ஏன் திருமணம் செய்து கொள்ள சில பேர் பயப்படுகிறார்க?

அரசாங்க வேலையும் வேணும், ஆறு அடி ஆளாகவும் இருக்கனும்..

லட்சணமாகவும் இருக்கணும், லட்சமும் சம்பாரிக்கணும்..

வீடும் இருக்கணும், வீட்டோட மாப்பிள்ளையாகவும் இருக்கணும்..

காரும் இருக்கணும், காணி நிலமும் இருக்கணும்.

தங்கமும் இருக்கணும், தங்கமாகவும் இருக்கணும்..

சமையலும் செய்யனும், சாரியும் துவைக்கனும்

நல்லவனாகவும் இருக்கணும், நாலும் தெரிஞ்சும் இருக்கணும்..

மார்டனாகவும் இருக்கணும், மதி உள்ளவனாகவும் இருக்கணும்..

உண்மையாக இருக்கணும், ஊக்கமானவனாகவும் இருக்கணும்.

அன்பாக இருக்கணும், அனுசரணையாகவும் இருக்கணும்..

தரமாகவும் இருக்கணும், தனிக்குடினமாகவும் இருக்கணும்..

மதுவும் கூடாது, மங்கையும் கூடாது..

புகையும் கூடாது, பொறந்தவளும் கூடாது..

பெத்தவங்களும் கூடாது, மத்தவங்களும் கூடாது..