10TH- STD - தமிழ்நாட்டின் இயற்கை பிரிவுகள்-
1.
மாநில மறுசீரமைப்பு சட்டத்தின்படி மொழியியல் அடிப்படையில் மாநிலங்கள் மறுசிரமைப்பு செய்யப்பட்ட ஆண்டு - 1956.
2.
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது மதராஸ் மாகாணத்தில் இருந்து பிரிக்கப்பட்டது - தெலுங்கு மொழி பேசும் பகுதிகள்.
3.
இப்பிரிவினைக்கு பிறகு மதராஸ் மாகாணத்தில் இருந்த மாவட்டங்கள் - 13 .
4.
மதராஸ் மாகாணம் சி .என் . அண்ணாதுரை அவர்களால் தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு - 1969 ஜனவரி 14.
5.
தமிழ்நாட்டின் அமைவிடம்:
1. கிழக்கு கோடியாக - கோடியக்கரை .
2. மேற்கு கோடியாக - ஆனைமலை .
3. வட கோடியாக – பழவேற்காடு .
4. தென் கோடியாக – குமரிமுனை.
6.
தமிழகத்தின் பரப்பளவு - 1,30,058 சதுர கிலோமீட்டர்.
7.
தமிழ்நாட்டின் எல்லைகள்:
1. கிழக்கு - வங்காள விரிகுடா .
2. மேற்கு - கேரளா.
3. வடக்கு -ஆந்திரப் பிரேதேசம்.
4. தெற்கு - இந்திய பெருங்கடல்.
8.
தமிழ்நாட்டையும் இந்தியாவின் தென் கிழக்கிலுள்ள இலங்கையும் பிரிப்பது - மன்னார் வளைகுடா , பாக் நீர்ச்சந்தி.
9.
இந்தியாவின் மூன்றாவது நீளமான கடற்கரையை கொண்டுள்ள மாநிலம் -தமிழ்நாடு . 1076 கி. மீ.
10.
தமிழ்நாடு உருவான காலகட்டத்தில் எத்தனை மாவட்டங்கள் மட்டுமே இருந்தன- 13.
11.
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள மூன்று மாவட்டங்கள் - கள்ளக்குறிச்சி தென்காசி செங்கல்பட்டு.
மயிலாடுதுறை.
12.
எந்த மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் பிரித்தமைக்கப்பட்டன - சென்னை, நீலகிரி ,கன்னியாகுமரி.
13.
தீபகற்ப பீடபூமி எனப்படும் தக்காண பீடபூமியில் அமைந்துள்ளது – தமிழ்நாடு.
14.
கிரெட்டேசியஸ் காலத்தில் 135 -மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற கோண்ட்வானா நிலப்பகுதியில் இருந்து உருவான ஒரு பகுதி- தீபகற்ப பீடபூமி.
15. தமிழ்நாடு நிலத்தோற்றத்தின் அடிப்படையில்எத்தனைபெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது : 5.
1. மேற்கு தொடர்ச்சி மலை.
2. கிழக்கு தொடர்ச்சி மலை.
3. பீடபூமிகள்.
4. சமவெளிகள் சமவெளிகள்.
5. உள்நாட்டு சமவெளிகள்.
16.
மேற்கு தொடர்ச்சி மலையின் உயரம் - 2000 - 3000 மீட்டர் வரை.
17.
மேற்கு தொடர்ச்சி மலையின் பரப்பளவு - 2500 சதுர கிலோமீட்டர் .
18. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கணவாய்:
1. பாலக்காடு கணவாய்.
2. செங்கோட்டை கணவாய்.
3. ஆரல்வாய்மொழி கணவாய் .
4. அச்சன்கோவில் கணவாய்.
19. மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள முக்கிய மலைகள்:
1. நீலகிரி.
2. ஆனைமலை.
3. பழனி மலை.
4. ஏலக்காய் மலை.
5. வருசநாடு மலை.
6. ஆண்டிப்பட்டி மலை.
7. அகத்தியர் மலை.
20.
தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள மலை - நீலகிரி மலை.
21.
நீலகிரி மலையில் 2000 மீட்டர் உயரத்துக்கு அதிகமாக எத்தனை சிகரங்கள் காணப்படுகின்றன - 24.
22.
நீலகிரி மலையின் உயரமான சிகரம் – தொட்டபெட்டா . 2637- மீட்டர்.
