10TH- STD - இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை-

1.    இந்திய வெளிநாட்டுச் சேவை பயிற்சி நிறுவனம் (IFS) நிறுவப்பட்ட ஆண்டு - 1986. புதுடெல்லி.

2.    வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்கள்:

          1.    உடன்படிக்கைகள்

          2.    நிர்வாக ஒப்பந்தங்கள்

          3.    தூதுவர்களை நியமித்தல்

          4.    வெளிநாட்டு உதவி

          5.    சர்வதேச வணிகம்

          6.    ஆயுதப்படைகள்

3.    வெளியுறவுக் கொள்கையின் முக்கிய நோக்கங்கள்:

          1.    தேசியப் பாதுகாப்பு.

          2.    தேசிய வளமை.

          3.    நட்பு நாடுகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்.

          4.    உலக அமைதி அடைதல் மற்றும் ஒவ்வொரு நாட்டுடனும் அமைதியுடன் சேர்ந்திருத்தல்.

          5.    பொருளாதார வளர்ச்சி.

4.     பான்ச் -ஐந்து, சீலம்நற்பண்புகள். பஞ்சசீலம் எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது - சமஸ்கிருதம்.

5.    இந்தியா - சீனா நாடுகளுக்கிடையேயான பஞ்சசீலக் கொள்கை கையெழுத்தான ஆண்டு  - 1954 ஏப்ரல் 28.

6.    பஞ்சசீலக் கொள்கை :

          1.    ஒவ்வொரு நாட்டின் எல்லையையும் இறையாண்மையையும் பரஸ்பரம் மதித்தல்.

          2.    பரஸ்பர ஆக்கிரமிப்பின்மை.

          3.    பரஸ்பர உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருத்தல்.

          4.    பரஸ்பர நலனுக்காக சமத்துவம் மற்றும் ஒத்துழைத்தல்.

          5.    அமைதியாக சேர்ந்திருத்தல்.

7.    பஞ்சசீல கொள்கை இந்தோனேஷியாவில் எந்த ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்க - ஆசிய மாநாட்டில் கையெழுத்தான பாண்டுங் பிரகடனத்தில் சேர்க்கப்பட்டுள்ளது -1955.

8.    வெளியுறவுக் கொள்கையின நிர்ணயிக்கும் அடிப்படைக் காரணிகள் :

          1.    நாட்டின் புவியியல் மற்றும் பரப்பளவு.

          2.    நாட்டின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் தத்துவம் அடிப்படையிலானவை.

          3.    இயற்கை வளங்கள்.

          4.    பொருளாதார வளர்ச்சியின் அவசியம்.

          5.    அரசியல் நிலைத்தன்மை மற்றும் அரசாங்க அமைப்பு.

          6.    அமைதிக்கான அவசியம் ஆயுத குறைப்பு, அணு ஆயுதப் பெருக்கத்தடை.

          7.    ராணுவ வலிமை.

          8.    சர்வதேச சூழ்நிலை.

9.    இந்திய வெளியுறவுக் கொள்கையின் நோக்கம்:

          1.    உலக ஒத்துழைப்பு

          2.    உலக அமைதி

          3.    காலனிய ஏகாதிபத்திய முடிவு

          4.    இனச் சமத்துவம்

          5.    அணிசேராமை

10.   பரந்த அளவில் அணிசேராமை என்பது இராணுவ கூட்டணியில் இணைத்துக் கொள்ளாதது அல்ல. அதாவது பிரச்சனைகளை முடிந்த வரை இராணுவ கண்ணோட்டத்தில் பார்க்காமல், அது சில நேரங்களில் மட்டும் ஏற்பட்டாலும் சுதந்திரமாக மற்றும் அனைத்து நாடுகளுடன் நட்பு ரீதியிலான உறவை பராமரித்தல் -  ஜவர்லால் நேரு.

11.   அணிசேரா இயக்கம் என்ற சொல்  1953 இல் .நா. சபையில் உரையாற்றிய வி. கிருஷ்ண மேனன் என்பவரால் உருவாக்கப்பட்டது.

12.   அணிசேரா இயக்கத்தின் நோக்கம் : ராணுவக் கூட்டணியில் சேராமல் வெளிநாட்டு விவகாரங்களில் தேசிய சுதந்திரத்தைப் பராமரித்தல்.

13.   அணிசேரா இயக்கம் :

          1.    120 - உறுப்பு நாடுகள்.

          2.    17 - நாடுகள் பார்வையாளராகள்.

          3.    10 - சர்வதேச நிறுவனங்கள் .

14.   அணிசேரா இயக்கத்தின் நிறுவனைத் தலைவர்கள்:

1.    இந்தியா - ஜவஹர்லால் நேரு .

2.    யுகோஸ்லாவியா - டிட்டோ.

3.    எகிப்து - நாசர்.

4.    இந்தோனேஷியா - சுகர்னோ.

5.    கானா - குவாமே நிக்ரூமா.

15.   இந்தியா சோவியத் யூனியனுடன் எந்த ஆண்டு இந்தியா - சோவியத் ஒப்பந்தத்தில் மூலம் இணைந்தது -1971  - 20 ஆண்டு கால ஒப்பந்தம்.

16.   சீனா எந்த ஆண்டு லாப் நார் என்னுமிடத்தில் அணு சோதனை நடத்தியது1964.

