மூன்றாம் பாவம்
சகோதரர்,
வேலைகாரர், தைரியம் ஆகியன பற்றி மூன்றாம் இடத்தில அறியகூடும்;
1. மேஷம் மூன்றாம் பாவமானால் படிப்பாளி,
பரோபகாரி, சுகசரீரம் உள்ளவன்.
2. ரிசபம் மூன்றாம் பாவமானால் புகழ்
பெற்றவன். வள்ளல். அரச செல்வாக்கு உள்ளவன்.
3. மிதுனம் மூன்றாம் இடமானால் வாகன
சுகம் உள்ளவன். பெண்களிடத்தில் பிரியமாக நடப்பவன். அரசர்களின் நேசம் உடையவன்.
4. கடகம் மூன்றாம் இடமானால் நற்குணங்கள்
வாய்க்கப் பெற்றவனாகவும், விவசாயத்தில் ஈடுபடுபவனாகவும் அமைகிறான்.
5. சிம்மம் மூன்றாம் இடமானால் பிறரின்
பணத்தில் ஆசையுள்ளவனாகவும் துஷ்டனாகவும் ஆகின்றான்.
6. கடகம் மூன்றாம் இடமானால் நற்குணங்கள்
வாய்க்கப் பெற்றவனாகவும், விவசாயத்தில் ஈடுபாடு உள்ளவனாகவுன் அமைகின்றான்.
7. சிம்மம் மூன்றாம் இடமானால் ஜாதகன்
பிறரின் பணத்தில் ஆசைவுள்ளவனாகவும் துஷ்டனாகவும் ஆகின்றான்.
8. கன்னி மூன்றாம் இடமானால் சாஸ்திரத்தில்
பற்று உள்ளவனாகவும், ஒழுக சீலனாகவும் விருந்தோம்பல் பண்பாடு கொண்டவனாகவும் அற்பரின்
சிநேகம் கொண்டவனாகின்றான்.
9. துலாம் மூன்றாம் இடமானால் வெறுக்கத்தக்க
சுபாவம் கொண்டவனாகவும் அற்பரின் சிநேகம் கொண்டவனாகவும் ஆகின்றான்.
10. விருச்சிகம் மூன்றாம் இடமானால் அமைந்தவனுக்கு
செய்நன்றி மறந்த பாபர்களும், செலவு செய்வதையே குறியாக கொண்டவர்களும், வம்பிளழுப்பவர்களும்
சேர்ந்து விரோதத்தை விளைவிப்பவர்கள்.
11. தனுசு மூன்றாம் இடமானால் அமைந்தவன்
வீரர்கள், செல்வர்கள், தர்ம மார்க்கத்தில் இருபவர்களின் நட்பை அடைகின்றான்.
12. மகரம் மூன்றாம் இடமானால் அமைந்தவனுக்கு
எப்போதும் சுகம் கிடைக்கிறது. தெய்வ வழிபாடு; குருபக்தி; நிறைந்த செல்வம், ஒப்பற்ற
பாண்டித்தியம் காரணமாக நல்ல குருமார்கள் அமைகிறார்கள்.
13. கும்பம் மூன்றாம் இடமானால் பொறுமை,
கீர்த்தி, சத்தியம் மிக்கவர்களோடு நண்பன் ஆகின்றான். சில சமயம் வஞ்சகர்களோடும் சிநேகம்
கொள்ள நேரிடும்.
14. மீனம் மூன்றாம் இடமானால் போது
மிகுந்த செல்வம் நிறைய பிள்ளைகள் உடையவனாகின்றான். புண்ணியவான். அதிதிகளிடம் பிரியம்
உள்ளவன். எல்லா ஜனங்களுக்கும் பிடிதவனுமாகின்றான்.
3 ஆம்
பாவதிபதி பன்னிரண்டு ராசிகளிலும் இருப்பதன் பலன்
3க்கு
உடையவன் லக்னத்தில் இருந்தால் பந்துகளின் இடையூருளால் இல்லற சுகத்தை அனுபவிக்க
இயலாதவனாகின்றான். அடிமைத்தொழில்.
3க்கு
உடையவன் இரண்டாம் இடத்தில் இருந்தால் பிச்சை எடுக்க நேரிடும்.
3க்கு
உடையவன் மூன்றாமிடதிலேயே இருந்தால் பிறரை நண்பனாக்கி கொள்வதில் சமர்த்தன்; குருவிடம்
பற்றும் ராஜ சேவையும் மேலான் தனமும் உடையவன்.