23.
2,700 க்கும் அதிகமான பூக்கும் தாவர வகைகள் உள்ளன- நீலகிரி மலை.
24.
நீலகிரி வரையாடு இங்கு காணப்படுகின்றன- நீலகிரி மலை.
25.
முக்குருத்தி சிகரத்தின் உயரம் - 2554 மீட்டர்.
26.
பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே அமைந்துள்ள மலை - ஆனைமலை.
27.
ஆனைமலை புலிகள் காப்பகம், ஆழியாறு பாதுகாக்கப்பட்ட காடுகள்,வால்பாறை மலைவாழிடம், காடம்பாறை நீர்மின் நிலையம் போன்றவை அமைந்துள்ள மலை - ஆனைமலை
28.
ஆனை மலையின் அடிவாரத்தில் காணப்படும் அணைகள்- ஆழியாறு , திருமூர்த்தி அணைகள்.
29.
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப் பகுதியில் உள்ளது- பழனி மலை.
30.
பழனி மலையின் மிக உயரமான சிகரம் - வந்தராவ் 2533 மீட்டர்.
31.
பழனி மலையின் இரண்டாவது உயர்ந்த சிகரம் -வேம்படி சோலை. 2150 மீட்டர்.
32.
தமிழ்நாட்டின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது-ஏலக்காய் மலை. - இம்மலைகள் ஏலமலைக் குன்றுகள் எனவும் அழைக்கப்படுகின்றன
1. ஏலக்காய் பயிரிடப்படுவதால் இப்பெயர் பெற்றது.
2. மிளகு மற்றும் காபி ஆகியன இப்பகுதியில் பயிரிடப்படும் முக்கிய பயிர்கள்.
33. மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சிகரங்கள் :
1. தொட்டபெட்டா - 2637. மீ
2. முக்குருத்தி - 2554 .மீ
3. வேம்படி சோலை - 2505. மீ
4. பெருமாள் மலை - 2234. மீ
5. கோட்டை மலை - 2019. மீ
6. பகாசுரா - 1918. மீ
34.
மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்கு நோக்கிய நீட்சி -மற்றும் குன்றுகள் - வருசநாடு மற்றும் ஆண்டிபட்டி மலைக்குன்றுகள்
35. வருசநாடு மற்றும் ஆண்டிப்பட்டி மலை குன்றுகளில் காணப்படும் முக்கிய மலைகள்:
1. மேகமலை
2. கழுகுமலை
3. குரங்கனி மலை
36.
சுருளி மற்றும் கும்பகரை நீர்வீழ்ச்சிகள் காண்ப்படுகிற மலை - வருசநாடு , ஆண்டிப்பட்டி மலை.
37.
ஸ்ரீவில்லிபுத்தூர் மலை அணில் சரணாலயம் அமைந்துள்ள உள்ள மாவட்டம்- விருதுநகர்.
38.
வைகை மற்றும் அதன் துணை ஆறுகள் எங்கு உருவாகின்றன -
வருசநாடு மற்றும் ஆண்டிப்பட்டி மலை குன்றுகள்
39.
பொதிகை மலை - பெரும்பகுதி திருநெல்வேலி மாவட்டத்திலும் இதன் தென் சரிவு கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது:
40. பொதிகை மலையின் பல்வேறு பெயர்கள்:
1. சிவஜோதி பருவத்,
2. அகத்தியர் மலைகள்
3. தெற்கு கைலாயம்
41.
பொதிகை மலையின் பகுதியில் காணப்படும் புலிகள் காப்பகம்- களக்காடு- முண்டந்துறை புலிகள் காப்பகம்.
42.
மகேந்திரகிரி மலை குன்றின் உயரம்- 1645 மீட்டர்.
43.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனை உந்துவிசை செயற்கைகோள் ஏவுதளம் எந்த மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ளது -மகேந்திரகிரி மலை.
44. தமிழ்நாடு கிழக்கு தொடர்ச்சி மலையின் முக்கிய குன்றுகள்:
1. ஜவ்வாது மலை.
2. சேர்வராயன் மலை.
3. கல்வராயன் மலை.
4. கொல்லி மலை.
5. பச்சை மலை.
45.
கிழக்குத் தொடர்ச்சி மலை சராசரி உயரம் - 1100-1600 மீட்டர்.
