பல் கட்டும் தொழிற்சாலை- மும்பை.
4. கொச்சி கப்பல் கட்டும் தளம் - கொச்சி.
106. இந்தியா கப்பல் கட்டும் தொழிலில் உலக அளவில் -16 வது இடம். (ஆசியா அளவில் - 2 வது இடம்).
107. முதல் இந்திய விமான போக்குவரத்து எந்த ஆண்டுஹென்றி பிக்யூர் என்பவரால் அலகாபாத்தில் இருந்து நைனிக் என்ற இடத்திற்கு கடிதங்கள் கொண்டு செல்லப்பட்டதன் மூலம் ஆரம்பமானது -1918 பிப்ரவரி.
108. எந்த ஆண்டு நாட்டில் செயல்பட்டு வந்த 8 பல்வேறு விமான நிறுவனங்கள் ஒன்றிணைக்கப்பட்டு தேசியமயமாக்கப்பட்டன-1953.
109. இந்தியாவில் தற்பொழுது எத்தனை சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன -19.
110. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நிலையம் -கொல்கத்தா.
111. சென்னை சர்வதேச விமான நிலையம் - சென்னை.
112. இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் - புதுடெல்லி.
113. சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம்- மும்பை.
114. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் -திருவனந்தபுரம்.
115. சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம்-அகமதாபாத்.
116. பெங்களூர் சர்வதேச விமான நிலையம் -பெங்களூர்.
117. ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையம் - ஹைதராபாத்.
118. பவன் - ஹான்ஸ் வானுலகு ஊர்தி நிறுவனம் :
1. ONGC எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் மற்றும் கடல் சார்ந்த பணிகளுக்கு சேவையை அளிக்கிறது.
2. புதுடில்லியை தலைமை இடமாக கொண்ட பொதுத்துறை நிறுவனம்.
3. மும்பையின் மேற்கு வில்பார்லேவில் உள்ள ஜுகு விமான நிலையத்தை தளமாக கொண்டு இயங்குகிறது.
4. மினி ரத்னா - பிரிவின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை நிறுவனம்.
119. இந்திய விமான நிலைய பொறுப்பு ஆணையம் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு -1995.
120. ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் இந்திய தேசிய விமான போக்குவரத்து கழகத்தின் கீழ் ஒன்றிணைக்கப்பட்ட ஆண்டு -2007.
121. இந்திய அஞ்சல் சேவை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்ட ஆண்டு -1857.
122. இந்தியாவின் முதல் அஞ்சல் வில்லை 1852 ஆம் ஆண்டு எங்கு வெளியிடப்பட்டது-கராச்சி.
123. விரைவு அஞ்சல் சேவை தொடங்கப்பட்ட ஆண்டு -1975.
124. அஞ்சல் குறியீடு எண் அறிமுகப்படுத்திய ஆண்டு –1972.
125. விரைவு அஞ்சல் சேவைக்காக எத்தனை அஞ்சலக தடங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது-6.
1. ராஜதானி தடம்.
2. மெட்ரோ தடம்.
3. பசுமை தடம்.
4. வணிக தடம்.
5. மொத்த அஞ்சல் தடம் .
6. பருவ இதழ் தடம்.
126. இந்திய வானொலி ஒலிபரப்பு சேவை மும்பை வானொலி சங்கம் மூலமாக எந்த ஆண்டு தொடங்கப்பட்டது-1923.
127. அகில இந்திய வானொலி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு -1936.
128. அகில இந்திய வானொலி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு -1957.
129. சீனாவிற்கு அடுத்தபடியாக 460 மில்லியன் இணைய பயன்பாட்டாளர்கள் கொண்டு இந்தியா எத்தனை யாவது இடத்தில் உள்ளது -2 வது இடம்.
130. இந்திய தேசிய செயற்கைக்கோள் அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு -1983.
131. ஆகஸ்ட் 30, 1983 ஆம் ஆண்டு தகவல் தொடர்பிற்க்காக ஏவப்பட்ட முதல் இன்சாட் வரிசை செயற்கைக்கோள்- இன்சாட் 1 B.
132. மக்கள்தொகையின் பல்வேறு அம்சங்கள் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பு -மக்களியல்.
133. மனிதவள மேம்பாடு எதன் மூலம் கணக்கிடப்படுகிறது -மனிதவள மேம்பாட்டு குறியீடு.
134. இந்தியாவின் உள்நாட்டு நீர்வழி போக்குவரத்து நீளம்-14500 கி.மீ.
135. இந்தியாவின் முக்கிய இறக்குமதி பொருள் -பெட்ரோலியம்.
136. தேசிய தொலையுணர்வு மையம் அமைந்துள்ள இடம் - ஹைதராபாத்.
137. இந்தியாவில் தங்க நாற்கர சாலையின் நீளம் - 5846 கி.மீ.
138. ஜிசாட் 7A தகவல் தொடர்புக்காக ஏவப்பட்ட ஆண்டு -டிசம்பர் 19, 2018.
139. 2021 ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை மில்லியன் மக்கள்இணைய தளத்தை பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது- 635.8.
140. 16 ரயில்வே மண்டலங்கள்:
1. வடக்கு ரயில்வே - புதுடெல்லி.
2. வடமேற்கு இரயில்வே - ஜெய்ப்பூர்.
3. வட மத்திய இரயில்வே- அலகாபாத்.
4. வடகிழக்கு இரயில்வே - கோரக்பூர்.
5. வடகிழக்கு எல்லை ரயில்வே - கெளகாத்தி.
6. கிழக்கு ரயில்வே - கொல்கத்தா.
7. கிழக்கு கடற்கரை இரயில்வே- புவனேஸ்வர்.
8. கிழக்கு மத்திய இரயில்வே - ஹசிப்பூர்.
9. மேற்கு மத்திய ரயில்வே - ஜபல்பூர்.
10. மத்திய ரயில்வே- மும்பை சத்ரபதி சிவாஜி முனையம்.
11. மேற்கு ரயில்வே - மும்பை (சர்ச்கேட்).
12. தெற்கு ரயில்வே - சென்னை.
13. தென் மத்திய ரயில்வே - செகந்திராபாத்.
14. தென் கிழக்கு இரயில்வே -கொல்கத்தா.
15. தென்மேற்கு ரயில்வே - ஹுப்ளி.
16. தென்கிழக்கு மத்திய ரயில்வே - பிலாஸ்பூர்.
17. கொங்கன் ரயில்வே - நவி மும்பை.
0 Comments
THANK FOR VISIT