3க்கு
உடையவன் நான்காம் இடத்தில் இருந்தால் உறவினர்கள் இருந்தால் பித்தம்; வயிற்றில் சாஸ்திர
சிகிச்சை; தாயுடன் சண்டை; தந்தையினுடைய பொருளை
அழிப்பவன்.
3க்கு
உடையவன் 5 ஆம் இடத்தில் இருந்தால் உறவினர்கள் அதிகம், சுகவாசி; பிறருக்காக உதவி செய்பவன்;
அழகிய சரீரம் உடையவன்; நீண்ட ஆயுள்.
3க்கு
உடையவன் 6 ஆம் இடத்தில் இருந்தால் கண்ணில் ஏதாவது கோளாறு; சத்ருக்கள் நிறைந்தவன்;
சகோதரர்களாகவும், விளங்குகளாலும், வியாதிகளாலும் சாதுக்களாலும் துன்பத்தை அடைவான்.
3க்கு
உடையவன் 7 ஆம் இடத்தில் இருந்தால் பெண்களிடம் சண்டை இடுபவன்; மனைவி நல்ல அழகுடன் அமைந்தவராயினும்
வேறு ஸ்திரீயின் பாவம் நிறைந்த வீட்டை நாடிசெல்வான்.
3க்கு
உடையவன் 8 ஆம் இடத்தில் இருந்தால் பாபகிரகங்களும் சேர்ந்திருந்தாலும் ஜாதகன் மிகுந்த
கோபம் உடையவனாகவும் இறந்து போன சகோதரன் பந்துக்களுடைய குடும்பத்தில் பிறந்த்வானாகவும்
இருப்பான்
3க்கு
உடையவன் 9ஆம் இடத்தில் இருந்தால் இளமையான தோற்றம்; சோலைகள் சூழ்ந்த பகுதிகளில் வாழவேண்டும்
என்ற விருப்பம் உள்ளவனாகவும், நல்ல விசயங்களில் புத்தியை செலுத்துபாவனாகவும் இருப்பான்.
3க்கு
உடையவன் 1௦ ஆம் இடத்தில் இருந்தால் தகப்பன் வழியிலும் அரச வழியிலும் சுகம் உண்டாகும்.
தூய்மையே விரும்புவான்.
3க்கு
உடையவன் 11 ஆம் இடத்தில் இருந்தால் பராகிரமம்
உடையவன். பந்துகளின் உதவி எப்போதும் கிட்டும். சிறந்த நிபுணன். சுகவாசி.
3க்கு
உடையவன் 12 ஆம் இடத்தில் இருந்தால் செலவாளி, நண்பனே சத்ருவாக மாறுவான்.
மூன்றாம் பாவத்திற்க்கு பிற கிரகங்களின் பார்வையால் ஏற்படும் பலன்கள்
3 ஆம்
இடம் சூரியனால் பார்க்கப்பட்டால் முன் சகோதரன் இல்லாமல் போகின்றார்.
3 ஆம்
இடம் சந்திரனால் பார்க்கப்படால் சகோதரிகள் அதிகம் உடல் வலு அற்றவர்.
3 ஆம்
இடம் செவ்வாய்யால் பார்க்கப்பட்டால் பராகிரமம் உள்ளவர். சகோதர்களை இழப்பார்.
3 ஆம்
இடம் புதனால் பார்க்கப்பட்டால் சகோதர சௌக்கியம் கொண்டவர்.
3 ஆம்
இடம் குருவால் பார்க்கப்பட்டால் தகப்பன் மூலம் செல்வ வரவு ஆனாலும் தகப்பனை பிரிவார்.
3 ஆம்
இடம் சுக்கிரனால் பார்க்கப்பட்டால் பெண் குழந்தை பிறப்பதனால் வேறு தேசம் செல்லுபவர்;
அரசினால் உதவியுண்டு.
3 ஆம்
இடம் சனியினால் பார்க்கப்பட்டால் பராக்கிரமம் உள்ளவர். பலவான்; சகோதர வர்கத்துக்கு
சௌக்கியம் இல்லை.
3 ஆம்
பாவாதிபதிக்கு வேறு கிரகங்களின் சேர்கையால் உண்டாகும் பலன்கள்.
லக்னத்தில் குரு 3 ஆம் இடத்ததிபனுடன் கூடி இருந்தால் நாற்கால்
பிராணிகளுக்கு சேதம்.