46.
திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் பரவியுள்ள மழை -ஜவ்வாது மலை.
47.
ஜவ்வாது மலையின் மிக உயரமான சிகரம்- மேல்பட்டு.
48.
1967 தொடங்கடப்பட்ட காவலூர் வானவியல் தொலைநோக்கி மையம் எங்கு அமைந்துள்ளது- ஜவ்வாது மலை .
49.
கல்வராயன் என்ற சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது- கரலர்.
50.
சின்ன கல்வராயன் மலைப் பகுதியின் சராசரி உயரம் மற்றும் பெரிய கல்வராயன் மலையில் சராசரி உயரம்- 825 மீட்டர், 1220 மீட்டர்.
51.
வடபகுதி சின்ன கல்வராயன் மலை தென்பகுதி பெரிய கல்வராயன் மலை.
52.
கல்வராயன் மலை , ஜவ்வாது ,சேர்வராயன் மலைகளுடன் இணைந்து- காவிரி மற்றும் பாலாறு ஆற்று வடிநிலப் பகுதியைப் பிரிக்கிறது.
53.
சேர்வராயன் மலைத் தொடர் எந்த நகருக்கு அருகே அமைந்துள்ளது – சேலம்.
54.
கிழக்கு தொடர்ச்சி மலையின் தென்பகுதியில் அமைந்துள்ள உயரமான சிகரம் - சோலை கரடு. 1620 மீட்டர்.
55.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் மலையான ஏற்கடு எந்த மலைத்தொடரில் அமைந்துள்ளது- சேர்வராயன் மலை.
56. கிழக்கு தொடர்ச்சி மலையில் உள்ள உயரமான சிகரங்கள் :
1. சேர்வராயன் மலை - 1623. மீ
2. பழமலை
- 1500. மீ
3. உருகமலை
- 1486. மீ
4. குட்டி ராயன்
-1395. மீ
5. முகனூர்
-1279. மீ
6. வலச மலை -1034. மீ
57.
கொல்லி மலைத் தொடரில் அமைந்துள்ள முக்கியமான புனிதத் தலம் - அரப்பளீஸ்வரர் கோயில்.
58.
பசுமைமாறா காடுகள் அல்லது சோலை காடுகள் அதிகம் காணப்படும் மலை –கொல்லிமலை.
59.
பச்சை மலைகளில் காணப்படும் குறிப்பிடத்தக்க வேளாண்மை விளைபொருள்- பலாப்பழம்.
60.
பச்சைமலை எந்த மாவட்டங்களில் உயரம் குறைந்த குன்றுத் தொடராக காணப்படுகிறது- திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், சேலம்.
61.
மேற்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது- தமிழ்நாட்டில் உள்ள பீடபூமி.
62.
முக்கோண வடிவத்தில் பீடபூமி எத்தனை கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது- 60,000.
63.
தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கும் மைசூர் பீடபூமியின் ஒரு பகுதி- பாரமஹால் பீடபூமி. 2560 ச. கி. மீ.
64.
நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ள பீடபூமி -கோயம்புத்தூர் பீடபூமி.
65.
கோயமுத்தூர் பீடபூமியை எந்த ஆறு மைசூர் பீடபூமிலிருந்து பிரிக்கிறது -மோயர் ஆறு.
66.
நீலகிரி பகுதிகளில் காணப்படும் ஒரு குறிப்பிடதக்க பீடபூமி - சிகூர் பீடபூயி .
67.
வைகை மற்றும் தாமிரபரணி வடிநில பகுதிகள் எந்த பீடபூமியில் அமைந்துள்ளது - மதுரை பீடபூமி.
68. காவிரி சமவெளி பரவியுள்ள மாவட்டங்கள் :
1. சேலம்
2. ஈரோடு
3. கரூர்
4. திருச்சிராப்பள்ளி
5. புதுக்கோட்டை
6. தஞ்சாவூர்
7. திருவாரூர்
8. நாகப்பட்டினம்
69. தமிழ்நாட்டில் காணப்படும் சமவெளிகளை எத்தனை பிரிவுகளாகப் பிரிக்கலாம்:2
1. உள்நாட்டு சமவெளிகள்
2. கடற்கரை சமவெளிகள்
70.
தமிழ்நாட்டின் கடற்கரை சமவெளியானது எவ்வாறு அழைக்கப்படுகிறது - கோரமண்டல் (அ) சோழ மண்டல சமவெளி .
