இடுகுறிப்பெயர்
1.
இடுகுறிப்பெயர் : இரண்டு வகைப்படும்.
1. இடுகுறிப் பொதுப்பெயர்
2. இடுகுறிச் சிறப்புப்பெயர்
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதாமல் பெயரிட்டு வழங்கினர். அவ்வாறு இட்டு வழங்கிய பெயர்கள் இடுகுறிப்பெயர்கள்.
(எ.கா.) மண், மரம், காற்று
2.
இடுகுறிப் பொதுப்பெயர்:
ஓர் இடுகுறிப்பெயர் எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறிப்பது இடுகுறிப் பொதுப்பெயர்.
(எ.கா.) மரம், காடு.
3.
இடுகுறிச் சிறப்புப்பெயர் :
ஓர் இடுகுறிப்பெயர் குறிப்பாக ஒரு பொருளை மட்டும் குறிப்பது இடுகுறிச் சிறப்புப்பெயர்.
(எ.கா.) மா, கருவேலங்காடு.
4.
காரணப்பெயர்: இரு வகைப்படும்.
1. காரணப் பொதுப்பெயர்
2. காரணச் சிறப்புப்பெயர்
நம் முன்னோர் சில பொருள்களுக்குக் காரணம் கருதிப் பெயரிட்டனர். இவ்வாறு காரணத்தோடு ஒரு பொருளுக்கு வழங்கும் பெயர் காரணப்பெயர்.
(எ.கா.) நாற்காலி, கரும்பலகை
5.
காரணப் பொதுப்பெயர்
காரணப்பெயர் குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களையும் பொதுவாகக் குறித்தால் அது, காரணப்பொதுப்பெயர்.
(எ.கா.) பறவை, அணி
6.
காரணச் சிறப்புப்பெயர்
குறிப்பிட்ட காரணமுடைய எல்லாப் பொருள்களுள் ஒன்றை மட்டும் சிறப்பாகக் குறிப்பது காரணச்சிறப்புப்பெயர்.
(எ.கா.) வளையல், மரங்கொத்தி
0 Comments
THANK FOR VISIT