3 ஆம் இடத்ததிபன் ராகுவுடன் கூடி லக்னத்தில் இருந்தால் பாம்பினால்
பயம்.
3 ஆம் இடத்ததிபன் புதனுடன் சேர்ந்தால் கழுத்தில் ரோகம், கண்டமாலை,
உள்நாக்கு படருதல் போன்ற நோய்கள் வரலாம்
3 ஆம் இடத்ததிபன் ஆறாம் இடத்தில் இருந்து பாபக் கிரகத்தால் பார்க்கப்பட்டால்
விஷபயம்
3 ஆம் தனுசு ராசியாக இருந்து செவ்வாயின் சேர்கை இருந்தால் காதில்
ரோகம்.
3 ஆம் இடத்ததில் சனியிருந்து மாந்தியுடன் கூடினால் வாயுரோகம்.
3 ஆம் இடம் பாபரின் வீடாகி பாபகிரகம் கூடுமானால் ஜாதகனுக்கு
நாசம். அதுவே சுபரின் வீடானால் சகோதர ஒற்றுமை ஏற்படும்.
3 ஆம் இடத்ததிபனோடு ஸ்திரீகிரகங்கள் 9 ஆம் இடதிலிருந்தால் சகோதரிகளும்,
புருஷகிரகங்கள் அங்கிருந்தால் சகோதரர்களும் உண்டாவர்.
இரண்டாம் பாவம்
1.
மேஷம் 2 ஆம் இடமாக இருந்தால்
ஜாதகர் செல்வச் சீமானாகவும், மாடு கன்று உள்ளவராகவும், பாகியவானவாகவும், வித்வானாகவும்
விளங்குவார்.
2.
ரிஷபம் 2 ஆம் இடமாக இருந்தால்
விவசாயத்தில் ஈடுபாடும் ரத்தினங்கள் வாங்குவதில் விருப்பம் உள்ளவராகவும் இருப்பார்.
3.
மிதுனம் 2 ஆம் இடமாக இருந்தால்
தனவான். இவனுக்கு பெண் பிள்ளைகள் அதிகம் பிறக்க வாய்ப்பு உண்டு. நண்பர்கள்ளல் லாபம்
உள்ளவர்.
4.
கடகம் 2 ஆம் இடமாக இருந்தால்
நியாயமான மார்கத்தில் சம்பாதிப்பவர். மனைவி மூலம் சுகத்தை அடைபவர். பிள்ளைகளை பேணி
காப்பவர்.
5.
சிம்மம் 2 ஆம் இடமாக இருந்தால்
நிறைய பொருள் ஈட்டுவார். எல்லோருக்கும் உபகாரியாக இருப்பார்.
6.
கன்னி 2 ஆம் இடமாக இருந்தால்
அரசினால் வருமானம். யானை, குதிரை ரத்தினங்கள் முதலியவற்றை வேகுமானமாகப் பெறுவார்.
7.
துலாம் 2 ஆம் இடமாக இருந்தால்
பூமியினாலும, பயிர்களினாலும், தன்முயற்சியினாலும் பொருளீட்டிப் பல நற்காரியங்களுக்கு
பயன் படுத்துவார்.
8.
விருசிகம் 2 ஆம் இடமாக இருந்தால் கடமையே கண்ணாக உள்ளவர். பெண்களிடத்தில் பிரியமுள்ளவர். நல்ல
பேச்சாளர். பிராமணர்களிடமும், தெய்வங்களிடமும் ஈடுபாடு கொண்டவர்.
9.
தனுசு 2 ஆம் இடமாக இருந்தால்
தீரச் செயல்களால் செல்வம் கிடைக்கும். மாடு கன்றுகள் வீட்டில் நிறைந்து இருக்கும்.
தர்ம காரியங்களின் மூலம் புகழ் பெறுவார்.
10. மகரம் 2 ஆம் இடமாக இருந்தால் ஆனால் பலவிதமான் யுக்திகளால் பொருளை ஈட்ட
வல்லவர். பிற நாட்டு தொடர்பாலும் அரசு மூலமாகவும் செல்வம் சேரும்.
11. கும்பம் 2 ஆம் இடமாக இருந்தால் ஆனால் பழம், புஸ்பம் இவை மூலம் அதிகமான
தனத்தை பெறுகின்றான். நல்லவர்கள் அனுபாவிக்க கூடிய பெரியோர்கள் மூலம் இவன் அனுபவிக்கின்றான்.