71.
ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் கரையோரங்களில் உருவாக்கப்பட்ட மணல் குன்றுகள் எவ்வாறு அழைக்கப்படுகிறது- தேரி.
72.
மன்னார் வளைகுடாவில் எவ்வகையான பாறைகள் காணப்படுகின்றன-பவளப்பாறைகள்.
73.
எந்த ஆற்றைத் தவிர மற்ற ஆறுகள் அனைத்தும் வற்றும் ஆறுகள் –தாமிரபரணி.
74.
கர்நாடக - கூர்க் மாவட்டம் - மேற்கு தொடர்ச்சி மலையில் பிரம்மகிரி குன்றுகளில் தலைக்காவிரி என்னுமிடத்தில் உற்பத்தியாகும் ஆறு – காவிரி.
75.
காவிரியாறு தமிழ்நாட்டில் எத்தனை கிலோமீட்டர் நீளத்திற்கு பாய்கிறது- 416.
76.
ஸ்டான்லி நீர்த்தேக்கம் என்று அழைக்கப்படும் அணை - மேட்டுர் அணை .
77.
சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணை - மேட்டூர் அணை.
78.
பவானி ஆறு - துணையாராக வலதுகரையில் காவிரி உடன் இணைகிறது
79.
கரூரில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருமுக்கூடல் என்னும் இடத்தில் இணையும் ஆறுகள் - அமராவதி, நொய்யல்.
80.
காவிரியாறு திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் எத்தனை கிளைகளாக பிரிகிறது: 2.
1. வடகிளை- கொலேருன் (அ) கொள்ளிடம்.
2. தென்கிளை - காவிரியாக தெடர்கிறது.
81.
கொள்ளிடம் மற்றும் காவிரி ஆறு கிளைகள் இணைந்து உருவாக்கும் தீவுகள் - ஸ்ரீரங்கம் தீவு.
82.
காவிரி டெல்டா பகுதிகளில் கிணறுகளால் உண்டாகி உள்ள வலைப்பின்னல் அமைப்பு எவ்வாறு அழைக்கப்படுகிறது- தென்னிந்தியாவின் தோட்டம்.
83.
காவிரி ஆறு கடலூருக்கு தொற்கே எந்த கடலில் கலக்கிறது - வங்கக் கடல்.
84. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய தீவுகள்: 8 .
1. பாம்பன் தீவு.
2. முயல் தீவு .
3. குருசடை தீவு.
4. நல்லதண்ணி தீவு .
5. தீவுத்திடல்.
6. காட்டுப்பள்ளி தீவு.
7. குவிப்பில் தீவு.
8. விவேகானந்தர் நினைவு பாறை.
85.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் தலகவரா கிராமத்திற்கு அப்பால் உற்பத்தியாகும் ஆறு - பாலாறு.
86.
பாலாறு தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் உள்ளது - 57%.
87. பாலாற்றின் துணை ஆறுகள் :
1. பொன்னி.
2. கவுண்டினியா நதி.
3. மலட்டாறு.
4. செய்யாறு.
5. கிளியாறு.
88.
பாலாற்றின் மொத்த நீளம் - 348 கி. மீ.
89.
கிழக்கு கர்நாடகாவின் நந்தி துர்கா மலைகளில் கிழக்கு சரிவுகளிலிருந்து உருவாகும் ஆறு - தென்பெண்ணை ஆறு.
90.
தென்பெண்ணை ஆறு தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் உள்ளது – 77%.
91.
தென்பெண்ணை தமிழ்நாட்டில் பாயும் நீளம் - 247 கி.மீ.
92.
பெண்ணையாற்றின் இரண்டு கிளைகள் - கெடிலம், பெண்ணையாறு.
93. பெண்ணையாற்றின் முக்கிய துணையாறுகள்:
1. சின்னாறு.
2. மார்க்கண்ட நதி.
3. வாணியாறு.
4. பாம்பன் ஆறு.
94. பெண்ணையாற்றின் குறுக்கே உருவாக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கங்கள்: 2.
1. கிருஷ்ணகிரி நீர்த்தேக்கம்.
2. சாத்தனூர் நீர்த்தேக்கம்.
95.
இந்து சமய மக்களால் புனித நதியாக கருதப்படும் ஆறு- தென் பெண்ணையாறு.