17.   இந்தியா தனது முதல் பூமிக்கடியிலான அணு சோதனை திட்டம்  எந்த ஆண்டு நடத்தியது1974.

18.   அணிசேரா இயக்கம் :

          1.    அணிசேராமை என்பது நடுநிலைமையாக இருப்பது என்பது பொருள் அல்ல.

          2.    பிரச்சினைகளுக்கு முடிவுகளை நாடுகள் சுதந்திரமாக தீர்மானிப்பதாகும்.

          3.    அணிசேராமை என்பது ராணுவ வலிமை இல்லாது இருத்தல் என்று பொருள் அல்ல.

          4.    மோதல்கள் மற்றும் பதட்டங்களை குறைப்பதை உறுதி செய்வது என பொருள்படுவதாகும்

19.   இந்திய வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடுகள்:

          1.    காலனி ஆதிக்கத்திலிருந்து விடுபட ஆதரவளித்தல்.

          2.    தென்னாப்பிரிக்காவில் நிலவிய இனவெறியைக் கடுமையாக எதிர்த்தல்.

          3.    பாதுகாப்பு, ஆயத்த நிலைமையின் முக்கியத்துவத்தை எதிர்க்கொள்ளுதல்.

20.   சீனாவுடனான நட்புறவு கிழக்கு நோக்கு கொள்கை ஏற்படுத்தப்பட்ட ஆண்டு-1992.

21.   இந்தியா பொக்ரானில் இரண்டாவது அணு சோதனை நடத்திய ஆண்டு1998.

22.   இந்தியா இணைந்துள்ளது புதிய உலக குழுக்கள் :

          1.    G-20

          2.    IBSA

          3.    BRICS

23.   இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கருத்துக்கள் :

          1.    தேசிய நலனைப் பேணுதல். 

          2.    உலக அமைதியை எய்துதல்.

          3.    ஆயுதக் குறைப்பு.

          4.    பிற நாடுகளுடன் நல்லுறவை வளர்த்தல்.

          5.    அமைதியான வழிகளில் பிரச்சினைகளைத் தீர்த்தல்.

          6.    அணிசேராக் கொள்கையின்படி சுதந்திரமான சிந்தனை மற்றும் செயல்பாடு

          7.    சர்வதேச விவகாரங்களில் சமத்துவம்.

          8.    காலனியாதிக்கம், ஏகாதிபத்தியம், இனப்பாகுபாடு ஆகியவற்றிற்கு எதிரான நிலைப்பாடு.

24.   இந்தியாவின் அணுக்கொள்கையின் இரண்டு மையக் கருத்துக்கள் :

          1.    முதலில் பயன்படுத்துவதில்லை.

          2.    குறைந்தபட்ச நம்பகமான தற்காப்புத் திறன்.

25.   சார்க் அமைப்பின் பேரிடர் மேலாண்மை மையம் அமைக்கப்பட்டுள்ள இடம் -புதுடெல்லி.

26.   சார்க் (SAARC) பிராந்தியத்திற்கான செய்தித் தொடர்பு மற்றும் வானிலை ஆய்விற்காக சார்க் செயற்கைக்கோளைச் செலுத்த உள்ளதுஇஸ்ரோ ISRO.

27.   சர்வதேச விவகாரங்களில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை; நலன்கள் மட்டுமே நிரந்தரமானவை என்ற வெளியுறவுக் கொள்கையை பின்பற்றுகிற நாடு - இந்தியா.

28.   மற்ற நாடுகளுடன் உறவைப் பேணுவதற்காக ஒருநாட்டால் கவனமாக வடிவமைக்கப்பட்ட உத்திகளின் கலவை - வெளியுறவுக் கொள்கை.

29.   ஓர் அரசின் வெளியுறவுக் கொள்கையைச் சூழலுக்குத் தகுந்தாற்போல் செயல்படுத்துவதற்கான கருவிஇராஜதந்திரம்.

30.   சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள்: 8 நாடுகள்.

          1.    ஆப்கானிஸ்தான்.

          2.    வங்காளதேசம்.

          3.    பூடான்.

          4.    இந்தியா.

          5.    நேபாளம்.

          6.    மாலத்தீவு.

          7.    பாகிஸ்தான்.

          8.    இலங்கை.

31.   இந்தியாவிற்கும் தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பில் உள்ள நாடுகளுக்கும் பாலமாக உள்ள நாடுமியான்மர்.

32.   இந்தியா தனது முதல் அணு சோதனையை நடத்திய இடம்பொக்ரான்.

33.   காலவரிசை:

          1.    பஞ்சசீலம் - 1954.

          2.    ஆப்பிரிக்கா - ஆசியா மாநாடு - 1955.

          3.    20 ஆண்டுகள் ஒப்பந்தம் - 1971

          4.    முதல் அணு வெடிப்பு சோதனை - 1974.

          5.    பொக்ரானில் அணு வெடிப்புச் சோதனை - 1998.

          6.    இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ளது - மாலத்தீவு.

          7.    தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பின் பாலம் - மியான்மர்.

          8.    உலக அமைதி - வெளியுறவுக் கொள்கை.

34.   பஞ்சசீல ஒப்பந்தம் எந்த இரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்டுள்ளது- இந்தியா - சீனா.

35.   இந்திய வெளியுறவுக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வழிநடத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு - சட்டப்பிரிவு - 51.