9TH- STD - இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
1.
பொருளியல் வருவாய் ஈட்டும் துறைகள் வகை – 3.
1. முதன்மைத் துறை -
விவசாயத்துறை
2. இரண்டாம் முறை - தொழில்துறை
3. மூன்றாம் துறை - சார்பு துறை (அ) சேவைத்துறை
2.
விவசாயம், காடுகள் , சுரங்கம் , மீன் வளர்ப்பு - முதன்மை துறை.
3.
உற்பத்தி பொருட்கள், தொழிற்சாலைகள் - இரண்டாம் துறை.
4.
மூன்றாம் துறையின் வேறு பெயர்கள் - சார்பு துறை , சேவைத்துறை
5. முதன்மைத் துறை :
1. விவசாயம்
2. காடுகள்
3. கால்நடை வளர்ப்பு
4. கோழி வளர்ப்பு
5. பால் பண்ணை
6. மீன் வளர்ப்பு
6.
இரண்டாம் துறை :
1. உற்பத்தி
2. சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள்
3. கட்டுமானம்
7. சார்பு துறை :
1. போக்குவரத்து
2. காப்பீடு
3. வங்கி
4. வணிகம்
5. தொலைத்தொடர்பு
6. வீட்டுமனை விற்பனை
7. அரசு மற்றும் அரசு சாரா சேவைகள்
8.
1972-1973 ம் ஆண்டுகளில் தொடங்கி கடந்த நான்கு பத்தாண்டுகளில் வேலைவாய்ப்பு வளர்ச்சி சராசரியாக 2 % சதவீதம் உயர்ந்துள்ளது.
9.
வேலை வாய்ப்பின்மை சிக்கலை தீர்ப்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்தை அமைத்த டெல்லி சுல்தான் - பெரோஸ் ஷா துக்ளக்.
10.
பதிவு செய்யப்பட்டதும், அரசாங்க விதிகளையும் ஒழுங்கு முறைகளையும் பின்பற்றுவதும் , ஊழியர்களையும் ஊழியர் சங்கங்களையும் கொண்டுள்ள துறை -ஒழுங்கமைக்கப்பட்ட துறை.
11. ஒழுங்கமைக்கப்பட்ட துறைக்கு எ.கா:
1. வங்கிகள்
2. ரயில்வே
3. காப்பீடு
4. உற்பத்தி தொழிற்சாலைகள்
5. மத்திய ,மாநில அரசு ஊழியர்களை கொண்டு செயல்படும் துறைகள்
12.
ஒழுங்கமைக்கப்படாத துறைக்கு எ.கா:
1. வீட்டு உபயோகப் பொருள்கள்
2. சிறு மற்றும் குடிசை தொழில்கள்
3. தெருக்களில் விற்பனை செய்வோர்
4. பழுதுகள் சரி பார்ப்போர்
13.
வேலைவாய்ப்பில் துறைவாரியான பங்கு: 1972 - 73 -
2011 - 12
1. முதன்மை துறை - 74% -
49%
2. இரண்டாம் துறை - 11% - 24%
3. சார்பு துறை - 15% - 27%
14.
பொதுத்துறை நிறுவனங்களுக்கு எ.கா:
1. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்
2. இந்திய உருக்கு ஆணையம்
3. பாரத தொலைபேசி நிறுவனம்
15.
தனியார் துறை நிறுவனங்களுக்கு எ.கா:
1. டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்
2. அசோக் லேலண்ட்
3. டாட்டா இரும்பு மற்றும் எஃகு தொழிற்சாலை
16.
தமிழ்நாட்டில் , விழுப்புரம் - இருவேல்பட்டு கிராமம் 100 ஆண்டுகளுக்கும் அதிகமாக அறிஞர்கள் பலராலும் ஆய்வு செய்யப்பட்டு வந்துள்ளது.
17.
ஸ்லேட்டர் கிராமம் என்று கூறப்படும் கிராமம் – இருவேல்பட்டு.
18.
கில்பர்ட் ஸ்லேட்டர் முதன்முதலில் இருவேல்பட்டு கிராமத்தை கள ஆய்வு செய்த ஆண்டு – 1916.
19.
இருவேல்பட்டு கிராமம் : 1981
-
2008
1. பயிரிடுவோர் - 42. -
33
2. விவசாயக் கூலிகள் - 34 - 26
3. விவசாயம் அல்லாத தொழிலாளர்கள் -
24 -
41
4. மொத்த குடும்பங்கள் - 100 - 100
20.
பணியிடத்தை கணக்கிடுவதற்கு 15 – 60 வயது வரையிலான வயதைக் கணக்கிடலாம்.
21.
இந்தியாவில் மிகப்பெரிய வேலைவாய்ப்புத்துறை - முதன்மை துறை.
22.
எந்தத் துறையில் தொழில் அமைப்பு முறை சேர்க்கப்படவில்லை - தனியார் துறை.
23.
பொதுத்துறை , தனியார் துறை என்று எதன் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது - நிறுவனங்களின் உரிமை.
24.
தொழிலாளர்களைப் பணியமர்த்துபவர்களாகவும் தங்கள் பணிக்கான வெகுமதிகளை செலுத்தும் நபர்களாகவும் உள்ளவர்கள் – முதலாளி.
25.
தமிழ்நாட்டில் அதிக நபர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள துறை - வேளாண்மை.
26.
பொருத்துக:
1. பொதுத்துறை - சேவை நோக்கம்
2. தனியார் துறை - இலாப நோக்கம்
3. முதன்மைத் துறை - கோழி வளர்ப்பு
4. சார்பு துறை - வங்கியில்
27.
பொருத்துக:
1. வேளாண்மை, காடுகள், மீன் பிடிப்பு மற்றும் சுரங்கம் - முதன்மை துறை
2. உற்பத்தி, மின் உற்பத்தி , எரிவாயு மற்றும் குடிநீர் விநியோகம் - இரண்டாம் துறை
3. வாணிபம், போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு - சார்பு துறை.
4. குழுமப் பதிவற்ற நிறுவனங்கள் மற்றும் வீட்டு தொழில்கள் - ஒழுங்கமைக்கப்படாத துறை.
0 Comments
THANK FOR VISIT