96.
தென்பெண்ணை ஆறு எந்த கடலில் கலக்கிறது - வங்கக் கடல்.
97.
தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள வருச நாட்டு கிழக்குச் சரிவில் உற்பத்தியாகும் ஆறு - வைகை ஆறு.
98.
தாமிரபரணி என்னும் பெயர் தாமிரம் மற்றும் வருணி என்பதிலிருந்து பெறப்பட்டது.
99.
செந்நிறச் தோற்றத்துடன் காண்ப்படுகிற நதியின் நீர் - தாமிரபரணி ஆறு.
100.
அம்பாசமுத்திரம் வட்டம் பாபநாசத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் பொதிகை மலை முகடுகளில் தோன்றும் ஆறு – தாமிரபரணி.
101.
அகத்திய முனிவரோடு தொடர்புடையதாகக் கருதப்படும் ஆறு - தாமிரபரணி .
102. தாமிரபரணி ஆற்றின் துணை ஆறுகள்:
1. காரையாறு
2. சேர்வலாறு
3. மணிமுத்தாறு
4. கடனாநதி
5. பச்சையாறு
6. சிற்றாறு
7. இராமநதி
103.
தாமிரபரணி ஆறு எந்த கடலில் கலக்கிறது - வங்கக் கடல்.
104.
இந்தியாவை இரு பாகங்களாக பிரிக்கப்படுவது- கடகரேகை.
105.
கடகரேகைக்கு தெற்கேயும் பூமத்தியரேகைக்கு அருகாமையிலும் அமைந்துள்ளது – தமிழ்நாடு.
106.
தமிழ்நாட்டின் வெப்பநிலை - 18°C முதல் 43 °C வரை.
107.
தமிழ்நாட்டின் சராசரி மழை அளவு- 958.5 மி.மீட்டர்.
108.
தமிழ்நாட்டின் பருவகாலங்கள்:
1. குளிர்காலம் - ஜனவரி - பிப்ரவரி
2. கோடைக்காலம் - மார்ச் - மே
3. தென்மேற்கு பருவக்காற்று காலம்- ஜூன் - செப்டம்பர்
4. வடகிழக்கு பருவக்காற்று காலம்- அக்டோபர் - டிசம்பர்
109.
ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சூரியனின் செங்குத்து கதிர்கள் பூமத்திய ரேகைக்கும் மகர ரேகைக்கும் இடையே விழுகிறது- குளிர் காலம் .
110.
தமிழகத்தில் குளிர்கால வெப்பநிலை- 15°C முதல் 25°C.
111.
நீலகிரி மலை வெப்பநிலை - 0°C.
112.
மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சூரியனின் செங்குத்து கதிரானது தென்னிந்தியாவில் விழுகிறது- கோடைக்காலம்.
113.
கோடைகாலத்தில் வெப்பநிலை - 30 °C முதல் 40 °C வரை.
114.
கோடைகாலத்தில் எந்த மாதத்தில் தமிழகத்தின் தென்பகுதி முன் பருவமழை மூலமும், வெப்பச்சலனம் மூலமும் மழையைப் பெறுகிறது-மே.
115.
தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் மழை பெரும் பகுதிகள்:
1. கோயம்புத்தூர் பீடபூமி - 50 செ.மீ
2. கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி - 50 செ.மீ - 100 செ.மீ
116.
பூமியின் சுழற்சியின் காரணமாக நருரம் அல்லது இயங்கும் பொருட்களை வட அரைக்கோளத்தில் வலப்புறமாகவும் தென் அரைக்கோளத்தில் இடமாகவும் திசைகளை மாற்றியமைக்கும் விசை - கொரியாலிஸ் விசை.
117.
வடகிழக்கு பருவக்காற்று -சூரியன் கடகரேகையில் இருந்து மகரரேகைக்கு செல்வதால் வெப்பநிலை மற்றும் காற்றழுத்தத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
118.
வடகிழக்கு பருவக்காற்று வட இந்தியாவிலிருந்து வங்கக்கடலில் நோக்கி காற்று வீசுகிறது.
119.
வடகிழக்கு பருவக்காற்றானது திரும்பிவரும் தென்மேற்கு பருவக்காற்றின் ஒருபகுதியாதலால் இக்காற்றை - பின்னடையும் பருவகாற்று என்றும் அழைப்பர்.
