7TH- STD தமிழ்நாட்டில் கலையும் கட்டடக் கலையும்

1.    தமிழ்நாட்டில் கோவில் கட்டிடக்கலையின் பரிணாம வளர்ச்சி:

          1.    பல்லவர் காலம்     - கி.பி. 600 - 850

          2.    முற்கால சோழர்கள் காலம் - கி.பி. 850 - 1100

          3.    பிற்கால சோழர்கள் காலம் - கி.பி. 1100 - 1350

          4.    விஜயநகர / நாயக்கர் காலம் - கி.பி. 1350 - 1600

          5.    நவீன காலம் - கி.பி. 1600 க்கு பின்னர்

2.    குடைவரை கோவில்கள் எனும் நிலையிலிருந்து கட்டுமான கோவில்கள் எனும் மாற்றத்திற்கு உள்ளானது யாருடைய காலம் பல்லவர்.

3.    குடைவரை கட்டிட கலைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர் - மகேந்திர வர்மன்.

4.    மகேந்திரவர்மன் உருவாக்கிய முதல் குடைவரை கோவில் - மண்டகப்பட்டிலுள்ள குடைவரை கோவில்.

5.    ஏழு கோவில்கள் என அழைக்கப்படும்கோவில்  மகாபலிபுரம் கடற்கரை கோவில்கள் யாரால் எழுப்பபட்டவை- இரண்டாம் நரசிம்மவர்மன்.

6.    ராஜசிம்மன் என்று அழைக்கப்படுபவர்- இரண்டாம் நரசிம்மவர்மன்.

7.    காஞ்சி கைலாசநாதர் கோவிலை கட்டியவர்- இரண்டாம் நரசிம்மவர்மன்.

8.    காஞ்சிவைகுண்ட பெருமாள் கோவிலை கட்டியவர் - இரண்டாம் நந்திவர்மன்

9.    தமிழ் திராவிட கோவில் கட்டிட கலை மரபிற்கு .கா: பஞ்ச பாண்டவ ரதங்கள்- மகாபலிபுரம்.

          1.    துரோபதி ரதம்

          2.    தர்மராஜ ரதம்

          3.    பீம ரதம்

          4.    அர்ச்சுன ரதம்

          5.    சகாதேவ ரதம்

10.   அர்ச்சுனன் தவம் இருக்கும் கருங்கல் பாறை- நீளம்-100 அடி - உயரம் - 45 அடி.

11.   மாமல்லபுரத்தில் உள்ள நினைவுச் சின்னங்கள் உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு1984.

12.   பல்லவர்களின் சமகாலத்தவர் - முற்கால பாண்டியர்கள்.

13.   ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட கோவிலுக்கு மிக சிறந்த .கா : கழுகுமலையில் உள்ள வெட்டுவான் கோவில்.

14.   கருவறையின் இருபுறத்திலும் அமைக்கப்பட்டுள்ளது- துவாரபாலகர் சிலைகள்.

15.   பாண்டியர் கட்டடக்கலையின் சிறப்பம்சங்கள்- பாறை குடைவரைக் கோயில்,கட்டுமானக் கோயில்.

16.   பாண்டியர் கட்டிடக்கலைக்கு .கா: மீனாட்சி அம்மன் கோவில் , திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்.

17.   முற்கால பாண்டியர்களின் ஓவியங்கள் உள்ள இடங்கள்:

          1.    சித்தன்னவாசல்     புதுக்கோட்டை.

          2.    திருமலைபுரம்        திருநெல்வேலி.

18.   சோழர்களின் கோவில் கட்டிடக்கலைக்கு .கா: தாதாபுரத்தில் உள்ள கோவில். திண்டிவனம்.

19.   முற்கால சோழர்களின் கோவில் கட்டிட கலை பின்பற்றிய பாணி  - செம்பியன் மகாதேவி பாணி.

20.   செம்பியன் மகாதேவி பாணியில் அமைந்த கோவிலுக்கு .கா: திருப்புறம்பியத்தில் உள்ள கோவில்.

21.   தஞ்சை பெரிய கோயிலின் விமானம் உயரம் -216 அடி.

22.   உலகத்தில் மனிதனால் கட்டப்பட்ட மிக உயரமான சிகரங்களில் ஒன்று- தஞ்சை பெரிய கோவில்.

23.   தஞ்சை பெரிய கோவில் மிகவும் உயரமாக அமைந்திருப்பதால் இதன் சிகரம் - தட்சிணமேரு என்று அழைக்கப்படுகிறது.

24.   தஞ்சை பெரிய கோவில் உள்ள ஒரே பாறையில் செதுக்கப்பட்ட- நந்தியின் சிலை 16 அடி நீளம் 13 அடி உயரம் .

25.   சோழர்களின் தலைநகரமாக கங்கைகொண்ட சோழபுரம் எத்தனை ஆண்டுகள் விளங்கியது250.

26.   பிரகதீஸ்வரர் கோவிலை கங்கைகொண்ட சோழபுரத்தில் கட்டியவர் - இராஜேந்திர சோழன் - கோவிலின் உயரம் - 55 மீட்டர்.

27.   கும்பகோணத்திற்கு அருகேயுள்ள தாராசுரத்தில் ஐராவதீஸ்வரர் கோவிலை கட்டியவர் - இரண்டாம் ராஜராஜன்.

