நினைத்த காரியத்தை நடத்தி முடிக்கும் யோக நட்சத்திரம்.

ஜோதிடம் என்பது ஒரு மிகப்பெரிய கலை மட்டுமல்ல. வேதத்தின் கண். அதன் கணக்கு என்றும் தப்பாது. ஆனால் வெறும் கணக்கை மட்டும் போட்டுப் பலன் சொல்லிவிட முடியாது. அதற்கு வாக்கு ஸித்தியும் வேண்டும். வாக்கு ஸித்தி உண்டாவதற்கு உபாசனையும் தெய்வ பலமும் குருவருளும் மிகவும் அவசியம்.

ஜோதிட சாஸ்திரத்தில் நமக்கு வழிகாட்டுவதற்காக பல விஷயங்களை சப்தரிஷிகள், ஜோதிட வல்லுநர்கள்  ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள். எந்தெந்த நேரங்களில் எந்தெந்த கிழமைகளில் எந்தெந்த மாதங்களில் என்னென்ன செய்யலாம் என்பதை ஜோதிட சாஸ்திரம் நமக்கு அறிவுறுத்துகிறது. இதை நம் முன்னோர்கள் சிரத்தையாக கடைபிடித்து வந்திருக்கிறார்கள். அதன்படி காலம், நேரம், ஹோரை, சகுனம் பார்த்து

காரியங்கள் செய்கிறோம். தடைகள், நஷ்டங்கள், கஷ்டங்கள், இடையூறுகள் ஏற்படுத்துகின்ற ராகு காலம், எமகண்டம், குளிகை, சந்திராஷ்டமம், அஷ்டமி, நவமி, கரிநாள் போன்றவற்றை அனைவரும் தவிர்த்து விடுவார்கள்.

அதே நேரத்தில் நம் ராசி, நட்சத்திரத்துக்கு உகந்த நேரங்களை பெரும்பாலோர் பார்ப்பதில்லை. இதனால் மேற்கொள்கின்ற முயற்சிகள் தோல்வி அடையும். அந்த காலத்தில் பெரியவர்கள் நாள் செய்யாததை நல்லோர் செய்யார் என்பார்கள். நற்செயல்களை நல்ல நாள் நட்சத்திரத்தில் ஆரம்பித்தால் ஜெயம் உண்டாகும் என்பதற்காக இது சொல்லப்பட்டது. அதன்படி நமக்கு நன்மை செய்கின்ற நட்சத்திரங்கள் வரும் நாளில் முக்கியமான விஷயங்களை ஆரம்பிக்கலாம். நல்ல விஷயங்கள் பேசலாம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம்.

வங்கி கணக்கு தொடங்கலாம். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற சாதனங்கள் வாங்கலாம். பரிகார பூஜைகள் செய்யலாம். வேலைக்கான முயற்சிகளை தொடங்கலாம். இப்படி செய்வதால் அந்த நட்சத்திர தாரபலம், சந்திர பலம் காரணமாக நம் முயற்சிகளுடன், அதிர்ஷ்டமும் சேர்வதால் காரிய வெற்றி, அனுகூலம் உண்டாகிறது.

நாடி செல்லும் காரியங்கள் கை கூடிவர உங்கள் நட்சத்திரங்களுக்கு நன்மை தரும் நட்சத்திரங்கள்:

அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு :

பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், அஸ்தம், சுவாதி, பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் செய்யும் காரியங்கள் வெற்றி பெறும்.

பரணி:நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், உத்திரம், சித்திரை, விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி.

கிருத்திகை:நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

ரோகிணி ,திருவாதிரை, பூசம், மகம், ஹஸ்தம், சுவாதி, அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி.

ரோகிணி: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம், பூரம், சித்திரை, விசாகம், கேட்டை, அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி.

மிருகசீரிஷம்:நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

திருவாதிரை, பூசம், அசுவினி, கிருத்திகை.

திருவாதிரை:நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம், விசாகம், கேட்டை, பூராடம், பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி.

புனர்பூசம்:நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

பூசம், மகம், உத்திரம், சித்திரை, அனுஷம், மூலம், உத்திராடம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம்.

பூசம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி, கேட்டை, பூராடம், திருவோணம், ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

மகம், உத்திரம், சித்திரை, விசாகம், மூலம், உத்திராடம், அவிட்டம், அசுவினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம்.

மகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம், பூராடம், திருவோணம், சதயம், பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை, உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயில்யம்.

உத்திரம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, ரோகிணி, திருவாதிரை, பூசம், மகம்.

அஸ்தம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஆயிணீல்யம், பூரம்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, திருவாதிரை, பூசம், மகம், உத்திரம்.

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம், பூரட்டாதி, ரேவதி, பரணி, புனர்பூசம், ஆயில்யம், பூரம், அஸ்தம்.

விசாகம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, பூசம், மகம், உத்திரம், சித்திரை.

அனுஷம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

கேட்டை, பூராடம், திருவோணம், சதயம், ரேவதி, பரணி, ரோகிணி, ஆயில்யம், பூரம், அஸ்தம், சுவாதி.

கேட்டை: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், பூசம், மகம், உத்திரம், சித்திரை, விசாகம்.

மூலம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

பூராடம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, பூரம், அஸ்தம், சுவாதி, அனுஷம்.

பூராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், உத்திரம், சித்திரை, விசாகம், கேட்டை.

உத்திராடம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

திருவோணம், சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, மிருகசீரிஷம், திருவாதிரை, பூசம், அஸ்தம், சுவாதி, அனுஷம், மூலம்.

திருவோணம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

அவிட்டம், பூரட்டாதி, ரேவதி, பரணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், சித்திரை, விசாகம், கேட்டை, பூராடம்.

அவிட்டம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

சதயம், உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, புனர்பூசம், பூசம், மகம், சுவாதி, அனுஷம், மூலம், உத்திராடம்.

சதயம்: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

பூரட்டாதி, ரேவதி, பரணி, ரோகிணி, பூசம், ஆயில்யம், பூரம், விசாகம், கேட்டை, பூராடம், திருவோணம்.

பூரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

உத்திரட்டாதி, அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், ஆயில்யம், மகம், உத்திரம், அனுஷம், மூலம், உத்திராடம், அவிட்டம்.

=====================================

உத்திரட்டாதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

ரேவதி, பரணி, ரோகிணி, திருவாதிரை, மகம், பூரம், அஸ்தம், கேட்டை, பூராடம், திருவோணம், சதயம்.

=====================================

ரேவதி: நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு:

அஸ்வினி, கிருத்திகை, மிருகசீரிஷம், புனர்பூசம், பூரம், உத்திரம், சித்திரை, மூலம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி.

=====================================

இது பொதுவான பலன்களே:

ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது  கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.