120.
தமிழ்நாட்டின் 50 சதவிகித மழை - வெப்ப மண்டல சூறாவளி மூலம் கிடைக்கிறது.
121. தமிழ்நாட்டின் மிக அதிக மழை பெறும் பகுதி - வால்பாறை அருகில் உள்ள – சின்னக்கல்லார்.
122. தமிழ்நாட்டில் காணப்படும் மண் வகைகள் : 5
1. வண்டல் மண்
2. கரிசல் மண்
3. செம்மண்
4. சரளை மண்
5. உவர்மண்
123.
ஆறுகளால் படிய வைக்கப்படும் நுண் படிவுகளால் உருவாகும் மண் - வண்டல் மண்.
124.
தீப்பாறைகள் சிதைவடைவதன் மூலம் உருவாகும் மண்- கரிசல் மண்.
125.
ரீகர் மண் என்று அழைக்கப்படும் மண் - கரிசல் மண்.
126.
பருத்தி மண் என்றழைக்கப்படும் மண் -கரிசல் மண்.
127.
தமிழ்நாட்டின் மொத்த பரப்பளவில் மூன்றில் இரண்டு பங்கு பரவியுள்ள மண் – செம்மண்.
128.
இரும்பு ஆக்ஸைடுகள் அதிக அளவில் காணப்படுவதால் சிவப்பு நிறத்தில் காணப்படும் மண் – செம்மண்.
129.
செம்மண் எந்த மாவட்டங்களில் அதிகம் காணப்படுகிறது - சிவகங்கை, ராமநாதபுரம்.
130.
சரளை மண் அதில் கரைந்துள்ள சத்துக்கள் அடித்து செல்லப்டுவதால் உருவாகிறது.
131.
வளமற்ற மண் - சரளை மண்.
132.
தேயிலை , காபி பயிரிடுவதற்கு ஏற்ற மண்- சரளை மண்.
133.
சோழமண்டலக் கடற்கரை பகுதியில் மட்டும் காணப்படும் - உவர் மண்.
134.
உவர் மண் அதிக அளவில் உள்ள பகுதி - வேதாரண்யம்.
135. மண் அரிப்பின் முக்கிய காரணங்கள்:
1. காடுகள் அழிப்பு
2. அதிக மேய்ப்பு
3. நகரமயமாக்கம்
4. அதிக மழைப்பொழிவு
136.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த பாலைவனமாதல் நிலவரைபடத்தின்படி மொத்த நிலப்பரப்பில் எத்தனை சதவீதம் நிலப்பகுதி கண்டறியப்பட்டுள்ளது - 12%.
137.
பாலைவனமாதலால் பாதிப்பு உள்ளாகின்ற மாவட்டங்கள் - தேனி ,நீலகிரி , கன்னியாகுமரி.
138.
எந்த பகுதியில் 12,000 ஹெக்டேர் நிலம் காற்றடி மணல் படிவுகளால் பாதிக்கப்பட்டுள்ளது- தேனி, ராஜபாளையம்.
139.
1988 தேசிய வனக் கொள்கையின் படி புவி பரபரப்பில் எத்தனை சதவீதம் காடுகளால் சூழப்பட்டு இருக்க வேண்டும் - 1/3 பகுதி.
140.
தமிழ்நாட்டில் உள்ள காடுகளின் பரப்பளவு - 26,281 ச.கி.மீ.
141.
தமிழ்நாட்டில் உள்ள காடுகளில் சதவீதம் - 20.21%.
142.
இந்தியாவில் உள்ள காடுகளில் தமிழகத்தின் பங்களிப்பு - 2.99%.
143.
உலகின் 25 உயிரினப்பன்மை செறிந்த பகுதிகளில் ஒன்று - மேற்கு தொடர்ச்சி மலை.
144.
காடுகளின் வகைகள் - பரப்பளவு - ச.கீ .மீ.
1. ஒதுக்கப்பட்ட காடுகள்- 19459
2. பாதுகாக்கப்பட்ட காடுகள் -1782
3. வரையறுக்கப்படாத காடுகள் -1266
4. மொத்தம் -22507
145.
தமிழகத்தில் உள்ள காடுகள் வகை : 5
1. வெப்பமண்டல பசுமைமாறா காடுகள்.
2. மித வெப்ப மண்டல மலைக் காடுகள்.