28.   விஜயநகர காலத்தில் கோவில்களில் கட்டப்பட்ட கல்யாண மண்டபங்களுக்கு .கா:

          1.    காஞ்சிபுரம் - வரதராஜ பெருமாள் கோவில்.

          2.    வேலூர் -  ஜலகண்டேஸ்வரர் கோவில்.

          3.    மதுரை கோவிலில் அமைந்துள்ள புதுமண்டபம்.

29.   கோவில்களுக்கான நுழைவுவாயில்களில் நான்கு புறங்களிலும் மிகப்பெரும் கோபுரங்கள் - விஜயநகர காலத்தில் கட்டப்பட்டன.

30.   இராமேஸ்வரம் கோவில் பிரகாரங்கள்:

          1.    வெளிப்பிரகாரம் - 7 மீட்டர் உயரம்.

          2.    கிழக்கு , மேற்கு பிரகாரங்கள் - 120 மீட்டர் நீளம்.

          3.    வடக்கிலும் தெற்கிலும் உள்ள பிரகாரங்கள் - 195 மீட்டர் நீளம்.

31.   விஜயநகர கால- புடைப்புச் சிற்பங்கள்:

          1.    திருநெல்வேலி - திருக்குறுங்குடி அழகியநம்பி கோவில்.

          2.    திருவரங்கம் - ரங்கநாதர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள கோபாலகிருஷ்ணா கோவில்.

          3.    ஆழ்வார்திருநகரி - ஆதிநாதர் கோவிலில் உள்ள தெற்குவிழா மண்டபம்

          4.    திருநெல்வேலி - நெல்லையப்பர் கோவிலின் முகப்பில் மேற்கூரையில் அமைந்துள்ள புகுமுக மண்டபம்.

32.   விஜயநகர, நாயக்கர் கால ஓவியங்கள் காணப்படும் இடங்கள :

          1.    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில்

          2.    மதுரை கூடல் அழகர் கோவில்

          3.    திருவில்லிபுத்தூர்

          4.    திருவெள்ளரை

          5.    அழகர் கோவில்

          6.    திருவண்ணாமலை

          7.    திருவரங்கம்

33.   உலகிலேயே மிகவும் நீளமான கோவில் பிரகாரங்கள் உள்ள கோவில் - இராமேஸ்வரம் கோவில்.

34.   தென்னிந்தியாவில் உள்ள மிகப் பழமையான கட்டுமான கோவில் - கடற்கரை கோவில்.

35.   மாமல்லபுரத்திலுள்ள நினைவுச் சின்னங்களும் கோவில்களும் யுனெஸ்கோ அங்கீகரிக்கப்பட்ட ஆண்டு – 1984.

36.   முற்கால சோழர் கட்டடக் கலையின் சிறப்பம்சம்விமானங்கள்.

37.   அழகிய நம்பி கோவில் எங்கு உள்ளது - திருக்குறுங்குடி  திருநெல்வேலி.

38.   பல்லவ அரசர் மகேந்திரவர்மனால் முதன் முதலாக கட்டப்பட்ட குடைவரைக் கோவில்  உள்ள இடம்- மண்டகப்பட்டு

39.   முற்கால சோழர் கட்டடக்கலை பின்பற்றிய பாணி - செம்பியன் மகாதேவி.

40.   மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள மிகவும் புகழ்பெற்ற மண்டபம் - புது மண்டபம் .

41.   விஜயநகர கால கட்டடக்கலையின் தனித்துவ அடையாளம் - மண்டபங்கள்.

42.   கருங்கல் பாறையின் மீது புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுனன் தவமிருக்கும் காட்சி .

43.   பான்டியர்கள் கட்டடக்கலை பாணியில் அமைந்துள்ளது - மதுரை மீனாட்சி அம்மன் கோவில்.

44.   பிள்ளையார்பட்டியிலுள்ள குகை கோவில் பிற்காலப் பாண்டியரின் பங்களிப்பு.

45.   மதுரை நாயக்க அரசின் சிற்றரசர்களான சேதுபதிகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சிறந்த பங்களிப்பைச் செய்துள்ளனர்.

46.   காஞ்சி கைலாசநாதர் கோவிலைக் கட்டியவர்- இராஜசிம்மன்.

47.   முற்காலப் பாண்டியர் சமகாலத்தவர் - பிற்காலச் பல்லவர்கள்.

48.   பாண்டியக் கட்டடக்கலையின் சிறப்பம்சமாக திகழ்வது - குடைவரை மற்றும் கட்டுமானக் கோவில்கள்.

49.   பிரகதீஸ்வரர் கோவிலைக் கட்டியவர் - ராஜேந்திர சோழன்.

50.   பொருத்துக:

          1.    பல்லவர்கள்          - பாறை சிற்பங்கள் படைப்பது.

          2.    முற்கால சோழர்கள்        - விமானங்களுக்கு பெயர் பெற்றது.

          3.    பிற்கால சோழர்கள்        - கோபுரங்களுக்கு புகழ்பெற்றது.

          4.    விஜயநகர காலம்   - மண்டபங்களுக்கு புகழ் பெற்றது.

          5.    நவீன காலம்         - பிரகாரங்களுக்கு புகழ் பெற்றது.

  

https://www.a2ztnpsc.in/