12. மீனம் 2 ஆம் இடமாக இருந்தால் நெம நிஸ்டைகள், உபவாசம் ஆகியவற்றால் தனம்
கிடைக்கிறது. வித்தை மூலமாகவும், தாய் வழியாகவும், அரசு மூலமாகவும் பொருள் சேரும்.
புதையல் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு.
2 ஆம்
இடத்தை இதர கிரகங்கள் பார்பதால் ஏற்படும் பலன்கள்.
1.
சூரியனால் பார்க்கப்பட்டால்
தந்தையின் சொத்தை நாசமாக்குபவன்; பராகிரமசலி, சுகஜீவி
2.
சந்திரனால் பார்க்கப்பட்டால்
குடும்ப சுகம் உள்ளவன்; வம்ச விருதியுடையவன்; சரீர நலிவுல்லவன்; தண்ணீரால் பீடைகள்
ஏற்பட கூடும்.
3.
செவ்வாயின் திருஷ்டி இருக்குமானால் குடும்ப சுகம் இல்லை. தனலாபம் இல்லை; தீராத வயிற்று வழி உள்ளவர்.
4.
புதனால் பார்க்கப்பட்டால்
எப்பொழுதும் ஒப்பற்ற தன சுகம் உள்ளவர்; வஞ்சகர்.
5.
குருவினால் பர்ர்கப்பட்டால்
பாக்கியவான். நல்ல குணம் மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்.
6.
சுக்கிரனால் பார்க்கப்பட்டால்
ஒவ்வொருநாளும் தன சுகம்; உறவினருக்கு உதவுபவன்; பகைவர்களை நாசம் செய்பவன்.
7.
சனியினால் பார்க்கபட்டால்
பணத்தை விரயம் செய்பவன். தனது சொந்தகாரர்களையே சத்ருகள்ளக நினைப்பவன்.
சில
கிரகங்கள் 2 ஆம் இடத்தில கூட்டாக இருப்பதன் பலன்.
சூரியன், சனி,
செவ்வாய் இருந்தால் தனநாசம்
சூரியன் செவ்வாய்
இருந்தால் குலதோசம்
சூரியன் பாபர்களின்
செர்கையோடு இருந்தால் செல்வத்தை அள்ளிக்கொடுப்பன்.
குரு 2 க்குடையவனாகி
2 ஆம் இடத்திலேயே இருந்து செவ்வாயுடன் கூடுவானாகில் குபேரனுக்கு ஒப்பாக வாழ்வான்.
2 ஆம் இடத்து அதிபதி
உச்சம் நீசம் முதலிய வீடுகளில் இருபதால் ஏற்படும் பலன்கள்
2 க்குடையவன் சுபக்கிரகமாகி
தனது உச்ச வீட்டிலோ. கேந்திரதிலோ நட்பு வீட்டிலோ, சுபரின் வீட்டிலோ இருக்கப் பிறந்தவன்
தனது வாக்கின் திறமையை வைத்தே குடும்பத்தை காப்பாற்ற வல்லவன்.
2 ஆம் இடத்தில
2 க்கு உடையவன் இருந்தாலும் புதனோ சுக்கிரனோ 2க்கு உடையவன் ஆனாலும் அல்லது 2 க்கு உடையவன்
நட்பு வீட்டில் இருந்தாலும் மக்கள் போற்றும் பரோபகரியாக விளங்குவான். திரிகோண வீட்டில்
இருந்தால் பணக்காரனாக மட்டும் ஆவான்.
2 க்கு உடையவன்
12 ல் இருந்த போதிலும் இரண்டு கிரகங்களுடன் சேர்ந்து இருப்பானேயானால் அதிகமான் செல்வத்தை
பெறுகிறான்.
2 க்கு உடையவான்
உச்ச வீட்டில் இருந்து குருவினால் பார்க்கப்பட்டால் ஆயிரம் பேர்களை காப்பார்ருபாவனாக
அமைகிறான்
=====================================
இது பொதுவான பலன்களே:
ஜாதகத்தின் மற்ற அமைப்புக்களை வைத்து இவைகள் மாறுபடலாம் குறையலாம் அல்லது கூடலாம் அல்லது இல்லாமல் போகலாம்.அவரவர் ஜாதக கட்டங்களின் அடிப்படையில். அதில் உடன் இருக்கும் கிரகங்களின் அடிப்படையில்.சுபர்களின் பார்வையில்.அல்லது அசுபர்களின் பார்வையில்.பலன்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை.
0 Comments
THANK FOR VISIT