3. வெப்பமண்டல இலையுதிர் கடுகள்.
4. மாங்குரோவ் காடுகள்.
5. வெப்பமண்டல முட்புதர் காடுகள்.
146.
அதிக மழை பெறும் பகுதிகளில் காணப்படும் காடுகள்-வெப்பமண்டல பசுமைமாறா காடுகள்.
147.
உப அயன மண்டல காலநிலை நிலவும் கிழக்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் காணப்படும் காடுகள்-அரை பசுமைமாறா வகைக் காடுகள்.
148.
ஆனைமலை, நீலகிரி மற்றும் பழனி மலைகளில் காணப்படும்
காடுகள் - மித வெப்ப மண்டல மலைக் காடுகள்
149.
சோலாஸ் என அழைக்கப்படும் காடுகள் - மித வெப்ப மண்டல மலைக் காடுகள்
150.
பசுமைமாறா காடுகள் மற்றும் அரை பசுமைமாறா காடுகளின் விளிம்பு பகுதியில் காணப்படும் காடுகள் - வெப்பமண்டல இலையுதிர் காடுகள்.
151.
கோடை பருவத்தில் தங்கள் இலைகளை உதிர்த்து விடும் காடுகள் - வெப்பமண்டல இலையுதிர் காடுகள்.
152.
கடலோரப் பகுதிகள், ஆற்றின் டெல்டா பகுதிகள், தீவுகளின் கடை பகுதிகள், ஆற்று முகத்துவாரம் ஆகிய பகுதிகளில் காணப்படும் காடுகள்-மாங்குரோவ் காடுகள்.
153.
மாங்குரோவ் காடுகள் காணப்படும் பகுதிகள் - பிச்சாவரம், வேதாரண்யம்,
முத்துப்பேட்டை, சத்திரம், தூத்துக்குடி.
154.
பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு அமைந்துள்ள இடம் - கடலூர் -சிதம்பரத்திற்கு அருகில்.
155.
உலகில் இரண்டாவது மிகப் பெரிய சதுப்பு நிலக்காடு - பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு பரப்பளவு 1100 ஹெக்டேர்.
156.
பிச்சாவரம் சதுப்பு நிலக்காடுகள் கொண்டுள்ள தாவர இனம் - அபிசீனியா மற்றும் ரைசோபோரா.
157.
தமிழ்நாட்டில் மிக குறைவான மழை பெரும் பகுதிகளில் காணப்படும் காடுகள் -வெப்பமண்டல முட்புதர் காடுகள்.
158.
வெப்பமண்டல முட்புதர் காடுகள் காணப்படும் பகுதிகள் - தர்மபுரி, இராமநாதபுரம், விருதுநகர்.
159. தமிழ்நாட்டில் அதிக காடுகளைக் கொண்ட மாவட்டங்கள்:
1. தர்மபுரி - 3280 ச.கி.மீ
2. கோயம்புத்தூர் - 2627 ச.கி.மீ
3. ஈரோடு - 2427 ச.கி.மீ
4. வேலூர்
- 1857 ககி.மீ
5. நீலகிரி
- 1583 ச.கி.மீ
6. திண்டுக்கல் - 1662 ச.கி.மீ
160.
தமிழ்நாட்டில் உள்ள உயிர்க்கோளப் பெட்டகங்கள் : 3.
1. நீலகிரி - உயிர்க்கோளக் பெட்டகம்.
2. மன்னார்வளைகுடா - உயிர்க்கோளக் பெட்டகம்.
3. அகத்தியர் மலை - உயிர்கோளப் பெட்டகம்.
161.
தமிழ்நாட்டில் நிலச்சரிவினால் அதிகம் பாதிக்கப்படும் பகுதி பெரும் அச்சுறுத்தலாக உள்ள பகுதி- நீலகிரி மலைப்பகுதி.
162.
தமிழ்நாட்டின் மொத்த நீர் வளம் - 1587 மில்லியன் கன அடி
.
163.
தமிழ்நாட்டின் மொத்த நீர் தேவை - 1894 மில்லியன் கன அடி.
164.
தமிழ்நாட்டில் நீர் பற்றாக்குறை - 19.3%.
165. தமிழ்நாட்டில் வறட்சிக்கு உள்ளாகும் பகுதிகள் நிலப்பகுதி - 64%.
0 Comments
THANK FOR VISIT